Tuesday, February 12, 2019

ஆணின் சிப்லிசிடியும் பெண்ணின் காம்ப்லிசிடியும்



                                        ஆணின்  சிம்ப்லிசிடியும்  பெண்ணின் காம்ப்லிசிடியும்
                                         -----------------------------------------------------------------------------------
அவளது டைரி
-----------------------
இன்று மாலையிலிருந்தே அவன் அவனாயில்லை
மாலையில் காஃபி க்ளப்பில் சந்திக்க ஏற்பாடு.
தோழிகளுடன் ஷாப்பிங் செய்ததில் தாமத மாயிற்று
பார்த்தவன் ஒரு ஹாய் கூடச் சொல்லவில்லை
கடுகடு என இல்லாவிட்டாலும் ஒரு சுரத்து இல்லை.
என்ன பிணக்கமோ காரணம் தெரியவில்லை
என் மேல் கோபமா எனக் கேட்டேன்.இல்லையென்றான்
நான் அவனை மிகவும் நேசிப்பதாகக் கூறினேன்.
பதிலாய் வந்தது ஒரு வரண்ட சிரிப்பு.
என்னைப் பார்த்து அவனும் நேசிப்பதாய் ஏன்
சொல்லவில்லை ஏதும் பேசாமல் கார் ஓட்டினான்
எனக்கு அழுகை அழுகையாய் வந்தது.
வீட்டுக்கு வந்தவன் தொலைக்காட்சிப்
பெட்டியை முடுக்கினான். எந்த சானலும்
பார்க்காமல் மாற்றிக் கொண்டே இருந்தான்
படுக்கையில் வீழ முடிவு செய்தேன் வந்ததும்
அவனிடம் கேட்க எண்ணியிருந்தேன் வந்தவன்
வந்தவேகத்தில் உறங்கியும் போனான்
அவனுக்கு வேறு யாரிடமோ லயிப்பா.
நினைக்கவே அச்சமாயிருந்தது. கண்ணீர்
வடித்தவள் அழுகையிலேயே உறங்கிப் போனேன்


அவனது டைரி

இன்று இந்தியா கிரிக்கட் டெஸ்டில்
இங்கிலாந்திடம் தோற்றது. சே  டாம் இட்..!

   

 


26 comments:

  1. ஹா..... ஹா.... ஹா... இந்தியா ஜெயித்த நேரம் பேசி இருக்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. பஹுவே எப்போது பேசீருகலாமென்பது அல்ல பெண்களின் குணாதிசயங்களிலொன்றை எழுதி இருக்கிறேன்

      Delete
    2. பதிவே எப்போது பேசி இருக்கலாம் என்பதல்ல பெண்களின் குணாதி சயங்களில் ஒன்றை எழுதி இருக்கிறேன் தட்டச்சுப் பிழைகள் காரணமாக இன்னொருரு முறை மறு மொழி தவறில்லாமல் எழுத முயற்சி

      Delete
  2. Replies
    1. ஆணெப்ப்[ஓதுமே அதிகம் பேசமாட்டான் எல்லாமே மனசில்தான் இருக்கும் சிம்பிள் பெர்சன்ன்ஸ்

      Delete
  3. Replies
    1. வந்து ரசித்ததற்கு நன்றி சார்

      Delete
  4. இதுக்கெல்லாமா? ரொம்பவே இன்வால்வ் ஆகி இருந்தால் இப்படி இருக்கும்போல. ஆனாலும் நம்ப முடியவில்லை.இது வேறு, அது வேறு இல்லையோ?

    ReplyDelete
    Replies
    1. கீசா மேடம்... நானும் அப்படித்தான். அதுனாலதான் ஸ்போர்ஸை லைவ் ஆகப் பார்ப்பதை முடிந்த அளவு தவிர்ப்பேன். ஹாஹா.

      Delete
    2. கீதா சாம்பசிவம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும்சில வித்தியாசங்களுள் ஒன்று

      Delete
  5. இதை சிம்ப்ளிசிடினு சொல்ல முடியலை. அப்படி இருந்தால் சொல்லி இருக்கலாமே!

    ReplyDelete
    Replies
    1. வேறு என்ன சொல்லி இருக்கலாம்

      Delete
  6. கதையின் தலைப்பு சரியில்லை. ஆபீஸ் பிரச்சனை வந்தாலும் ஆண் இப்படி இருப்பது சகஜமே..

    ReplyDelete
    Replies
    1. பதிவை உள்வாங்கிக் கொள்வதில்தான் தவறு

      Delete
  7. அவளுக்கு அவனின் கிரிக்கட் மோகம் தெரியாதோ?

    ReplyDelete
    Replies
    1. அவளுக்கு அவளே முக்கியம் அவனுக்கு அப்படி அல்ல

      Delete
  8. ஆண் எப்போதுமே அதிகம் பேசமாட்டான்! சிம்பிள் பெர்சன்! அடடே! என்ன ஒரு அவதானிப்பு? :))

    பார்த்துச் சிரிப்பதற்காக, யோசிப்பதற்காகவும் https://youtu.be/V1j3vHIqZ4g

    ReplyDelete
  9. கால் கட்டு என்ன சொல்கிறதுமுதல் வருகையா நன்றி

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  11. ஆண் இப்படியிருந்தால் அவன் சிம்பிளாக இருப்பதாகவும், பெண் அப்படியிருந்தால் அவள் ஏதோ காம்ப்ளிகேட்டட் கேரக்டர் என்பதாகவும் அர்த்தமா!

    இன்னொன்று: சிம்ப்ளிசிட்டி, காம்ப்ளிசிட்டி என வார்த்தைகள் எதுகை மோனையாக தொனிக்கலாம். ஆனால் இவ்விரு வார்த்தைகளும் (simplicity, complicity) - ஒன்றிற்கொன்று எதிரானவையாக, antonyms -ஆக வருவனவல்ல. Complicity என்பதன் பொருளே வேறு. ஒரு குற்றத்தில், தவறான காரியத்தில் துணையாக இருத்தல், சம்பந்தப்பட்டிருத்தல் என்கிற பொருளில் வரும் அது.

    ReplyDelete
    Replies
    1. ஆண் இப்படியிருந்தால் அவன் சிம்பிளாக இருப்பதாகவும், பெண் அப்படியிருந்தால் அவள் ஏதோ காம்ப்ளிகேட்டட் கேரக்டர் என்பதாகவும் அர்த்தமா!/ அதே அதே என்று நினைத்ததால் எழுதியது simple and complicated என்று நினைத்துதானெழுதினேன்complicity வேறு பொருளில் இருக்கும் என்படு எழுதும்போது நினைவுக்கு வரவில்லை எடுத்துக் காட்டியத்சற்கு நன்றி சார்

      Delete
  12. ஹா ஹா ஹா இப்படியுமா...

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. எப்போடுமே பெண்கள் கொஞ்சம் அலப்பரைகள் என்பது என் எண்ணம் பெண்கள் தவறாக எண்ண வேண்டாம்

      Delete