Thursday, July 12, 2018

சந்நியாசம்




                                                       சந்நியாசம்
                                                        ------------------

இவனுக்கு தான் சந்நியாசம்வாங்க தடையாயிருப்பது தனக்கு தன்மனைவி மேல் இருக்கும்பிடிப்பே என்று தெரிந்தது இருந்தாலும் குருவின் மருந்தை உபயோகிப்பது என்றுமுடிவெடுத்தான்   அந்த மருந்தை உட்கொண்டசிலநிமிஷங்களில்  விறைத்த கட்டையாய் விழுந்து விட்டான் 
மனைவி குய்யோ முறையோ என்று கதறி அழுதாள் கூட இருந்தவரின்   ஆறுதலில்  தேறிஉடலை அடக்கம்செய்ய  வேண்டிய காரியங்களில் உற்றார்  முன் வர மனைவியும்  பேசாமல் இருந்தாள்  உற்றாரில் சிலர்
 உடல் விறைத்து கட்டையாய் ஆனதால் கை கால்களைக் கட்ட முடியவில்லை என்றும் வாசற் படி  வழியே உடல் வர முடியாததால்  நிலைத் தளத்தை உடைக்க வேண்டும்   இல்லாவிட்டால் உடலில் கைகால்களை வெட்டி நிலைப்படிக்குள் கொண்டு  செல்லலாம்  என்ன செய்வது
 என்று மனைவியைக்கேட்டனர்

நிலைக்கதவை உடைத்தால் மீண்டும்கட்ட செலவு அதிகம் ஆகும் என்றும்  பேசாமல் கை கால்களை வெட்டலாம்  என்றும் எப்படியும் உடலை  எரிக்கத்தானே போகிறோம் என்றும்   கூறினார்
  இவர் சொன்னதை செய்ய உறவினர் முனையும்போது  இறந்தவர் உடலில் அசைவு தெரியவே  என்ன செய்வதுஎன்று தெரியாமல் குழம்பினர் சற்று நேரத்தில் இறந்ததாகக் கருதப்பட்டவன் எழுந்து நடக்க இருந்த விஷயங்களைத் தெரிந்துகொண்டான்
உடனே குருவிடம்போய் நடந்த விஷயங்களைக்கூறி  மனம் உடைந்தான்
உலகில் அன்பு மனைவி எல்லாமே வெறும்  தோற்றங்களே என்பதை உனக்குக் காட்டவே அந்தசூரணத்தை கொடுத்தேன்  அத உட்கொண்டால் கைகால்கள்விறைப்பு ஏற்பட்டு சிறிது நேரத்தில்மீண்டும்சகஜநிலைக்கு வருமென்பதையும்
கூறினார்

இவனுக்கு தெளிவு ஏற்பட்டு சந்நியாசம்வாங்கத் தயாரானான் 
 ஒரு அதீதக் கற்பனை கொடிகட்டிப்பறந்தது அதுவே கதையாயிற்று 
போதனை     அவரவருக்குத்தோன்றியபடி  எடுத்துக் கொள்ளலாம்  






36 comments:

  1. ஒவ்வொரு மனிதனும் தனது குடும்பத்தாரை முழுமையாக தெரிந்து கொள்ள இப்படி பரிசோதனை செய்யலாமோ...!

    ReplyDelete
    Replies
    1. பதிவின்கடைசி வாக்கியத்தைப்படிக்கவும்

      Delete
  2. அருமையான பரிசோதனை ஐயா. அனைவருக்கும் ஒரு பாடம்.

    ReplyDelete
    Replies
    1. பரிசோதனைகளின் முடிவு தெரிந்திருக்க வேண்டும்

      Delete
  3. இது நிதர்சனம்தானே ஜி.எம்.பி சார்...

    நம் நட்பு, பழக்கம், உணர்வு எல்லாம் ஆன்மாவிடத்தில்தானே. அதுபோனபின்பு, இருக்கிறவர்களுடைய சவுகரியம்தானே முக்கியம்.

    பெண் இறந்துவிட்டால், எல்லா நகைகளையும் கழற்றிவிடுவதும், ஆண் இறந்துவிட்டால் வாட்ச் முதற்கொண்டு எல்லாவற்றையும் எடுத்துவிடுவதும் சகஜம்தானே.

    ReplyDelete
    Replies
    1. போதனையில் இப்படியும் ஒனறா / நம் நட்பு, பழக்கம், உணர்வு எல்லாம் ஆன்மாவிடத்தில்தானே. அதுபோனபின்பு, இருக்கிறவர்களுடைய சவுகரியம்தானே முக்கியம்./ மனைவியின் அபிப்பிராயம்கேளுங்கள்

      Delete
    2. ஜி.எம்.பி சார்... நான் நினைப்பதை நம்புவதை எழுதியிருக்கேன்.

      யாராவது தன் துணை போனவுடனே அவங்களும் போயிடறாங்களா இல்லை அடுத்த வேளை சாப்பிடறதில்லையா? துணையைவிட உயிரா நினைக்கற வாரிசுகள் போனாலே வருத்தம் மட்டும்தான் மிஞ்சும். அதுக்காக கழுத்தில் போட்டிருக்கும் சங்கிலியோட அனுப்பறாங்களா?

      இருக்கும்போது அபிப்ராயம் கேட்டால் யாராவது, நீங்க போன அன்னைக்கு வீட்டுல யாராவது சாப்பாடு பண்ணுவாங்களா இல்லை எங்க ஆர்டர் பண்ணறதுன்னா கேட்பாங்க?

      காதலிக்கும்போது, உயிரே.. நீ இல்லாமல் நான் இல்லை, நீ இல்லைனா உடனே உயிர் போயிடும் அப்படீன்னு வசனம்தான் சொல்வாங்க.

      இதைப்பற்றி bluntஆ எழுதலாம். உலகின் ஒவ்வொரு உயிரும் தனித் தனிதான். மற்றவர்களிடம் உள்ள அன்பு (love with dependents) சுயநலம்தான். இது இல்லை, தெய்வீக அன்பு என்று சொல்றதோ எண்ணுவதோ நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது. இதுக்கு ஒரு உதாரணம் நாமே நினைத்துப் பார்க்கலாம்.

      Imagine we are at 40s. நமக்கு மிக நெருக்கமான 15 பேரைக் கற்பனை பண்ணிப்கோங்க. ஒரு டெர்ரிஸ்ட் அல்லது கொலைகாரன் இரவில் அந்த 15 பேரை காட்டில் வழிமறித்து, கூட்டத்தின் தலைவனான நம்மிடம் ஒருவரைச் சுடப்போகிறேன், யார் என்று நீங்கள் சொல்லுங்க என்று சொன்னால் நாம் யாரை மிக நேசிக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். கடைசியில் நாம்தான் மிஞ்ச ஆசைப்படுவோம். ஹா ஹா ஹா

      Delete
    3. மிகவும்லாஜிகலாகத் தோன்றுவதை எழுதி இருக்கிறீர்கள் ஆனால் மனம் என்பது லாஜிக்குக்குஒத்து வருவதல்ல./நான் நினைப்பதை நம்புவதை எழுதியிருக்கேன்/ அதைத்தான் பதிவின் முடிவில் சொல்லி இருக்கிறேனே போதனைகளோ படிப்போ அவரவருக்குத் தோன்றியபடிதானிருக்க முடியும் .

      Delete
  4. என்ன செய்ய... உடலை எடுத்ததும் கழுவித் துடைக்கும்போது அவர் நினைவுகளையும் அடையாளங்களையும் சேர்த்தே துடைத்து விடுகிறோம்! நீரினில் மூழ்கி நினைப்பொழிக்கிறோம்!!! அதை உணரும் கணம் உறவு நிலை துறவு நிலை வந்து விடுகிறது!

    ReplyDelete
    Replies
    1. ஆனால் நம்மால் அப்படி நினைத்து இருக்க முடிகிறதா

      Delete
  5. இது ஏற்கெனவே ஓர் கதையாக வந்துள்ளதே! ஆனால் புராணக் கதை! :)

    ReplyDelete
    Replies
    1. அடிமனதில் கரு ஒன்று ஒளிந்திருக்க வேண்டும் அது கற்றதிலோ கேட்டதிலோ இருக்கலாம்

      Delete
  6. வாழ்வின் எதார்த்தம் இது.

    ReplyDelete
    Replies
    1. பரிசோதனை செய்து பார்க்க முடியாத எதார்த்தம்சார்

      Delete
  7. நல்ல பரிசோதனை...

    ReplyDelete
    Replies
    1. பரிசோதனை எதையாவது சொல்லிப்போக வேண்டும்

      Delete
  8. மனைவி செய்தது தவரே இல்லை.... உணர்ச்சி வசப்படாமல் ப்ராக்டிக்கலாக சிந்தித்து பதில் சொல்லி இருக்கிறார். உடம்பில் உயிர் இருக்கும் வரைதான் அதற்கு மதிப்பு அது இல்லையென்றால் அது பிணம்தான்... சாப்பிடும் வரைதான் அது உணவு அது வெளிவந்த பின் அது மலம்தான் நாம் நேசித்தவரின் மலம் என்பதால் அதை நடுவிட்டில் வைத்து பூஜிக்க முடியாது அது போலத்தான் இதுவும்..


    இந்த காலத்தில் பலருக்கு சுகர் இருக்கிறது சில சமயங்களில் அவர்களின் கால்களை கட் பண்ண வேண்டி இருக்கிறது அதற்கு டாக்டர்கள் அனுமதிகோரும் போது நாம் நேசித்தவர்கள் என்பதற்காக நாம் வெட்டக் கூடாது என்றா சொல்லுவோம்

    நாம் நேசித்தவர் என்பதால் அவரை எரிக்காமலா வைத்திருக்கிறோம் எரிக்கதானே செய்கிறோம் அதனால் அவரின் கால் கைகளை உடைப்பதில் தவ்று இல்லை

    அந்த கணவன் மனம் உடைந்து போனான் என்றால் அவன் ஒரு முட்டாள் அதை அவனுக்கு சரிவர புரிய வைக்காமல் இருந்த முனிவர் அதை விட பெரிய முட்டாள்

    ReplyDelete
    Replies
    1. ஆனால் பல முடிவுகள் உணர்ச்சி பூர்வமானது ப்ராக்டிகல் சமாச்சாரங்கள் பெரும்பாலும் உணர்ச்சி பூர்வமானதே

      Delete
    2. //அவரின் கால் கைகளை உடைப்பதில் தவ்று இல்லை// - படிக்கும்போதே நெருடுகிறது. என் அப்பா மறைந்தபிறகு, சுடு காட்டில், அவரைக் கிடத்தி (இன்னும் சிதையில் வைக்கலை) கிரியைகள் செய்துகொண்டிருந்தோம். அப்போ பானையைக் கீழே போட்டோம் (இல்லை..அண்ணன் போட்டான்), அவர் தலைப் பக்கத்தில். எனக்கு, ஐயோ.. அப்பாவுக்கு சத்தம் ஆகாதே என்று தோன்றியது, அதிச்சியுடன் அவர் (அப்பாவின்) முகத்தைப் பார்த்தேன். நடைமுறை என்பது வேறு, உணர்ச்சி என்பது வேறு. 'உணர்ச்சி'க்கு லாஜிக் கிடையாது.

      அதனால்தான், முல்லைக்குத் தேர் கொடுத்தான் என்று படிக்கும்போது நமக்கு அந்த 'அன்பு' புரிவதில்லை. வள்ளலார், 'வாடிய பயிர்களைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடியதை எல்லோராலும் புரிந்துகொள்ளமுடியாது (இன்று காலை, நாலுகாலை நடத்திக்கொண்டுவந்த பெண், சீக்கிரம் வாடா என்று அதைச் சொன்னாள். எனக்கு அந்த அன்பு, நேரம் புரியவில்லை, நகைப்புக்குரியதாக இருந்தது)

      Delete
    3. இந்தப்பதிவின் தாக்கம் குறைய நாட்கள் ஆகலாம் ஏன் நாங்களே ஒரு நாயை காக்கர் ஸ்பானியல் பெண்நாய் வளர்த்துவந்தோம் அடை நாங்களவளென்றே குறிப்பிடுவோம் அதீதான்பு சிலநேரங்களில் அர்த்தமற்றுப்போய் விடும்

      Delete
  9. இந்தக் கதையை வேறு மாதிரி கேட்டிருக்கிறேன்...

    தங்கள் கைவண்ணம் நன்று..

    ReplyDelete
    Replies
    1. கேட்டதில் இருந்து மாறுபட்டிருக்கிறதா

      Delete
  10. இவன் சன்னியாசம் வாங்காதபோதே இவனுக்குக் குருவாகயிருப்பதினால் குருவும் சன்னியாசம் வாங்காதவர் என்று புலப்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. சந்நியாசம் வாங்காதவர்களுக்குத்தான் குரு தேவை எனக்கு புரியவில்லை

      Delete
  11. உங்கள் அதீத கற்பனை கதை வடிவில் நன்றாகவே உள்ளது சார். ஆனால் யதார்த்தத்தில் நடக்குமா என்றால் அதுவும் தனிப்பட்டதே அந்த மனைவியின் எண்ணம் பொருத்தே. இறந்ததும் உடல் உறுப்புகள் தானம் செய்வதில் கூட ஒரு சிலர் சம்மதிப்பதில்லை. ஒரு சிலர் முன்பே பதிவு செய்து சம்மதிக்கின்றனர். சிலர் தங்கள் உடல்களை மருத்துவ மாணவர்களுக்கு அறுத்துப் படிக்கக் கூட பதிவு செய்து விடுகிறார்கள் மனைவியின் சம்மதத்துடன். ரேர் கேஸாக இருக்கலாம் இப்படிச் செய்வது. எனவே இது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொருத்தது. பெரும்பாலோர் சம்மதிப்பதில்லை. என்றாலும் வாழ்க்கை என்பது அவ்வளவுதான் என்பதைச் சொல்லும் கதை.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. அதைத்தான்பதிவின் கடைசியில் எழுதி இருக்கிறேன்மலையாளத்தில் ஒரு சொல் கேட்டிருக்கிறேன்
      “தனிக்கி சுட்டால் குட்டி தாழே”என்பார்களாம் சுடுமணலில் நடப்பவள் கைகுழந்தையுடன்நடக்கும் போது கால்கள் சுட்டால் குழந்தையைக் கீழே போட்டுஅதன்மேல் நிற்பாளாம்

      Delete
  12. இந்த கதை படித்திருக்கிறேன், டி.வி.யில் கூட வந்தது.

    ReplyDelete
    Replies
    1. டீவியிலும்வந்ததா நானும் எப்போதோ யார் சொல்லியோ கேட்டதை ஆழ் மனதில் வைத்திருந்து கற்பனை எனும் வடிவம் கொடுத்திருக்கிறேனோ என்னவோ

      Delete
  13. Replies
    1. தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
      தோன்றலின் தோன்றாமை நன்று

      மேற்கட்ட குறளை சிந்தித்ததின் விளைவோ...? ஹா... ஹா...

      "SEARCH FOR TRUTH" எனும் தங்களின் பதிவால், ஓரிரு பதிவுகள் எழுதிக் கொண்டு இருக்கிறேன்... விரைவில் சிந்திப்போம்... நன்றி ஐயா...

      Delete
    2. உங்கள் சிந்தனை பதிவாக மலரட்டும் அங்கே சந்திப்போம்

      Delete
  14. கை கால்களை உடைத்து பாடையில் மேடை கட்டி பிணத்தை உட்கார வைத்து தாரை தம்பட்டம் அடித்து வெடி வெடித்து சாமி ஊர்வலம் போவது போல் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லும் வழக்கம் தற்போதும் வட தமிழ் நாட்டில் உள்ளது.

    ReplyDelete
  15. செய்தி புதிது நன்றி நான் சில சவ ஊர்வலங்கள் கண்டதுண்டு ”ராம்நாம் சத்ய ஹை சத்ய போலோ முக்தி ஹை” என்று சொல்லிக் கொண்டு போவதைக் கண்டிருக்கிறேன் செய்திக்கு நன்றி சார்

    ReplyDelete
    Replies
    1. வட தமிழ் நாட்டில் என்பத்சை வடநாட்டில் என்று படித்துவிட்டதால் மேல் சொன்ன மறு மொழி

      Delete
  16. மாயவரத்தில் ஒரு பிரிவனர் இறப்பு கேட்டை ந்டசத்திரத்தில் நிகழ கூடாது என்றும் அப்படி நிகழந்தால் அந்த உடலை முன் வாசல் வழியே வெளியே கொண்டு போக மாட்டார்கள்.

    வீட்டின் சுவரில் ஓட்டை போட்டு அது வழியாக அவர்களை எடுத்து செல்வார்கள் இடுகாட்டுக்கு.

    சொந்த வீடு என்றால் அவ்வாறு செய்யலாம், வாடகை வீடு என்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டு இருக்கிறேன். அப்படி நேர்ந்தது இல்லை இதுவரை என்றார்கள்.

    இப்போது கதைவை எளிதாக சீர் செய்யலாம்,
    கை, கால்களை உடைப்பது என்பது கதையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

    ReplyDelete
  17. மாயவரம் செய்திகள் புதிது தெரியாதது மனதில் பட்டதை கூறுவதற்கு மனோபலம்வேண்டும் கதையானாலுமேற்றுக் கொள்ள முடியவில்லை என்கிறீர்கள் ஆனால் பலரும் கை கால்களை வெட்டுவது தவறில்லை என்றிருக்கிறர்கள்

    ReplyDelete