Thursday, October 11, 2018

மாயை



                                                                              மாயை
                                                                             --------------
உலகே மாயம் வாழ்வே மாயம் 
நிலை ஏது நாம் காணும் சுகமே மாயம்
 
அலையும் நீர் மேவும் குமிழாதல் போல
 
ஆவதும் பொய்யாவதெல்லாம்
 
ஆசையினாலே
 
அரச போகமும் வைபோகமும்
 
தன்னாலே அழியும்
 
நாம் காணும் சுகமே மாயம்
 
உலகே மாயம்…
 
உறவும் ஊராரும் உற்றார் பெற்றாரும்
 
ஓடிடுவார் கூட வரார் நாம் செல்லும்
 
நேரம்
 
மறை நூல் ஓதுவதும் ஆகும் இதே சாரம்
 
மனதில் நாம் காணும் சுகமே மாயம்
 
உலகே மாயம் வாழ்வே மாயம்...
மாயை என்பது தண்ணீரில்
கிடையாக நிறுத்தி வைக்கப்படும் ஒரு கோலைப் போன்றது. என்ன தான் கோல் வளையவில்லை என்று நம் common sense சொன்னாலும் ஒவ்வொரு முறையும் நமக்கு கோல் வளைந்தே தெரிகிறது. அப்படிப்பட்டது தான் மாயை. மாயை என்று தெரிந்து கொண்டே
எல்லாவற்றையும் செய்ய வேண்டி இருக்கிறது இவ்வுலகில். மாயை என்று நாம் சொல்லும் போது
நம்மை அறியாமலேயே 'நிரந்தரம்' என்ற ஒன்றை பின்புலத்தில் கொண்டு வந்து விடுகிறோம்.

இது மாயை என்றால் மாயை against what ? ஏதோ ஒன்று பின்புலத்தில் இருக்க வேண்டும். நிஜம்
மட்டுமே கனவு காண முடியும். கனவு இன்னொரு கனவைக் காண முடியாது. எனவே மாயையின்
பின்புலத்தில் உள்ள நிஜம் என்ன என்று அறியும் முயற்சியே ஞானத்தின் தேடல் என்று நினைக்கிறேன்.மாயையை வெறுக்க வேண்டியது இல்லை.வெறுமனே விழித்துக் கொண்டால் கனவு கலைந்து விடும்.கண்ணாடியை மறைக்கும் தூசை வெறுமனே துடைத்தால் போதும். கண்ணாடியையே உடைக்க வேண்டியது இல்லை அல்லவா?
சில எண்ணங்களின்   விளைவே பதிவு எதை யெல்லாமோ நிஜம்  என்று நம்புகிறோம்   பல நேரங்களில் நிஜமே அப்ஸ்ட்ராக்ட் ஆக இருக்கிறது அல்லது மாயைபோல் இருக்கிறது
மாயக் கண்ணன் வாய்

 பிள்ளைப் பிராயத்தில் மண் உண்ட கண்ணன் வாயில்
சிறிதே மண் காண எண்ணிய தாய் யசோதை
மண்ணுடன் விண்ணும் நீரும் நிலமும் அண்ட அகிலமும்
கண்டே மயங்கியது மாயையின் மயக்கத்தால் அன்றோ.

மாயை தயை கொண்டு ஆயர் குலச் சிறார்களையும்
கன்றுகளையும் காணாமல் போக்கினான் நான்முகன் பிரமன்
பரம்பொருளே இடைச் சிறுவராய் கன்றுகளாய் உருவெடுத்து
எங்கும் நீக்கமற நிறைந்து நின்றதும் மாயையின் செயலன்றோ.

முன்னவன் தன் மாயையை விலக்க, மறைத்த தனைத்தும்
மறையாமல் நிற்க , பிரமனே நாரணனின் கணக்கிலா
உருவம் கண்டு அவனும் மாயையில் மூழ்கி
விளக்கம் பெற்றதும் மாயையின் செயலன்றோ
செருக்களத்தில் பார்த்தனுக்குச் சாரதியாய் சக்கரம்
கொண்டு ஆதவனை மறைத்து பூவுலகினை இருட்டாக்க
தலை தப்பியது என எண்ணி ஜயத்ரதன் தலை காட்ட
சக்கரம் மீட்டு இருள் விலக்கி அவன் தலை கொய்ய
கண்ணன் நிகழ்த்தியதும் மாயையின் செயலன்றோ/.

இல்லாதது இருப்பதுபோல் தோன்றுவதும் இருப்பது
இல்லாதது எனத் தோன்றுவதும் மாயையின்
விளைவு எனப் பொருள் புரிதல் தவறாமோ.
உலகே மாயம் வாழ்வே மாயம் என்பதும் சரிதானோ
நிரந்தரம் என்பது ஏதுமில்லை,நிகழ்வுகளில் நிச்சயமில்லை.
கருத்துப் பிழைகளும் காட்சிப் பிழைகளும் நிறைந்ததே வாழ்க்கை
மாயையின் பிடியில் மயங்கி இருப்பதே வாழ்க்கையின் நிதர்சனம்

மனத்தின்  மயக்கமே  மாயை என்றறிவோம்

உண்டு உறங்கி எழுவது நிச்சயமில்லை போகுமிடம்

தெரியாமல் போகாத ஊருக்குப் பொருள் ஈட்டி யாருக்கென்ன லாபம்

பேதம் பாராமல் பகிர்ந்துண்டு  வாழ்தல்  பெருமை தரும் 

ஈதலின் இன்பம் கொடுத்தனுபவித்தால் புரியும்

 ஏற்றமும் தாழ்வும் நிரந்தரமல்ல யாரும் யாராகவும் ஆகலாம்
உணர்ந்து கொண்டால் வாழ்வில் நிம்மதி நிச்சயம்

சில எண்ணங்களின்   விளைவே பதிவு எதை யெல்லாமோ நிஜம்  என்று நம்புகிறோம்   பல நேரங்களில் நிஜமே அப்ஸ்ட்ராக்ட் ஆக இருக்கிறது அல்லது மாயைபோல் இருக்கிறது

(சில எண்ணங்கள்   வாசிப்ப்வர்கள் அனுமானத்துக்காக  சொல்லாமல் விட்டது புரிந்து கொள்ளப்படும் என்னும் நம்பிக்கையில்  ).






57 comments:

  1. சிந்திக்க வைக்கும் பதிவு. மாயை, நிஜம் விவரங்கள் யோசிக்க வைக்கின்றன. கண்ணன் காட்டியது மாயை என்பது போல விஞ்ஞானத்திலும் ஒரு வெர்ஷன் உண்டு. காலப்பிரமாணத்தில் இப்போது நாம் வாழ்வதே மாயை. ஒளியின் வேகத்தோடு பயணம் செய்யும் நாள் வந்தால் கால வெள்ளத்தில் முன்னாலும் போகலாம், பின்னாலும் போகலாமாம். அதற்கான சக்தி ஒருநாள் கருந்துளைகளிலிருந்து கிடைக்கலாம்! அந்தக் கருந்துளைகளில் காட்சிப் படிமங்களாய் போன பிம்பங்களின் பதினான்காவது, பதினாறாவது பரிமாணம்தான் (அத்தனைப் பரிமாணங்கள் இருப்பதை அறியவே வாழ்வு போதாது) நம் வாழ்வு என்றொரு வெர்ஷன் படித்த நினைவு இருக்கிறது!

    உங்கள் கவிதை நன்றாய் இருக்கிறது - வழக்கம் போல. நீங்கள் அதில் ஜித்தர்.

    ReplyDelete
    Replies
    1. முதலில் வந்து கருத்திட்டதற்குநன்றி ஸ்ரீ டைம்மெஷினில் ட்ராவெல் என்பது கற்பனையாய் இருக்கலாமோ என்று தோன்று வதுண்டு இருந்தாலும் பதிவு உங்களைஅப்படிய்ம் சிந்திக்க வைத்திருக்கிறது

      Delete
  2. இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
    மாசறு காட்சி யவர்க்கு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சார்

      Delete
  3. உலகே மாயம்.. வாழ்வே மாயம்!..

    ஆனால்,
    உலகும் நிஜம்.. அதில் வாழ்கின்ற வாழ்வும் நிஜம்!...

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் நாம் அணுகுவதில் இருக்கிறது வருகைக்கு நன்றி சார்

      Delete
  4. //உலகே மாயம் வாழ்வே மாயம் //
    அருமையான பாடு. எழுதிய கவிஞர் யார்?
    உங்கள் கருத்தோட்டம் சிந்திக்க வைக்கிறது.நன்றி

    ReplyDelete
    Replies
    1. கருத்தோட்ட்மே சிந்திக்க வைத்தால் நல்லதுதானே

      Delete
  5. சகலமும் மாயையே

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் மனதை சமாதானப் படுத்தலாம்

      Delete
  6. நீங்க எழுதி இருப்பதும் மாயை! என் பதிலும் மாயை! :)))))

    ReplyDelete
    Replies
    1. நான் எழுடி இருப்பது என் மன ஓட்டம் நீங்கள் பதில் ஏதும் எழுதவில்லை

      Delete
  7. ஆழ்ந்த கருத்துகள் சிந்தனையை தூண்டுகிறது ஐயா.

    ReplyDelete
    Replies
    1. /இல்லாதது இருப்பதுபோல் தோன்றுவதும் இருப்பது
      இல்லாதது எனத் தோன்றுவதும் மாயையின்
      விளைவு எனப் பொருள் புரிதல் தவறாமோ./ வருகைக்கு நன்றிஜி

      Delete
  8. வாழ்வே மாயைதான் ஐயா. அதனை மறந்து நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. /கருத்துப் பிழைகளும் காட்சிப் பிழைகளும் நிறைந்ததே வாழ்க்கை
      மாயையின் பிடியில் மயங்கி இருப்பதே வாழ்க்கையின் நிதர்சனம் /சரிதானே சார்

      Delete
  9. ரெகார்டு டான்ஸும், கொலுவும், அனுபவங்களின் வித்தியாசங்களும் மாயையேதான்..

    ReplyDelete
    Replies
    1. அவரவர் விருப்பத்துக்கு வளைந்து கொடுப்பது மாயைதானோ

      Delete
  10. But the wisdom that this is Maya is obtained to majority only after they spend the majority of their family useful life ( meaning life to fullfill their "so called" commitments). To live with wisdom that this is Maya and still continue to fullfill the commitments is a rather BLISSFULL life.

    Very few are BLESSED with this BLISSFULL life where they can have the detached attachment.

    ReplyDelete
    Replies
    1. Very True, Nanmanam! Hats Off to you! Long time no see! Hope you are ok. :)

      Delete
    2. detached attachment/ both are opposites

      Delete
    3. this I think is your first visit Thanks

      Delete
    4. @ கீதா சாம்பசிவம் பழைய நட்பா சந்திக்க வைத்த என்பதிவு எனக்கு நன்றி சொல்ல வேண்டாமா

      Delete
    5. இணையத்தில் எழுத ஆரம்பித்த போதில் இருந்து நட்புத் தான். வயதில் இளையவர் என்றாலும் அவருடைய விஷய ஞானம் அபாரம். 2,3 வருடங்கள் முன்னர் எங்க வீட்டுக்கே வந்து என்னைச் சந்தித்தார். சில மாதங்கள் முன்னர் என்னுடைய பதிவு ஒன்றிலும் (புலம்பல்! ) வந்து ஆறுதல் சொல்லி இருந்தார். உங்க பதிவுக்கு இன்னிக்குத் தான் வந்திருக்கார்.

      Delete
    6. @ நன்மனம்:
      //..Very few are BLESSED with this BLISSFULL life where they can have the detached attachment.//

      I had a friend in my late-twenties. He used to talk about this 'detached attachment', when we indulged in philosophy. He must have read it somewhere.

      The question here is : The few guys who 'talk' about 'the detached attachment' - are they really in the state of being 'detached', being well aware that these are all 'Maya'? Or they pretend to be so and are, in fact, simply attached !?

      Delete
    7. என்னோட ஒரு பெரியப்பா இது மாதிரி இருப்பார். ஆனால் அவர் பிரமசாரி. எனக்குத் தெரிந்த வரையில் இப்போது திரு கேஜிஜி அவர்களைச் சொல்லலாம் என நினைக்கிறேன். detached attachment! in a way shall we say ஸ்திதப் பிரக்ஞர்?

      Delete
    8. ஸ்திதப் ப்ரக்ஞர் - இப்படி ஆவது சுலபமா, சாத்தியமா?

      ஒரு கட்டத்துல, அனுபவ அல்லது ஆத்ம ஞானம் வரும்போது, நம்மால் எதுவும் கிடையாது, எதுவும் எழுதி வைத்தபடிதான் நடக்கிறது என்பதை உணர்ந்தபிறகு, 'நடப்பது எல்லாம் நன்மைக்கே' என்ற உணர்வு வந்துவிடுமோ?

      Delete
    9. @நெத முதலில் ஸ்திதப் ப்ரக்ஞர் என்றால் யார் என்பதை நான் அறிந்தவரை கூறு கிறேன் காய்டல் உவதல் அகற்றி ஒஉ பொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே என்று படித்த நினைவு இதுதான் அது என்றோ அதுதானிது என்றோ முன் கூட்டியே ஒரு நிலைபாட்டினை எடுக்காமல் முடிவு செய்பவர் எனலாமா /எதுவும் கிடையாது, எதுவும் எழுதி வைத்தபடிதான் நடக்கிறது என்பதை உணர்ந்தபிறகு, 'நடப்பது எல்லாம் நன்மைக்கே' என்ற உணர்வு வந்துவிடுமோஇதுவே ஒரு முடிவின் சிந்தனை அல்லவா

      Delete
    10. @கீதா சாம்பசிவம் ஒருவர் இப்படித்தான் என்று முடிவு செய்வடே சரியா மேடம்

      Delete
    11. @ஏகாந்தன் detached attachment ... booth are diversely opposite மிஸ்டர் ஜக்கால் டாக்டர் ஹைட் மாதிரியா

      Delete
    12. மிஸ்டர் நன்மனம் வருகக்கு நன்றி ஒரு பழைய நட்பை இப்பதிவின் மூலம்புதுப்பித்துக் கொண்டுவிட்டீர்கள்

      Delete
    13. @ GM Balasubramaniam:

      நீங்கள் குறிப்பிட்டது Dr.Jekyll and Mr.Hyde கதை ! அது ஒரே ஆளின் உள்ளிருக்கும் இரண்டு முரணான கேரக்டர்கள்! அது ஆளைக் குறிக்கிறது. இது வேறே.

      Detached attachment : ஆங்கிலத்தில் இத்தகைய வார்த்தைப் பயன்பாட்டை oxymoron எனச் சொல்வார்கள். அதாவது ஒன்றுக்கொன்று முரணான சொற்களையுடைய வழக்காடல். மேலும் உதாரணங்கள்: pretty ugly, living death, serious joke..

      Delete
    14. @ கீதா சாம்பசிவம்:

      ஸ்திதப் ப்ரக்ஞர். முதன்முறையாக இந்த வார்த்தையைச் சந்திக்கிறேன்!

      ஒருவர் தன் வாழ்வில் detached-ஆக { உண்மையிலேயே எதிலும் பற்றற்று (விரக்தியினாலல்ல) } இருப்பதென்பது லேசில் ஆகக்கூடிய காரியமா? முயற்சியால், பயிற்சியால் அடையப்படும் நிலையா இது? இல்லை. இத்தகைய மனநிலை (state of mind) கோடியில் ஓரிருவருக்கே வாய்க்கிறது.
      (பகவத் கீதையில் ஓரிடத்தில் கிருஷ்ணன், முக்திநிலைபற்றி அர்ஜுனனுக்கு: இவ்வுலகில் கோடிக்கணக்கான மனிதர்கள், விதம் விதமாக என்னைத் தினம் பூஜிக்கின்றனர், காலமெலாம் எனைத் தேடி அலைகின்றனர். ஆயினும், அவர்களில் ஓரிருவரே இறுதியாக எனை வந்தடைவர்)

      Delete
    15. @ஏகாந்தன் oxymoron தெளிவு படுத்தியதற்கு நன்றி

      Delete
    16. @ஏகாந்தன் ஸ்திதப் பிரக்ஞர் என்னும்வார்த்தையை நான் புரிந்து கொண்டப்டி எழுதிருக்கிறேன் தாமரை இலைமேல் இருக்கும் நீர் போல வாழ்பவன் என்றும் கூறலாம்

      Delete
    17. // இத்தகைய மனநிலை (state of mind) கோடியில் ஓரிருவருக்கே வாய்க்கிறது. //ஏகாந்தன், இத்தகைய மனோநிலையையே நானும் கூறுகிறேன். நான் அறிந்தவரை என் பெரியப்பா இப்படித் தான் இருந்தார். ஆனால் இன்னொருவரோ வாழ்க்கையை (வெளிப்படையாகத் தெரிவது) அனுபவித்து வாழ்ந்தாலும் உள்ளூரப் பற்றற்று இருக்கிறார். இதைப் பலமுறை கண்டிருக்கேன், அதிலும் என் மாதிரிப் புலம்பல் கேஸுக்கு இது நல்லா வெளிப்படையாவே தெரியுது!

      Delete
    18. //கீதா சாம்பசிவம் ஒருவர் இப்படித்தான் என்று முடிவு செய்வடே சரியா மேடம்// என்னுடைய கண்ணோட்டம். அதோடு கூட இது பாராட்டுத் தானே தவிர்த்து ஒருவரை இகழ்வது இல்லை! அதிலும் திருகௌதமன் அவர்களிடம் நான் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். இதில் சந்தேகமே இல்லை.எதாக இருந்தாலும் வந்ததை அப்படியே ஏற்றுக்கொள்ளும் அவர் மனோபாவம் என்னை வியக்க வைக்கும். ஆனால் அவர் அப்படித் தான் நடந்துக்கணும் எனத் தீர்மானித்து இருக்கலை! அதான் அவரோட இயல்பு!

      Delete
    19. @ஏகாந்தன் Aekaanthan !

      "The question here is : The few guys who 'talk' about 'the detached attachment' - are they really in the state of being 'detached', being well aware that these are all 'Maya'? Or they pretend to be so and are, in fact, simply attached !?"

      there is a saying "Yat Bhavam tat Bhavathu" - "As you think so you become" . when you try to chanellise your thinking in line with the detached attachment, you can take the step towards it. However if you ask if anyone has achieved it, it is a state of mind.

      You have to keep on saying it whenever you are into an action so that the outcome is not bothering you. As a general human being, we all want HAPPINESS to be constant and SORROW to be temporary. Both HAPPINESS and SORROW are a state of mind.

      When one keeps thinking "THIS TOO WILL PASS" you can attempt to go to a state of detached attachment. It may look like someone is pretending but there are definitely examples of people who have ENJOYED the fruits.

      Thanks

      Delete
    20. Iam happy that various view points are brought in these comment when you know that something is not avoidable you ca only console by saying that this will also come to pass

      Delete
    21. @கீதா சாம்பசிவம் ஒருவரை பாராட்டுவது எளிது ஆனால் குறை ருந்தாலும் பக்குவமாய் வெளிப்படுத்த வு தெரிந்தி ருக்க வேண்டும்

      Delete
    22. @கீதா சாம்பசிவம் /அனுபவித்து வாழ்ந்தாலும் உள்ளூரப் பற்றற்று இருக்கிறார். இதைப் பலமுறை கண்டிருக்கேன்/இதுவும் ஒரு கணிப்பாகத்தான் இருக்க வேண்டும்,

      Delete
    23. @ நன்மனம்:
      ‘When one keeps thinking "THIS TOO WILL PASS", you can attempt to go to a state of detached attachment.’

      When do we, humans, tend to think ‘this too will pass’ ? Have you ever observed this closely?

      We normally tend to think ‘this too will pass’, when we are in big trouble. i.e. when we are facing an insurmountable problem, or an unbearable grief. That is, when we are in a hopeless position and left with no way out, then only - out of desperation- we may think ‘this too will pass’, just to cool ourselves off. Not otherwise. On the contrary, When we are very happy , joyous or simply enjoying life, we do NOT even for a moment think, ‘this too will pass’ ! Do we? Because, at that time, we are ‘attached’ with happiness.. we are very much IN IT ! Then, where is the question of going to a stated of ‘detached attachment’?

      தமிழிலும் கொஞ்சம்:
      நன்மனம்:// ‘இதுவும் கடந்துபோகும்’ என்று நினைத்துக்கொண்டே இருந்தால், சேர்ந்தும் சேர்ந்திராத ’பற்றற்ற மனநிலை’யை நெருங்க நாம் முயற்சிக்கலாம்’ //

      ‘இதுவும் கடந்துபோகும்’ என நாம் எப்போது பொதுவாகச் சொல்வோம்? கவனித்திருக்கிறீர்களா? தீர்க்கமுடியாத பிரச்னையோ, தாங்கமுடியாத துக்கமோ நம் முன் நிற்கும்போது. ஏதும் செய்ய இயலாத கையறுநிலையில் நாம் மாட்டிக்கொண்டிருக்கையில், ஒரு சலிப்பில்தான் சொல்வோம் ‘இதுவும் கடந்து போகும்!’ அடுத்த பக்கத்தை இப்போது கவனியுங்கள்: நாம் இன்பமாக, சந்தோஷமாக இருக்கையில், வாழ்க்கையில் ஆனந்தமாக லயித்திருக்கையில், ’இதுவும் கடந்து போகும்’ என ஒரு கணமேனும் நினைப்போமா? இல்லை. ஏனெனில், நாம் அந்தப்பொழுதில், சந்தோஷத்தோடு கலந்திருக்கிறோம். சந்தோஷமாகவே இருக்கிறோம்! நம் லட்சணம் இப்படி இருக்கையில், வாழ்க்கையை ஒருபக்கம் அனுபவித்துக்கொண்டே, பற்றற்று இருக்கும் மனநிலையை (தாமரை இலைத் தண்ணீர் போல) - நெருங்குவது எப்படி சாத்தியமாகும்? புரிவதுபோல் இது தோன்றினாலும், மனதின் இந்த அபூர்வநிலை எளிதில் ’நிகழ்ந்து’விடுமா ?

      Delete
    24. @ஏகாந்தன் Aekaanthan !

      "..வாழ்க்கையை ஒருபக்கம் அனுபவித்துக்கொண்டே, பற்றற்று இருக்கும் மனநிலையை (தாமரை இலைத் தண்ணீர் போல) - நெருங்குவது எப்படி சாத்தியமாகும்? புரிவதுபோல் இது தோன்றினாலும், மனதின் இந்த அபூர்வநிலை எளிதில் ’நிகழ்ந்து’விடுமா ?"

      In my opinion this questioning is the first step towards achieving. When we fear something we would not try to question it. But for searching an answer, questioning is necessary.

      Again according to me, the step towards this is being truthful to self.

      If you ask, is it possible to think 'THIS TOO WILL PASS" in happiness, i will strongly say it is possible and can only be felt and not demonstrated.

      I had a friend of mine who has a craze for sports, he is well qualified and is capable of earning lakhs, but he did not go behind it and made sure he had the minimum money required for his necessity and never compromised on his love for sports. He said no one can be without wish. Even for a man wanting to be without wish is a wish.(hope not confusing).

      If we go deep into this statement, the wish of wanting to be without wish will take us in a different direction (may be a difficult terrain) from those who have wants and chasing those wants. Some BLISSFUL souls have emerged by going through this wish.

      I have seen Brothers at Ramakrishna Tapovanam who have preached and practiced this detached attachment. For them the happiness is seeing the good thoughts propagated and sorrow is the difficulty faced in doing it (as they need men and money to do this service and not all can be in their wavelength). However they have braced all these challenges by being in the state of (தாமரை இலைத் தண்ணீர் போல).

      In family life too it is possible to have this "THIS TOO WILL PASS" mentality but needs courage and conviction to implement the same and as you said it will not happen "EASILY"

      Thanks

      Delete
    25. "ஆசைகள் அறுமின்! ஆசைகள் அறுமின்! ஈசனோடாயினும் ஆசைகள் அறுமின்!" என்னைப் பொறுத்தவரையிலும் இதுவும் ஒரு ஆசைதானே! :))))) இதையும் துறந்தால்? அவ்வப்போது நம் மனதில் உருவாகும் வெற்றிடம் இதானோனு பலமுறை நினைப்பேன். பின்னர் என்னை நினைத்து எனக்கே சிரிப்பு வரும். :))))

      Delete
    26. ஒருவருக்கொருவர் பதிலளிப்ப்துபோல் போகிறது பின்னூட்டங்கள் ஆசையை அறுமின் என்று சொல்வது எளிது கடைபித்தல் கடினம் why //well nigh impossible உண்மை நிலைமை தெரிந்தாலே போதும்to quote from the post/ கருத்துப் பிழைகளும் காட்சிப் பிழைகளும் நிறைந்ததே வாழ்க்கை
      மாயையின் பிடியில் மயங்கி இருப்பதே வாழ்க்கையின் நிதர்சனம்

      Delete
    27. எதுவும் கடந்து போகாது போகுமென்னும்நம்பிக்கையே முக்கியம்

      Delete
    28. தொடர்ந்து வாருங்கள் நன்றி

      Delete
    29. @ Nanmanam: //..If we go deep into this statement, the wish of wanting to be without wish will take us in a different direction (may be a difficult terrain) from those who have wants and chasing those wants. Some BLISSFUL souls have emerged by going through this wish.//

      I understand what you are trying to convey. What I want to emphasize on this is ‘ this is not everyone’s cup of tea!’ ‘A blissful soul’ may surface at last, out of all this exhausting enquiry, but NOT always. Another thing: To reach this peculiar state of mind, one cannot have the assistance of someone else . Either one gets it on his own, or, he doesn’t. Period.

      Also, in your reply above, the word ‘wish’ should be substituted by the word ‘desire’. Thats the appropriate word/expression here.

      Thanks for the response.

      Delete
    30. @Geetha Sambasivam:
      //..’’ஆசை அறுமின்! ஆசை அறுமின்! ஈசனோடாயினும் ஆசை அறுமின்!" என்னைப் பொறுத்தவரையிலும் இதுவும் ஒரு ஆசைதானே!//

      மேலே நீங்கள் குறிப்பிட்டது திருமூலருடைய வாக்கியங்கள் என நினைவு.

      ஆமாம். முக்தி, மோக்ஷம் என்று ஆசைப்படுவதும் (the ’desire’ to attain mukthi or moksha) ‘ஆசை’யேதான். ஆனால் ஆசைகளில் உன்னதமானது. ஆசைப்படத்தான் தோன்றுகிறதெனில் மிகப்பெரியதற்கு ஆசைப்படவேண்டும் என்கிறது ஆன்மிகம். அதுதான் பந்தங்கள், கர்மபலன்கள் ஆகியவற்றிலிருந்து விடுபட்ட, த்வைதத்திலிருந்து விடுபட்ட, Cause and effect field-லிருந்து விடுபட்ட - இந்த மோக்ஷம், முக்தி, சமாதி போன்ற அபூர்வநிலைகள்.
      -இது ஒரு வகை. பொது வகை.

      இரண்டாவது வகை -விசேஷமாக, திருமூலர் சொன்னது:
      ’ஈசனோடாயினும் ஆசை அறுமின்!’ ஈசனிடம் போய்ச்சேரவேண்டும் என்கிற அந்த மேன்மையான ஆசையையும் விட்டுவிடு என்கிறார். துறத்தலின் உச்சம். வெறுமையின் உன்னதம். பூஜ்யத்தில் நிலைத்தல். அனேகமாக, இதனை இவரைப்போல் நேரடியாக அடித்தவர் மற்றொருவரில்லை எனத் தோன்றுகிறது.

      இப்படி நிறைய எழுதலாம். இது பின்னூட்டம் என நினைவுபடுத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது!

      Delete
  11. நாம் நினைப்பது நிறைவேறும்போது அது நிஜம்.. நம்பிக்கை.
    அது பொய் என ஆகும்போது மாயை ஆகிவிடுகிறது..

    ReplyDelete
    Replies
    1. ஓரளவு என் எண்ணங்கள் உங்கள் பின்னூட்டத்தில் தெரிகிறது
      பதை யெல்லாமோ நிஜம் என்று நம்புகிறோம் பல நேரங்களில் நிஜமே அப்ஸ்ட்ராக்ட் ஆக இருக்கிறது அல்லது மாயைபோல் இருக்கிறது

      Delete
  12. சிந்திக்க வைக்கும் பதிவு ஐயா...
    மாயை - அருமை.

    ReplyDelete
    Replies
    1. சிந்தனையில் தெளிவு பிறந்தால் நன்று நன்றி சார்

      Delete
  13. //மாயையின் பின்புலத்தில் உள்ள நிஜம் என்ன என்று அறியும் முயற்சியே ஞானத்தின் தேடல் என்று நினைக்கிறேன்.மாயையை வெறுக்க வேண்டியது இல்லை.வெறுமனே விழித்துக் கொண்டால் கனவு கலைந்து விடும்.கண்ணாடியை மறைக்கும் தூசை வெறுமனே துடைத்தால் போதும். // - ரொம்ப சரியாக எழுதியிருக்கீங்க. தியானத்தின் மார்க்கமும் இதுதான்.

    தியானம் செய்வதன் நோக்கம் என்று என் மாஸ்டர் சொன்னது இதே உதாரணம்தான். கண்ணாடியில் பட்டிருக்கும் தூசியை அழிப்பதுபோல. சிலருக்கு உடனேயே பளிச் என்று ஆகிவிடும். பலருக்கு பல ஜென்மங்கள் எடுக்கலாம்.

    'மாயை' என்பது 'விதி' என்றும் சொல்லலாம். அந்த விதியை மாற்றும் வல்லமை நம்மிடம்தான் இருக்கிறது. எல்லோருக்கும் அந்த மாயையை மீறி ஊன்றி உழைத்து நிஜத்தைக் கண்டுபிடிக்கும் ஆர்வம், பொறுமை, வாய்ப்பு வருவதில்லை. அந்த மார்க்கத்தில் செல்பவர்களை மாயை முடிந்த அளவு கலைக்கப் பார்க்கிறது.

    இடுகையை ரசித்ததனால்தான் மீண்டும் வந்து படித்து கருத்திடுகிறேன். இது ஒரு ஹெவி சப்ஜெக்ட்.

    ReplyDelete
    Replies
    1. ஞானம் என்பதற்கு முதலிலேயே ஒரு எல்லைக் கோடுவகுத்த மாதிரி இருக்கிறதே/எதுவும் கிடையாது, எதுவும் எழுதி வைத்தபடிதான் நடக்கிறது என்பதை உணர்ந்தபிறகு, 'நடப்பது எல்லாம் நன்மைக்கே' என்ற உணர்வு வந்துவிடுமோ/
      (சில எண்ணங்கள் வாசிப்ப்வர்கள் அனுமானத்துக்காக சொல்லாமல் விட்டது புரிந்து கொள்ளப்படும் என்னும் நம்பிக்கையில் ).ஆனால் புரிதலும் ஏதோ சொல்லி வைத்த மாதிரி இருக்கிறதே ஹெவி சப்ஜெக்ட் தான் மீள் வருகைக்கு நன்றி சார்

      Delete