உன்னை அறிய உன்னைஅறிய .........
------------------------------------------------------
நான் பின்னூட்டங்களுக்கு ஏங்குகிறேன் என்று நண்பர் ஒருவர் கூறினார் நான்பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன் என்பது உண்மை அது ஏக்கம்போல் தோன்றி இருக்கிறது நண்பருக்கு நான் மட்டுமல்ல பலரும் அவரவர் எழுத்து எவ்வாறு வரவேற்கப்படுகிறது என்பதை அறிய ஆவலுடன் இருப்பார்கள் எழுதுவது உன் விருப்பம் கருத்துசொன்னாலும் சொல்லா விட்டாலும் பாதிப்பு ஏதுமில்லை என்பதே பலரது ஃபீட் பாக் (feed back )
என்னைப் பொறுத்தவரை பின்னூட்டங்கள் வலை நட்புகளை புரிந்து கொள்ள வைக்கும் சக்திபெற்றது பின்னூட்டங்கள் தவிர அதற்கு இடப்படும் மறுமொழிகளும் வாசகர்களை புரிந்து கொள்ள உதவும் ஆனால் ப்லபின்னூட்டங்கள் மறு மொழி இடப்படாததால் அதன் பாதிப்பு தெரியாமல் போகும் வாய்ப்புமுண்டு நட்புகளில் பலரும் முகமறியாத
அறிமுகங்களே அதையும் மீறி சிலரை
சந்தித்து இருந்தால் அந்தசந்திப்பின் போது
அவர்களை புரிந்துகொள்ள கொடுக்கப் படும் வாய்ப்புகள் மிகக் குறைவு
இப்போது
தொலைக்காட்சியில் காட்டப்படும் BIGG
BOSS நிகழ்ச்சி பற்றி அறியாதோர் மிகக்
குறைவே அதில் அடிக்கடி கூறப்படும் வாசகம் போட்டியாளர்கள் பலரும் ஃபேக் என்றும் முகமூடியுடன் இருப்பவர் என்றும் கூறப்படுகிறது
பதிவர்களை சந்திக்கும் போது பெரும்பாலோர் அவர்களது பெஸ்ட்முகத்தையே காட்டுகின்றனர்
அது அப்படித்தான் இருக்கும் என்பதும் புரிந்து கொள்ளக்கூடியதே
இந்நிலையில் பதிவுகளுக்கு வரும்பின்னூட்டங்கள் அவர்களை நன்கு வெளிப்படுத்தும் பின்னூட்டங்களிலும் தங்களை வெளிப்படுத்த
விரும்பாத பலரும் இருக்கிறார்கள் இருந்தாலும் வாசகர்களை அவர்களது நிலையை வெளிப்படுத்த
ஒருகருவியே பின்னூட்டங்கள்
பிரபல எழுத்தாளர்களின் எழுத்துக்களை அடையாளம் காட்டும் வாசகர்களுக்கு தினமும் பர்க்கும் வாசிக்கும் பதிவர்களின் எழுத்துகளை அடையாளம் காட்டாடுவது பெரிய வேலையல்ல
பிரபல எழுத்தாளர்களின் எழுத்துக்களை அடையாளம் காட்டும் வாசகர்களுக்கு தினமும் பர்க்கும் வாசிக்கும் பதிவர்களின் எழுத்துகளை அடையாளம் காட்டாடுவது பெரிய வேலையல்ல
நான்எழுதி இருந்த சில பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களை கீழே தருகிறேன் யார் யாருடைய பின்னூட்டம் அதுஎன்பதை அறிய
முடிகிறதா பாருங்களேன்
//வாழும் வரை ஒருவனை நல்லவனாக இருக்கக் கூறப்பயன்படும் அச்சுறுத்தல்களே இவை//
நூற்றுக்கு நூறு உடன்படுகிறேன். அந்த விழிப்பு வந்து விட்டால் மதமும்,கடவுளுமெதற்கு?
நூற்றுக்கு நூறு உடன்படுகிறேன். அந்த விழிப்பு வந்து விட்டால் மதமும்,கடவுளுமெதற்கு?
)
கடவுளை நம்பாதவன் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து தொலையட்டும்,
But
கடவுளை நம்புபவன் நியாயமாக அப்பழுக்கற்றவனாக வாழ வேண்டும்
என்தே எமது கருத்து, கொள்கை.
But
கடவுளை நம்புபவன் நியாயமாக அப்பழுக்கற்றவனாக வாழ வேண்டும்
என்தே எமது கருத்து, கொள்கை.
கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் நிறைய பேர், நல்லவர்களாக, நியாய வாதிகளாக வாழ்வதை கண்டு வருகின்றேன். ஆனால் எக் காலத்திலும் கடவுளைப் பற்றியே பேசிக் கொண்டு, ஒவ்வொரு கோயிலாக சென்று தரிசணம் செய்து வரும், பலர், நியாய வாதிகளாக இல்லாம்ல், அடுத்தவர்களுக்குத் தொல்லை கொடுப்பவர்களாக, ஏமாற்றும் குணம் உடையவர்களாக இருப்பதை நேரில் கண்டும், அவர்களால் பாதிக்கப் பட்டும் வருகின்றேன். இந்நிலை எனக்கு மட்டுமா, அனைவருக்குமா என்று தெரியவில்லை..,,,
எனவே மனிதத்தைப் போற்றுவோம்
எனவே மனிதத்தைப் போற்றுவோம்
உண்டென்றால் அவன் உண்டு
இல்லை என்றால் இல்லை
கடவுள் மதங்கள் உண்டென்பதும் இல்லை என்பதும் அவரவர் நம்பிக்கை சார்ந்த நிறுவவும் மறுக்கவும் முடியாத விடயங்களாகவே இருக்கின்றன எனக் கருதுகிறேன் அய்யா!
தங்களது எழுத்துகள் கனமாக இருக்கின்றன.
இல்லை என்றால் இல்லை
கடவுள் மதங்கள் உண்டென்பதும் இல்லை என்பதும் அவரவர் நம்பிக்கை சார்ந்த நிறுவவும் மறுக்கவும் முடியாத விடயங்களாகவே இருக்கின்றன எனக் கருதுகிறேன் அய்யா!
தங்களது எழுத்துகள் கனமாக இருக்கின்றன.
ஒவ்வொருவர் கருத்தும் மற்றவர் கருத்திலிருந்து மாறுபட்டே இருக்கும். கடவுளை நம்புபவர்கள் அயோக்கியர்கள் என்றே இங்கே பலரும் சொல்லி இருக்கின்றனர். இதைப் படித்ததும் சிரிப்பு வந்தது. :)))))
நம்பிக்கைகளை சற்று உரசிப் பார்த்து சரி செய்து கொள்வது தவறு இல்லையே ஐயா. உண்டு என்றால் உண்டு இல்லை என்றால் இல்லை என்று சொலவது escapism என்று தோன்றுகிறது.
)
Any belief sustained over a fairly long period of one's life when
integrated into one's intellect, is known as faith.
As my good web friend Dindugal Dhanabalan rightly hints, one experiences (becomes )what one believes.
U Become what U believe.
Other than this, honestly,
verbal permutations or combinations take us nowhere, I must confess.
As my good web friend Dindugal Dhanabalan rightly hints, one experiences (becomes )what one believes.
U Become what U believe.
Other than this, honestly,
verbal permutations or combinations take us nowhere, I must confess.
கடவுளே இல்லை! அது ஒரு concept " என்பவருக்கு இந்த கேள்வி தேவையில்லை! கடவுள் என்பதுகருத்தியல்! கருத்து உங்கள் நினப்பு ! இவை மூளையின் நடவடிக்கை ! function of brain ! a few micro miilli of protein,nuron,electric charge etc ! pure matter ! matter is primary ! பொருள் முதல் வாதம் ! பொருள் இல்லையேல் எதுவும் இல்லை ! கடவுள் உண்டு,இல்லை என்று நினைப்பதற்கு மனிதன் வேண்டுமே ! அறிவு உணர்வு என்பதெல்லாம் அதன் பிறகு தானே ! ஏங்ஜெல்ஸ் எழுதிய "இயற்கையின் தர்கவியல்" என்ற நூலில் விரிவாக உள்ளது! அப்பாதுரை எங்ஜெல்ஸை ஏற்கமாட்டர் ! விஷயம் அவர் ஏற்பதோடு நிற்பதில்லையே ! மிகவும் ஆழமான இடத்தை தொட்டிருக்கிறீர்கள ! விவவதிக்க வேண்டியது ,விளக்க வேண்டியது நிறைய உள்ளது ! கடவுளை ஏற்றுக் கொண்டவருக்கு உங்கள் கருத்து intelectual level ல் தடவிக் கொடுக்கலாம்! அறீவியலில் உரசிப்பார்க்கும் போது கொஞ்சம் சிரமப்படும் ! உங்கள்கருத்தை பலமாக ,எதிர்க்கிறொனோஎன்று தோன்றுகிறது ! மன்னித்து அருளுங்கள்! ---
சார், எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் ரிச்சுவல்ஸில் நம்பிக்கை இல்லை. அதே போன்று ஆத்மா....என்று பேசப்படுவதெல்லாம்..ஸாரி சார் புரிவதில்லை. புரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. ஏனென்றால் அதில் நம்பிக்கை இல்லை. அதனால் பகவத் கீதையை எல்லோரும் மிகவும் உயர்வாகப் பேசுகல், கோர்டில் அதன் மீது சத்யப்பிரமாணம் எடுத்துக் கொளல் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியய்வில்லை. பல தத்துவங்களை புரிந்து கொள்ள் அமுடியய்வில்லை. ஏன்மறுபிறவி போன்றவற்றில் நம்பிக்கை இல்லாத சுஜாதா கூட இறுதியில் தத்துவ சாராம்சம் ஃபிசிக்ஸ் கம்பைன் செய்து எழுதிவந்தார். நம்மூரில் பலரும் பேசுவார்கள். இந்து மதத்தில் இல்லாதவையே இல்லை. என்னமா நம் வேதங்கள் அப்போதே சொல்லியிருக்கின்றன. அதைத்தான் ஃபிஸிக்ஸ், வான சாஸ்திரம் எல்லாம் பேசுகின்றன என்று சொல்லுவார்கள். அவர்களிடம் ஒன்றை விளக்கச் சொல்லிக் கேட்டுப் பாருங்கள் அவர்களால் எதையுமே விளக்க முடியாது. தெரியமாலயே நம் கீதையில் அப்போதே சொல்லிவிட்டார். வேதம் அப்போதே சொல்லிவிட்டது என்பர்....
பல விஷயங்கள் மனிதனை நல்வழிப்படுத்த ஒரு ஒழுங்கு முறை வாழ்க்கை வாழ பயப்படுத்திச் சொல்லப்பட்டவையே. சாமி கண்ணைக் குத்தும் என்பதெல்லாம்.....
எனவே அன்புடனும், மனித நேயத்துடனும் நல்ல மனசுடனும், சாதி பாராது வாழ்ந்தால் அதுவே போதும்.
பின்னூட்டங்களை வைத்து ஒருவரை அறிய முயல்வதும் கடினம். பொதுவெளியில் பெரும்பாலும் எல்லோரும் முகமூடி அணிந்திருப்பார்கள். For that matter, உள்ளும் புறமும் வெளிக்காட்டும்படியான ஆட்களே உலகத்தில் இல்லை. உங்கள் உண்மை சுவரூபம் 60% மனைவிக்குத் தெரிந்திருக்கலாம். தாய்க்கு கொஞ்சம் தெரிந்திருக்கும் (மனைவிக்குத் தெரியாதது). இப்படி ஒவ்வொருவருக்கும் கொஞ்சம் கொஞ்சம்தான் தெரிந்திருக்கும்.
ReplyDeleteபின்னூட்டத்தை, பதிவின் பின்னூட்டம் அல்லது அவர்கள் ஏன் ஒத்துப்போவதில்லை என்பதன் காரணம் என்பதற்குமேல் அதை ஆராய்வது உபயோகமானது அல்ல.
யாரையும் பதிவின் மூலம் அறிவது கடினம் ஒப்புக் கொள்கிறேன் ஆனாலும் சில பின்னூட்டங்கள் அவர்களது அடையாளங்களை காட்டிவிடும் என்று தோனறுகிறது பதிவு சிம்பிள் சிலரது பின்னூட்டங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன யாருடயது எது என்று யூகிக்க முடிகிறதா என்பதைஅறியவே என்பதும் குறிப்பு
Deleteஉங்கள் பின்னூட்டம் எப்படிப்பட்டது என்பது மட்டுமல்ல, உங்களின் சிந்தனையே எவ்வாறானது என்பதை பலரும் அறிவர்... அதை நானும் அறிவேன்...
ReplyDeleteசமீபத்திய எனது பதிவில் உங்களது பின்னூட்டம் எப்படிப்பட்டது என்பதை நீங்கள் தான் சொல்லவேண்டும்...! உங்கள் பின்னூட்டத்தை நீங்களே மறுமுறை வாசித்து பாருங்கள்... புரிந்தால் நன்றி... இல்லையென்றால் பொறுங்கள், எனது பதிவிலேயே வாசிப்பீர்கள்... !
// பிரபல எழுத்தாளர்களின் எழுத்துக்களை... //
"பிரபல" என்றால் என்ன...? பிரபலமில்லாதவர்கள் உங்களை பொறுத்து யார் யார்...?
"தெய்வம் இருப்பது எங்கே...?" என்று பதிவு எழுதி பல வருடங்கள் ஆகி விட்டன... அதனால் அடியேன் "escape"
/// எனவே அன்புடனும், மனித நேயத்துடனும் நல்ல மனசுடனும், சாதி பாராது வாழ்ந்தால் அதுவே போதும். ///
மனித நேயத்துடனும் என்றால் என்னென்ன...? தங்களின் கருத்தான "உண்மைத்தேடி தேடல்" என்றால் என்ன...?"
தோன்றிற் மனித நேயத்துடனும் தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
இப்படி ஏன் உங்கள் தேடல் தொடங்கவில்லை...? "புகழ்" அதிகாரத்தின் முதல் குறளையாவது சிந்தித்து விளக்கம் சொல்லுங்களேன் பார்ப்போம்...! திருக்குறள் நூலை "courier" செய்யவா...? மேலோட்டமாக புரிந்து கொள்பவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை...
மற்றவர்களின் பின்னூட்டத்தை கண்டிப்பாக வாசியுங்கள்... ஒரு தேடலாவது உங்களுக்கு பிறக்கும்... நன்றி...
அன்புடன் பொன்.தனபாலன்
// என் கருத்து உங்களுக்கு பிடிக்கவில்லை... அதனால் ஏதோ கோபத்தில் உள்ளீர்கள்... பிறகு சிந்திப்போம் // இப்படி மறுமொழி வேண்டாம் ஐயா... நன்றி...
விரிவான மறு மொழி கொடுத்தேன் ஆனால் அவை நடுவில் காணாமல் போய் விட்டது ஒரு சமயம்நானிப்படி மறு மொழி தருவதுசரியில்ல்சையோ என்னவோ உங்கள் பதிவுக்கு நானிட்ட பின்னூட்டத்தில் ஒருகதைசொல்லி இருந்தேன் அதாவது தனபாலனின் பதிவுகச்ள் குறள்களையும் திரைஇசைப்பாடல்களையும்தாங்கி வரும் அது என்னை அக்கருத்து எழுதவைத்தது நோ ஹார்ட் ஃபீலிங்ஸ் கருத்துகளசி கருத்துகளாக மட்டுமே பார்க்க வேண்டும் பதிவில்குறிப்பிட்டிருந்தசில பின்னூட்டக்கருத்துகளைய்யெ எனதாக எண்ணிஅதன் படி நான் ஏன் தேடவில்லைஎன்பது சரியா நான் என்ன தேட வேண்டும் எப்படித் தேட வேண்டும் என்பது என்னைப் பொறுத்தது சரியில்லை என்று தோன்றினால் சொல்லிப்போகலாம் நோ ப்ராப்ளம்பதிவே பிறரதுபின்னூட்டங்களை அடிப்படையாகக் கொண்டது எழுதியவரை எழுத்து மூலம் அடையாளம்தெர்ரிகிறதா என்று பார்ப்பதே நோக்கம் வலைப் பூக்களில் வருமெழுத்துகளெல்லாருக்கும் ஒப்புடையதாகைருக்கவேண்டும் என்றில்லையே கோபத்தில் இருக்கிறீர்கள் என்று சொல்லி நான்மறு மொழீடாமல் இருக்கக் கூடாது என்எழுத்துகள் உங்கள்சிறகுகளை சிலுப்ப வைத்து விட்டது தெரிகிறது
Deleteநிறையவே தட்டச்சுப் பிழைகள் மன்னிக்கவும்
Delete//கடவுளை நம்பாதவன் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து தொலையட்டும்,
ReplyDeleteBut
கடவுளை நம்புபவன் நியாயமாக அப்பழுக்கற்றவனாக வாழ வேண்டும்
என்தே எமது கருத்து, கொள்கை.//
ஐயா இது நான் சொன்னதாக நினைவு
உங்கள் கருத்தைக் கண்டுபிடித்து விட்டீர்கள் வாழ்த்துகள்
Delete//கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் நிறைய பேர், நல்லவர்களாக, நியாய வாதிகளாக வாழ்வதை கண்டு வருகின்றேன். ஆனால் எக் காலத்திலும் கடவுளைப் பற்றியே பேசிக் கொண்டு, ஒவ்வொரு கோயிலாக சென்று தரிசணம் செய்து வரும், பலர், நியாய வாதிகளாக இல்லாம்ல், அடுத்தவர்களுக்குத் தொல்லை கொடுப்பவர்களாக, ஏமாற்றும் குணம் உடையவர்களாக இருப்பதை நேரில் கண்டும், அவர்களால் பாதிக்கப் பட்டும் வருகின்றேன். இந்நிலை எனக்கு மட்டுமா, அனைவருக்குமா என்று தெரியவில்லை..,,,
ReplyDeleteஎனவே மனிதத்தைப் போற்றுவோம்//
ஐயா இது நண்பர் திரு கரந்தையார் அவர்கள் சொன்னதாக நினைவு
உங்கள் நினைவு சரியே
Deleteஎப்படிக்கண்டுபிடித்தீர்கள் என்று சொன்னால் சில அனுமானங்கள் விளங்கலாம்
Deleteஐயா எனது கருத்து என்பது எனது குழந்தை.
Deleteதிரு. கருந்தையார் அவர்கள் சொல்லி படித்ததாக நினைவு அது தங்களது தளம் என்று இன்று விளங்கி கொண்டேன்
// நண்பர்கள் இல்லேன வாழ்க்கை நாசமாப் போச்சி //
Deleteஇதை அப்படியே "copy" செய்து google-ல் தேடி பாருங்கள்... வரும் எனது தொழிற்நுட்ப பதிவை பொறுமையான வாசியுங்கள்...
இந்தப் பதிவில் உள்ள // வாழும் வரை ஒருவனை நல்லவனாக இருக்கக் கூறப்பயன்படும் அச்சுறுத்தல்களே இவை // என்பதை google-ல் தேடினேன்... மற்றவை எல்லாம் சில நொடிகளில் கிடைத்து விட்டது... கீழே எனது கருத்துரைகளைப் பார்க்கவும்...
இந்த பின்னூட்டங்களுக்கு மறுமொழிகள் எல்லாம் வேண்டுமா...? என்பதை அறிய கீழுள்ள பதிவை வாசியுங்கள்... நன்றி...
http://dindiguldhanabalan.blogspot.com/2014/12/Speed-Wisdom-9.html
கொடுக்கப்பட்டபின்னூட்டங்களில் இருந்து பதிவரைஅறிய முடிகிறதா என்பதே எட்ன் கேள்வி ஆனால் அறிந்த தொழில்நுட்பம் முலம் பதிவையே கண்டு பிடித்து பின்னூட்டமிட்டவர்களை அறிந்து கொண்டிருக்கிறீர்கள் இதை நான் எதிர்பார்க்கவில்லை இப்படியும் செய்யலாம் என்று காட்டிய உங்களுக்கு நன்றி
Deleteநம் பதிவில் பிரத்யோக வரியை "google search"-ல் முதன்மையாக வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...? அது தான் அந்தப் பதிவு...
Deleteஇணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/06/Speed-Wisdom-2.html
சரி தொழிற்நுட்பத்தை விடுங்கள்... சில பலன்கள் மட்டும் :-
1) நம் பதிவு "copy" செய்யப்பட்டு உள்ளதா என்று பார்க்கலாம்.. அதை நினைத்து வருத்தமும் படலாம்... சந்தோசமும் படலாம்...
2) "மந்திரச்சொற்கள் பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தீர்கள்... அதன் இணைப்பு தர முடியுமா...?" என்று முகம் தெரியா + முன்பின் பழக்கம் இல்லா + வலைத்தளம் இல்லா நண்பர் ஒருவர் முகநூலில் (facebook chat) கேட்டிருந்தார்... என்னால் சட்டென்று சொல்ல முடியவில்லை... "நண்பர்கள் இல்லேன வாழ்க்கை நாசமாப் போச்சி" இப்படி எழுதி google-ல் தேடுங்கள்... என் பதிவின் இணைப்பு முதலில் வந்து நிற்கும்" என்று சொன்னேன்... இன்றைக்கும் எங்கள் நட்பு தொடர்கிறது...
நன்றி...
நட்புகள் தொடர வாழ்த்துகள்
DeleteThis comment has been removed by the author.
Deleteநல்லதொரு வாதம். அனைவரின் கருத்துகளையும் அறியக் காத்திருக்கேன்.
ReplyDeleteவாதம் ஏதுமில்லை மேம் கருத்துகள் மூலம் அதை எழுதியவரை அடையாளம் காணமுடிகிறதா என்பதை அறியவே இப்பதிவு
Deleteபின்னூட்டங்கள் தேவையே ஐயா. அவை நம்மை செழுமைப்படுத்திக்கொள்ள உதவுகின்றன என்பது என் எண்ணம்.
ReplyDeleteஉண்மை
Deleteபின்னூட்டங்கள் வாசகரின் எண்ண ஓட்டத்தை விளக்கும் அது நாமெழுதும் பதிவுகளை செம்மைப் படுத்தலாம்
Delete@ஜோதிஜி ஷார்ட் அண்ட் டு த பாயிண்ட்
Delete// வாழும் வரை ஒருவனை நல்லவனாக இருக்கக் கூறப்பயன்படும் அச்சுறுத்தல்களே இவை //
ReplyDeleteதருமி அவர்கள் கருத்துரை February 5, 2015 at 4:58 PM)
மேலே உள்ள மற்ற கருத்துரைகளை மீண்டும் இங்கே சொல்லி, அதை சொன்னது யார்...? என்று சொல்வதில் என்ன பயன் இருக்கிறது...? கருத்துரை சொல்ல வருபவர்களை இம்சை செய்ய விரும்பவில்லை... அதனால் சுருக்கமாக சொல்கிறேன்...
மற்ற கருத்துரையாளர்கள் :
KILLERGEE Devakottai அவர்கள் (February 5, 2015 at 5:54 PM)
கரந்தை ஜெயக்குமார் அவர்கள் (February 5, 2015 at 7:36 PM)
Thulasidharan V Thillaiakathu அவர்கள் (February 6, 2015 at 11:04 PM)
உங்கள் பதிவின் இணைப்பு : http://gmbat1649.blogspot.com/2015/02/blog-post_5.html
// இதுபோன்ற வெளிக்காட்டும் பதிவுகள் தொடரலாமா வேண்டாமா கருத்து வரவேற்கப் படுகிறது //
கண்டிப்பாக வேண்டாம்... மற்றபடி உங்கள் விருப்பம்...
இந்த பதிவில் முதல் பின்னூட்டம் மட்டும் // // என்று இருந்தது... google-ல் தேட வசதியாக இருந்தது... மற்றவை எது பின்னூட்டம் என்பதே குழப்பமாக இருக்கிறது...! ஒருவேளை எந்த வித புது சிந்தனையும் இல்லாமல், இது போல் பதிவுகள் தொடர நினைத்தால், ஒவ்வொரு பின்னூட்டத்தையும் வெவ்வேறு வண்ண எழுத்துக்களாக இருந்தால் 5 நிமிடம் எனக்கு மிச்சமாகி இருக்கும்...!
http://gmbat1649.blogspot.com/2015/02/blog-post_5.html - இந்த பதிவின் இணைப்பை கொடுத்து, "பின்னூட்டம் இட வாருங்கள்" என்று சொல்வது நல்லது என்று நினைக்கிறேன்...
// கடவுளே இல்லை! அது ஒரு concept // முதல் //மன்னித்து அருளுங்கள்! // வரை
ReplyDeleteவேறு பதிவு... (http://gmbat1649.blogspot.com/2017/08/blog-post_20.html)
மறந்து போய் உங்கள் மறுமொழியை இங்கே கொடுத்து விட்டீர்கள்...! (G.M BalasubramaniamAugust 24, 2017 at 8:57 PM)
இதை தேட தான் தாமதம் ஆனது...!
Deleteஉங்கள் தொழில் நுட்ப அறிவு என் பதிவி நோக்கத்தையே போக்கிவிட்டது பின்னூட்டங்கள் மூலம் ஒரிஜினல் பதிவைத்தேடுவீர்கள் என்று நினைக்கவில்லை மறந்துபோய் கொடுத்ததல்ல அது எழுதியவரை அழ்டையாளம்காட்டுகிறதா என்று பார்க்கவே
Deleteசில நேரங்களில் சில தடங்கல்கள்......!
Deleteகோபம் எல்லாம் இல்லை ஐயா... அப்படி நீங்கள் நினைத்தாலும் உங்களிடம் உரிமை இருக்கிறது என்று நினைக்கிறேன்... உங்களின் பதிவுகள் எல்லாம் வித்தியாசமான சிந்தனைகள்... அதில் மாற்றுக்கருத்து கிடையாது... ஆனால் மற்ற தளங்களில் பின்னூட்டங்களும், உங்கள் தளத்தில் மறுமொழிகளும் தான் எடக்கு மடக்கு - என்னைப் பொறுத்தவரை...
ReplyDeleteபுகழ் என்கிற அதிகாரம் குறளின் குரலாக பதிவு செய்ய வேண்டும் என்றிருந்தேன்... அந்த நேரத்தில் "SEARCH FOR TRUTH" எனும் பதிவை கண்டேன்... அதில் தேடலைப் பற்றி (கவனியுங்கள் குறளை அல்ல...) அருமையாக சொன்னது பிடித்திருந்தது... இதை வைத்து தான் சமீபத்திய பதிவு இருந்தது...
அங்கு எனது பதிவில் இரு திரைப்படங்களின் பாடல் வரிகளோ - அதற்கு எழுதிய தேடல் சிந்தனையோ, கற்பனையாக எழுதிய சுண்டல் பேப்பரோ - உங்களை தான் கோபமடைய செய்து விடும் என்று நினைத்தேன்...! பல (தேடல்) கருத்துரைகளை எதிர்பார்த்தேன்...
ஆனால் உங்கள் கருத்துரையோ எதிர்மறையாக உள்ளது... அதில் நீங்கள் சொன்ன கதை சிறிது கோபத்தை தூண்டியது... அதுவும் எனக்காக அல்ல... மற்றவர்களின் கருத்துரை எல்லாம் உங்கள் கதைக்கு ஒத்து வருமா...? /// என் பதிவு உண்மை தேடுவது பற்றியது /// அப்படியானால் நானும், அங்கு கருத்துரைகள் சொன்னவர்கள் எல்லாம் பொய்யையா தேடுகிறார்கள்...?
ஆனால் இப்போது சொல்கிறேன்... அந்த பதிவில் உள்ள ஒவ்வொரு வரியும் உங்களின் முகமூடியை கிழிப்பதற்கே என்று நினைத்து படித்து பாருங்கள்... அப்போதாவது, "அந்த குறளுக்கு என்ன அர்த்தம்...? நாமும் தேடி அறிந்து கொள்வோம்..." என்கிற சிந்தனைக்கு வருகிறீர்களா என்று பார்ப்போம்...
அங்கு வரும் கருத்துரைகளை வாசித்து பாருங்கள்... மேலும் உங்கள் தேடுதல் ஆர்வம் அதிகமாகும்... இல்லையென்றால் இதோ இன்றைய பதிவை போல் தொடருங்கள்...
இதுவும் கோபம் அல்ல ஒரு ஆதங்கம்... புரிந்து கொண்டால் நன்றி...
ஆனால் மற்ற தளங்களில் பின்னூட்டங்களும், உங்கள் தளத்தில் மறுமொழிகளும் தான் எடக்கு மடக்கு - என்னைப் பொறுத்தவரை.. அபுரி ... முகமூடியே நான் அணிவதில்லை அணிந்தால்தானே கிழிபடுவதற்கு.
DeleteThis comment has been removed by the author.
Deleteஎழுத்துகள் மூலம் பின்னூட்டடமிட்டவரை அடையாளம் தெரிகிறத என்று பார்க்கவே பதிவு கொடுத்துள்ள பின்னூட்டங்கள் அற்புதமென்பதால் இல்லை சிலரது எழுத்தின் ட்ரெயிட் தெரிவடால்தானிடம் பெற்றது
DeleteThis comment has been removed by the author.
Deleteஎந்தெந்தப் பின்னூட்டங்களை யார் யார் எழுதியது என்று நண்பர் தனபாலன் சொல்லி விட்டார். நான் கூட அப்படிதான் கண்டுபிடித்திருப்பேன். படித்து வரும்போதே என்னுடைய பின்னூட்டம் எதுவும் லிஸ்ட்டில் இல்லை என்று மட்டும் தெரிந்து கொண்டேன்!!
ReplyDeleteநான்நினைது எழுதிய காரணமே அடிபட்டுப்போய்விட்டது பின்னூட்டங்கள் மூலமெழுதியவரை கண்டு பிடிப்பீர்கள் என்று நினைத்தால் தொழில் நுட்பம் நானெழுதிய பதிவுக்கும் பின்னூட்டங்களுக்கும் இட்டுச் சென்று என் எண்ணத்தையே மாற்றிவிட்டது
Deleteநாம் எழுதியதற்கு யாராவது வந்து பின்னூட்டமிட்டால் மகிழ்ச்சி. நாம் எழுதியதையும் மதித்து சிலர் படித்ததோடு அதற்குப் பின்னூட்டமும் இட கூடுதல் முனைப்பு எடுத்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிதானே?
ReplyDeleteஆனால் அதை வைத்து அவர்களை எடைபோட முயல்வது சரியில்லை என்று தோன்றுகிறது.
தானாய் சில அபிப்ராயங்கள் தோன்றலாம். ஆனால் யாருமே இங்கு மட்டுமல்ல, சொந்த உறவுகளிடம் காட்டும் முகமே அவர்கள் உண்மையான முகமாயிருக்காது என்னும்போது நட்புகளுக்குள் நாம் எழுதுவதற்கு வரும் பின்னூட்டங்களை எந்த மதிப்பில் எடைபோட முடியும்?
நண்பர்களின் பின்னூட்டங்களை இப்படிஆராய்ச்சிக்குட்படுத்துவதைவிட, எவ்வளவு ரசனையாக இதற்கு மறுமொழி கொடுத்திருக்கார், என்பது போன்ற ரசனைகளாக வெளியிடலாம்.
எண்ணங்கள் எழுத்தில் பிரதி பலிக்கும் அதைக் கண்டு யார் என்று தெரிகிறதா என்பதே கேள்வி ரசனையான பின்னூட்டங்களை நானும் ரசித்திருக்கிறேன்
Deleteநண்பர்களைக் காணச்செல்லும்போது அழுக்கான உடை அணிந்து இயல்பாய் இருக்கிறேன் உண்மையாக இருக்கிறேன் என்று சென்று அவர்களை சந்தித்தது முதல் அவர்களைக் குறை கூறிக்கொண்டு, சண்டை பிடித்துக்கொண்டு இருந்தால் இனிமையாக இருக்குமா?!! இவன் உண்மையாக இருக்கிறான் என்று அவர்கள் மகிழ்ந்துபோய் நம் நட்பை மிக விரும்புவார்களா? அல்லது இனிமையாகப் பேசினால் அவர்கள் உண்மையான முகத்தைக் காட்டவில்லை என்று முடிவுக்கு வரமுடியுமா?
ReplyDeleteசரியான சிந்தனை...
Deleteஒருவரின் எழுத்தை வைத்து எடை போடுவது என்பது.... மன்னிக்கவும், எடை போட நினைப்பதே தவறு என்பது என் கருத்து....!
நட்பு பற்றிய அதிகாரம் ஐந்து உள்ளது... அதை ஐயா அவர்கள் (மேலோட்டமாக) ஒருமுறை வாசித்து இருந்தால், இந்த பதிவையே எழுதி இருக்க மாட்டார் என்பது என்னுடைய சிந்தனை...!
ஸ்ரீ ராம் சில நேரங்களில் நம் உடையும் நம்மைப் பற்றிக் கூறும் என்பதிவை சற்று ஊன்றிப் படித்தால் நான் சொன்னதுவிளங்கும் பதிவர்களை சந்திக்கும் போது இனிமையாய் இருக்கவே எல்லோரும் முயல்வார்கள் அது அப்படித்தான் இருக்கும் ஓரிரு சந்திப்பில் ஒருவரைப் பற்றி தெரிவது மிகக் குறைவே ஆனால் எழுத்துக்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பு அவரைப் பற்றிய கருத்துகள்தெளிவாய் இருக்கும்
Deleteநான் எழுத்தை வைத்து எடை போடுவது பற்றிச்சொல்லவே இல்லை எழுத்துகள் எழுதுயவரை அடையாளம் காட்டலாம்கண்டுபிடிக்க முடிகிறதா என்பதே கேள்வி நான் சொல்லாதவார்த்தைகளாஉக்கு என்னை சொந்தக் காரனாக்காதீர்கள்
Deleteஒவ்வொரு பதிவுக்கும் பின்னூட்டமும், அதற்கு மறுமொழியும் அவசியம். சும்மா எழுதி என்ன பிரயோஜனம்?!
ReplyDeleteநம் விருப்பத்துக்கு நாம் பதிவிடுவது நம் உரிமைதான். ஆனா, அதை சரியா சொல்றோமா?! சரியானதாய் சொல்றோமான்னு எதிர்பார்ப்பதில் என்ன தவறு?!
நேரம் கிடைக்கும்போதெல்லாம் மற்றவர் தளத்துக்கு பின்னூட்டம் இடுவேன். என் தளத்தில் பின்னூட்டமிட்டவருக்கு பதிலும் சொல்வேன்.
முன்னலாம், வலைப்பூவில் ஒவ்வொருத்தர் பதிவிலும் அம்பதுக்கு குறையாம பின்னூட்டம் இருக்கும். அதுலயே சண்டை, கொஞ்சல், கெஞ்சல், அழுகைன்னு அத்தனையும் இருக்கும்.
முகநூல் வந்தபின் எல்லாரும் அங்க போய்ட்டாங்க. ஆனாலும் வலைப்பூவில் இருக்கும் நிறைவு அங்கு கிடைப்பதில்லை.
அரட்டை அடிக்க மட்டுமே முகநூல் எனக்கு...
நல்ல சிந்தனை நோ கன்ஃப்யூஷன்
Delete1. எனது பின்னூட்டங்கள் குறிப்பிட்ட அந்தப் பதிவின் கருத்துக்களை மேலெடுத்துச் சொல்ல வேண்டும் என்று எண்ணுபவன் நான். அதனால் பதிவெழுதியவர் மட்டுமல்லாமல் எனது பின்னூட்டங்களை வாசிப்பவரும் அது பற்றி தொடர்ந்து சிந்திக்க வழி கோலுவதாக எனது பின்னூட்டங்கள் அமையும்.
ReplyDelete2. எனது கருத்துக்களை வெளியிடுவதால் நட்பு சிதைந்து விடுமோ என்ற எண்ணமெல்லாம் எனக்குக் கிடையாது. நல்லவேளை எனக்கு வாய்த்த நண்பர்களும் என்னைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
3. நானிடும் பதிவுகளிலும் பதிவிட்ட பொருள் பற்றி
உரத்த சிந்தனையாய் பின்னூட்டமிட்டமிடுகிறவர்கள் விவாதிப்பதை மிகவும் விரும்புவேன் நான். என் கருத்தை அவர்களுக்கு திருப்தி ஏற்படும் அளவுக்கு விளக்கிச் சொல்ல சலிக்காத முயற்சிகள் எடுத்துக் கொள்வேன். அதனாலேயே எனது பதிவுகளுக்கான பின்னூட்டங்கள் எல்லா நேரத்தும் இரண்டு மூன்று வரிகளில் அடங்காது அவையும் ஒரு பதிவு போல நீண்டிருக்கும். பதிவில் எடுத்துக் கொண்ட விஷயத்தைத் தாண்டி வேறு பல விஷயங்களை உள்ளடக்கிக் கொண்டு என் பதிவுக்கான பின்னூட்டங்கள் நீண்டிருப்பதைப் பார்க்கலாம்.
4. எல்லாவிதங்களிலும் என் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவர் எனக்கு முக்கியம். அவரை தனிப்பட்ட முறையிலோ, அர்த்தமில்லாமலோ, மட்டரகமாக இன்னொருவர் சீண்டுவதை நான் அனுமதித்ததே இல்லை. இந்த விஷயத்தில் இவர் நட்பும் வேண்டும், அவர் நட்பும் வேண்டும் என்று மத்தியமாக செயல்பட நான் எண்ணியதே இல்லை.
உங்கள் பின்னூட்டமே அலாதி செறிவுடன் இருக்கும் ஒருவரது பின்னூட்டக் கருத்து நட்பை பாதிக்கும் என்றால் அது என்ன நட்பு எழுதுபவர்களும் வாசிப்பவர்களும் விவரம்தெரிந்தவர்தானே இதனாலேயே வலை நட்புகளை அறி முகங்களென்கிறேன் அதன் மூலம்சந்திப்புகள் நிகழ்ந்து நட்பாய் பரிமளிக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்
Deleteஇதுபோன்ற வெளிக்காட்டும் பதிவுகள் தொடரலாமா வேண்டாமா கருத்து வரவேற்கப் படுகிறது
ReplyDeleteதொடர்வது நல்லதுதான் ஐயா...!
இந்த பதிவுகள் மூலம் அவர்களை அவர்களே
அறிந்து கொள்வார்கள் என்பது என் கருத்து.
அன்பின் சுனில்கர் நீண்ட இடைவெளீக்குப்பின் உங்களைப் பார்ப்பதுமகிழ்ச்சி தருகிறது பதிவின் பின்னூட்டங்களைப் படித்தீர்களாபடித்துமிந்தகருத்தில் நிற்கிறீர்களா உங்களுக்கு நேர்ந்த விபத்தின் விளைவுகளால் ஏற்பட்ட பாதிப்பு குறைந்திருக்கும் என்று எண்ணுகிறேன்
Deleteதங்களது அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்.
ReplyDeleteவெளியாகி விட்டதே கவனிக்க வில்லையா சார்
Delete