மனைவி அமைவதெல்லாம்
-------------------------------------------------
நாம் வாங்கி வந்த வரமே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் திருமணம்
நடக்கிறது வாழ்வில் வசந்தம் வீசும் என்னு நம்பிக்கை எழுகிறது சில விஷயங்களை
அனுபவத்தின் பேரில் சொல்வது சரியாய் இருக்கும் திருமணமென்பதே கனவாகி இருக்கும் சிலருக்கு. எனக்கு திருமணமென்பதே என்னை நானறிய ஒருகருவியாய் இருந்தது இருவருக்கும் பலப்பல எதிர்பார்ப்புகள் ஆனால் எதிர்பார்ப்புகள் எல்லாம்
நிறைவேறுகிறதா அந்தகாலகட்டத்தில் நினைக்காத எண்ணங்கள் இப்போது வருகிறதுசிறுபிராயத்தில்
அணிய நல்லஉடுப்பிருக்காது நல்ல உணவிருக்காது படிக்க புத்தகங்கள் இருக்காது ஆனால் இல்லாத
வெறுமை இருந்த தில்லை இப்போது நினக்கும்போதுதான் எதையெல்லாம் அனுபவிக்காமல் இருந்திருக்கிறோம் என்று தோன்றும் இதைதான்
வாழ்வின் அனுபவமென்கிறேன் திருமணமான புதிதில் சென்னையில் நாங்கள் குடித்தனம்
நடத்தத் துவங்கிய போது நம்பமாட்டீர்கள் சமையல் எல்லாம் மண்சட்டி பானையில்தான் அந்த நிலையில் இருந்து இந்நிலைக்கு வந்ததை நினக்கும்போது கேட்பவர்களுக்கு ஐயோ பாவமென்றிருக்கும் என்மனைவிக்கு
மெல்லாமிப்படித்தான் என்னும் எண்ணமே இருந்ததுஎதையுமே குறையாய் அப்போது எண்ணியதில்லை
யாருடனும் ஒப்பிட்டு பார்த்ததில்லை ஆனால் எனக்கு
அவள் அவளுக்கு நான் என்னும் எண்ணமேமேலோங்கி இருந்தது அவள் என்முதல் மகனை பிரசவிக்கச் சென்றபோது அவளுக்கு
ஒரு கடிதம்கவிதையாய் தீட்டி இருந்தேன் அதையெல்லாம்
ரசித்தாளோ தெரியாது அப்போதே நான்சுமாராக எழுதுவேன் அதுவும் உண்மையாக
ஓடிக்களைத்து ஊணுக்கலைந்து தேடிச்சோறு நிதம் தின்று
வாடி அலையும்நிந்தன் கொழுநன் பாடிப்பகரும் அல்லைக்கேளடி !
ஊரடங்கி பேயாடும் நேரம் போரடித்து வளைய வரும் வேலை
சாகடித்து கொல்லாமல் கொல்லும்--உன் பிரிவு
நோகடிக்குதே எண்ண எண்ண !
வந்து நோக்கின் நீஇட்ட மஞ்சமில்லை !நானிட்ட பஞ்சணையில்
வீழ்ந்து பட்டால் நித்திரை இல்லை !
சோர்ந்து பட்ட உடலுக்கு உயிரூட்ட காப்பி இல்லை டி இல்லை சோறில்லை !
மாறுபட்ட சுழ்நிலையில் வாழ்ந்து வரும் எனைக்காண நீயுமில்லை !
என்செய்வேன் ? சொல்லடி
வாடி அலையும்நிந்தன் கொழுநன் பாடிப்பகரும் அல்லைக்கேளடி !
ஊரடங்கி பேயாடும் நேரம் போரடித்து வளைய வரும் வேலை
சாகடித்து கொல்லாமல் கொல்லும்--உன் பிரிவு
நோகடிக்குதே எண்ண எண்ண !
வந்து நோக்கின் நீஇட்ட மஞ்சமில்லை !நானிட்ட பஞ்சணையில்
வீழ்ந்து பட்டால் நித்திரை இல்லை !
சோர்ந்து பட்ட உடலுக்கு உயிரூட்ட காப்பி இல்லை டி இல்லை சோறில்லை !
மாறுபட்ட சுழ்நிலையில் வாழ்ந்து வரும் எனைக்காண நீயுமில்லை !
என்செய்வேன் ? சொல்லடி
எனக்கு என் மனைவி பற்றி
ஒருபெருமிதம் கர்வம் என்று வேண்டுமானாலும்
சொல்லலாம் ஆனால் என்மனைவிக்கு
இவற்றைச்சொல்வதில் உடன்பாடுஇல்லை கண்பட்டு
விடப் பொகுதையா என்பாள் இந்தவயதில் எனக்கு அவ்வாறு தொன்றுவதில்லை ரொம்பநாட்களுக்கு
முன் ஒருபாடல் எழுதி இருந்தேன் யாரும்செருகொழியற்க என்னும் தலைப்பில் எழுதியது இதை நான்முன்பே பகிர்ந்திருக்கிறேன்
வெண்ணிற மேனியாள் எனக்கு
மிளிரும் நீலவானம் சரிதுகில்
பன்நிறம் தெரியப பதித்த மணிகள்
மின்னும் தாரகை நல்லணிகலன்
எனக்கு நிகர் யாரே இப்புவிமீதே எனவே
உன்னாது இயம்பும் மதியும் --கிளியே
கறை துடைத்த
மதி வதனம் அவள் மேனிக்கணியும்
பட்டோ மற்றோ பொலிவுறும் பேருண்மை –ஆங்கு -
பட்டோ மற்றோ பொலிவுறும் பேருண்மை –ஆங்கு -
இ தழிலோடும் புன்னகையும்
நன்னகையாம் வண்டென
விரைந்தாடும் மலர் விழிகளும்
கண்டதும் கவி பாடத்தூண்டும் ---என்
காதல் ஜோதி ! கன்னல் மொழியினள்---அவள்
காண்பார் கண் கூசும் பேரெழில் ---கண்டும்
செருக்கொழிந்தாரில்லை -- ஏன் ?
சிந்தை கவர்ந்த என் பூங்கொடியாள் தன
நடை குரல் அதரம் கண்டும் -ஈண்டு
தோகை மயிலின் களிநடம் குறைந்திலை
கானக்குயிலின் இன்னிசை குறைந்திலை
கொவ்வைக்கனியதன் செம்மையும் குறைந்திலை --ஏன் ?
கட்டழகன் எந்தன் கொட்டமடக்க
வட்டமிடும் கழுகன்ன சுற்றி வரும்
நான் முகன் திட்டமெல்லாம் தரை மட்டம்
கண்டதும் கவி பாடத்தூண்டும் ---என்
காதல் ஜோதி ! கன்னல் மொழியினள்---அவள்
காண்பார் கண் கூசும் பேரெழில் ---கண்டும்
செருக்கொழிந்தாரில்லை -- ஏன் ?
சிந்தை கவர்ந்த என் பூங்கொடியாள் தன
நடை குரல் அதரம் கண்டும் -ஈண்டு
தோகை மயிலின் களிநடம் குறைந்திலை
கானக்குயிலின் இன்னிசை குறைந்திலை
கொவ்வைக்கனியதன் செம்மையும் குறைந்திலை --ஏன் ?
கட்டழகன் எந்தன் கொட்டமடக்க
வட்டமிடும் கழுகன்ன சுற்றி வரும்
நான் முகன் திட்டமெல்லாம் தரை மட்டம்
- இயற்கையின் படைப்பினில்
எனதவள் சிறந்தவள்
கண்கூடு தேவையில்லை அத்தாட்சி இதற்கு !
யாரும் செருக்கொழியர்க -- யானும் ஒழிகிலேனே
கண்கூடு தேவையில்லை அத்தாட்சி இதற்கு !
யாரும் செருக்கொழியர்க -- யானும் ஒழிகிலேனே
மேற்கண்ட படைப்பில் வாசகர்கள் ஒன்றினை கவனிக்க வேண்டுகிறேன்
எந்தநிலையிலும் நான் standing firm but never deprecated others
பிறகு அண்மையில் கண்ணனின் கேசாதி பாதம் எழுதும் போதுஎன் காதலியின் கேசாதிபாதமும்
எழுதி இருந்தேன் OF course that is a recent post
வெங்காய சருகு சேலை
தலைப்பு காற்றில் படபடக்க
வெண்சங்குக் கழுத்தில் கருமணியில்
ஒற்றை டாலர் ஒளிவீச பவனிவரும்
நீ நடந்து வரும் அழகில் மதி மயங்கி
உன்னை நான் எதிரே கடந்து செல்கையில்
படபடக்கும் உன் கண் இமைகள் என்ன
பட்டாம் பூச்சிகளா பாவையே சொல் நீயே.
சிறிதே செம்பட்டையான கூந்தல் காற்றில்
புரள, எடுப்பான நாசி, இரு ஓரங்களில்
பெரிய வளையங்களுடன் காதுகள்
புண்ணியம் செய்தவை; சிகையின் முத்தச்
சுருள்கள்(Kiss Curls)இனிதே வருடக் கொடுத்து வைத்தவை.
உச்சந்தலை தொடங்கி உன் அழகை
ரசிக்க என் கண்கள் உன் உடல் மேய
அநிச்சையாயுன் கைகள் மாராப்பை நாட
எனக்கோ மறைக்க முயல்வதைக் காணத் துடிப்பு
சாயாத கொம்பு இரண்டு தலை நிமிர்ந்து பாயாது
என்றாலும் மங்கை உன் மென்
நடையின் சிறு அதிர்வில் குலுங்கும்
இரு கொங்கைகள் கீழ் இருக்கும் இடுப்பின்
அழகைக் கூட்டிக் காண்பிக்கிறதோ?
துகில் மறைக்கா அந்த இடைப் பகுதியின்
வழுக்கலில் விட்டு விட்டுக் காணும்
தொப்புள் கொடியும் சுண்டி இழுக்குதே மனசை.
அடியொன்று எடுத்து வைக்க பிடியானையின்
மதர்ப்பு, இருந்தாலும் பாதம் நோகுமோ
அந்தப் பூமிக்குத்தான் வலிக்குமோ
என்னவாயிருந்தாலும் பாதசரம் கிணு கிணுக்கையில்
உன் கேசாதி பாதக் காட்சியில் திளைக்கிறேன்
பாவையே எனை நான் மறக்கிறேன்.
வெங்காய சருகு சேலை
தலைப்பு காற்றில் படபடக்க
வெண்சங்குக் கழுத்தில் கருமணியில்
ஒற்றை டாலர் ஒளிவீச பவனிவரும்
நீ நடந்து வரும் அழகில் மதி மயங்கி
உன்னை நான் எதிரே கடந்து செல்கையில்
படபடக்கும் உன் கண் இமைகள் என்ன
பட்டாம் பூச்சிகளா பாவையே சொல் நீயே.
சிறிதே செம்பட்டையான கூந்தல் காற்றில்
புரள, எடுப்பான நாசி, இரு ஓரங்களில்
பெரிய வளையங்களுடன் காதுகள்
புண்ணியம் செய்தவை; சிகையின் முத்தச்
சுருள்கள்(Kiss Curls)இனிதே வருடக் கொடுத்து வைத்தவை.
உச்சந்தலை தொடங்கி உன் அழகை
ரசிக்க என் கண்கள் உன் உடல் மேய
அநிச்சையாயுன் கைகள் மாராப்பை நாட
எனக்கோ மறைக்க முயல்வதைக் காணத் துடிப்பு
சாயாத கொம்பு இரண்டு தலை நிமிர்ந்து பாயாது
என்றாலும் மங்கை உன் மென்
நடையின் சிறு அதிர்வில் குலுங்கும்
இரு கொங்கைகள் கீழ் இருக்கும் இடுப்பின்
அழகைக் கூட்டிக் காண்பிக்கிறதோ?
துகில் மறைக்கா அந்த இடைப் பகுதியின்
வழுக்கலில் விட்டு விட்டுக் காணும்
தொப்புள் கொடியும் சுண்டி இழுக்குதே மனசை.
அடியொன்று எடுத்து வைக்க பிடியானையின்
மதர்ப்பு, இருந்தாலும் பாதம் நோகுமோ
அந்தப் பூமிக்குத்தான் வலிக்குமோ
என்னவாயிருந்தாலும் பாதசரம் கிணு கிணுக்கையில்
உன் கேசாதி பாதக் காட்சியில் திளைக்கிறேன்
பாவையே எனை நான் மறக்கிறேன்.
என் மனைவியைப் பற்றி எழுதத் துவங்கினால் எழுதிக் கொண்டே இருப்பேன் படித்து சோர்வடைந்தவர்களுக்கு கண்டு மகிழ காணொளிகள்
பொதுவாகவே எல்லோருமே அவரவர் மனைவியை நேசிப்பவர்கள் தான். சிலருக்குச் சொல்லத் தெரியாது. உங்களுக்குச் சொல்லத் தெரிகிறது என்பதோடு அவர் உங்கள் புகழ்ச்சிக்குத் தகுதியானவராயும் இருக்கிறார் அல்லவா? மனம் நிறைந்த இல்வாழ்க்கை என்பது எல்லோருக்கும் கிட்டாது! அதனால் தான் உங்கள் மனைவி கண் பட்டுவிடும் என்கிறார். அதுவும் சரியே! இம்மாதிரியே தொடர்ந்து பல்லாண்டுகள் நிறை வாழ்வு வாழப் பிரார்த்தனைகள்.
ReplyDeleteகீசா மேடம்... உங்கள் முதலிரண்டு வரிகள் எவ்வளவு அனுபவப்பட்டவர் எனச் சொல்கிறது. எனக்கு மனதில் தோன்றியதை எழுதியதற்கு நன்றி...
Delete///பொதுவாகவே எல்லோருமே அவரவர் மனைவியை நேசிப்பவர்கள்/// இதில் ஒரு சின்ன திருத்தம் இந்த காலத்தில் பொதுவாகவே எல்லோருமே அவரவர் மனைவியை மட்டும் நேசிப்பவர்கள் அல்லர் அடுத்தவரின் மனைவியையும் நேசிப்பவர்களாகவே இருக்கிறார்கள் அங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது
Deleteகீதா சாம்பசிவம்
Deleteசொல்லப்படாத வார்த்தைகள் சருகுகளுக்குச் சமம் வாழ்த்துகளுக்கு நன்றி
நெத அன்புகள் பரிமாறப்பட வேண்டும் அதுவும்கணவன் மனைவி அன்புகள் கட்டாயம்
Deleteஅவர்கள் உண்மைகள் மனைவியின் அன்பு கிடைத்தால் மாற்றானின் மனைவியை நேசிக்கத்தோன்றாது
Deleteபல ஆண்டுகளாய்க் கேட்க நினைத்த கேள்வி. உங்கள் மனைவிக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியுமா? உங்கள் பதிவுகளை எல்லாம் படிப்பாரா?
ReplyDeleteஇது என்ன கேள்வி என் மனைவி பிறந்துப்டித்தடுஎல்லாம்பெங்களூரில்தான் அவர்களுக்குதமிக்ஷ் நன்குஎழுதப்படிக்கதெரியும்தமிழ் படித்திருக்கிறாள் என்னை விட அதிக மொழிகளில் பேசுவார்என்பதிவுகள் சிலவற்றை நான்படிக்கச் சொல்வேன் பதிவுகள் எழுதும் ஆர்வமில்லைநான் அவள்பற்றி எழுதியதைஎல்லாம்படிக்கச் சொல்வேன்
Delete:)))) இது எனக்குப் புதிய செய்தி! நான் அவங்க கேரளாவிலேயே பிறந்து வளர்ந்து படிச்சவங்கனு நினைச்சுக் கேட்டேன். :))))) தெரிஞ்சிருந்தால் கேட்டிருப்பேனா?
Deleteஉங்கள் கவித்திறன் எப்போதுமே நான் ரசிக்கும் ஒன்று. அப்போதும் அருமையாய் எழுதி இருக்கிறீர்கள்.
ReplyDeleteகவித்திறனென்று ஏதும் இல்லை ஸ்ரீ சில நேரங்களில் நனா எழுதியதுஎன்று தோன்றும் அது சில நேரங்களில்தானாக வரும் உங்கள் கவிதகளைநான் ரசிப்பேன்மனதில் பட்டதைசசொல்லும்போது வரிகள் தானாகவரும் போல் இருக்கிறது
Deleteமகிழ்ந்தேன் ஐயா
ReplyDeleteதங்களின் கவித்திறன் சிறுவயதிலிருந்தே தங்களைத் தொடர்கிறது
எழுதுவதில்ல் சின்ன வயசில் இருந்தே ஆர்வமுண்டு பாராட்டுக்கு நன்றி சார்
Deleteமகிழ்ச்சி.... மனைவி அமைவதெல்லாம் - சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள்.
ReplyDeleteநான் சொல்கிறேன் பலரும் சொல்வதில்லை என்று தெரிகிறது
Deleteகவிதை அருமை ஐயா...
ReplyDelete// எதையுமே குறையாய் அப்போது எண்ணியதில்லை... யாருடனும் ஒப்பிட்டு பார்த்ததில்லை...//
இன்பமான வாழ்க்கைக்கு இதுவே முதல் வழி...
ஒப்பீடு எப்போதும் விரும்பப்படுவதில்லை வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்
Deleteநான் கவனித்த ஒன்று. ஒரு குறிப்பிட்ட வயதிற்கப்புறம் மனைவி கணவனுக்குத் தாய் ஆகிறாள். ஆக கணவனைக் குழந்தை போல சீராட்டுகிறாள். என்றாவது ஒரு நாள் படுத்த படுக்கையானாலும் நினைவு முழுதும் கணவன் பால் இருக்கும். அதே போன்று கணவனும் மனைவியை தாயாய் போற்றுகிறான். தாய்க்கு கொடுக்க வேண்டிய மதிப்பு, மற்றும் சொல் தட்டாமை போன்றவை தன்னிசையாக வருகின்றது. இதே கணவன் மத்திய வயதில் சாம்பாரில் உப்பு கூடிவிட்டது என்று தட்டை எறிந்தவனாக இருந்திருப்பான்.
ReplyDeleteஆக வயதானபின் மனைவிக்கு கணவனும் கணவனுக்கு மனைவியும் இன்றியமையாதவர்கள் ஆகிறார்கள். அப்போது தான் உண்மையான எதிர்பார்ப்பற்ற காதல் ஏற்படுகின்றது.
Jayakumar.
நான் அன்றுபோலவேதான் வயதானதால் வந்தமாற்றமல்ல
Delete// எதையுமே குறையாய் அப்போது எண்ணியதில்லை யாருடனும் ஒப்பிட்டு பார்த்ததில்லை//
ReplyDeleteகுறை காணா மனதும், ஒப்பிட்டு பார்க்காத மனதும் ஒருவருக்கு இருந்து விட்டால் வேறு என்ன வேண்டும்?
அருமையான வாழ்க்கை துணை.
இறைவன் தந்த வரமே!
முன்பு 'யாதுமாகி நின்றாள் 'என்று கவிதை எழுதி இருந்தீர்கள் அல்லவா?
குறையாய் எதுவும்தோன்றியதில்லை யாதுமாகி நின்றாய் நினைவுக்குவருகிறது மகிழ்ச்சி மேம்
Delete//நான் அப்போதே சுமாராக எழுதுவேன்//
ReplyDeleteசுமாருக்கு மிகப் பல படிகள் மேலே. உதாரணத்துக்கு கீழ்வரும் சில வரிகள் மட்டும்.
//வந்து நோக்கின் நீஇட்ட மஞ்சமில்லை !நானிட்ட பஞ்சணையில்
வீழ்ந்து பட்டால் நித்திரை இல்லை !
சோர்ந்து பட்ட உடலுக்கு உயிரூட்ட காப்பி இல்லை டி இல்லை சோறில்லை !
மாறுபட்ட சுழ்நிலையில் வாழ்ந்து வரும் எனைக்காண நீயுமில்லை !
என்செய்வேன் ? சொல்லடி...//
அதுதான் உண்மை சார் நாடகமெல்லாம் எழுதி இயக்கி நடித்திருக்கிறேன்
Deleteகவிதை வரிகள் சிறப்பு ஐயா.
ReplyDeleteவாழ்க இன்னும் பல்லாண்டு.
பராட்டுக்கு நன்றிஜி
Deleteகவிதை வரிகள் அருமை சார்.
ReplyDeleteமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கண்ணதாசன் எழுதியது உங்கள் வரிகளில் உறுதிப்படுகிறது.
வரிகள் ரசனை மிக்கது சார்.
நல்லதொரு இல்வாழ்க்கை அமைவது என்பது ஒரு வரம் தான்.
உங்கள் மகிழ்ச்சி என்றேன்றும் நிலைத்திருக்கட்டும் சார்!
கீதா
கண்ணதாசனுக்கு அப்படி இருந்ததா தெரியாதுவாழ்த்துக்கு நன்றி மேம்
Deleteஇரண்டு காணொளிகளும் அருமை. மயில் அழகோ அழகு! உங்கள் வரிகளுக்கேற்ப என்றும் தோன்றியது. ஆண் மயில் அல்லவா!! தோகை விரித்து சந்தோஷம் மிக்க..!
ReplyDeleteகீதா
காணொளிபற்றி கருத்துக் கூறியவர் நீங்கள் தான் படிவு பிடிக்காவிட்டால் காணொளி யாவது ரசிக்கலாமே என்று பதிவிட்டேன்
Deleteமயில் தோகை விரித்து நிமிர்ந்து கம்பீரமுடன் பெருமையுடன் கூவுவதும் நீங்கள் கம்பீரமாக பெருமிதத்துடன் சொல்வதும் நல்ல பொருத்தமாக இருப்பது போல் இருக்கு சார்..
ReplyDeleteகீதா
மயில் அகவுவது போல் என்று வந்திருக்கனும் கூவுவது என்று எழுதிவிட்டேன்...
Deleteகீதா
மயில் தோகை விரித்து ஆடுவது காண அழகுதான்என்நடையும் கம்பீரமும்போய் விட்டது
Deleteமயில் நடனம் அருமை.
ReplyDeleteமயில் முருகனை ஏமாற்றியது குறித்து எழுதியதுநினைவுக்கு வரவில்லையாமேம்
Deleteஅந்த காலத்தில் மனைவி அமைவதெல்லாம் அம்மா அப்பா தேடும் முயற்சியில் அமைகிறது இந்த காலத்தில் சமுக வலைத்தளங்களில் தேடும் முயற்சியில் அமைகிறது
ReplyDeleteநான் எந்த காலத்தவன் சார்
Deleteமனைவி அமைவதெல்லாம்...இந்தவிதத்தில் நானும் கொடுத்துவைத்தவன் என்பேன் ஐயா. கவிதை அருமை. நன்கு ரசித்தேன்.
ReplyDeleteஉரக்கச் சொல்லுங்கள் சார் பாராட்டுகள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்
ReplyDelete