ஒரு பின்னூட்டம் பதிவாகிறது நான் வலையுலகுக்கு வந்து ஏறத்தாழ பத்தாண்டுகள் ஆகின்றன முன்பெல்லாம் ஒரு தலைப்பில் எழுத அழைப்புகள் வரும் பின் சில குறிப்பிட்ட பதிவர்கள் அவர்களுக்குள் தொடர் எழுதுவார்கள் முன்னால் எழுதியவரின் கற்பனையோ கதை வடிவோ பின்னால் எழுது பவருக்குத்தெரியாது கற்பனைகள் தறி கெட்டோடும் ரசிக்க வைக்கும் ஏன் நானே ஒரு கதையின் ஒரு பகுதியை எழுதி மற்றவர்கள்தொடரலாமென்றும் அதில் நானெழுதியவாறுகதை இருந்தால் பரிசு என்றும் எழுதி யாரும் என்கற்பனைப்படி எழுதாவிட்டால் நல்லது என்று தோன்றுவதை வேறு ஒரு பதிவரிடம் தீர்மானிக்க வேண்டி விட்டு பரிசும் வழங்கி இருக்கிறேன் ஆனால் அண்மையில் எங்கள் ப்ளாகில் தொடர் என்று கூறி யார் எழுதி இருப்பார் என கெஸ் செய்யவும் கேட்டிருந்தார்கள் ஆனால் கடைசியில் ஒருவருக்கொருவர் கூடி கதையை விவாதித்து ஒருகருத்து ஒருமித்தபின் இருவரும்மாற்றி மாற்றி எழுதி இருக்கிறர்கள் என்றுதெரிந்த போது ச்சே நாம்தான் தவறாக புரிந்து கொண்டோம் என்று அறிந்தபோது என்மீதே எனக்கு கோபம் வந்தது தொடரை முதலிலேயே டிஸ்கஸ் செய்து இருவரும் எழுதும் பணியை செய்திருக்கிறார்கள் என்று புரிந்ததுபதிவர்கள் பல வித யூகங்களோடு அணுகி இருப்பார்கள் அதை ஒரு வித நமுட்டு சிரிப்போடு எழுதியவர்கள் ரசித்திருக்கலாம் இதை நான் சொல்லாமல் இருந்திருக்கலாம் ஆனால் முடியவில்லை ஏன் என்றால் நானும் எழுதியவரை அவர் எழுத்துக்களைக் கொண்டு கண்டுபிடிக்க முயற்சிகள்செய்தேன் என்பதும் நிஜம் அதில் ஒருவரை அவரது பல பதிவுகள் மூலம் அறிந்து கூறியுமிருந்தேன் வித்தியாசமான முயற்சிகள் வர வேற்கப்பட வேண்டியதுதான் ஆனால் அதற்காக இப்படியா ஒரு தகவலுக்காக இடியாப்ப சிக்கல் கதை என்று எழுதி அதை முடிக்க வேண்டி இருந்தேன் அந்தசிக்கலின் பூர்வீகம் நாட்டில் பலவாறு பேசப்பட்ட ஒரு நிகழ்வுதான் அது அப்படியேஇன்னும் முடிவுக்கு வராமல் இருக்கும் ஒருசெய்திதான்
ஒரு வித்தியாசமான பதிவாக இருக்க வேண்டுமென்றுதான் இரு காணொளிகளையும் இணைத்திருக்கிறேன் அதைப்பார்பவர்களுக்கு அது பிடிக்காமல் போகும் வாய்ப்பும் இருக்கிறது
எங்கள் தளத்தில் மிக முன்னரே வாரா வாரம் ஒருவர் ஒரு தொடர்கதையை எழுதிவைக்க ஒரு முயற்சி மேற்கொண்டேன். எப்படி என்றால் ஒரு வாரம் எழுதியதும் அடுத்த வாரம் அதைத் தொடர்ச்சி சொல்லி ஒருவரிடம் கொடுப்பது... அவர் அவர் இஷ்டப்படி கதையை வளைத்து முன்னர் எழுதியவருக்கு, எதுத்து எழுதப்போகிறவருக்கும் சவாலை ஏற்படுத்துவது... இப்படி... அது அப்போது நிறைவேறவில்லை!
ReplyDeleteஸ்ரீராம்.... இதற்கு நல்ல முறை, முதலில் யார் யார் ரெடி என்று தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொள்ளணும் (கதையின் ஒன் லைனோடு). பிறகு முதல் 4 வாரங்களுக்கு ரெடி பண்ணிக்கொண்டால் பிறகு சுலபம்.
Delete@ஸ்ரீராம் நாம் நம் தளத்தில் முதல் வாரக்கதையை வெளி இட்டு வாசகர்களில் யார் வேண்டுமானாலும் தொடரலாம் என்று கூறலாம் இல்லையென்றால் இவர் தொடருவார் என்னும்நம்பிக்கை இருந்தால் அவரிடம் தொடரச் செய்யலாம் சிறிது மெனக்கெட வேண்டி இருக்கும்
Delete@ நெல்லை என் அனுபவப்படி நாம் பின்னால் இருக்கக் கூடாது மேலும் முன்போல் வாசகர்கள் கூட்டு முயற்சிக்கு ஆதரவு தருவதில் சிரமம் இருக்கிறது
Deleteஸ்ரீராம் நெல்லை சொல்லியிருப்பது நல்லாருக்கு அந்த ஐடியா...
Deleteகீதா
ஏன் ஸ்ரீராம்தான் தொடங்க வேண்டுமா உங்கள் தளத்தில் நீங்களே கூட முயற்சிக்கலாம்
Deleteஎழுதுவது யார் எனத் தெரியாமல் தொடர்வதும் சிறப்புத் தான். இதுவும் நன்றாகவே இருந்தது. எனக்குத் தெரிந்து எழுதுவது யார் எனச் சொல்லாமலேயே அடுத்தவர் தொடர்ந்து எழுதிய ஓர் தொடர் ஆனந்த விகடனில் வந்த நினைவு. அதைத் தேட வேண்டும். கிடைக்குமா, பார்க்கலாம்.
ReplyDeleteமுன்பெல்லாம் மோகன் ஜி ரிஷபன் ராமமூர்த்திசார் இப்படி எழுதியது நினைவுக்கு வருகிறது
Deleteவாசகர்கள் பலவிதம் மாதிரி அவர்கள் எதிர்பார்ப்பும் பலவிதம். பல்வேறு எழுத்துப் பணிகள் சூழ்ந்திருப்பதால் காணொளி பார்க்கவில்லை. நீங்கள் எழுதியிருப்பவை மட்டுமே படித்தேன்.
ReplyDeleteஎல்லோர் எதிர்பார்ப்புக்கும் ஏதுவாக எழுத முடியாதுகாணொளி வித்தியாசமானது யாரும் கருத்து கூறவில்லை
Deleteவலைதளத்தில் முன்பிருந்த போட்டி இப்போதில்லை ஐயா
ReplyDeleteபோட்டி இருந்தாலும் அது விரும்பத்தக்கதாய் இல்லை என்பதே சரி
Deleteஎங்கள் ப்ளாகில் தொடரை "யார் யார் எழுதியிருப்பார்" என்று வாசித்தால் மட்டுமே சுவாரசியம்... ஆனால் நான் கதை செல்லும் ஓட்டத்தை மட்டும் சிந்தித்தேன்...
ReplyDeleteஉங்களுக்குப் பிடித்து இருந்ததா
ReplyDeleteசிறப்பு
ReplyDeleteபாராட்டுகள்
பாராட்டுக்கு நன்றி சார்
ReplyDeleteஇடுகையில் யாரும் காணொளியைப் பற்றிச் சொல்லாதது, உங்களுக்கு ஒரு செய்தி சொல்லியிருக்கணுமே....
ReplyDeleteமனதில் பாராட்டினாலும் பலரும் கருத்து சொல்ல விரும்பாத ஹிப்போக்ரைட்ஸ் என்றே எண்ணத் தோன்று கிறது உங்கள்டம்பகிர்கிறேன் நிறையவே வருகைப் பதிவுகள்இருந்தன
ReplyDelete