Monday, June 1, 2020

தொற்றே கூற்றோ1200


                                  தொற்றே கூற்றோ
                               --------------------------------
தேடிச் சோறுநிதந் தின்றுபல
சின்னஞ் சிறுகதைகள் பேசிமனம்
வாடித் துன்பமிக உழன்றுபிறர்
வாடப் பலசெயல்கள் செய்துநரை
கூடிக் கிழப்பருவ மெய்தி (அவசியம்இல்லை)   — கொடுங்
 தொற்றுக் ( கூற்றுக்) கிரையெனப் பின்மாயும்பல
வேடிக்கை மனிதரைப் போலேநான்
வீழ்வே னன்றுநினைத் தாயோ

முதலில் அச்சம் தவிர்க்க வேண்டு ம் கொரோனா கிருமி அண்ட விடாதபடி நோய் எதிர்ப்புத்தன்மையை  நம்  உடலில்  கூட்டலாம் சில நாட்களுக்கு முன்  அ பொல்லோ  மருத்துவ மனை  மருத்துவர் தன் குழுவிடம் பேசியது  கேட்டே ன் அதன்  ஆடியோவை பகிர முடியவில்லை நம்பிக்கை கொடுக்கும் பேச்சு வாட்ஸாப்பில் வலம் வந்தது  
 பாரதியி இன்னொரு பாட்டு இதோ 
  
அச்சம் தவிர்   -   நய்யப் புடை
மானம் போற்று  -  ரவுத்திரம் பழகு
ஆண்மை தவறேல்  -    தாழ்ந்து நடவேல்
சூரரை போற்று   -     தீயோர்க்கு அஞ்சேல்
ஓய்தல் ஒழி  -  நேர்பட பேசு
தாழ்ந்து நடவேல்  -  சாவதற்கு அஞ்சேல்
காலம் அழியேல் -   கீழோர்க்கு அஞ்சேல்
போர் தொழில் பழகு  -  தோல்வியில் கலங்கேல்
புதியன விரும்பு  -   வீரியம் பெருக்கு
கெடுப்பது சோர்வு   -   உண்மைக்கு அஞ்சேல்
வெடிப்பற பேசு   -    நன்று கருது
வவ்வுதல் நீக்கு   -   தவத்தினை நிரப்பு நீ
கற்றது ஒழுகு   -   கைத்தொழில் போற்று
சேர்க்கை அழியேல்  -    பேய்களுக்கு அஞ்சேல்


ஞாயிறு போற்று   - மந்திரம் வலிமை
சவுரியம் தகுமே  - எல்லாம் மெய் செய்
நாள் எல்லாம் மெய் செய்

பயமே நம் பிரச்சனைகள் பல வற்றுக்கும் காரணம்    







26 comments:

  1. வாழ்வில் பலருக்கும் சில கடமைகள் உள்ளன ஐயா... அதை முடித்தவர்களுக்கு பயம் அவசியமில்லை தான்...

    இருந்தாலும் வீழாமல் நம்பிக்கையுடன் இருப்போம்...

    ReplyDelete
  2. நம்பிக்கையே வாழ்க்கை.

    பாரதியின் பாடல் கேட்டேன் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும் என்று நம்புவோம்

      Delete
  3. நம்பிக்கையே வாழ்க்கை..
    நல்லது நடக்கும் என்று நம்புவோம்...

    ReplyDelete
    Replies
    1. வருகை மகிழ்ச்சி தருகிறது நலம் தானென்று நம்புகிறேன் வேண்டுகிறேன்

      Delete

  4. அச்சம் தவிர்ப்போம்
    நம்பிக்கையோடு வாழ்வோம்

    ReplyDelete
    Replies
    1. இருந்தாலும் பயத்துடன்வாழ்வோரே அதிகம் என்று தோன்று கிறது

      Delete
  5. படித்தும் பாடலைக்கேட்டும் கொஞ்சம் தெம்பு கூடியது நிஜம்..ஆடியோவை பகிரமுடியவில்லை என்றாலும் சாராம்சத்தை சுருக்கமாக பதிவிட்டால் கூட அனைவருக்கும் பயன்படுமே...

    ReplyDelete
    Replies
    1. வாட்ஸாப்பில் வலம் வருகிறதே

      Delete
  6. பயம் என்பது ரெஸ்பான்சிபிலிட்டியின் ஒரு வடிவம்தானே.

    'நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்' என்பவர்களுக்கு குடும்பம் இருக்காதில்லையா? அல்லது முக்கியக் கடமைகள் எதுவும் இருக்காது இல்லையா (அவன் புகழைப் போற்றுவதைத் தவிர)

    ReplyDelete
    Replies
    1. ரெஸ்பான்சிபிலிடி இல்லாதவருக்கு பயம் இருக்காதா

      Delete
  7. நய்யப்புடை ஆ?  நையப் புடையா?

    அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. எப்படிய்மிருக்கலாம்தானே

      Delete
  8. வலம் வரும் பல விடியோக்களின் உள்ளடக்க விஷயங்கள் ஏற்றுக் கொள்கிற மாதிரி இல்லை.

    பாரதியாரின் வாய்மொழிகள் அவர் மனசார உணர்ந்து அவர் பெற்ற ஆத்ம ஞானத்தின் வெளிப்பாடுகள். அவர் சொன்ன வார்த்தைகளுக்கான உணர்வு அவரிடம் மட்டுமே தேங்கியிருந்தது.

    அதெல்லாம் பற்றி எந்த ஞானமும் இல்லாமல், வெறும் கவிதை வரிகளாகப் பார்க்கிற நமக்கு அவர் சொன்ன விஷயங்களின் தாத்பரியம் எதுவும் புரிபடப் போவதுமில்லை.

    நம்மிஷ்டப்படி அவர் வாய்மொழிகளை வளைத்து எழுதி அர்த்தம் கொள்வதில் பாரதியார் சம்பந்தப்படாமல் என்றும் விலகியே இருப்பார்.

    ReplyDelete
  9. பாரதியைபபற்றி உங்களுக்கு நிறையவே தெரியலாம் அவர் பற்றி
    எழுதியவர் ஆயிற்றே ஞானம் இருப்பவர் நீங்கள் சொன்னால் சரிதான்

    ReplyDelete
  10. அவர் பெற்ற ஞானம் அவர் தனிப்பட்ட சொத்து. அவரை வாசிப்பதின் மூலம் நம்மால் பெற முடியாதது அது, ஐயா.

    ReplyDelete
    Replies
    1. அப்ப்டியானால் மேற்கோள் காட்டுவதுஅந்தப் பொருளின் ஞானமில்லாமல் தான் இருக்க முடியுமா எடுத்துக்காட்டுகளுகளும் மேற்கோள்களுக்கும் அர்த்தமேகிடையாதா

      Delete
  11. இது எல்லா அரிய படைப்புகளுக்கும் பொருத்தமானது, தான்.
    கம்பராமாயணத்தை நீங்கள் வாசிக்கலாம். நிறைய எடுத்துக் காட்டுகள் சொல்லலாம். அதெல்லாம் வெறும் வாசிப்பு ரசனை மட்டுமே. ஆனால் கம்பராமாயணத்தை படைக்கையில் கம்பர் பெற்ற அனுபூதியை உங்களால் பெற முடியாது. அது கம்பர் மட்டுமே அனுபவித்த அவருக்கு மட்டுமே சொந்தமான அனுபவ ஞானம் ஆகும்.

    இதெல்லாம் வெறும் யோசிப்புக்கே நம்மை பிரமிக்க வைக்கும் சப்ஜெட்டுகள்.

    ReplyDelete
  12. எடுத்துக்காட்ட அனுபூதி எல்லா தேவை இல்லை என்பதே என் கட்சி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்க்கை சரிதத்தைக் கட்டுரையாக எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்..

      அதை எழுதும் போது நீங்கள் அடையும் உணர்வு உன்னதமானது. நீங்கள் எழுதிய அதை நான் வாசிக்கும் பொழுதும்.அல்லது அதை வேறு யாருக்கானும் எடுத்துச் சொல்லும் பொழுதும் நீங்கள் அடைந்த உணர்வை நான் அடைவதில்லை. அது வெறும் வாசிப்பு ரசனை என்றளவிலேயே இருக்கும். எழுதும் பொழுது நீங்கள் அடைந்த உணர்விற்குத் தான் அனுபூதி என்று பெயர். இப்பொழுது புரிந்ததா?

      Sorry, இதற்கு மேலும் விளக்கிச் சொல்ல முடியவில்லை.

      Delete
    2. என் சுய சரிதத்தை நானுணர்வதுபோல் படிப்பவர்களும் உணரமுடியாது அவசியமுமில்லை எதாவது தெரிந்துகொள்ள முடிந்தாலே போதும் நன்றி முயன்று சொன்னதற்கு

      Delete
  13. இக்காலகட்டத்திற்குத் தேவையான பதிவு. அச்சம் தவிர்ப்போம்.

    ReplyDelete
  14. சரியான புரிதல் நன்றி

    ReplyDelete
  15. அச்சம் தவிர்க்க நினைத்தாலும் நம்மைச் சுற்றி உள்ளோர் பலதை சொல்லி சொல்லி பயமுறுத்துவதையே பார்க்கிறோம். எனவே சுற்றி உள்ளவர் கூறுவதை தவிர்த்தாலே அச்சம் இன்றி வாழலாம்.

    ReplyDelete
  16. அச்சம் ஏன் இறந்து போவோம் என்றா இற்ப்பு எல்லோருக்கும் வரும்தான் தெரியும் தான் ஆனால் இந்த நோயினால் என்றால் ம் மூச்சுத்திண்ருமாமே ரொம்பக்கஷ்டமோ இறப்பது வேண்டாத நினைவுகளை கடாசமுடியாமலிருப்ப்துதான் பெரும்பாலான பேர் இருட்டில்விசில் அடிக்கிறார்கள் அச்சம்தவிர்க்க

    ReplyDelete
  17. சிறப்பான வழிகாட்டல்
    தொடருங்கள்

    ReplyDelete