Monday, March 30, 2020

ஊரடங்கும் கொரோனா வைரசும்



                                ஊரடங்கும்   கொரோனா வைரசும்
                               -------------------------------------------------------------
ஊரடங்கும்
கொரோனா வைரசும்
இந்த தலைப்பில் எழுத  எனக்கு  தயக்க்ம்   இருந்தது பொதுவாகஒரு விஷயம் பற்றி எழுத சில நிச்சயமான தக்வல்கள் தேவை ஆறுகுருடர்கள்  யானையை அடையாளம்  காண முயல்வது போலிருக்க கூஊடாது  ஆனல் ஆரம்பத்திலேயே  எனக்கு இதுபற்றிய தகவல்கள் இருக்கவில்லை  கிடைத்ததகவல்களும்  பீதி ஊட்டுவதாகவே  இருந்தது  130 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் ஊரடங்கு சட்டம் போர் இல்லாத நேரம்  கடைபிடிக்க  ஓரளவு பீதி ஏற்படுத்தினால் மட்டுமே முடியும்முதலில் கொரோனா வைரஸ்தாக்கியவர்யாரென்று  அடையாள்ம்  தெரிய வேண் டும் வெளிநாடுகளில்  இருந்து வருவோரையும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்களையும் கண்காணிக்க துவங்கினார்கள் அதனால் நம்மக்களுக்கு இவையே ஒரு நகைச்சுவைக்கு ஏற்ற தலைப்பாயிற்றுஎங்கும் எங்கும் எதிலும்  நகைச்சுவையை கண்டவர்கள் உள்ளுக்குள் பீதியுடன் பயத்ததைபோக்கநகைச்சுவை மூலம்   விசில் அடிப்பவர்கள் ஆனார்கள்  சிலர் எதுவும் கடந்து போகும் என்று இருக்கவும் முடியாமல் எல்லாம் அவன் செயல் என்று நினைக்கத் தொடங்கினார்கள் சமூகவலைத்தளங்களோ பூஜை புனஸ்காரமே மருந்துஎன்று கூறத்தொடங்கின நம்பாரம்பரியமருந்துகளே இவற்றை எதிர்கொள்ளுமென்றும்  நினைக்கத்தொடங்கினார்க்சள் இன்னும் சிலர்ச் சோதிடர்கள் ஆனார்கள் கிரக நிலைமை  கோள்களின்  தாக்கமென்று கூறிசமாளிக்க நினைக்கிறார்கள்ஆனால் அடிப்படையில்பீதியில் உழல்கிறார்கள்  பிறந்தவன் ஒரு நாள் இறக்கத்தானே வேண்டும் ஆனால் தினம்தினம் செத்துக் கொண்டிருக்கிறர்கள்ஏன் தெரியுமா  இந்த வைரசால்  நுரையீரல் பாதிக்கப்பட்டுமூச்சுத் திணறி சாவுவருமோ என்னும் பயம்தான்     தைரியசாலிக்கு வாழ்வில் ஒருசாவு  கோழைக்கு தினம் தினம் சாவு என்றுபடித்ததே அடிக்கடிநினைவுக்கு வருகிறது
தங்களை தனிமைப்படுத்திக் கொண்டால் இந்நோயை தடுக்கலாம் என்கிறார்கள் ஊரடங்கோடு நிறுத்தமுடியுமா அதை நடை முறைப்படுத்த வேண்டாமா  அதற்கு
மக்களை தயார் படுத்தவேண்டாமாமுகக்கவசமும் அடிக்கடி கைகழுவுவதையும் பிரசாரம்செய்கிறார்கள்முகக்கவசம் கிடைப்பதே அரிதாய் இருக்கிறது ஒருநாளில் எத்தனை முறை கைகழுவுவதுபின்பற்றப்படுவதை விடமீறப்படுவதே  அதிகம்நடக்கிறது  நகைச் சுவைக்கு நல்ல தீனி யாகிறது வாட்ஸாப்பில் வரும் கும்மிகளில் இதுவே முக்கிய அங்கம் வகிக்கிறது நானும் என்பங்குக்கு  அவற்றை ஃபார்வார்ட் செய்திருக்கிறேன்   ஒரு வேளை இடுக்கண் வ்ருங்கால் நகுகஎன்பது இதைத்தானோ

கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களில் கோவிட் வைரஸானது 12 மணி நேரம் உயிருடன் இருக்குமாம். எனவே நோய் தாக்கப்பட்டவர்களுடன் கைக் குலுக்கினாலோ அருகில் நின்று பேசினாலோ கூட எளிதில் ஒரு மனிதனிடமிருந்து மற்றவர்களுக்கு இந்த வைரஸ் பரவிவிடும்.அந்தஸ்டேஜ் வந்தால்  கட்டுப்புத்துவதுசிரமமாம் அடை தவிர்கவே சோஷ்யல் டிஸ்டன்சிங்இதை வைத்தும் ஒரு நகைச்சுவை வாட்ஸாப்பில் வந்தது

 அரசு என்ன வெல்லாமோ சலுகைகள்  தருகிறர்கள் சீனிய சிடிசன்களுக்கு  மாதம் ரூ ஆயிரமுண்டாமே  எப்படி எங்கு பெறுவது என்று  தெரியவில்லை இந்த  ஊரடங்கு  வந்தபி எங்கள் சாலையில்போக்கு வரத்து குறைந்து  இருக்கிறதுநிமிஷத்துக்கு முன்னூறு வண்டிகள் போல் இருந்த இடத்தில் இப்போது ந்மிஷத்துக்கு  இருபது முப்பது வண்டிகள் ஓடுகின்றன 


நல்லாரைக் காப்பதற்கும் கெட்டவரைக் கரந்தொடுக்குவதற்கும் , தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் நான் அவதரிகிறேன்(8)  பகவத் கீதையில்  க்ண்ண்ன்  சொன்னது கெட்டவர்கள் என்பது மாற்றி  கெட்டவைஎன்று  இருந்தால்  ஒரு வேளை  கண்ணனே அவதரித்து இந்தகொரோனாவை வெற்றி கொள்ளலாமே என்றும்  தோன்று  கிறது 
இப்போதெல்லாம்   அடுத்தவரைக் கண்டாலே இவர் மூலம் தொற்றுநமக்கும் வருமொஎன்னும் அச்சமெழுகிறது அயல்நாட்ட்லிருந்து வருவோரை  சற்றே அதிகம் கண்காணிக்க தொடங்கினார்கள்ஸ்ரீ லங்கவில் சென்னையில் இருந்து வருவோரால்  தொற்று வருமோ எறு அச்சப்படுகிறார்களாம் 
இந்த தொற்று இப்போது  இரண்டாம் கட்டத்தில் இங்கு இருக்கிறதாம்  மூன்றாம் கட்டம்போனால் அது சமூக தொற்றாகலாம்   கண்காணிக்கும் வேலை மிகவும்சிரமமாகலாம் 
வுஹான் சீனாவில் ஆரம்பித்த இந்த தொற்று அங்கு கட்டுக்குள் இருக்கிறதாம் எகனாமிக் ஆக்டிவிடி கள் சீரடைந்து  வருகிறதாம் 
எனக்கு இந்தமாதிரி  எழுதும்போது  சில குண்டக்கா மண்டக்கா  எண்ணங்கள் தோன்றும் அதையும் வலையில் பகிர்கிறேன்  இந்த சோஷியல் டிஸ்டன்சிங்  என்பது க்ணவன்மனைவிக்கும் பொருந்தினால்  ஒரு கணக்குப் படி இதுவே மக்கட் தொகையைக் கட்டுப்படுத்தலாம் இப்போதைடையகட்டுப்பாடு நீடித்தால் இந்தியாவில்எதிர்ப் வரும் நவம்பெரில் குழந்தைகள் பேறு மிகவும் குறையலாம் ,,,!!!  



iஇந்த பாட்டுகளை  கேட்டிருக்கிறீர்களா


        
  

27 comments:

  1. நம்மவர்களுக்கு எல்லாமே நகைச்சுவையாக இருக்கிறது ஐயா இதன் கோரம் இன்னும் உணரவில்லை.

    இன்று உலக மருத்துவர்கள் தினம் அவர்களை வணங்கி தொழுவோம்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்குந்ன்றி ஜி

      Delete
  2. Replies
    1. நான் எப்போதுமே தனித்துதான் இருக்கிறேன்

      Delete
  3. //இப்போதைடையகட்டுப்பாடு நீடித்தால் இந்தியாவில்எதிர்ப் வரும் நவம்பெரில் குழந்தைகள் பேறு மிகவும் குறையலாம் ,,,!!! // - இறைவா.... இந்த ஜி.எம்.பி சாருக்கு என்ன ஆச்சு?

    சோஷியல் டிஸ்டன்ஸிங் - வீட்டுக்குள் என்று அரசு சொல்லவில்லையே. வெளி இடங்களில்தானே. வெளியில் நெருக்கமாக நடந்தால் அதிகக் குழந்தை பிறக்கும் என்று நீங்கள் சொல்வது குண்டக்கா மண்டக்கா சிந்தனைதான். ஹா ஹா.

    ReplyDelete
    Replies
    1. சில வரிகளை உங்கள் விருப்பபடி மாற்றி எழுதி என்மேல் தவறான எண்ண்ம் வரச் செய்கிறீர்கள் நன்றாகப் படியுங்கள் சார்

      Delete
    2. அப்படி இல்லை ஜி.எம்.பி. சார்.

      //இப்போதைடையகட்டுப்பாடு நீடித்தால் இந்தியாவில்எதிர்ப் வரும் நவம்பெரில் குழந்தைகள் பேறு மிகவும் குறையலாம் ,,,!!! // - இதுக்கு என்ன அர்த்தம் சார்?

      Delete
    3. /இந்த சோஷியல் டிஸ்டன்சிங் என்பது க்ணவன்மனைவிக்கும் பொருந்தினால் ஒரு கணக்குப் படி இதுவே மக்கட் தொகையைக் கட்டுப்படுத்தலாம் இப்போதைடையகட்டுப்பாடு நீடித்தால் இந்தியாவில்எதிர்ப் வரும் நவம்பெரில் குழந்தைகள் பேறு மிகவும் குறையலாம் ,,,!!!இப்போதும் அர்த்தம் புரியவில்லை என்றால் என்னால் விளக்க முடியாது

      Delete
    4. சோஷியல் டிஸ்டன்ஸிங் - வீட்டிற்குள் இல்லை. வெளியில் மட்டும்தான். இப்படித்தான் நான் படித்தேன். ஹா ஹா. இல்லைனா, நாமே நம் உணவை எடுத்துப்போட்டுக்கொண்டு சாப்பிட வேண்டியதாக இருக்கும்.

      அது இருக்கட்டும்... மாங்காய் சீசன் வந்தாச்சே. வடுக்களா இல்லை மாங்காய் காய்க்க ஆரம்பித்துவிட்டதா?

      Delete
    5. இந்த வருடம் மாங்கய்கள் வெகு குறைவு இருப்பது எட்டாத உயரத்தில் மேலும் நாங்கள் இருவர்தானே பார்ப்போம் யாராவது வந்து பறித்து கொடுக்கிறார்களா

      Delete
  4. குண்டக்கா மண்டக்கா பத்தி தவிர, தங்களின் எண்ணங்கள் அனைத்தும் உண்மையே...

    அனைவரும் இதிலிருந்து மீள வேண்டும்... இதுவே என் வேண்டுதல்...

    ReplyDelete
    Replies
    1. மனதில் பட்டது எழுத்தில் வரும் என்பது பலருக்கும் தெரியுமே

      Delete
  5. பாடல்கள் கேட்டு இருக்கிறேன்.

    சூழ்நிலைக்கு ஏற்ற பாடல்.

    ReplyDelete
  6. முதல் பாடல் எந்தந்தைக்கு பிடித்தது இராண்டாவது மனதிலெங்கோ ரீங்கரிக்க தேடியதில் சிக்கியது

    ReplyDelete
  7. நீங்க எழுதியிருப்பது சரியே. விரைவில் இந்த நிலைமை சீராக வேண்டும். இது பாண்டெமிக் , தொற்று என்பது ஒரு புறம் மற்றது இந்த உலக பொருளாதரச் சரிவு. கடைநிலை மக்களின் துயரம். சீராகும் சமயம் சமூகக் குற்றங்கள் பெருகுமோ என்றும் தோன்றுகிறது.

    பாடல்கள் இரண்டும் ரசித்தேன் சார்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. if this beCOMES a community discease we will haveto brace up fi for tougher times

      Delete
  8. வாட்ஸாப் மருத்துவர்கள் பெருகி விட்டார்கள்.  ஆளாளுக்கு பரிகாரம் சொல்கிறார்கள்.  நான் எந்த வாட்ஸாப் வீடியோவும் பார்ப்பதில்லை.  எந்த கொரோனா பார்வேர்டுகளையும் படிப்பிப்பதில்லை.  செய்திகள் பார்ப்பதில்லை.  அரசாங்க அறிவிப்புகள் வந்தால் பார்ப்பேன்.  என்னைப்பொறுத்தவரை ஜாக்கிரதையாக இருந்து கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பார்த்தால்தான் நிலவரம் புரியும் we will learn

      Delete
  9. எம் கே டி பாடல் கேட்டிருக்கிறேன்.  என் அப்பா மிகப்பெரிய எம் கே டி ரசிகர்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு மிகவும் பிடித்தவை எம்.கே.டி பாடல்கள். பல பாடல்கள் எனக்கு மனப்பாடம்.

      Delete
    2. பாடல்களை மனப்பாடம்செய்வார்களா

      Delete
  10. எம் கே டி பாடல் அப்பாவுக்குப் பிடிக்கும் இரண்டாவது எதையோ தேட கிடைத்தது

    ReplyDelete
  11. ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிப்பது தொற்றைத் தவிர்க்கும்.

    ReplyDelete
  12. செய்திகளிலும் தொலைக் காட்சியிலும் காட்டப்படுவதை பார்க்கும் போதுகடைப் பிடிப்பதுபோல் தெரியவில்லை

    ReplyDelete
  13. கொரோனவைப் பற்றி பலரும் பல விதமாக பதிவு போட்டுள்ளனர். உங்கள் பதிவு வேறு ஒரு கோணம். 

    ReplyDelete
  14. கொரோனா பற்றி இருப்பதைத்தானெழுதி இருக்கிறேன்

    ReplyDelete
  15. ஐயா .... இங்க "கொரானா" பீதியில பேதியாவிக்கிட்டே இருக்கு ... இப்போதைக்கு இந்த எம் கே டி பாட்டு எல்லாம் தேவையா .... நீங்க வேற இருக்கிற நிலைமை தெரியாம "கக்கூசு" போறவன்கிட்ட வந்து காதாம்பரி ராகம் பாடிக்கிட்டு ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete