Friday, March 27, 2020

பல்சுவை பதிவு


                                  பல்சுவைப்பதிவு
                                 ---------------------------0



பழ மொழிகள் பலகேள்விப்பட்டு இருக்கிறோம் பலதும்பொருள்  மாறியே  அர்த்தம்  கொள்ளப்படுகிறது  உ-ம் ஆயிரம்பேரைக் கொன்றவன்  அரை வைத்தியன்   ஆனால் உண்மையிலேயே  அது ஆயிரம்  வேரைக் கொண்டவன்   என்னும்பொருளில்தான் சொல்லப்பட்டது எனக்கு இன்னும்  இரண்டு மூன்று பழமொழிகள்நினைவுக்கு வருகிறதுது வாசகர்கள் இதற்கு இன்னும் காண்ட்ரி ப்யூட் செய்யலாம் 
1 )  ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணம நடத்தலாம்
அது இப்படி இருக்குமோ  ஆயிரம்  முறை போய்ச் சொல்லி அதாவது பலமுறை  அங்கும் இங்கும்  போய்ச்சொல்லி திருமணம்   நடத்துவது என்றிருக்குமோ
2) ஆடிக்காற்றில்  அம்மியும் நகரும் 
 அதாவது சித்திரை வைகாசி ஆனி  எல்லாம் போய்  ஆடி வருகிறது  ஆடிமாசம்  காற்றடிக்கும் அந்தக்காற்றில் அம்மையும்  நகரும்  என்றால் அந்ஹக் காற்றில்  வேப்பங் காற்றில்அமை நோயும்  போய் விடும் என்று இருக்குமோ
3)அற்பனுக்கு காலம் வந்தால்  அர்த்த ராத்திரியிலும் குடைபிடிப்பான் 
அதுஇப்படி இருக்குமோ  அறப்பணிக்கு  காலம் வந்தால் பாதி ராத்திதிரியிலும்கொடை கொடுப்பான்  

ஒரு ஜாலி காணொளி 

 
             
கேரள பாரம்பரிய கலைகளில் முக்கியமானது ஓட்டந்துள்ளல் என்  சிறிய தாயார் பாடியதுதான்  ந்னைவுக்கு வருகிறது ஓட்டந்துள்ளல்  துள்ள ல்  துள்ளி வரும்போள்  வீட்டில் கஞ்சி குடிக்கானில்லா  நண்பர் துளசிதரனின் மகளும் இக்கலையில் வல்லவராமே  


வயதாகும் போது சில நேரங்களில்  தனிமை  தவிர்க்க முடியாது கீழே  தனிமையிலும் இனிமை காண்பவன்   இவன்

/The longest word in any of the major English language dictionaries is pneumonoultramicroscopicsilicovolcanoconiosis

we jokingly used to say  "smiles"
that is mile between two s  



கொரொனா வைரஸிலிருந்து காத்துக் கொள்ளும் முறை டாக்டர் பவித்ரா விளக்கம்



யூ ட்யூபில்  திருமதி ரேவதி சங்கரன்  அவர்களின் சில காணொளி களைப்பார்த்துக் கொண்டிருந்தேன் வாட் எ  வெர்சடைல் லேடி  என்ற நினைப்பை தவிர்க்க முடியவில்லைஅவர் எம் எஸ் சுப்புல்க்ஷ்மி பற்றிக் கூறிய  சிலதகவல்கள்  இதுவரை தெரியாததுஅவருக்கு கிடைத்த  வருமானங்கள்  எல்லாவற்றையும்  தனக்கென ஏதும்  வைத்துக் கொள்ளாமல் பல நிறுவனங்களுக்கு  கொடையாய்க் கொடுத்து விடுவாராம் ஒருகாலகட்டத்தில் நூல் புடவையுடனும்  நகைகள் ஏதும்  இல்லாமலும் இருந்தாராம்   அப்போதுஅன்னமாசாரியரின் கீர்ததனைகளை ரெகார்ட் செய்யவேண்டி வந்தார்களாம்   இவருக்கு தெலுங்கு தெரியாமல் இருந்தாலும்  அம்மொழியைக்கற்று பாட்டுகளை ரெகார்ட் செய்தாராம்
சுமார் இரண்டு மணி நேரத்த்துக்கும்அதிகமான காணொளி  என்பதால். பதிவு செய்யவில்லை  விருப்பம் இருப்பவ்ர்கள் கீழ்காணும் சுட்டிக்குச் சென்று காணலாம் 

 https://www.youtube.com/watch?v=PexAtz6A2J4          










29 comments:

  1. இனிய காலை வணக்கம் சார்.

    பழமொழிகளுக்கு உங்கள் விளக்கம் நல்லாருக்கு ஆனால் ஆயிரம் பொய் சொல்லி என்பது என்னதான் இருந்தாலும் பொய் சொல்லிக் கல்யாணம் செய்வது தவறுதான் இல்லையா...அத்னால் தானே பல முறிவுகள்.

    குரங்குக் குட்டி வீடியோ ரசித்தேன்.

    ஓட்டம் துள்ளல் அழகான கலை. எனக்கு மிகவும் பிடிக்கும். துளசியின் மகள் பள்ளியில் படித்த போது அவள் அங்கு யூத் ஃபெஸ்ட் போட்டிகளுக்காகக் கற்றுக் கொண்டது. நன்றாக ஆடுவாள்.

    பவித்ரா அவர்களின் வீடியோ பார்த்தது. நல்ல தகவல். எல்லாமே ரசித்தேன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆயிரம்பொய் சொல்லி என்றல்ல ஆயிரம் மு றை போய் சொல்லி என்றல்லவா இருக்கிற்து துளசியின் மகள் ஓட்டந்துள்ளல் வீடியோ கேட்டிருந்தேன்

      Delete
  2. பழமொழி விளக்கம் ரசிக்க வைத்தது ஐயா

    காணொளிகள் கண்டேன்

    கொரானா உலகை விட்டு விலகட்டும் இறையருளால்...

    ReplyDelete
    Replies
    1. கொரனா விலகட்டும் இறையருளோ இல்லையோ

      Delete
  3. பல்சுவை ரசித்தேன். அதிலும் தனிமையில் இனிமை காணொளி. நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் என ப்ரார்த்திக்கிறேன்.

    எம்எஸ் அப்போது கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். வாடகை வீடு. திருப்பதி கோவில் ஆட்சிமன்றத் தலைவருக்கு நல்லன்பர், எம்எஸ் நிலைமையைக் கவனத்தில் கொண்டு வந்து உதவணும் என்று சொன்னார். கோவில் பணத்தைக் கொடுக்க முடியாதே என்பது ஆட்சிமன்றக் குழுவின் எண்ணம். இரவு அவருக்கு சட் என யோசனை வந்து அன்னமாச்சார்யா கீர்த்தனைகளை எம்எஸ் அவரைக் கொண்டு பாடச் செய்து கேசட் வெளியிடலாம் என நினைத்தார். ஆட்சிமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இது நடைபெற்றது. எம்எஸ் கொடை கொடுக்க என்றே பிறந்தவர்.

    ஊரடங்கு நாட்களின் அனுபவத்தை எழுதலாமே.

    ReplyDelete
    Replies
    1. எம் எஸ்பற்றி சுட்டியில் காணொளியில் இருக்கிறது

      Delete
    2. எதையவது எழுதஒரு மூட் வேண்டும்

      Delete
  4. சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் - சஷ்டி விரதம் இருந்தால் சூல் கொள்ளும் வாய்ப்பு வரும் என குழந்தை வரம் நோக்கி காத்திருப்பவர்களுக்கான பழமொழி எனப் படித்துள்ளேன்

    ReplyDelete
  5. முதல் காணொளி ஹா... ஹா...

    இரண்டாவது காணொளி பாடலும் சரி, நடிப்பும் சரி, மிகவும் ரசிப்பேன்... சிவாஜியின் கை விரல்கள் கூட நடிக்கும்...!

    மூன்றாவது காணொளி அழகு...

    நான்காவது காணொளி அசத்தல்...!

    டாக்டர் பவித்ரா அவர்களின் காணொளி புலனத்திலும் வந்தது...

    முடிவில் உள்ள காணொளியை இணைப்பிற்கு நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. எல்லா செய்திகளுக்குமுங்கள்பார்வை நன்று சன்நியூஸ் ல் டாக்டர் பவித்ராவின் பேட்டி இருந்தது

      Delete
  6. பல்சுவை பகிர்வு அருமை.

    ஒரு ஜாலி காணொளி அவர் போர்வையை விலக்கியதும் சிரிப்பு வந்து விட்டது, அருமை.

    உங்கள் காணொளி அருமையாக எடுத்து இருக்கிறார்கள் உங்கள் மனைவி.
    அனைத்தும் அருமை பார்த்தேன், ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வந்து ரசித்ததற்கு நன்றி மேம்

      Delete
  7. பழமொழிகளுக்கு உங்கள் விளக்கம் பொருத்தமாய்த்தான் இருக்கிரது.

    ReplyDelete
    Replies
    1. அங்கும் இங்கும் கேட்டறிந்தது தானேசார்

      Delete
  8. நீங்கள் சொல்லியிருக்கிற மாதிரி சொல் ஒன்று, அதற்கான விளக்கம் வேறொன்றாகத் தான் சில விஷயங்களில் இருக்கிறது.

    வள்ளல் தன்மையில் அவர் பெயர் போனவர் என்று சொல்கிறோம். ஆங்கிலத்தில் பெயர் போனவர் என்றால் He lost his name என்று பொருள் கொள்கிறோம். தமிழில் மட்டும் 'பெயர் போனவர்' என்றால் அர்த்தம் மாறுபடுகிறதா, சார்?..

    உங்கள் யோசனைக்கு.

    ReplyDelete
    Replies
    1. இதையே நன்பல் இடங்களில் சொல்லி வருகிறேன் மொழிமாற்றம் என்பது எல்லா நேரங்களிலும் சரியாகாது உங்களுக்குத் தெரியாததா தலை போகும் அவசரமென்பதை head going emergency என்று சொல்லமுடியுமாபழமொழிகளில் வார்த்தைகள் சிதைந்து வேறு உருப்பெறுகிறது

      Delete
  9. தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய முயற்சியில் களத்தில் இறங்கியிருக்கிறது நமது வலை ஓலை வலைத் திரட்டி. நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய வலைத்தளங்களும் விரைவில் இணைத்துக் கொள்ளப்படும்.

    தற்போது, தங்களது பல்சுவை பதிவு பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

    எமது வலைத் திரட்டிக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

    இந்த நிலையில், அடுத்த கட்டமாக தமிழுக்காக ஒரு அகராதியையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த அகராதிக்கு நீங்களும் பங்களிக்கலாம். அகராதி---->>> சொல்

    ReplyDelete
  10. நன்றி ஐயா அக்ராதிக்கு பங்க்ளிக்க முயற்சிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. மலேஷியாவில் இருந்து கிடைத்த தொழில் நுட்ப அகராதி
      1. WhatsApp – புலனம்
      2. youtube – வலையொளி
      3. Instagram – படவரி
      4. WeChat – அளாவி
      5.Messanger – பற்றியம்
      6.Twtter – கீச்சகம்
      7.Telegram – தொலைவரி
      8. skype – காயலை
      9.Bluetooth – ஊடலை
      10.WiFi – அருகலை
      11.Hotspot – பகிரலை
      12.Broadband – ஆலலை
      13.Online – இயங்கலை
      14.Offline – முடக்கலை
      15.Thumbdrive – விரலி
      16.Hard disk – வன்தட்டு
      17.GPS – தடங்காட்டி
      18.cctv – மறைகாணி
      19.OCR – எழுத்துணரி
      20 LED – ஒளிர்விமுனை
      21.3D – முத்திரட்சி
      22.2D – இருதிரட்சி
      23.Projector – ஒளிவீச்சி
      24.printer – அச்சுப்பொறி
      25.scanner – வருடி
      26.smart phone – திறன்பேசி
      27.Simcard – செறிவட்டை
      28.Charger – மின்னூக்கி
      29.Digital – எண்மின்
      30.Cyber – மின்வெளி
      31.Router – திசைவி
      32.Selfie – தம் படம் – சுயஉரு – சுயப்பு
      33 Thumbnail சிறுபடம்
      34.Meme – போன்மி
      35.Print Screen – திரைப் பிடிப்பு
      36.Inkjet – மைவீச்சு
      37.Laser – சீரொளி

      print

      Delete
  11. பழமொழிகள் பற்றி பல கருத்துகள் உண்டு!

    காணொளி சிரித்து விட்டேன்,.  நினைத்தது ஒன்று, இருந்தது ஒன்று.

    டி எம் எஸ்ஸின் அந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.

    உற்சாகமான பிறந்த நாள் கொண்டாட்டம்.  அந்த இளைஞர் நூறாண்டு வாழ பிரார்த்தனைகள்.  சமீபத்திலா?

    ReplyDelete
  12. த்னிமையில் இனிமை 11-11 2019 ல்நூறாண்டு வாழ விருப்பமில்லை போவதுதெரியாமல் போகவேண்டும் பழமொழிகள் பற்றிய உங்கள் கருத்க்ஹுகள் சிலவற்றைப் பகிர்ண்டிருக்கலாம்

    ReplyDelete
  13. இன்னும் ஏராளமான பழமொழிகளுக்கு சரியான அர்த்தம் சொல்லப்பட வேண்டும்

    ReplyDelete
  14. அதைத்தா பதிவிலும் இன்னும்தெரிந்தவர்கள் கூறக் கேட்டிருந்தேன்

    ReplyDelete
  15. பல்சுவைகளையும் ரசித்தேன் ஐயா

    ReplyDelete
    Replies
    1. வந்து ரசித்ததற்கு நன்றி சார்

      Delete
  16. பழமொழிகளின் பொருள் விளக்கம் அருமை...

    பல்சுவைப் பதிவு....

    ReplyDelete
    Replies
    1. பலருரசிக்க எழுதியதுகாணொளிகள் காணப்படாமலேயே போயிற்றோ

      Delete
  17. ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பது சரிதான் ... இங்கு ஆயிரம் பேர் என்பது மனிதர்களைக் குறிப்பது அல்ல.. நோயை குறிப்பது. ஒவ்வொரு நோய்களுக்கும் ஒவ்வொரு பெயர் ... ஆயிரம் பெயரை அதாவது நோய்களை கொன்றவன் அரை வைத்தியன். !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete
  18. பேர் என்பது நோயைக்குறிக்க என்பது புதிய விளக்கம் நன்றி

    ReplyDelete