மாஸ்டர் ஹிரனையா
-----------------------------------
மாஸ்டர்
ஹிரனையா காலமானார் என்னும் செய்தி என்
நினைவுளை உசுப்பி விட்டது மாஸ்டர் ஹிரனையா ஒரு நாடக நடிகர் தயாரிப்பாளர் பெங்களூர்
சுபாஷ் நகர் திடலில் ( இப்போது மெஜஸ்டிக் பேரூந்து நிலையம் இருக்கும் இடம் ) அவரது நாடகம் ஒன்றைப்
பார்க்கச் சென்றிருந்தேன் நாடகம் பெயர் லஞ்சாவதாரா 1960ம் ஆண்டு என்ற நினைவு நாடகம் துவங்கும் முன் திரு ஹிரனையா மேடைக்கு வந்து டிக்கட் வாங்கி வந்திருப்பவர்களுக்கு நன்றி கூறினார் டிக்கட் வாங்காமல் பாசில்
வந்திருப்பவர்கள் நாடகக் கலைஞர்களுக்கு
துரோகம் செய்கிறது போல் இருக்கிறது என்று ஏதோ சொன்ன நினைவு
இவரது நாடக வசனங்கள் சமயத்துக்கும்
அன்றைய செய்திக்கும் ஏற்றமாதிரி இருக்கும் ஏனோ தெரியவில்லை எம் ஆர் ராதா நாடகம்பார்ப்பது போலிருக்கும்
அவரது நாடகங்கள் ஊழலுக்கும் லஞ்சதுக்கும் எதிராககுரல் கொடுப்பவை நம் தமிழர்கள் தமிழில் பேசத் தயங்குவார்கள் என்று நினைத்துக்
கொண்டிருக்கிறோம் ஒரு முறை
அமெரிக்காவில் ஒரு என் ஆர் ஐ
மீட்டுக்கு அவர் போயிருந்தாராம் நிறைய
தென் இந்தியர்கள் கலந்து கொண்ட
விழா அது அவர் அருகில், அமர்ந்திருந்த ஒரு அமெரிக்கர் தென் இந்தியர்களை
எப்படி புரிந்துகொள்வது என்று கேட்டாராம் ஹிரனையா
அது எளிது என்று கூறி
விளக்கினாராம் தெலுங்கில் கேள்வி கேட்டு தெலுங்கில் பதில்
வந்தால் அவர் தெலுங்கர் எனலாம் தமிழில் கேள்வி கேட்டு தமிழில் பதில் வந்தால் தமிழர் எனலாம் மலையாளத்தில் கேள்வி கேட்டுமலையாளத்தில்
பதில் வந்தால் அவர் மலையாளி எனலாம்
கன்னடத்தில் கேள்வி கேட்டு ஆங்கிலத்தில்
பதில் வந்தால் அவர் கன்னடியர்
என்லாம் என்று விளக்கினாராம்
ஹிரனையா 1934 ------2019 |
இப்போது அமெரிக்காவில் தமிழில் கேள்வி கேட்டு ஆங்கிலத்தில் பதில் வந்தால் அவர்கள் சுத்த தமிழர் எனலாம்
ReplyDeleteஅது அமெரிக்கா என்பதால் இருக்கலாம்
Deleteஇவர் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. அவர் சொல்லி இருக்கும் பதில் உண்மையில் எல்லா மாநிலத்தவர்க்கும் பொருந்தும்.
ReplyDeleteஎப்படி ஶ்ரீராம்? வட நாடெல்லாம் பிரயாணம் செஞ்சிருக்கீங்க.. இப்படிச் சொல்றீங்க... தமிழனைத் தவிர மற்ற எல்லோரும் லோக்கல் மொழி தெரியலைனா ஹிந்திக்குத் தாவிடுவாங்க. ஆங்கிலத்துக்குத் தாவுகிறவர்கள் வெகு குறைவு.
Delete@ஸ்ரீ ஹிரனையா ஒரு பெயர் பெற்ற நாடக இயலாளர்
Delete@நெல்லை ஸ்ரீராம் சரியாயிருக்கலாம்
Deleteமுற்றிலும் அறிமுகம் இல்லாதவர். பகிர்வுக்கு நன்றி. உங்களை என் வலைப்பக்கம் இப்போதெல்லாம் பார்க்க முடியவில்லை. உடல் நலம் தானே? நேரம் இருக்கும்போது நினைவு வைத்துக்கொண்டு வாருங்கள்.
ReplyDeleteவிசாரிப்புக்கு நன்றி மேம் உடல்நலம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை நடப்பதே பிரச்சனை உங்கள் பதிவுகளுக்கு வருகிறேனே ஒரேயடியாய்கடவுள பற்றி இருந்தால் பின்னூட்டம் இடத்தயக்கம் வருகைக்கு நன்றி பதிவில் எழுதி இருப்பதுபோல் நான் அவரது நாடகம் ஒருமுறை பார்த்திருக்கிறேன்
Deleteபொதுவாகத் தமிழர்கள் தாம் ஆங்கிலத்திலேயே பேசுவதாகச் சொல்லுவார்கள். கன்னடக்காரர்களுமா?
ReplyDeleteஇதுவும்கூட பெர்செப்ஷன் என்றே நினைக்கிறேன்
Deleteதமிழில் கேள்வி கேட்டு இந்தியில் பதில் சொல்லும் காலமும் வரக்கூடும்!
ReplyDeleteஅந்த அனுபவம் எனக்கு இருந்திருக்கிறது ஒரு முறை பாம்பே மாதுங்கா பகுதியில் ஒரு அக்மார்க் தமிழரைக் கண்டு ஓரிடத்துக்கு வழி கேட்டேன் தமிழில் அவர் தமிழர் என்று தெரிந்ததால் அவர் என்னை மேலும் கீழுமாய் பார்த்து மாலும் நஹி என்றாரே பார்க்கலாம்
Deleteஎனக்குத் தெரிந்து தமிழில் பேசினால் ஆங்கிலத்தில் பேசுவது தமிழர் மட்டுமே. மலையாளிகள், கன்னடியர், தெலுங்கர் அப்படி அல்ல.
ReplyDeleteஹிரனையா பற்றி கேள்விப்பட்டதில்லை.
நமக்கு தெரிந்தது சரியாய் இருக்கவேண்டும் என்றில்லையேஹிரனையா பற்றி தமிழர்கள்கேட்டிருக்கவாய்ப்பில்லை என்பதால் பகிர்ந்தேன்
Deleteஇல்லை ஜிஎம்பி சார்... நான் இருந்த வெளிநாட்டில் இவர்கள் அனைவருடனும் பழகும் வாய்ப்பு இருந்தது. மலையாளிகள், வெகுநிச்சயமாக மலையாளம்தான். கன்னடிகா, கன்னடத்தில் பேசினால்தான் மகிழ்வுடன் பேசுவார்கள். தமிழர்கள் மட்டும்தான் ஆங்கிலத்தில் பேசுவார்கள்.
Deleteபெங்களூரில் என் அனுபவம்... கன்னடம் பேசாவிட்டால் ஹிந்திக்குத் தாவுவார்கள்.
முன்பெல்லாம் மொழி பற்றிய வெறி கன்னடியர்களிடம் இருந்ததில்லை சமீபகாலமாகாதை அதிகம் காண்கிறேன்
Deleteதமிழர்கள் தமிழில் பேசினால் வெட்கம் என நினைப்பதே கேவலத்தின் உச்சம்...
ReplyDeleteநான் முழுவதும் ஒத்துப்போகிறேன் நன்றி
ReplyDeleteஹிரண்யா பற்றி கேள்வி பட்டதில்லை.
ReplyDeleteநீங்கள் கன்னடியர்கள் பற்றி சொல்லியிருப்பதை தமிழர்களைப் பற்றியும் கூறுவார்கள்.
ஒரு கன்னட நாடகக்கலை கலைஞரை அறிமுகப் படுத்தினேன் என் அபிப்ப்ராயம் சொல்ல வில்லை ஹிரனையா சொன்னதை எழுதினேன்
Deleteஇவரைப்பற்றி இன்றே அறிகிறேன் ஐயா.
ReplyDeleteஅதற்காகவே எழுதினேன்
Deleteநீங்கள் பெங்ககளூரில் வசிப்பதால் --
ReplyDeleteஇப்படித்தான் தமிழ் மக்களுக்கு பரவலாகத் தெரியாத விஷயங்களை நீங்கள் எழுதினால் வாசிக்க டபுள் சுவாரஸயமாக இருக்கும்.
எம்.ஆர். ராதா அவர்களின் நாடக பாணியும் அதே தான். போலீஸ் கெடுபிடிகளுக்காக நாடகத்தின் பெயரை மாற்றி மாற்றி வைப்பார்.
ஆனால் நாடகம் என்னவோ அந்நாளைய அரசியல் செய்திகளாகத் தான் இருக்கும்.
எம்.ஆர்.ஆர். ஒரு நியூஸ் பேப்பரும் கையுமாக மேடையில் தோன்றிவிட்டார் என்றால் ஒரே கல கல தான்.
என் நினைவில் வந்ததை எழுதினேன்
Deleteஓர் அரிய கலைஞனைப் போற்றிய விதம் அருமை.
ReplyDeleteநன்றி சார்
Deleteதமிழில் பேசினால் ஆங்கிலத்தில் பதில் சொல்வது தமிழர்கள் என்பது சரிதான்.
ReplyDeleteஹிரனையா வேறு அபிப்பிராயம் கொண்டிருந்தார்
Deleteஇது வரை அறியாத நல்லதொரு கலைஞர் குறித்து அறிந்து கொண்டோம் சார்.
ReplyDeleteதுளசிதரன், கீதா
கீதா: ஸார் பொதுவா தமிழர்கள் பத்தித்தான் அப்படி சொல்லுவாங்க தமிழ்ல பேசினா ஆங்கிலத்தில் பதில் சொல்லுவாங்கனு அது உண்மையும் தான். பிற மொழிக்காரர்கள் அவரவர் தாய்மொழியில் பேசுவதையே விரும்புவார்கள். குறிப்பாகக் கேரளத்தவர் தங்கள் மொழியை விட்டுக் கொடுப்பதே இல்லை.
பொதுவாக தமிழர்பற்றிய தமிழர் கணிப்பும் கன்னடியர் பற்றிய கன்னடியரின்கணிப்பும் எழுடப்பட்டு இருக்கிறது அதெல்லாம் அவரவர் அனுமானம்
ReplyDeleteமலையாளிகள் பற்றி நான் கேள்விப்பட்டட்க்ஹையும் பகிர்கிறேன் ஒரு மலையாளி ஃப்ரான்ஸ் நாட்டுக்குச் சென்று மலையாளத்தில் பேசினானாம் ஏன் என்றால் ஃப்ரென்ச் காரர்களுக்கு ஆங்கிலமும் மலையாளமும் ஒன்றுதான் என்றானாம்
ReplyDelete