சில திரிப்பாதிகள்( மூன்றடிகள்)
--------------------------
- ஒரு பதிவில் கன்னட நாடகக் கலைஞர் ஹிரனையா பற்றி எழுதி இருந்தேன் பல திக்கும் சென்று பிற மொழிவல்லுனர்களையும் அறிமுகப் படுத்துவதும் என் எழுத்துகளில் ஒன்றாகும் சில ஆண்டுகளுக்கு மு ந் திரு துரை செல்வராஜின் பதிவு ஒன்றுக்கு பின்னூட்டமாக தமிழ் அரசர்களின் பெருமைகளை மட்டுமே எழுதும்நாம் பிற மொழிஅரசர்களின் சிறப்புகளை ஏன் எழுதுவது இல்லை என்று கேட்டதாக நினைவு ஹிரனையா படிவுக்கு பின்னூட்டமாக திரு ஜீவி நான் பெங்களூரில் இருப்பதால் இது பற்றி எழுதினால் சுவாரசியமாக இருகுமென்று கூறி இருந்தார் அடைஒட்டி இப்போது கன்னடக் கவி சர்வக்ஞா பற்றி நான் சேகரித்த தகவல்களில் சில
திருவள்ளுவர் யார் என்று தமிழ்
படித்தவர்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். தமிழ் படித்தவர்கள் திருவள்ளுவர்
இயற்றிய திருக்குறளிலிருந்து ஓரிரு குறள்களையாவது சொல்வார்கள் என்றுநம்புகிறேன்.
இன்னும் சிலருக்கு திருக்குறள் மூன்று பிரிவுகளில் ( அறப்பால் ,பொருட்பால்,
காமத்துப்பால்) மொத்தம் 133 தலைப்புகளில் தலைப்புக்குப் பத்தாக 1330 ஈரடிச்
செய்யுட்கள் கொண்டது என்றும் தெரிந்திருக்கலாம்
சரி சர்வக்ஞா யார் என்று தெரியுமா? தமிழர்கள் அநேகமாகக்
கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். சிலருக்கு வேண்டுமானால். திருவள்ளுவர் சிலை
பெங்களூரில் திறக்கப்பட வேண்டுமானால் சென்னையில் கன்னட கவி சர்வக்ஞாவின் சிலையும்
திறக்கப் படவேண்டும் என்ற கன்னடியர்களின் கோரிக்கை நினைவுக்கு வரலாம். அதாவது
தமிழர்களுக்கு திருவள்ளுவர் போல கன்னடியர்களுக்கு சர்வக்ஞா
திருவள்ளுவர்
யார் என்று தமிழ் படித்தவர்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். தமிழ்
படித்தவர்கள் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளிலிருந்து ஓரிரு குறள்களையாவது
சொல்வார்கள் என்றுநம்புகிறேன். இன்னும் சிலருக்கு திருக்குறள் மூன்று பிரிவுகளில்
( அறப்பால் ,பொருட்பால், காமத்துப்பால்) மொத்தம் 133 தலைப்புகளில் தலைப்புக்குப்
பத்தாக 1330 ஈரடிச் செய்யுட்கள் கொண்டது என்றும் தெரிந்திருக்கலாம்
சரி சர்வக்ஞா யார் என்று தெரியுமா? தமிழர்கள் அநேகமாகக்
கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். சிலருக்கு வேண்டுமானால். திருவள்ளுவர் சிலை
பெங்களூரில் திறக்கப்பட வேண்டுமானால் சென்னையில் கன்னட கவி சர்வக்ஞாவின் சிலையும்
திறக்கப் படவேண்டும் என்ற கன்னடியர்களின் கோரிக்கை நினைவுக்கு வரலாம். அதாவது
தமிழர்களுக்கு திருவள்ளுவர் போல கன்னடியர்களுக்கு சர்வக்ஞா
சர்வக்ஞா
பற்றியும் அவரது செய்யுட்கள் பற்றியும் தெரிந்து
கொள்ளும் ஆவலோடுமுனைந்தேன். ஒருசில தகவல்களும் செய்யுட்களும் இணையத்தின் மூலம்
கிடைத்தது. இணையத்தில் தேடும்போது கன்னட மொழியில் வேண்டுமானால் அவரது செய்யுட்கள்
கிடைக்கலாம் ஆனால் எனக்குக் கன்னடம் தெரியாது ஆகவே எனக்குக் கிடைத்த தகவல்கள்
உங்களிடம் பகிர்கிறேன் இணையத்தில் தேடும்போது ஒரு சில செய்யுட்களின் transliteration ,
translation கிடைத்தது. அவற்றை
எழுதியவருடனும் தொடர்பு கொண்டேன் அவர் ஒரு தமிழர். அவரும் முழுவதும் எழுத முயல்வதாகக்
கூறி இருக்கிறார் இது எனக்கு ஆச்சரியம் தரவில்லை
புஷ்பதத்தர் என்னும் இயற்பெயர் கொண்ட
சர்வக்ஞாவின் காலம் சரியாகக் கணிக்கப் படவில்லை பதினேழாம் நூற்றாண்டின்
முற்பகுதியில் இருந்தவராக எண்ணப் படுகிறது. ஒரு சைவப் பிராம்மணத் தந்தைக்கும் ,
ஒரு சூத்திரவிதவைப் பெண்ணான தாய்க்கும் பிறந்தவர் என்று சொல்லப் படுகிறது
ஆயிரத்துக்கும் மேற்பட்ட த்ரிபாதி(TRIPADIS) எனும் மூன்றடிச் செய்யுட்களை இவர் இயற்றி இருப்பதாகச் சொல்லப் படுகிறது மதம்
ஒழுக்கம் வழக்கம் ஜோதிடம் பருவங்கள் புதிர்கள் என்று பல தலைப்புகளில் இவர் எழுதி
இருப்பதாகக் கூறப் படுகிறது அறிஞர்கள் இவரது செய்யுட்களிருந்து மேற்கோள்
காட்டுகின்றனர். ஆனால் இவர் எழுதியதாக கருதப்படும் எந்த இரு புத்தகமும் ஒருப்போல
இருப்பதில்லையாம். ஒருவேளை இவர் இயற்றியதாகச் சொல்லப் படும் பல செய்யுட்கள் பல நகல்
எழுத்தாளர்களின் இடைச் செருகலாக இருக்கலாம் என்று சொல்லப் படுகிறது.
இனி இவர் எழுதிய சில( ”VACHANAGALU”) செய்யுட்கள்
சிலவற்றைக் காண்போம்
1) சர்வக்ஞ எம்பவனு (G)கர்வதி-இந்த –ஆதவனே
சர்வரொல்லு ஒந்து ஒந்து நுடி கலிது
வித்யேய பர்வதவே ஆதா சர்வக்ஞா..!
சர்வக்ஞா என்பவ்ன் கர்வம் கொண்டவனே
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றாகக் கற்று
அறிவில் மலைபோல் விளங்கினான்
விளக்கம்:-சர்வக்ஞா என்பவன் உன்னைப் போல்
ஒருவனே என்றாலும்
ஒவ்வொருவனின் வார்த்தையிலும் ஞானம் பெற்று மலை போல் விளங்கினான் ( சர்வக்ஞா = எல்லாம் அறிந்தவன் )
ஒவ்வொருவனின் வார்த்தையிலும் ஞானம் பெற்று மலை போல் விளங்கினான் ( சர்வக்ஞா = எல்லாம் அறிந்தவன் )
( எனக்குத் தெரிந்த சில கன்னட நண்பர்கள் சர்வக்ஞாவின் இந்த
மூன்றடிகளைச் சொல்கிறார்கள் நாம் திருக்குறளில் “அகர முதல....”சொல்வதைப்போல)
2) ஏளு கோடியே கோடி ஏளு லக்ஷ்வே
ஏளு சாவரித எப்பத்து வசனகள
ஹேளித்தானு கேள சர்வக்ஞ
..
ஏழு கோடியே ஏழு லக்ஷத்து
ஏழாயிரத்து எழுபது வசனங்கள்
சர்வக்ஞனால் கூறப் பட்டது அறிவீர்
நண்பர்களே
விளக்கம் சர்வக்ஞர் கூறுகிறார். அவரால்
பயனுள்ளதாஉ உலகோருக்குக் கூறப்பட்ட வாக்குகள் ஏழு
கோடியே ஏழு லட்சத்து ஏழாயிரத்து எழுபதுஎன்று. (ஆனால் 2000—2500
வசனங்களே கிடைத்திருக்கின்றன)
3) கெலவம் (B)பல்லவரிந்த
கலது
கெலவம் மல்பவரிந்த கண்டு மத்தே
ஹலவம்தானே ஸ்வதஹா மாடி தில்லி எந்தா
சர்வக்ஞா
சில அறிந்தவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்
சில பிறர் செய்வதைக் கண்டு அறிந்து கொள்
மற்றவை தானே அறிந்து செய்யச் சொல்கிறார்
சர்வக்ஞா
விளக்கம் :- உலகில் எல்லாம் நமக்குத்
தெரியாது. சர்வக்ஞா கூற்றுப்படி சில விஷயங்கள் பிறர் சொல்வதைக் கேட்டு அறிந்து
கொள்ள வேண்டும் இன்னும் சிலவை பிறர் செய்வதைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும்
மற்றவை அவரவர் அனுபவத்தில் கற்றுத் தெரிய வேண்டும்
4)மூர்கநிகே புத்தியனு
நூர்க்கால பேளிதறு
கோர்க்கல்ல மேல் மள
கரெதரே
ஆ கல்லு நீரு குடிவுதே
சர்வஞ்யா
அறிவிலிக்கு நூறாண்டு புத்திமதி
சொலவது
பெருமழை கல்லில் வீழ்வதற்கொப்பாகும்
கல் ஒருக்காலும் நீரைப் பருகாது
விளக்கம் :- ஒரு முட்டாளுக்கு அறிவுரை கூறுவது கல்லின் மேல்
பொழியும் மழைக்கொப்பாகும் அறிவிலி புத்திமதிகளை ஏற்கமாட்டான் கல் நீரை உறிய முடியாததுபோல
5) சித்தவுஇல்லதே (g)குடிய சுத்திதோடெஃபலவேனு
எத்து (g)கான்னவனு ஹொத்துத
நித்யதல்லி சுத்தி(b)பந்தந்தே
சர்வக்ஞ
மனம் எங்கோ அலைய கோவிலைச் சுற்றுவதில் என்னபலன்
செக்கிழுக்கும் எருதின் சுற்றலுக்கு அது ஒப்பாகும்
விளக்கம்ள்- கவுளிடம் மனம் லயிக்காமல்
கோவிலைச் சுற்றுவதில் பலனேதுமில்லை. அச்செயல் செக்கிழுக்கும் மாடு போல் செயல்
படுவதற்கு ஒப்பாகும்
6) சாலவனு கொம்பாக ஹாலோகருண்டந்தே
சாலிகரு பண்டு எலெவாக
கிப்பதிய கீலு
முரிதந்தே சர்வஞ்யா
கடன் வாங்கும்போது தேனினும் இனிக்கும் பணம்
திருப்பிக் கொடுக்கக் கேட்கப் படும்போது
முதுகெலும்பை முறிபது போல் இருக்கிறது
விளக்கம்:- கடன் வாங்குவது வரமல்ல சாபம் என்று உணர வேண்டும்
கடன் பெறுகையில் இனிக்கும் பணம் திருப்பிக் கேட்கும் போது முதுகெலும்பை முறிப்பது
போல் இருக்கும் கடன் முதுகெலும்பை முறிக்கிறதோ இல்லையோ அன்பை முறிக்கும்
7) அன்னவனு இக்குவுது நன்னியனு நுடியுவுது
தானந்தே பரார (b)பாகெடொடெ
கைலாச (b)பின்ன அனவக்கு சர்வக்ஞ
பசித்தோர்க்கு அன்னமிடல் உணமை உரைத்தல்
தன்னைப் போல் பிறரை பாவிப்பது
வானுலகத்துக்கு உயர்த்தும்
விளக்கம்:- சொர்க்கத்துக்குப் போக அனைவரும் விரும்புவர்.
பசித்து வருவோர்க்கு உணவிடுதல் என்றும் உண்மைபேஅல் தன் உயிர் போல் அனைத்தையும்
எண்ணுவது இவையெல்லாம் வானுலகேக வழிவகுக்கும்
( சென்றிடுவீர் எட்டு திசையிலும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் கலைச் செல்வத்தை என்ற பாரதிக்கு நன்றி )
( சென்றிடுவீர் எட்டு திசையிலும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் கலைச் செல்வத்தை என்ற பாரதிக்கு நன்றி )
இரண்டு பாராக்கள் இரண்டு முறை வந்திருக்கின்றன. சர்வக்ஞாவின் காலக்கணக்கைப் பார்க்கும்போது திருவள்ளுவர் முன்னோடியாகத் தெரிகிறார்.
ReplyDeleteரஃப்ஃபாக ட்ராஃப்ட் எழுதி காப்பி பேஸ்ட் செய்யும்போது தவறு நேர்ந்திருக்கலாம்
Deleteபகிரப்பட்டிருக்கும் மூன்றடிச் செய்யுள்கள் நன்றாயிருக்கின்றன. வார்த்தைக்கு வார்த்தை சர்வக்ஞா என்று வருகிறதே... மூன்றாவது செய்யுளில் டில்லி பற்றி ஏதோ சொல்லியிருக்கிறாரே என்று பார்தால்பொருளில் டில்லி பற்றியே வரவில்லை.. ஹா... ஹா... ஹா...!
ReplyDeleteஸ்வதஹா மாடி தெல்லி எந்தா சர்வஞ்ஞ - "தில்லி" தட்டச்சுப்பிழை. தானாகவே செய்து தெரிந்துகொள் என்று கூறுகிறார் சர்வஞ்ஞர் என்பது அர்த்தம்.
Deleteகன்னடம் முழுமையாத் தெரியாவிட்டாலும் இடுகைல தவறு கண்டுபிடிக்க முடியுது.
ஓ... தெல்லி தில்லி ஆயிடுச்சா?!!! அதானே.. தமிழ்நாட்டில் நீண்ட காலமாக இருக்கும் பிற மாநிலத்தவரை இன்னுமா உங்களுக்குத் தமிழ் தெரியாது என்று கேட்கிறார்கள். பெங்களுருவில் நீண்ட காலம் வசிப்பவர்களுக்குக்கண்ணாடம் தெரியாமலா இருக்கும்!
Deleteஸ்ரீராம் அவரது பாடல்கள் எல்லாவற்றிலும் சர்வக்ஞா என்று முடிக்கிறார்
Deleteநெல்லை வசகர்களில் சில நக்கீரர்களும் இருக்கிறார்கள் என்று தெரிகிறது எனக்கு கன்னடம் ஓரளவுக்குத்தான் தெரியும் அங்கும் இங்கும் படித்து அறிந்தது
Deleteஸ்ரீ ராம் எனக்குத் தெரிந்தகன்னடம் அர்த்தம்ம் புரிந்து கொள்ளவே உதவுகிறது நன்கு தெரியும் என்று சொல்ல முடியாது
Deleteதிண்டுக்கல் தனபாலன் இவற்றைப் படிக்கும்போது அவருக்கு சட்டென இவற்றுக்கு இணையான குறள்கள் நினைவுக்கு வந்து விடலாம். இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இதுமாதிரிப் பகிரல்களைத் தொடருங்கள்.
ReplyDelete5. சித்தவு இல்லதே - மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம், பழித்த தொழித்து விடின்.
Delete3. கெலவம் - எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள், மெய்ப்பொருள் காண்ப தறிவு
சரி... சரி.. மனசாரப் படித்திருக்கிறீர்கள் நெல்லை!
Deleteநெல்லை பிரமாதம் சார் இப்படித்தான் சொல்லாதவற்றை றை சொல்லியதாக கறனை செய்வது பிடித்திருக்கிறது
Deleteநானும் பாராட்டில் பங்கு கொள்கிறேன்
Deleteநெல்லை திண்டுக்கல் தனபாலன் அவ்விதம் முயற்சிக்க வில்லை நீங்கள் முயன்றிருக்கிறீர்கள்
Deleteசரி சர்வக்ஞா யார் என்று தெரியுமா? //
ReplyDeleteதெரிந்து கொண்டோம் சார் உங்கள் பதிவின் மூலம்.
பகிர்ந்த பாடலும், விளக்கவுரையும் நன்றாக இருக்கிறது.
பதிவின் நோக்கமே அதுதானே
Deleteஇந்த செய்யுட்களும் நன்றாக உள்ளது...
ReplyDeleteவசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி நன்றி
Deleteசர்வக்ஞா யார் என்பதையும்,அவரது 7 பாக்களையும் விளக்கத்தோடு அறிமுகப்படுதியமைக்கு நன்றி!
ReplyDeleteபல பாக்களையும் தேடினேன் கிடைக்கவில்லை
Deleteஅருமையான பாக்களும் பொருள் விளக்கமும்
ReplyDeleteபாரதியார் கூற்றுப்படி நமது அறிவை நாம் பெருக்குவோம்.
இதை எழுதத்த்தூண்டியவர் பூவனம் ஜீவி அவர்களே
ReplyDeleteசர்வஞர் பற்றி எழுதி,அவருடைய செய்யுள்களை பொருளோடு விவரித்திருப்பதற்கு நன்றி.
ReplyDeleteசில விஷயங்கள் தெரியமல் போய் விடுகின்றன எல்லாப் பாடல்களையும் பார்க்க முடியவில்லை
Deleteஅருமை சார். உங்கள் பணி பிரமாதம். நாடு, மொழி, தேச எல்லை, பிரதேசப் பிரிவினைகள் என்றெல்லாம் ஒன்றுமில்லை.
ReplyDeleteஆகச் சிறந்த மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்குச் சொந்தமானவர்கள் இல்லை. அவர்கள் பிரபஞ்ச சொத்து. அப்படியானவர் உள்ளத்தில் உதித்த எண்ணங்கள் பலருக்குக் கடத்தப் படுகிறது. அதனால் விளையும் சந்தோஷமோ எல்லையில்லாதது.
பிரிவினை பொல்லாங்கு மாய்ந்து ஒழியட்டும். மனித இனம் ஒன்றுபடட்டும். அப்படியான உயர்ந்த எண்ணங்களுக்கு இம்மாதிரியான பிறமொழியாக்கங்கள் உதவட்டும்.
மொழி தெரியாதே என்று மயங்காமல் இதை சாத்தியப்படுத்திய உங்களுக்கு வாழ்த்துக்கள்.
உங்கள் ஒருபின்னூட்டமே இதை எழுத வைத்தது உங்கள் பாராட்டு மகிழ்ச்சி தருகிறது நன்றி சார்
ReplyDelete