Thursday, December 12, 2019

கை கடிகாரம்



                                                            கை கடிகாரம்
                                                             ---------------------
அண்மையில்  திரு மதி கோமதி  அரசு அப்பாவின்  வாட்ச்  பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தார்கள் எனக்கும்  கடிகார நினைவுகள் என்னுமொரு பதிவு எழுதிய  நினைவு  அம்பர்நாத்தில் நான்  பயிற்சியில் இருந்தபோது என் நண்பன் ஒருவன் ரோலெக்ஸ் வாட்ச் அணிந்திருந்தான்   உலகிலேயே சிறந்த கைகடிகாரம்  ரோலெக்ஸ்தான் என்பான் அந்த வயதில் ஒரு தீர்மானம் எடுத்தேன்   நானாக வாட்ச்  வாங்கினால் ரோலெக்ஸ் வாட்ச் தான் என்றும்  இல்லா விட்டால் நான்   வாங்கி வாட்ச் அணியமாட்டேனென்றும் தீர்மானித்தேன்  ஆனால் எனக்கு ரோலெக்ஸ் வாட்ச் வாங்கும் நிலையே எட்ட வில்லை  முடவன்  கொம்புதேனுக்கு ஆசை பட்டதுபோல்  இருந்தது  நனாக காசுகொடுத்து வாட்ச்வாங்கியதில்லை என் நண்பன்   1970ல் என்று நினைக்கிறேன்   ஒரு வாட்ச் அன்பளிப்பாக்கொடுத்தான்   அது நான்விலை கொடுத்து வாங்கியதல்ல என்பதாலும் வாட்சின் அவசியம் கருதியும் அதை  ஏற்று கொண்டேன்   அது ஒரு சீக்கோ வாட்ச்  வைப்ரேஷனில் இயங்கியது பாட்டெரி கிடையாது சாவி கொடுக்கவேண்டாம்  கையில் கட்டி இருந்தால் போதும்  அது தொடர்ந்து ஓடும் தேதியும் இருக்கும்   அப்போதெல்லாம் அதை டெலிவிஷன் டைப் என்பார்கள்  சதுர்மாக இருக்கும்  இந்த வாட்ச் இன்னும் நல்ல ஓடும் நிலையிலேயெ இருக்கிது என்னிடம்வந்தே 45 ஆண்டுகளுக்கும்  மேலாகிறது  ஒரு முறை கூட ரிப்பேர்  என்று போனதில்லை
அதன் பின்  என்  மூத்தமகன் அவன்  சம்பளத்தில் ஒரு டைடன் வாட்ச் வாங்கிக் கொடுத்தான்   என்பேரன்  அவனது முதல் சம்பளத்தில்ஒரு வாட்ச் அதுவும் டைடான்  தான்வாங்கிக் கொடுத்து  அதைத்தான்  அணிய வேண்டும்  என்று ஆர்டர் போட்டு இருக்கிறான்
நான் ஜப்பான்  போய் இருந்தபோது  நண்பர்களுக்கு  பரிசாக  மூன்று சோலார் வாட்சுகள்வாங்கி வந்தேன்   அவற்றின் ஆயுட்காலம் எத்தனை நாட்களோ தெரிய வில்லை      

சீக்கோ கை கடிகாரம் 

மூத்தமகன் கொடுத்தவாட்ச் 















18 comments:

  1. சுவாரஸ்யமான நினைவலைகள்.

    ReplyDelete
    Replies
    1. திருமதி கோமதி அரசுக்கு நன்றிகள்

      Delete
  2. அந்த டெலிவிஷன் டைப் வாட்ச் பார்க்க அழகாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அது இன்றும் நல்ல நிலையில்தான் இருக்கிறது

      Delete
  3. சில பொருட்களுக்கு நாம் உயிர் கொடுத்து வைக்கிறோம். எனக்கும் இப்படி அனுபவம் உண்டு முன்பொரு பதிவும் போட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. உயிரில்லாவிட்டாலும்சில பொருட்கள் ஆயிரம்நினைவுகளைக் கிளறும்

      Delete
  4. என்னிடமும் ஓரு சிட்டிசன் வாட்ச் உள்ளது. கையில் கட்டியிருந்தால் போதும். பதினைந்து ஆண்டுகளாக எவ்வித ரிப்பேரும் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. பணியிலிருந்து ஓய்வு பெற்றதில் இருந்து அதிகம் பயன்படுத்தாததால் ஓடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்போது வேறொரு டைட்டான் வாட்ச் தான் பயன்படுத்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. 49 ஆண்டுகள் ஆகியும் என் சீக்கோ வாட்ச் இன்னும் பழுதின்றி ஓடுகிறது நாண்டான் அதைக்கட்டுவதில்லை

      Delete
  5. Replies
    1. வருகைக்கு நன்றி சார்

      Delete
  6. உங்கள் வாட்ச் நினைவலைகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
    என் பதிவை குறிபிட்டதற்கு நன்றி.
    என்னிடமும், தேதி மாதம் கூறும் கடிகாரம் இருந்தது.

    ReplyDelete
  7. என் சீக்கோ வாட்ச் ஏறத்தாழ என்னிடம் 40 ஆண்டுகளாக இருக்கிறது சாவி கொடுக்க வேண்டாம் பாட்டரி ஏதும் மாற்றவேண்டாம் இன்னும் நன்றாகவே இருக்கிறது ஒருமுறை கூட ரிப்பேர் ஆனதில்லை

    ReplyDelete
  8. இனிமையான நினைவுகள்.

    ReplyDelete
    Replies
    1. அந்தக்காலத்தில் வாங்க முடியாத இயலாத நிலையையும் பதிவாக்கி இனிமையாய்ச் செய்து விட்டேன் பார்த்தீர்களா

      Delete
  9. அருமையான நினைவலைகள் ஐயா. நான் வேலைக்குச் சென்று, என் ஊதியத்தில் முதன்முதலாக எச்.எம்.டி.வாட்ச் வாங்கி அணிந்ததும், தற்போது என் மகன்கள் எனக்கு வாட்ச் அன்பளிப்பு தந்ததும் மறக்க முடியாதவையாக உள்ளன ஐயா. இப்பதிவு அந்த நினைவுகளை என் கண் முன் கொணர்ந்தது.

    ReplyDelete
  10. என் ஊதியத்தில் நானிதுவரை வாட்ச் வாங்கியது இல்லை

    ReplyDelete