Saturday, March 23, 2019

தென்னையை பெற்றால் ............


                           தென்னையைப் பெற்றால்
                          ------------------------------------------
அப்பாடா ஒரு வழியாய் எங்கள் பிரச்சனை முடிவுக்கு வந்தது
பிரச்சனை என்னவென்று சொன்னால்தானே தெரியும்
ஒரு தேங்காயின் விலை என்ன
தெரியாது
ஒரு இளநீரின் விலை என்ன
இதென்ன விலை கேட்டுக் கொண்டு
பொதுவாக என்ன விலை இருக்கும் என்று நினைக்கிறாய் 
ஒவ்வோர் இடத்தில் ஒவ்வோர் விலை இருக்கும்  ஆனால் முன்பைவிட விலை அதிகம்தான் கோடைக்காலம் இள நீருக்கு டிமாண்ட்  ஜாஸ்தி தேங்காயை விட இள நீர் அதிகம்விலைஅது சரி உன்வீட்டில்தான்  தென்னை மரமிருக்கிறதே  உனக்கேன் அந்தக் கவலை
அதைதான் சொல்ல வந்தேன்  பிரச்சனை முடிந்தது என்று தென்னையில் இருக்கும்காய்களை  கீழே கொண்டு வர வேண்டாமா  இபோதெல்லாம் கூகிளில் தேடினால் காய் பறிப்பவர்  பற்றிய டிடெயில்ஸ் கிடைக்கும் என்று தேடினது தான்   மிச்சம்
 அவ்வளவு ஹை டெக் ஏன் 
சாதாரணமாக காய் பறிப்பவரின்  தொலை பேசி எண் என்னிடம் உண்டு  கூப்பிட்டால் இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்கிறாரேதவிர வருவதில்லை மரத்தில் காய்கள் முற்றி சாலையில் காய்கள் விழுகின்றன நமக்கோ யார் தலை மீதாவது விழுந்துவைக்குமோ என்று பயம் இது போல் ஒரு முறை யாரோ  நிழலுக்காக காரை மரத்தின்  கீழே நிறுத்திவைக்க  ஒரு காய் விழுந்து காரின் முன்புறக்  கண்ணாடி உடைந்து விட்டது
ஒரெ சல்லியமாய் போய் விட்டது  (சல்லியம் =தொந்தரவு )
அது சரி வள வளவென்று சொல்லிக் கொண்டு இருக்காமல்  சுருக்கமாகச் சொல்லமாட்டாயா என்ன செய்ய வலைத்தளத்தில் பதிவுகள் படிப்பதன் விளைவோ என்னவோ
சுருங்கச் சொல்லப் போனால்  மரத்தில் இருந்து காய்கள்பறிக்கப்பட்டு விட்டது  ஆனால் அதற்கு மு  நன்பட்ட அவலங்க்சளை சொல்லலாம்  என்று நினைக்கிறேந்தேங்காய் விலை என்ன வென்று தெரியாது யாரோ ஒரு மகானுபாவன்   மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கவா என்றார் இதற்குத்தானே காத்துக் கொண்டிருந்தாய் பால சுப்பிரமணியா
 மரமேறி காய்களை பறிக்க என்ன தரவேண்டும்
மரம் ஏறிக் காய் பறிக்க ரூபாய் நானூறு தரவேண்டும்  மரத்தில் சுமார் எத்தனை காய்கள் இருக்கும் 
சுமார் நூறு காய்கள்இருக்கலாம்
மனசு ஒரு கணக்குப்போட்டது
நூறு காய்களுக்கு நானூறு ருபாய் என்றால்  ஒருகாய்க்கு நான்கு ரூபாய் ஆகிறது கீழே வந்தபின்  அவற்றை வீட்டுக்குள்ளிருக்கும் பரணுக்குள் சேர்க்க வேண்டும்  பின்   மட்டை எடுக்க வேண்டும் அதற்கு ஒரு காய்க்கு ரூபாய் இரண்டு  தர வேண்டும்ஆகஒரு தேங்காய் அடக்க விலை ரூபாய் ஆறிலிருந்து ஏழுவரை ஆகும்காய் பறிக்க வந்தவர் இளநீர்க்காய்களை  அவரே எடுத்துக் கொள்வதாகக் கூறினார் எங்கள் சுற்று வட்டாரத்தில்  ஒரு இள நீர் ரூபாய் முப்பது ஆகிறதாம்  இந்தக் கணக்கு பார்க்கவே முதலில் தேங்காய் இளநீர் விலை பற்றிக் கேட்டேன்  இளநீர்க்காய்களை அவரே எடுத்துக் கொண்டால் ஒரு இள நீர் காய்க்குரூபாய் எட்டு தருவதாகக் கூறினார் இளநீர்க்காய்களை மரத்திலேயே விட்டால் அவை முற்றி தேங்காயாக இன்னும் மூன்று மாதங்களாகலாம் அதன்பின் நான் மரமேற யாரையாவது தேட வேண்டும்   போதுமடா சாமி இளநீர்க்காய்களை அவரையே எடுத்துக் கொள்ளச்  சொன்னேன்சாலையில் போக்குவரத்து அதிகம் இருந்தது எந்த பாதிப்புமில்லாமல் பார்த்துக் கொள்வதாகக் கூறினார்  சுமார் ஒரு மணிநேரம் நானோ என் மனைவியோ  வெளியில் வரவே இல்லை அவ்வளவு பயம்  எல்லா முடிந்து பார்த்தால் அவர் எங்களிடம்  ரூபாய் இருநூறு கொடுத்தார் தேங்காய்களை  வீட்டின் பின் புறத்தில் கொண்டு சேர்த்தார்  ஆகமொத்தம் எங்களுக்கு தேங்காய் பறிக்க எந்த செலவும்  ஆகவில்லை  என்ன    அவருக்கு சுமார் 75 இள நீர்க்காய்கள் கிடைத்தது எங்களுக்கு சுமார் நூறு தேங்காய்கள்  கிடைத்ததுஅவருக்கு ஒரு இளநீர் ரூபாய் முப்பது என்று விற்றால் நல்ல லாபம் தான்  மரம் ஏறவும்  காய்களை எடுக்கவும் இரண்டு பேர்களிருந்தனர் வயதானால் அதிகம் லாபம் நஷ்டம் பார்க்கக் கூடாதுமொத்தத்தில்  நோகாமல் நுங்கு பறிப்பது என்ன வெண்ரு தெரிந்து கொண்டேன் 
தேங்காய்  பறிப்பவரிடம் அருகில் இருந்தவர்களொர் இள நீரிர்க் காய்க்கு ரூபாய் 15 தருகிறேன் என்று கூறியும் அவர் தரவில்லை
வீட்டின் முன்புறத்தென்னை மரம் 







32 comments:

  1. உங்களுக்கே அந்த இளநீர் வேண்டுமென்றால் கூட நாற்பது ரூபாய் தரவேண்டியதிருந்திருக்கும்! வியாபாரம்! இலாபம்!

    எப்படியோ தேங்காய் பறிக்கும் தொல்லை தீர்ந்தது!

    ReplyDelete
    Replies
    1. நல்ல வியாபாரம் எனக்கு நஷ்டமில்லைபிரச்சனை இப்போதைக்கு தீர்ந்தது

      Delete
  2. ஒவ்வொரு இளநீராக அவர் வியாபாரம் செய்யமுடியாது. 50-75னா மொத்தமா 15ரூபாய்க்கு எடுக்க ஆளிருக்கும். ரசித்த பதிவு.

    இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் உங்கள் வீட்டிற்கு வந்தால், தேங்காய் சாதம், தேங்காய் துவையல், தேங்காய் பர்பி, மோர்க்குழம்பு மெனுதானா?

    ReplyDelete
    Replies
    1. வீட்டுப்பக்கம் வராமலேயே யூகிப்பதில் வல்லவரோ நீங்கள்

      Delete
  3. மரம் வளர்த்தவர்களைவிட மரம் ஏறியவருக்கு இலாபம் அதிகம்

    ReplyDelete
    Replies
    1. அதற்காக அவர்கள் சிரமமும் அதிகம்

      Delete
  4. நல்ல அனுபவம் தான்.

    நெய்வேலியில் இருந்தவரை வீட்டில் இருந்த மாமரம், புளியமரம், பலா மரம் என எல்லாவற்றிலும் ஏறி காய்களைப் பறிப்பது எனது வேலையாக இருந்தது! பெரும்பாலும் காய்களை விற்பது இல்லை. எல்லாம் வீட்டிற்கும் உறவினருக்கும் கொடுத்து விடுவது தான் வழக்கமாக இருந்தது. வீட்டில் தென்னை இல்லை! ஆனால் ஓரிரு முறை தென்னையிலும் ஏறி இருக்கிறேன்! :)

    ReplyDelete
    Replies
    1. நாங்களும் தேங்காய் விற்பதில்லை இன்னு ஓரிரு மாதங்களில் வீட்டில் இருக்கும் மாமரது காய்களை எடுக்க வேண்டி இருக்கும் நானும் என் அறுபதுவயது வரை மாமரத்தில் ஏறி மாங்காய் பறித்தடுண்டு என்மனைவி எக்கள்மருத்துவரிடம் புகார் கொடுத்து ஒரு வழியாக அந்த வேலை செய்வது நின்று விட்டது இப்போது முடியவும் முடியாது

      Delete
  5. ///இதற்குத்தானே காத்துக் கொண்டிருந்தாய் பால சுப்பிரமணியா///

    ஹா.. ஹா.. ஹா.. ரசித்தேன் ஐயா.

    http://killergee.blogspot.com/2019/03/blog-post_20.html?m=1

    ReplyDelete
  6. ஐயா

    இங்கு கேரளத்தில் தென்னை மரம் இல்லாத வீடே இல்லை என்று சொல்லலாம். ஆனால் உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்ற கதை தான். எங்கள் வீட்டில் சுற்றிலும் நாலு தென்னை உண்டு. நாலு தென்னை மரத்தில் இருந்து 50/60 நாட்களுக்கு ஒரு முறை 25 காய்கள் கிடைக்கும். இந்த தேங்காய்களை பறிக்க 300 ரூ கூலி. இது இலலாமல் ஓணம், விஷு போனஸ் தனி.
    இதற்கிடையில் ஒரு மரம் வெட்ட வேண்டி வந்தது.மரத்தை வெட்டி எடுத்து கொண்டு போக 3500 ரூ. அப்படி இருந்தும் மூடு தோண்டி எடுக்கவில்லை. ஒரு ஜேசிபி காரனுக்கு 1000 கொடுத்து தொண்டு எடுத்தோம்.
    கேரளத்தில் உள்ள மரங்களின் இளநீர் சுவைப்பதில்லை.

    ReplyDelete
    Replies
    1. எங்கள் வீட்டு இளநீர் இனிப்பாக இருக்கும் தேங்காய் பறிப்பவர் பற்றி அறிய கூகிளில் தேடிய போது என்னை கேரளாவுக்கு கூட்டிச் சென்றது வீட்டில் இரண்டு மரங்களிருந்தன ஒன்று இடி விழுந்து பட்டுப்போய் விட்டது அதை வெட்டி எடுத்துச் செல்ல ரூ 7000 கொடுக்க வேண்டி இருந்தது

      Delete
  7. கண்ணீரில்லாமல் தொந்தரவு முடிந்தது...!

    ReplyDelete
    Replies
    1. கண்ணீர் எல்லாம்விட வில்லை ஒரு சுமை போல் இருந்தது நிஜம்

      Delete
  8. தென்னை மரங்கள் வைத்திருப்போருக்கு நல்ல யோசனையை தந்துவிட்டது உங்களின் அனுபவம்.

    ReplyDelete
  9. சார் இளநீர் அத்தனையுமா அவர் எடுத்துக் கொண்டார்? நீங்கள் உங்கள் வீட்டுக்குக் ஒரு 10 வைத்திருக்கலாமே. உங்களுக்கும் உங்கள் மகன் குடும்பத்திற்கும் என்று. வெளியில் ஒரு இளநீர் விலை 20/25 இங்கு எங்கள் ஏரியாவில்...

    எப்படியோ எல்லாக் காய்களும் பறித்தாயிற்றே...அதிகம் கஷ்டப்படாமல்...நல்லதுதான்..

    வீட்டுக்காய் வீட்டுக்காய்தான் சார். ஊரில் இருந்தவரை தேங்காய் இளநீர் எல்லாம் விலை கொடுத்து வாங்கியதே இல்லை....மாங்காயும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அது ஒரு வகை வியாபாரம் தானே எனக்கு ஐந்து இளநீர் கொடுத்தார்

      Delete
  10. யோசனைகள் உதவுவதில்லை ஒரு தேங்காயோ இள நீரோ என்ன விலைக்கு விற்கப் படுகிறது என்று சொல்லி இருந்தால் ஒரு தகவலாவது கிடைத்திருக்கும்

    ReplyDelete
  11. இங்கெல்லாம்[சேலம்], ஒரு காய்க்கு இவ்வளவு ரூபாய்னு பேசி குத்தகைக்கு விட்டுவிடுகிறார்கள். பறிப்பது, எடுத்துச் சென்று விற்பது எல்லாமே அவர்கள் வேலை. லாபம் கூடுவதும் குறைவதும் அவர்களின் சாமர்த்தியத்தைப் பொருத்தது.

    ReplyDelete
    Replies
    1. தேங்காய் பறிப்பவரைத் தேடியே போதும் என்றாகி விட்டது சரி ஒரு மரத்தைக் கூட குத்தகைக்குஎடுக்கிறார்களா

      Delete
  12. எனக்கு தேங்காய் பர்பின்னா கொள்ளைப்பிரியம். இங்க தேங்காயின் விலை 20ரூபாய்க்கு குறையாது. அதனால் கொஞ்சம் செஞ்சு பார்சல் பண்ணி விடுங்கப்பா

    ReplyDelete
  13. பர்ஃபி செய்து அனுப்ப விலாசம் இல்லை முடிந்தால் இங்கு வாருங்கள் வேண்டு மளவு செய்து தரச் சொல்கிறேன் ஆஃபர் வாலிட் ஃபொர் அ ஷொர்ட் டைம் ஒன்லி

    ReplyDelete
  14. தென்னை வளர்த்து அதை காசு கொடுத்து வெட்டிய அனுபவம் உண்டு எனக்கு.

    பக்கத்து வீடு ஓட்டு வீடு தேங்காய் விழுந்து அவர் ஓடு உடைந்து விடும், மண்டையில் விழுந்து விடும் என்று பயமுறுத்தி எங்களை வெட்ட வைத்து விட்டார்.

    இப்போது ஓட்டு வீட்டை இடித்து புது மாடல் வீடு கட்டிக் கொண்டார்.
    எங்களுக்குதான் நஷ்டம்.

    முன்பு ஒரு மரம் ஏறி பறிக்க அவர் கேட்கும் கூலியை கொடுத்து போகும் போது கொஞ்சம் தேங்காயும் வாங்கி செல்வார் மகிழ்ச்சியாக இப்போது அப்படியான ஆட்கள் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் தென்னை மரத்தை வெட்டிய அனுபவம் உண்டு இரண்டு மரங்களிருண்டன அவற்றில்ஒன்றை இடி தாக்கி பட்டுப்போய் விட்டது அதை வெட்டி அகற்ற ரூபாய் 7000/ கொடுக்க வேண்டி இருந்தது இப்போதெல்லம் காய் பறிக்க வருபவர்கள் குறைவு

      Delete
  15. உரிக்காத தேங்காயை இளநீர் போல் ஒரு பக்கம் மட்டும் சீவி உள்ளே பொறிகடலையும் வெல்லமும் இடித்து வைத்து அதை கல் அடுப்பில் வாட்டித்தருவார் அப்பா. அதாச்சு இருபது வருடம், எங்கள் வயலுக்கு Picnic போல பள்ளி நாட்களில் சென்ற நினைவு எல்லாம் கிளறுகிறது பதிவு.இங்கே தேங்காய் இருபது ரூபாய்,இளநீர் நாற்பது. கஜா Effect

    ReplyDelete
  16. இப்படிச் செய்வதாகக் கேள்விபட்டு இருக்கிறேன் பார்த்த அனுபவம் இல்லை நன்றாகத்தான் இருக்க வேண்டும் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  17. தென்னையைப் பெற்றால் இளநீரு மட்டுமல்ல, சில நூறுகளும் போல. நன்று.

    ReplyDelete
  18. ஆம் சில நூறுகள் கைவிட்டுப்போகும்

    ReplyDelete
  19. 'தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு ... பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளையின் மனமே கல்லம்மா' என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. ஆனால் தங்களின் பதிவைப் படித்தபின் தென்னையை வளர்த்தாலும் தொல்லைதான் போலும். கேரளாவில் தான் தேங்காய் பறிக்க ஆட்கள் கிடைப்பது கடினம் என்பார்கள். கர்நாடாகாவிலுமா?

    ReplyDelete
    Replies
    1. இந்த முறை மர மேறுபவரை பார்ப்பதற்கே சிரமப் பட்டோம் கூகிளில் தேடினால் கேரளாவுக்கும் கோவாவுக்கும் கூட்டிச் சென்றது

      Delete
  20. இளநீர் 30 ரூ, 40 ரூ என்பதைப் பார்த்தால் இங்கே ஶ்ரீரங்கத்தில் அதிகம் தான் விற்கிறது. செவ்விளநீர் எனில் 60 ரூ. ஆனால் சுமார் 2 லிட்டர் தண்ணீர் இருக்கும். சாதாரண இளநீரே 40 ரூ முதல் 50 வரை விற்கிறது. உங்களுக்குக் குறைச்ச விலைக்குத் தான் எடுத்துட்டு இருக்கார். "பெண்"களூரிலேயே உங்கள் வீட்டுப் பக்கம் இல்லாமல் வேறே பக்கம் எனில் இளநீர் 70 ரூபாய்க்குக் கூட விற்கலாம்.

    ReplyDelete
  21. வியாபாரத்துக்காக தென்னை வளர்த்தல் லாபகரமாய் இருக்கலாம்

    ReplyDelete