பழைய பாடல்கள்
----------------------------
சில பாடல்க;ள் மனசில் ரீங்கரித்துக் கொண்டே இருக்கும் அதுவும் பழைய பாடல்கள் வரிகள் மறந்து போனதால் வலையில் தேடினேன் ஹுர்ராஹ் கிடைத்தது பகிர்கிறேன் ஏன் இப்பாடல்கள் என்று யோசித்தபோது இவை என் அப்பா முணு முணுக்கும் பாடல்கள் என்று தெரிந்தது நானே வயதானவன் என் தந்தையார் பாடிய பாடல்கள் பலரும் கேட்டிருக்க வாய்ப்பு குறைவே
மனமே நீ ஈசன் நாமத்தை
மனமே நீ ஈசன் நாமத்தை
மனமே நீ ஈசன் நாமத்தை
வாழ்த்துவாய் தினம் வாழ்த்துவாய்
மனமே நீ ஈசன் நாமத்தை
வாழ்த்துவாய் தினம் வாழ்த்துவாய்
மனமே ...ஆ.ஆ.ஆ
கனவெனும் வாழ்வில் கலங்கி வாடாதே
கனவெனும் வாழ்வில் கலங்கி வாடாதே
கனவெனும் வாழ்வில் கலங்கி வாடாதே
காதலை மாதரைப் புகழ்ந்து பாடாதே
காதலை மாதரைப் புகழ்ந்து பாடாதே
காம மோஹமத வைரிகள் வசமாய்
கர்மவினை சூழுலக வாதனையில்
காம மோஹமத வைரிகள் வசமாய்
கர்மவினை சூழுலக வாதனையில்
தடுமாறும் மனமோடு துயறுராமல்
நிரந்தரமும் மகிழ்ந்து பர சுகம் பெறவும்
மனமே நீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய்
தினம் வாழ்த்துவாய்
விளங்கும் தூய ஸர்ஜன சங்கம்
விளங்கும் தூய ஸர்ஜன சங்கம்
விடுத்தே கூடாதே துஷ்டர் ப்ரசங்கம்
விடுத்தே கூடாதே துஷ்டர் ப்ரசங்கம்
விளக்கில் வீழும் பழமென்று மயங்கும்
விளக்கில் வீழும் பழமென்று மயங்கும்
விளக்கில் வீழும் பழமென்று மயங்கும்
விட்டிலாகாதே சஞ்சல மெங்கும்
விட்டிலாகாதே சஞ்சல மெங்கும்
மனமே நீ ஈசன் நாமத்தை
வாழ்த்துவாய் தினம் வாழ்த்துவாய்....ஆ
வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
உள்ளம் குழயுதடி கிளியே ஊனும் உருகுதடி கிளியே
மாலை வடிவேலவற்கு வரிசையாய் நான் எழுதும்
ஒலைகிருக்காச்சுதே கிளியே உள்ளமும் கிறுக்காச்சுதே கிளியே
மாடுமனை போனாலென்ன மக்கள் சுற்றம் போனாலென்ன
கோடிச்செம்பொன் போனாலென்ன கிளியே
குறுநகை போதுமடி முருகன் குறுநகை போதுமடி
எங்கும் நிரந்திருப்போன் எட்டியும் எட்டாதிருப்போன்
எங்கும் நிரந்திருப்போன் எட்டியும் எட்டாதிருப்போன்
குங்குமவர்ணனடி கிளியே குமரப்பெருமானடி கிளியே
கட்டுக்கொடி படர்ந்த கருஉறு காட்டுக்குள்ளே
விட்டு பிரிந்தாரடி கிளியே (என்னை) வேலன் எனும் பெரோனடி ||
கூடிகுலாவி மேத்த குகனோடு வாழ்தந்தெல்லம்
வேடிக்கை அல்லவடி கிளியே வெகுநாளை பாந்தமடி
எம் கே டி பாடலைக் கேட்டு ரசித்தேன்.
ReplyDeleteவள்ளிக்கணவன் என்கிற வரிகளை பார்த்த உடன் சீர்காழி பாடலோ என்று நினைத்தேன். வள்ளிக் கணவன் பெயரை தினம் சொல்லடா தம்பி என்று வரும்!
ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் வரிகள் மறந்து விட்டதா என்ன?!!! ஹா... ஹா... ஹா...
//வள்ளிக்கணவன் என்கிற வரிகளை பார்த்த உடன் சீர்காழி பாடலோ என்று நினைத்தேன். வள்ளிக் கணவன் பெயரை தினம் சொல்லடா தம்பி//
Deleteநானும் இதையே நினைத்தேன் ஸ்ரீராம்ஜி
@ஸ்ரீராம் ட்விங்கிள் ட்விங்கிள் வரிகள் மறக்க வில்லை மற்ற பாடல்களுக்கான வரிகளைத் தேடியபோது ரேவதி சங்கரனின் இந்தப் பாட்டைப் பார்த்தேன் பதிவில் சேர்த்து விட்டேன்
Deleteவள்ளிக்கணவன் பாடல் அத்தனை பழையது அல்ல
Deleteபழைய பாடல் என்றுமே இனிமை...
ReplyDeleteடாடி மம்மி வீட்டில் இல்லை!..
என்றெல்லாம் அவலப் பாடல்கள் வெளியாகிற காலகட்டத்தில்
மனதிற்கு அறிவுரை சொல்லும் பாடல்களை
எத்தனை பேர் ரசித்திருக்கக் கூடும்?...
பக்திப்பாடல்கள் தான் நல்லவை என்கிறீர்களாஎன் அப்பாவின் நினைவைத் தூண்டிய பாடல் வரிகளைத் தேடினேன் கிடைத்தது பலருக்கும் அறிவுரைகள் ஏற்புடையதல்ல வருகைக்கு நன்றி சார்
Deleteகேள்விப் பட்டிராத பாடல்.
ReplyDeleteஎதிர்பார்த்ததுதான்
Deleteஎம்.கே.டி. பாடல் முதல் முறை கேட்டேன். வள்ளிக் கணவன் பாடல் வேறு பாடகர்களின் குரலில் ரசித்திருக்கிறேன். மூன்றாவது பல முறை பார்த்து ரசித்த காணொளி.
ReplyDeleteவருகக்கும் கருத்துபதிவுக்கும் நன்றி சார்
Deleteஎம்.கே.டி. அவர்களின் இந்த பாடலை நான் இப்போதுதான் கேட்கிறேன்.
ReplyDeleteஅவரது பாடல்கள் பெறும்பாலும் நான் கேட்டு இருக்கிறேன் ஐயா இன்றுவரை...
எம் கே டி யின் பாடல்கள் அந்தக்கால பிரசித்தம்
Deleteபகிர்ந்த பாடல்கள் அனைத்தும் இனிமை.
ReplyDeleteபிடித்த பாடல்.
நன்றி.
வருகைக்கு நன்றி மேம்
Deleteஇவையிரண்டும் அந்தக் கால சினிமா பாடல்களா?
ReplyDelete//..விளங்கும் தூய சத்ஜன சங்கம்
விடுத்தே கூடாதே துஷ்டர் பிரசங்கம்..//
ம்..இண்ட்ரெஸ்டிங். யாரெழுதியதோ?
ஓல்ட் இஸ் கோல்ட்
ReplyDeleteஎம்கேடி யின் பாடல் பாபனாசம் சிவன் எழுதியது
ReplyDeleteகாணொளி நிறையப் பார்த்தாச்சு. வள்ளி,கணவன் பெயரைப் பாடல் இப்போதும் கச்சேரிகளில் பாடப்படுகிறது. முதல் பாடலும் கேட்டிருக்கேன். படம் எதுனு எல்லாம் தெரியாது.
ReplyDeleteமுதல் பாடல் படம் அசோக் குமார் என்று இருந்தது 1941ல் வெளிவந்ததாம்
Deleteஎம் கே டி பாடல்களை நிறைய தடவை கேட்டிருக்கிறேன்.
ReplyDeleteவிடுத்தே கூடாதே துஷ்டர் ப்ரசங்கம்
விடுத்தே கூடாதே துஷ்டர் ப்ரசங்கம்
விளக்கில் வீழும் பழமென்று மயங்கும்
விளக்கில் வீழும் பழமென்று மயங்கும்
விளக்கில் வீழும் பழமென்று மயங்கும்
விட்டிலாகாதே சஞ்சல மெங்கும்
விட்டிலாகாதே சஞ்சல மெங்கும்
இவற்றில் இரண்டிரண்டு முறை வராது.
இரண்டாம் பாடல் கேட்டதில்லை.
எத்தனை முறை வரும்வரவேண்டுமென்றெல்லாம் தெரியாது வரிஅள் இணையத்தில் பார்த்து எழுதியது
Deleteபாடல் காணொளியிலும் இரு முறை வருகிறதே
Delete'வள்ளிக்கணவன்' - இந்தப் பாடலின் ராகம் இன்னொரு பாடலைத் தழுவியது எனத் தோன்றுகிறது.
ReplyDelete'குண்டு மழை பெய்தால் என்ன
கோபுரங்கள் சாய்ந்தால் என்ன
அண்டமெல்லாம் தீர்ந்தாலென்ன கிளியே
அச்சமில்லை அச்சமில்லை
கிளியே
அச்சமில்லை அச்சமில்லை"
என்ற பாடல் என் நினைவுக்கு வருகிறது.
குண்டு மழை பெய்தால் என்ன படல் நான் கேட்டதில்லை
Deleteநெல்லை இந்தப் பாடல் செஞ்சுருட்டி ராகத்தில் அமைந்த காவடிச்சிந்து
Deleteகீதா
நெல்லை திருப்பாவையில் முப்பத்து மூவர் அமரர்க்கு பாடல் இந்த ராகம் தான்
Deleteகீதா
ராகங்களை இனம்கண்டுகொள்ளத்தெரியாது
Deleteராகமே தெரியாது அதில் செஞ்சுருட்டி என்பதும்தெரியாது எனக்குத் தெரியாது என்று தெரிந்துதான் நெல்லைக்கு என்று எழுதுகிறீர்களா மேம்
Deleteமூன்றுமே கேட்டிருக்கிறேன் சார். ரேவதி சங்கரன் அவர்களின் ரைம் கர்நாட்டிக் ஸ்டைல்ல பாடுவதை நிறைய ரசித்திருக்கிறேன்.
ReplyDeleteகீதா
ஏதோ நினைவுக்கு வந்தபடலின் வரிகளைதேடி எடுத்தெழுடுயது அப்பாவின் நினைவு
Deleteஎம் கே டி பாடல் நான் ஏற்கெனவே கேட்டிருக்கிறேன். இன்னும் நிறைய பாடல்கள் அவரின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் தளத்திலும் ஒன்று பகிர்ந்திருக்கிறேன் (உன்னையே அன்புடன்..) என் அப்பாவும் எம் கே டியின் ரசிகர். மேலும் டி ஆர் மகாலிங்கத்தின் ரசிகரும் கூட! குமாரி கமலாவை - அதாவது அவர் நாட்டியத்தை - ரொம்பப் பிடிக்கும் அவருக்கு!!
ReplyDeleteஎம்கேடி யின் பாடல்களில் நினைவுக்கு வருவது வதனமே சந்திர பிம்பமோ பாடல்தான் ஒரு வேளை முகம்மதுசந்திர பிம்பமோ வரிகள் மாற்றப்பட்டது நினவுக்கு வருவதாலோ
Deleteஎவைகள் நமக்குப் "பழைய பாடல்கள்" நம் வயதைப் பொறூத்ததே. இப்பாடல்கள் நான் கேட்டதில்லை. கேட்டிருந்தாலும் நினைவில் இல்லை. எம் கே டி பாடல்கள் சிறப்பு பத்தி பலர் சிலாகித்துச் சொல்வதை கேட்டு இருக்கிறேன். நீங்க எத்தனை தூரம் ரசித்தீர்கள் என்பதை உணர முடிகிறது, சார்.
ReplyDeleteவருண் இந்தப்பாடல் நினைவுக்கு வருவது என அப்பாவுக்குப்பிடித்த பாட்ல் என்பதாலோ என்னவோ பொதுவாகவே மெலொடி பாடல்களை ரசிப்பேன்
Deleteமனதிற்கு சுகம் தருகின்ற பாடல்கள் ஐயா.
ReplyDeleteமெலொடி பாடல்கள் மனதுக்கு சுகம் தருபவையே
ReplyDeleteமுதல் பாட்டை இப்போதுதான் கேட்டேன், வள்ளிக்கணவன் பாடலை பல்முறைக் கேட்டிருக்கிறேன். மூன்றாவதாக உள்ள திருமதி ரேவதி சங்கரன் அவர்கள் பாடும் பாடலை பலமுறை கேட்டு இரசித்திருக்கிறேன். இக்கால இளைஞர்கள் பழைய பாடல்கள் மட்டுமல்ல 60 களில் வந்த பாடல்களைக்கூட விரும்புவதில்லை என்பது வருத்தமான தகவல்.
ReplyDeleteவருகைக்கும்கருத்துபதிவுக்கும் நன்றி சார் சில நல்ல பழைய பாடல்களைக் கேட்கவும் வழிசெய்தேன் என்று நினைக்கிறேன்
ReplyDelete