Thursday, July 11, 2019

இன்னும் நம்மதத்தின் நீட்சி



                            இன்னும்    நம் மதத்தின் நீட்சி
                                ------------------------------------------


மேலும் எங்கள் ப்ளாகில்  வந்திருந்த aztek மத சம்பிரதாயங்களும்  சமூக வாழ்க்கையும்தான் உலக நாகரிகத்தின் முன்னோடி என்னும் தலைப்பும்  என்னை தேட வைத்தது
மேலே செல்லும் முன்  தெய்வத்தின் குரல் எனக்கு உபயோகமாக இருக்கிறது அநாதிகாலம் தொட்டே நம்மதத்தின்  வேர்கள் அநேக நாடுகளில் பரவி இருந்ததற்கான சாத்தியக் கூறுகள் இருந்திருக்கிறது ஏன் எங்கள் ப்ளாகில் குறிப்பிட்டிருக்கும் AZTEC   என்னும்  வார்த்தையே ஆஸ்திக என்னும் சொல்லி திரிபாயிருக்கலாம் தெய்வத்தின்  குரலில்பெரியவர் பல விஷயங்களை தொட்டுச் செல்கிறார்பலதும்  ஹேஷ்யம்போல் எனக்குத் தெரிகிறது ஆதியில்லோகம் முழுதும்பரவி இருந்ததுநம் மதம் என்கிறார் ஆகவே ஹிந்து மதத்துக்குப் பெயர் என்பதே கிடையாது 1300 வருஷங்களுக்கு முன் இரண்டு அரசர்கள் செய்து கொண்ட உடன்படிக்கையில்மித்ர வருண  சாட்சியாக என்று சொல்லப்படுகிறது மித்ர வருணா நம்வேதத்தில்சொல்லப்பட்டிருக்கும் தேவதைகள் மடகாஸ்கரில் 75% சம்ஸ்கிருதத்தில் இருந்து  வந்தவை ரமேசஸ் என்னும்பெயருக்கும் ராம்ன் என்னும்பெயருக்கும் தொடர்பு இருப்பது போல் தெரிகிறதுமெக்சிகோவில் நம்நவராத்திரியின்  போது ஒரு உற்சவம் நடக்கிறது அது  ராம சீதா என்று பெயர் பெருவில் சரியாக விஷு புண்ணிய கால்த்தில் சூர்யாலயத்தில் பூஜைசெய்கிறாரகள் இவர்களுக்குப்பெயரே இன்காஸ் இனனென்பது சூரியனுடைய பெயர் இனகுலத் திலகன்   என்று ராமனைக் குறிக்கிறோமே
 சகரர்கள் யாகக் குதிரையைத்தேடிபாதாளத்துக்கு வெட்டிக்கொண்டே போனார்கள் அப்போது உண்டான கடலே சகரர் பெயரில் சாகர மாயிற்றுகடைசியில்கபில முனியின்  ஆசிரமத்துக்குப்பக்கத்தில் குதிரையைக்கண்டார்கள்  அவரை ஹிம்சித்தார்கள்  அவர் அவர்களை பொசுக்கி சாம்பலாக்கி விட்டார் இது ராமாயணக்கதை  நம்தேசத்துக்கு நேர் கீழே இருக்கும்  அமெரிக்காவை  பாதாளம்  என்று வைத்துக் கொண்டால் அங்கே இருக்கும் கபிலாரண்யம்   கலி ஃபோர்னியாவாக மருவி இருக்கலாம்அதற்கு ப்சக்கத்தில் ஹார்ஸ் ஐலண்ட் ஆஷ் ஐலண்ட் போன்றவை இருக்கின்றனசகரர் சாகரம்பற்றி இன்னொன்றும் தோன்றுகிறது  சகாரா பாலைவனமும் ஒருகாலத்தில் கடலாக இருந்தது என்கிறார்கள் சாகரம்தான் சகாரா வாயிற்றோ என்னும் எண்ணமும்வருகிறது
என்னைப்போலவே சில விஷயங்களைக் கேட்டும்படித்தும் எழுதிய மாதிரி இருக்கிறதுஅவற்றில் பல வெறும் ஹேஷ்யமாகக்  கூட இருக்கலாம்
சரித்திர காலம் என்று சொல்லப்படுகிறஒரு இரண்டாயிரம் வருஷத்து க்கு உட்பட்ட சான்றுகள்மற்ற தேசங்களி கிடைப்பதைப் பார்த்து இந்தியர்கள் அங்கிருந்தபழைய நாகரிகத்தை  அகற்றி விட்டு அல்லது அதற்குள்ளாகவெ ஊறிப்போகிறமாதிரி ஹிந்து நாகரிகத்தைப் புகுத்தி இருக்கலாம்
அதற்கும்  முற்பட்ட காலங்களிலும்வைதீக சின்னங்கள் பல தேசங்களில்  இருந்திருக்கின்றன அதாவது அந்த தேசங்களில்  நகரிக வாழ்வு தோன்றி இருக்கின்றன பழங்குடிகளுக்கென ஒரு மதமே  தோன்றுகிறது இப்படி தோன்றியமதம் ஒன்றால் கிரீசில் பெரிய பெரிய கோவில்கள் கட்டி வழிபடுகிறமதம் உண்டாயிற்று அதிலு ம்வைதீக சம்பந்தமானஅம்சங்கள் இருக்கின்றன செமிடிக் ஹீப்ரு மதத்தில் வேதமதத்தில் இருக்கும் வர்ணாசிரம  பிரிவினை உட்பட இருந்திருக்கின்றன அவர்களும் இயற்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் தெய்வத்தன்மையைப் பார்த்து ஒவொரு தேவதையாக வழிபட்டிருக்கிறர்கள் இந்தமதங்களில் ஏகப்பட்ட சடங்குகளுண்டு
தத்துவங்களை விள்க்கும்  போதுகதரூபம்கொடுப்பதுண்டு அப்போதுதான் பாமர மக்களுக்குப் புரியும் தத்துவம் சாதாரண ஜனங்களுக்குப் புரிவதையே கதாரூபமாக்கி கர்மானுஷ்டங்களை  செய்யும்போதே அவற்றின் உள்ளே இருக்கிற சிம்பாலிக்காக சொல்லும் தத்துவங்கள்புரியும் புரணக்கதைகளே  தத்துவங்கள்தான் இவற்றையே நிஜமென்று நம்பக்கூடாது
சடங்குகள் எல்லாமே ரூபகம்தான்   சிம்பாலிக்உட்பருளைப் புரிந்துகொண்டாலே போதும்   சடங்குகள் வேண்டாம்என்று சொல்ல வில்லை தனிப்பட்ட சடங்கு என்று வைத்துக் கொண்டாலே அதற்கு  சக்தி உண்டுதான்புராணக் கதைகளும்  தத்துவ விளக்கம் தான்  எந்தப்பலனும் கோரதுசித்தசக்தியை தந்து சிரேயசைத்தருகிற சடங்குகளுக்குள் தத்வார்த்தங்களும் இருக்கின்றன
 ஆனல் நாட்பட்ட வழக்கத்தில் இம்மாதிரியான சடங்குகள் அவற்றின்  இன்னர் மீனிங்கைத் தொலைத்து தத்துவங்களில் இருந்து  விலகக் கூடும் அல்லது மறந்தே போகும்
ஹீப்ரு மதங்களில் அதம் ஏவாள் கதை கேட்டிருப்பீர்கள்

நான் சொல்ல வந்த உதாரணத்துக்கு வருகிறேன். ஹீப்ரு மதங்களில் ஆதம்-ஈவாள் கதை (Adam and Eve) என்று கேட்டிருப்பீர்கள். ‘அறிவு மரம்’ (Tree of Knowledge) என்று ஒன்று இருந்தது. அதன் பழத்தைப் புசிக்கக்கூடாது என்பது ஈஸ்வராக்ஞை. ஆதம் அப்படியே சாப்பிடாமல் இருந்தான். ஆனால் ஈவ் அதைச் சாப்பிட்டாள். அதன் பிறகு, ‘வாழ்வோ தாழ்வோ அவளுக்கு என்ன சம்பவிக்கிறதோ அதுவே தனக்கும் சம்பவிக்கக்கூடும்என்று ஆதமும் அந்தப் பழக்கத்தைச் சாப்பிட்டான் என்பது பைபிள் பழைய ஏற்பாட்டின் (Old T நம் உபநிஷத் தத்வங்களில் ஒன்றுதான் இப்படி கதா ரூபமாயிருக்கிறது. அப்படி ஆகும்போது காலம், தேசம் இவற்றின் மாறுபட்டால் குளறுபடியும் உண்டாகியிருக்கிறது, மூல தத்வமே உபநிஷத்தில் என்ன சொல்லியிருக்கிறது? ‘பிப்பல மரத்தில் இரண்டு பட்சிகள் இருக்கின்றன. ஒன்று பிப்பலத்தைச் சாப்பிடுகிறது. இன்னொன்று சாப்பிடாமல் மற்றதைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறதுஎன்று உபநிஷத்து சொல்கிறது. சரீரம்தான் அந்த விருட்சம். அதில் ஜீவாத்மாவாக ஒருத்தன் தன்னை நினைத்துக் கொண்டு விஷயாநுபவங்கள் என்ற பழத்தைத் தின்று கொண்டிருக்கிறான். இவன் ஒரு பட்சி. இந்த சரீரத்திலேயே பரமாத்மா இன்னொரு பட்சியாக இருக்கிறான். அவன்தான் ஜீவனை ஆட வைக்கிறவன். ஆனாலும் அவன் ஆடுவதில்லை. சர்வ சாக்ஷியாக அவன் ஜீவனின் காரியங்களைப் பார்த்துக் கொண்டு மாத்திரம் இருக்கிறான். இந்த ஜீவனுக்கு அவனே ஆதாரமானாலும் அவன் விஷயங்களை அநுபவிப்பதோபழத்தைச் சாப்பிடுவதோஅதற்கான கர்ம பலனை அநுபவிப்பதோ இல்லை. இதை உபநிஷதம், பழம்அதைச் சாப்பிட்ட பட்சிசாப்பிடாத பட்சி என்று கவித்வத்தோடு சொல்கிறது. சாப்பிடுபவன் ஜீவன், சாப்பிடாதவன் பரம்பொருள்தன்னை ஆத்மாவாக உணர்ந்திருக்கிறவன்.
மறைந்து போகிறாற் போல.
இந்த ஜீவன்தான் ஹீப்ரு மதங்களில் ஈவ் ஆகியிருக்கிறான். ‘ஜீஎன்பதுயாவது ஒரு வியாகரண விதி. ‘வரிசை சப்தங்கள்வரிசையாக மாறிவிடுவது சகஜம். இப்படித்தான் யமுனா ஜமுனாவாயிற்று. ‘யோகீந்திர்என்பதுஜோகீந்தாஎன்றாயிற்று. ‘ஜீவஎன்பதுஈவ்என்றாயிற்று. ‘ஆத்மாஎன்பதுஆதம்ஆக மாறிவிட்டது. பிப்பலம் என்பது ஆப்பிள் (apple) என்றாயிற்று; அறிவு விருட்சம் என்பதும் நம்போதி விருட்சம்தான். போதம் என்றால்ஞானம்’. புத்தருக்குப் போதி விருக்ஷத்தின் கீழ்தான் ஞானம் உண்டாயிற்று என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே? ஆனால், அவருக்கும் முந்தியே அரச மரத்துக்குப் போதி விருட்சம் என்று பெயர் வந்தது.
உபநிஷதமானது தூர தேசம் ஒன்றில் எத்தனையோ காலத்துக்குப் பிற்பாடு மாறி மாறிப் புது ரூபம் எடுக்கிறபோது மூல தாத்பர்யம் மாறிப்போயிற்று. ஒரு போதும் விஷயாநுபோகத்துக்கு ஆளாக முடியாத ஆத்மாவும் பழத்தைச் சாப்பிட்டதாக பைபிள் கதை திசை திரும்பி விடுகிறது. விஷய சுகம் எல்லாம் அடிபட்டுப் போகிற அறிவை நம்முடைய போதி விருட்சம் குறிப்பிடுகிறது என்றால், அவர்களோ விஷய சுகத்தைப் பழுக்கிற லௌகீக அறிவையே Tree of Knowledge என்று சொல்லி விட்டார்கள். ஆனாலும், நம் வேத மதம் ஆதியில் அங்கேயிருந்திருக்கிறது என்பதற்கு இதிலிருந்து அத்தாட்சி கிடைக்கின்றதோ இல்லையோ? இன்னொரு உதாரணம் சொன்னால்தான் மூலத்தில் இருப்பது வெளி தேசத்தில் வேறு காலத்தில் ரொம்பவும் மாறிப்போகும்மாறினாலும்கூட மூலத்தைக் காட்டிக் கொடுக்கும் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை வரும். நம்முடைய திருப்பாவைதிருவெம்பாவைப் பாடல்கள் வேதம் மாதிரி அத்தனை பிராசீனமானவை அல்ல. ஒரு ஆயிரத்தைந்நூறு வருஷங்களுக்குள் அவற்றை ஆராய்ச்சியாளர்கள் கொண்டு வந்து விடுகிறார்கள். எப்படியானாலும் வேத இதிஹாச காலங்களுக்கு மிகவும் பிற்பட்டுத் தோன்றியவர்கள்தான் இந்த இரு பாவைகளைச் செய்த மாணிக்கவாசகரும் ஆண்டாளும். இவர்கள் காலத்துக்கு அப்புறம் கடல் கடந்து ஹிந்து சாம்ராஜ்யங்கள் உண்டாயின. தமிழ்நாட்டின் சோழ ராஜாக்கள்கூட அம்மாதிரி தேசாந்தரங்களில் சாம்ராஜ்யத்தை விஸ்தரித்திருக்கிறார்கள். ஆனால் இந்த படை எடுப்பைவிட முக்கியமாக நம் கடல் வாணிபம் பெருகினதையே சொல்ல வேண்டும். வியாபார ரீதியில் நம் அந்நியத் தொடர்பு (Foreign contact) மிகவும் விருத்தியாயிற்று. இந்த வியாபாரிகளைப் பார்த்தே பல தேசங்களில் ஹிந்து நாகரிகத்தில் ஆகர்ஷிக்கப்பட்டு நம் மத அம்சங்களைத் தாங்களும் எடுத்துக் கொண்டார்கள். தூரக் கிழக்கு (Far – East ) என்று சொல்கிற நாடுகளை இவற்றில் முக்கியமாகச் சொல்ல வேண்டும்பாலி மாதிரி தேசங்கள் முழுக்க ஹிந்துவாயின. கம்போடியா, இப்போது தாய்லாந்து என்கிற ஸயாம், இந்தோ சைனா முழுவதும் பரவி, மணிலா இருக்கிற ஃபிலிப்பைன்ஸ் எல்லாம்கூட ஹிந்து கலாச்சாரத்துக்குள் வந்தன. அதை ஸ்ரீ விஜய சாம்ராஜ்யம் என்பார்கள்.
ஆக, ரொம்பவும் ஆதியில் எங்கேயும் வேத மதமே இருந்தது ஒரு நிலை; அப்புறம் அங்கங்கே புது மதங்கள் ஏற்பட்டது ஒரு நிலை; பிறகு இந்த மதங்கள் எல்லாம் மங்கிப் போகிற மாதிரி கிறிஸ்துவம், இஸ்லாம், பௌத்தம் இவை மட்டுமே அங்கெல்லாம் பரவிய நிலை; இதற்கப்புறம், சரித்திரத்தில் நன்றாக உறுதிப்பட்டுவிட்ட காலத்தில் மறுபடி இப்போது நான் சொன்னமாதிரி, ஹிந்து நாகரிகச் செல்வாக்கானது பல தேசங்களில்குறிப்பாக கீழ்த்திசை நாடுகளில் ஜீவ களையுடன் ஏற்பட்டது ஒரு நிலை. இந்தக் கட்டத்தில்தான் அங்கோர்வாட், பேராபுதூர், ப்ரம்பானன் மாதிரி பெரிய பெரிய தமிழ்நாட்டுக் கோயில்கள் அங்கே எழும்பின. இந்தக் கட்டத்தில்தான் நம்முடைய திருப்பாவையும் திருவெம்பாவையும் கூட ஸயாமுக்குஇப்போது தாய்லாந்து என்கிறார்கள்சென்றிருக்கின்றன.
இதற்குச் சான்றாக இப்போதும் அங்கே வருஷா வருஷம் இங்கே நாம் இந்தப் பாவைகளைப் பாராயணம் பண்ணுகிற அதே மார்கழி மாதத்தில் ஒரு பெரிய உத்ஸவம் நடக்கிறது. இரண்டு பாவைகளும், சைவத்தையும் வைஷ்ணவத்தையும் சேர்த்து வைக்கிற மாதிரி இந்த உத்ஸவத்தில் பெருமானுக்குரிய டோலோத்ஸவத்தை (ஊஞ்சலில் வைத்து ஆட்டுவதை) சிவபெருமான் வேஷத்தைப் போட்டுக் கொள்கிற ஒருத்தனுக்கு ஸயாம் தேசத்தில் செய்கிறார்கள். சரி அவர்களுக்குப்பாவைநூல்களைப் பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டால், அடியோடு ஒன்றும் தெரியாது. அப்படியானால் இந்த உத்ஸவம் மார்கழியில் நடக்கிறது என்பது ஒன்றுக்காக அந்தப் பாவைகளோடு சேர்த்துப் பேசுவதற்கு ஆதாரம் இல்லை என்று தோன்றலாம். பின் நான் ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால், அவர்கள் இந்த உத்ஸவத்துக்குப் பெயரே ட்ரியம்பாவை, ட்ரிபாவை (Triyambavai, Tripavai) என்கிறார்கள். இப்போது பைபிள் படிப்பவர்களுக்கு உபநிஷத சமாச்சாரமே தெரியாவிட்டாலும், அதிலிருந்து வந்த கதை மாத்திரம் அவர்களிடம் இருக்கிற மாதிரி, தாய்லாந்துக் காரர்களுக்கு இப்போது திருப்பாவைதிருவெம்பாவை பாராயணம் அடியோடு விட்டுப் போய்விட்டது என்றாலும், அவர்கள் இதே தநுர் மாசத்தில் சிவ வேஷம் போட்டுக் கொண்டவனுக்காக நடத்துகிற டோலோஸ்தவத்துக்குட்ரியம்பாவை, ட்ரிபாவைஎன்ற பெயர் மட்டும் இருக்கிறது! சரித்திர காலத்துக்குள் இப்படிப்பட்ட மாறுபாடுகள் உண்டானால், மூவாயிரம் நாலாயிரம் வருஷங்களுக்கு முற்பட்ட சமாசாரங்கள் வெளிநாடுகளில் எத்தனையோ திரிந்தும் மாறியும் தானே இருக்கும்? இத்தனை மாறினாலும் எல்லாவற்றிலும் வேத சம்பிரதாயத்தின் அடையாளங்கள்இதோ இருக்கிறோம்என்று தலை நீட்டுகின்றன.
சரித்திர காலத்துக்கு முற்பட்டவர்கள் என்று வைக்கப்பட்ட பழங்குடிகளின் மதங்களில்கூட நம் சமய சின்னங்கள் இருக்கின்றன என்றால் என்ன அர்த்தம்? அத்தனை காலத்துக்கு முந்தி, நாகரிக வாழ்க்கையே உருவாகாத தூர தூர தேசங்களுக்கு இந்தியாவிலிருந்து படையெடுத்தோ வியாபாரத்துக்காகவோ போய் நம் நாகரிகத்தைப் பரப்பினார்கள் என்றால், அது பொருத்தமாகவே இல்லையே! அதனால்தான்இங்கிருந்து கொண்டுபோய் அங்கே புகுத்தவில்லை; ஆதியில் லோகம் முழுக்கவே வேத மதம்தான் இருந்திருக்க வேண்டும்என்று எனக்குத் தோன்றுகிறது. அப்புறம் அவை திரிந்து திரிந்து இப்போது அந்தந்த தேசத்துஒரிஜினல்மதங்களாக நினைக்கப்படுபவையாக ஆகி, பிற்பாடு அங்கும் சரித்திர காலத்துக்கு உட்பட்ட கிறிஸ்துவம், பௌத்தம், இஸ்லாம் ஆகியன பரவியிருக்க வேண்டும்.
இதுவரை நானெழுதியவை பெரும்பாலும் தெய்வத்தின் குரலில் இருந்து எடுத்தாண்டவை சுருக்கமாகச் சொன்னால் உலகில் பரவிய மதங்களுக்கு முழுமுதல் மதமே பெயர் சூட்டப்படாத நம் ஹிந்து மதம்தான் என்கிறார் நமக்குத்தெரியாத பல விஷயங்கள் தொட்டுச்செல்லும் வகையில் அமைந்து இருக்கும்  குரல்  நீளம்கருதி முந்தைய பதிவைச் சுருக்கினேன் இப்போது இன்னும்நீண்டுவிட்டது  பொறுமையாகப் ப்டித்தால் நம்மதத்தின் பெருமைகளை குர்ல் மூலமொலிக்கக் கேட்கலாம்  



    



22 comments:

  1. பொறுமையாகப் படித்தேன். சுவாரஸ்யம். இவை ஏற்கெனவேயும் படித்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே படித்திருந்தும்சுவாரசியம் ஆச்சரியம்

      Delete
  2. மிகப் பெரிய பதிவு. தெய்வத்தின் குரலிலும் இதை எல்லாம் படித்திருக்கிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நானெ சொல்லி இருக்கிறேனே தெய் வத்தின் குரலிலிருந்துஎடுத்தாண்டது என்று

      Delete
  3. இன்றைக்கென்ன ஆன்மீக ஆராய்ச்சி? பொதுவா நீங்கள் இவற்றைப் பற்றி குறை கூறித்தானே எழுதுவீர்கள்?

    நல்ல பதிவு. நானும் இவைகளைக் கண்டு படமெடுத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சில விஷயங்களில் என் கருத்தை வெளியிட்டு அதில் சர்ர்ச்சை என்பதைவிட இம்மாதிரி எழுதினால் வீண்சர்ச்சைகள் குறைய வாய்ப்பு உண்டு ஆன்மீகம் பற்றி நான் குறை கூறுகிறேனென்பதுஒரு தவறான பெர்செப்ஷன் ஆன்மீகம் தவறாக உபயோகப்படுகிறது என்று வேடுமானால் எழுதி இருக்கலாம்

      Delete
  4. பதிவின் வழி நிறைய விடயங்கள் அறிந்தேன் ஐயா

    ReplyDelete
    Replies
    1. எல்ல விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்

      Delete
  5. மதத்திற்கான தோற்றுவாய் (தோன்றுவதற்கான காரணம் என்ன?) என்று ஏதாவது தெரிந்து கொள்ள முடிகிறதா?

    ReplyDelete
    Replies
    1. இது இன்னொரு பதிவுக்கான விஷயம்

      Delete
    2. அந்த இன்னொரு பதிவுக்கான விஷயம் இந்தப் பதிவுக்கு முந்திய விஷையம். அதை முன்னிலைப் படுத்தி எழுதியிருதால் இந்தப் பதிவை எழுத வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது.

      Delete
    3. என்னைப் பொறுத்தவரை ஒன்றின் பின் ஒன்றாகஎழுதுகிறேன் எதை முன்னிலைப் படுத்துவது என்பதில் அபிப்பிராய பேதம் இருக்கலாம்

      Delete
  6. அறிந்து கொண்டோம்.

    ReplyDelete
  7. பல தகவல்களை அறிய முடிந்தது ஐயா... நன்றி...

    ReplyDelete
  8. சிந்திக்க வேண்டிய செய்திகள் . அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி சார்

      Delete
  9. அரிய செய்திகளைக் கொண்ட பதிவு. ஐயா, வாய்ப்பிருப்பின் இதனை நூலாக வெளிக்கொணர முயலலாமே?

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே இருக்கும் நூலி லிருந்து திரட்டிய செட்ய்திகள்தானே

      Delete
  10. நல்ல பதிவு சார். முழுவதும் வாசித்தேன். இவற்றை ஏற்கனவே படித்திருந்தாலும் (மெக்சிக்கோ, தூரக்கிழக்கு நாடுகளின் மதம் பற்றி ) உங்கள் பதிவு வெகு ஸ்வாரஸ்யமாக இருந்தது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எல்லாப்புகழும் தெய்வத்தின் குரலுக்கே

      Delete