சில உப நினைவுகள்
----------------------------------
பொல்லான் என்பரோ,புனிதன் என்பரோ,
கல்லான் என்பரோ,கலைஞன் என்பரோ,
சொல்லா வசைகள் சொல்வரோ,
சூழ்ந்து நின்று புகழ்வரோ
எல்லாம் சொல்லித் தூற்றிடினும்,
ஏதும் சொல்லாது வாழ்த்திடினும்,
மண்ணில் நானோர் ஒளிவட்டம்.
மற்றவ் வட்டம் நோக்கிடுவோர்,
கண்ணிற் காண்பது அவரவர்தம்
காட்சி அன்றி வேறாமோ.?
தொழிலக உப நினைவுகள்
மாற்றலாகி சென்னையில்
பவர் ப்ராஜ்க்ட்ஸ் டிவிஷனில் எங்கு மாற்றல் ஆகி எந்த சைட் என்று தெரியாத நிலையில் இருந்தபோது விஜய வாடா அனல் மின்ன் நிலைய நிர்மாணப் பொறுப்பை ஏற்க ஒரு உதவி பொது
மேலாளர் சென்னையில் வந்திருந்தார் என்னைப்
விஜய வாடா வர விருப்பமாஎன்று கேட்டார்
நான் என் நிலையை விளக்கி என்னை
நிர்வாகம் சரியாக நடத்த வில்லை என்று குறை
கூறினேன் அப்போது அவர் ஒரு கதை கூறினார்
ஒரு ஊரில் ஒரு பெரியவர் இருந்தார் அந்த ஊர் மக்களின்
கஷ்டங்களுக்கு ஆறுதல் கூறி தேற்றுவார் மக்களின்
நன் மதிப்பைப் ;பெற்றவர் ஒரு நாள்
அப்பெரியவரின் வீட்டில் ஒரு துக்கம் நிகழ்ந்தது அடக்கமுடியாமல் அழுது
கொண்டிருந்தார் ஊர் மக்கள் அவரிடம் சென்று
ஊருக்கே ஆறுதல் கூறும் நீங்கள் இப்படி மனம் ஒடியலாமா என்று கேட்டனர் அதற்கு அவர்
சொன்னாராம் துக்கம் என் வீட்டில் அல்லவா வேறு
யாருக்கோ ஆறுதல் கூறுவது போலா என்று கேட்டாராம் அதுபோல்தான் அவரது நிலையும் என்றார் நான் அவர் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டேன்
விஜயவாடாவுக்கு நான் செல்ல ஒப்புக் கொண்டதும் அவர் என்னிடம் அங்கு சென்று வரும்
ஊழியர்களுக்கு அவர்களின் பிள்ளைகளுக்கு
பள்ளியில் இடம் கிடைக்க வேண்டியதைச்செய்யச்
சொன்னார்
விஜயவாடா சென்றதும் அனல் மின் நிலையம் கட்டப் படப் போகும் இடம் பார்க்கச் சென்றேன் கொண்டப்பள்ளி என்னும் ரயில் நிலையத்திலிருந்துதான் வந்து சேரும் கட்டுமானப் பொருட்கள் எடுத்துவரப் படவேண்டும் ஒரு சூபர்வைஸர் ஏற்கெனவே பணியில் இருந்தார். அவருக்கு நான் அங்கு வந்ததே பிடிக்கவில்லை. என்று சிறிது நேரத்திலேயே தெரிந்து விட்டது. எனக்குக் கீழே பதில் சொல்லும் நிலை அவருக்கு ரசிக்கவில்லை
விஜயவாடாவில் பென்ஸ் சர்க்கிள் அருகே ஆஃபீஸ் அமைந்திருந்தது அருகேயே வீடு பார்த்தேன். படமட்டாவில் NSM PUBLIC SCHOOL நல்ல பள்ளி என்றறிந்து அங்கே சென்றேன். அது மாண்ட்ஃபோர்ட் குழுமத்தாரால் நடத்தப் படுவது என்று தெரிந்தது நான் கூனூரில் படித்த பள்ளியும் அவர்கள் நிர்வாகத்துக்குட்பட்டதே. என்னை அந்த ப்ரின்ஸிபாலிடம் அறிமுகப் படுத்திப் பேசிக் கொண்டிருந்தபொது, அவர் கூனூரில் அதே பள்ளியில் எனக்கு மூன்று வருடம் ஜூனியர் என்று தெரிந்தது. பள்ளியில் பிள்ளைகளுக்கு இடம் கொடுத்தால் பள்ளிக்கு நாங்கள் என்ன செய்வோம் என்று அவர் பேரம் பேசினார். அந்த மாநிலத்துக்கே மின்சாரம் தரப்போகும் அனல் மின் நிலையம் நாங்கள் தருவோம் என்றெல்லாம் கூறி பள்ளியின் முன்னேற்றத்துக்கு எங்களிடமிருந்து கணிசமான உதவி எதிர் பார்க்கலாம் என்று கூறி வரப்போகும் ஊழியர்களின் பிள்ளைகள் படிப்புக்கு உத்தரவாதம் பெற்றுத் திரும்பினேன்.
இதைப்பற்றி எல்லாம் எழுதும்பொது
வேறுசில நினைவுகளும் வருவதை தடுக்க முடியவில்லை நான்பள்ளி இறுதி படிப்பு
முடித்தவுடன் வேலைதேடி அலைந்ததை முன்பே
எழுதி இருக்கிறேன் அந்த நேரத்தில் ஒரு விளம்பரத்தில் எச் ஏ எல்லில் பயிற்சிக்கு
ஆட்கள் வேண்டும் என்றி ருந்தது மூன்றாண்டுகள்
பயிறசி முடிந்ததும் B மெக்கானிக்காக பதவி வெற்றிகரமாக முடிந்த பயீற்சிக்கு பின்
வேலை சம்பளம் தினம் ரூ ஒன்றுடன் பத்தணா ப்ளஸ் ரூ 39 அலவன்ஸ்
அப்பொதெல்லாம் மெகானிக் என்றல் ஏதோ காருக்கு
அடியில் படுத்து வேலை செய்வது என்னும் எண்ணமே வரும் காலம்மாறி நான் எச் ஏ
எல்லில்லிருந்து அம்பர்நாதுக்கு அனுப்பபட்டதும்
இரண்டு ஆண்டுகள்பயிற்சி முடிந்ததும்
எச் ஏ எல்லில்சூப்பெர்வைசராகப்பணி மாதம்
சம்பளம் ரூ 210 /-- காலம் மாற ஒரு வழி
அப்படி இருந்த நான் என்னைப்
பற்றிக் குறை கூறுவது தவறு என்றேநினைக்கிறேன்
நன் அடிக்கடி எழுதுவது you get what you
deserve அப்படித்தான் நடந்திருக்க
வேண்டும் ஆட்டுக்கு வால் அளந்துதான் வைக்கப்பட்டு இருக்கிறதோ
சுவாரஸ்யமாக செல்கிறது ஐயா பதிவு
ReplyDeleteநிகழ்வுகள் நடந்த்சபோது சுவாரசியம் இருக்கவில்லை ஜி
Deleteஎண்ணம் போல் வாழ்வு...!
ReplyDeleteஎண்ணம் போல் வாழ்வு இருந்ததா தெரியவில்லை
Deleteஅப்புறம் ஐயா,
ReplyDelete"வால் இன்னும் நீளமாய் இருந்தால் என்ன ஆட்டு ஆட்டும்" என்று நினைப்பவர்களுக்கு :-
ஆட்டுக்கு வால் நீளமாக இருந்தால், அதனால் ஆட்ட முடியாது என்பது தான் உண்மை...!
ஊண்மை என்று நீங்கள்சொல்வதை நம்புகிறேன் அடு டன் வாலை வெகுவாக ஆட்டும்அருகில் செல்கிறவர் பாடு திண்டாட்டம் அது கூடாது என்றே அளவாக வால் இருக்கும் என்றே நினைத்த்திருந்தேன்
Deleteநன் அடிக்கடி எழுதுவது you get what you deserve அப்படித்தான் நடந்திருக்க வேண்டும் //
ReplyDeleteஉண்மைதான்.
what was obvious was not known at that time
Deleteதொடருங்கள் , வாசிக்கக் காத்திருக்கிறேன் .
ReplyDeleteநினைவுகளில் வாழ்பவன் நிறையவே பகிர்ந்து விட்டேன்
Deleteவெளியூர், வெளி மாநிலம் என்றெல்லாம் மயங்காமல், தயங்காமல் உடனே சென்று சவாலை ஏற்றிருக்கிறீர்கள். நல்லானுபவங்கள்.
ReplyDeletebeggars are no choosers
Deleteசம்பளவிவரம் குறிக்கையில் பிராக்கெட்டில் வருடமும் குறித்தால் இன்னும் சரியாய்ப் புரிந்து கொள்ள ஏதுவாகுமே..
ReplyDelete1956ல் எச் ஏ எல்லி ல் பயிற்சியில் சேர்ந்தபோது தினமும் ரூ ஒன்றும் அலவன்சாக ரூ39ம் பின் உயர் பயிற்சிக்காக அம்பர்நாதுக்கு அனுப்பப்பட்ட போது 1957ல் செலவு போக ரூ 25 மாதம் அதாவது ஸ்டைபென் மாதம் ரூ 75 / - செலவு போக கயில் ரூ 25 கிடைக்கும் பயிற்சி முடிந்து வந்தபோது மாதம் ரூ 210 =அலவன்ஸ்
ReplyDeleteமனசில்லிருந்து வரும் வார்த்தைகள் என்றுமே பளிங்கு போன்றது.
ReplyDeleteதனக்கே சொந்தமான சில விஷயங்களை என்ன தான் விளக்கினாலும் அதே அலை வரிசையில் இன்னொருத்தரால் அனுபவித்து அறிய முடியாது என்பது தனிமனிதனின் சோகம்.
சுமார் பத்து வருடங்களாக வலையில்எழுதி வரும் எனக்கு தெரிந்ததுதான் அந்தரங்கங்கள்புனிதமான்வை என்று எந்த விஷ்யமும் தெரியப் படுத்தாதவர் மத்தியில் நானோர் ஒளிவட்டம் என்பது பலருக்கும் தெரியும் இன்னொருவர் அனுபவித்து அறிய முடியாது என்பதே நிதர்சனம்
Deleteயாதும் ஊரே யாவரும் கேளிர்
ReplyDeleteஎன்பது தங்களுக்கு மிகவும் பொருந்தும் ஐயா
அதெல்லாம் காலம் செய்த கோலம்
Deleteதொடர்ந்து வாசிக்கிறேன் ஐயா.
ReplyDeleteஇனியும் எழுத என்ன இருக்கிறது
ReplyDeleteசம்பள விவரங்கள் - என் அப்பாவின் முதல் சம்பளம் 89 ரூபாய் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. 1962-ஆம் வருடம் என நினைவு.
ReplyDeleteஒய்வு பெறும்போது எப்படி ஃபீல் செய்தார்
DeleteThis comment has been removed by the author.
Delete1962-ல் எல்லாம் மத்திய அரசுப் பணிகளில் அலுவலக உதவியாளர்களுக்கு பேஸிக் சம்பளம் ரூ.110/-+DA+HRA எல்லாம் சேர்ந்து ரூ.260/- வரும்.
Deleteஎச் ஏ எல்லில் சூப்பர் வைசராகப் பணி 1959ல்பேசிக் பே ரூ 210 + அலவன்ஸ்
Deleteஇன்னும் சற்று விரிவாகவே எழுதினால் தான் என்ன? தனிமனிதனின் அனுபவங்களே சமுதாயத்தின் வரலாறாகிறது அல்லவா? அன்புடன்
ReplyDeleteஅலுவலக அனுபவங்களை விரிவாகவே எழுதி இருக்கிறேன் வாசிப்பவர்கள் சிலர் உங்களைப்போல் நினைக்கவில்லை
ReplyDeleteஅருமை. அந்தக்கால நினைவுகள். நல்ல கவிதை ஆரம்பத்துடன்... படித்தேன். ரசித்தேன்...
ReplyDeleteநமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்