Thursday, May 28, 2020

டெல்லி நினைவுகள் சில


                                         டெல்லி நினைவுகள் சில
 

  
                    1979 ம் ஆண்டு  மேமாதம்  என் மச்சினனுக்கு  திருமண்ம் குருவாயூர் அருகே நடப்பதாய்  இருந்தது நாங்கள்  விஜயவாடாவில் இருந்தோம் டெல்லியில்  தலைமை அலுவலகத்துக்கு வருமாறு அழைப்பு இருந்தது நான் அந்த வாய்ப்பில் என் மக்கள்மனைவியோடு டெல்லி பயணப்பட்டேன்   அதுவே எனக்கும்  குடும்பத்தாருக்கும்   முதல் டெல்லி  பயணம் டெல்லியில் எதுவும் தெரியாது என்நண்பனின் மச்சினன் டெல்லியிலிருப்பது  நினைவுக்கு வந்து அவனுக்கு நாங்கள் வருவது குறித்து  தகவல் அனுப்பினோம் ரயில்வே ஸ்டேசனுக்கு வந்து  எஙளை அவனிருப்பிடத்துக்கு கூட்டிப்போனான் ராமகிருஷ்ணாபுரம் என்பது நினைவு  அவனோ ஒரு வீட்டில் சப்டெனண்டாக  இருந்தான்சிறியைடம்நாங்கள் எத்தனை நாளிருப்போம் என்பது தெரியாது அலுவலகப்பணி  சீக்கிரமே முடியலாம்  அங்கிருந்துவிஜயவாடா போய் பின்  கேரளாசெல்லவேண்டும் விஜயவாடா விலிருந்துடிக்கட் எடுத்துஇருந்தோம் எப்படியும் மே 13 ம்  தேது கேரளவில் இருக்க வேண்டும்
டெல்லி புதிய இடமானதால்குடும்பத்தாருட  தலைமை அகத்துக்குப் போனேன்  வேலை முட்ந்ததும் என்னோடு அவர்களும் வரலாம் என்பது திட்டம்லௌஞ்சில் அவர்களை விட்டு நான்  போனேன்   அவர்களை என்நண்பன் ஒருவன் பார்த்து விசாரித்தான் பிறகு அவர்களை அவன் வீட்டுக்கு கூட்டிப்போனான்   பிறகு என்ன்சைப்பார்த்து விஷயம்கேட்டு அவனும் சொன்னான்  என்பணி மதியத்துக்கு உள் முடியவே அவர்களுடன் நாங்கள் ராமகிருஷ்ணபுரதுக்குசென்றோம்அன்றுஇரவு எப்படியோ மேனேஜ்  செய்தோம் மறு நாள் டெல்லி சுற்றிப்பார்க்க ஒரு நாள் பேரூந்து டிக்கட் எடுத்திருந்தான் ஒரு வழியாய் டெல்லியின்  முக்கிய இடங்கள் பார்த்தோம் 
டெல்லியில் மலைக் கோவில் ஒன்று உள்ளதாம்  அதை அங்கே மலாய் மந்திர்  என்கின்றனர்
அந்தமுறை குதுப் மினார்  மேல் ஏறிப்பார்த்தோம்  அங்குஇருக்கும்  துரு ஏறாத இரும்புத்தூண் இருகிறது  அதை சுற்றிக் கட்டிப்பிடிப்பது சிரமமாம் என்மனைவி அவள்கை வரிசையைக்காட்டினாள்இப்போதெல்லாம்  குதுப் மினார் மேல் ஏறவும் அந்த தூணைதொடவும்  அனுமதி இல்லை வழக்கம்போல் புகைப்படங்கள்கதை சொல்லும்


துரு பிடிக்காத  துண்


குதுப் மினார் மேல் நாங்கள் 



வலது பக்க த்தில்  ருப்பவர் வீட்டில் தங்கினோம் 


ஒரு காட்சி  ஓடும் பஸ்ஸில் இருந்து எடுத்த படம்  




பிறகு பல முறை டெல்லி சென்றிருந்தாலும்  முத்ல் பயணம் ஏதுமறியா டெல்லியில் முதல் முறை குடும்ப்த்துடன் சென்றது நினைவுக்கு வரும் ராமகிருஷ்ணாபுரத்தில் ஒரு தென்னிந்திய ஓட்டலுக்குச்சென்றிருந்தோம் அதன்   உரிமையாளர் பிஎச் இ எல் அதிகாரி ஒருவர் போல் இருந்தார் அவர் தன்    பணி ஆட்களிடம்   கூறியது இன்னும் நினைவில்  நேற்றையவடைகளை இன்று தயிர் வடையாக்கி விடு என்று கூறீ கொண்டிருந்தார்          









 

   

41 comments:

  1. இனிய நினைவுகள் ஐயா...

    சென்னையில் 'வடகறி' ஆகி விடும்...!

    ReplyDelete
    Replies
    1. வடகறி பருப்பு வடையில் தான். உளுந்து வடை தான் சாம்பார் வடை, தயிர் வடை ஆகும். Jayakumar

      Delete
    2. பின்னூடங்களொரு தெரியாத செய்தி சொல்கின்றது

      Delete
  2. //நேற்றைய வடைகளை இன்று தயிர் வடையாக்கி விடு//

    ஹா.. ஹா.. சில வார்த்தைகளை நம்மால் மறக்க இயலாது ஐயா.

    ReplyDelete
  3. வாழ்க்கை தூண் இரும்பு தூணை பிடித்தது. புகைப்படங்கள் AGFA காமிராவில் எடுத்தது போல் உள்ளன. 40 வருடங்கள் ஆகியும் பிரிண்டுகள் அழியாமல் உள்ளன. நன்று.குன்று தோறும் குடியிருக்கும் குமரன் கோவில் தான் மலாய் (மலை) மந்திர் 
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. படம் என்னிடம் இருந்தக்லிக் 3 காமிராவில் எடுத்தது

      Delete
    2. மலைக் கோவில் வடக்கத்திகார்களுக்கு மலாய் மந்திர் ஆகி விட்டது

      Delete
    3. நானும் ஒரு Agfa click3 வைத்திருநதேன். விலை 47 ரூபாய்.

      Delete
  4. மிகவும் அருமை ஐயா. நான் டில்லி சென்ற நினைவுகள் வந்து அலைமோதின.

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்கள் நினைவுகளை மீட்டெடுத்ததற்கு மகிழ்ச்சி

      Delete
  5. நினைவுகளுக்கு படங்கள்  சுவாரஸ்யம் கூட்டுகின்றன.  என் அப்பா டெல்லி சென்று வந்தபோது இந்திரா காந்தியைச் சந்தித்து விட்டு வந்தார்.  ஒரு டெல்லி கட்டில் வாங்கி வந்தார்.  கஷ்டப்பட்டு தூக்கி வந்த அதை மதுரையிலேயே இன்னும் சகாய விலையில் வாங்கி இருக்கலாம் என்று பின்னர் தெரிந்தது!!!

    ReplyDelete
    Replies
    1. என் மனைவி பிஎச் இஎல் மூலம் ஒரு கலா மிலனுக்கு சென்ற போது இந்திரா காந்தியை சந்தித்து இருக்கிறார்

      Delete
  6. நான் இருமுறை டெல்லி சென்று வந்த நினைவுகளை அசைபோடவைத்தது இந்தப் பதிவு..விற்காத வடைக்கான தீர்வு எல்லா இடத்தில் ஒன்றுபோலத்தான் போல..

    ReplyDelete
  7. "நேற்றையவடைகளை இன்று தயிர் வடையாக்கி விடு" ஹஹா ... நேற்றைய வடை அதற்கும் முந்தினநாள் எதுவாக இருந்ததோ தெரியவில்லையே ... கந்தா ! ...கடம்பா !! கதிர்வேலா !!!...

    ReplyDelete
    Replies
    1. வடை மாவாயிருந்துருக்கலாம்

      Delete
  8. உங்கள் மைத்துனர் திருமணம். உங்கள் நண்பரின் மைத்துனரின் வீட்டு ஒண்டுக் குடித்தனத்தில் தங்கல். பதிவை வாசிக்க ஆரம்பித்த ஆரம்பத்திலேயே இந்த மைத்துன பொருத்தங்கள் என்னைக் கவர்ந்தன.

    நானும் குதுப்மினாரின் நெருக்கமான உள்படிகளில் ஏறி உச்சி வரை சென்று பார்த்திருக்கிறேன். இருந்தாலும் இந்தப் படங்களை பார்க்கும் பொழுது புதுமையாக இருந்தன. நான் பார்த்ததற்கு ஏதோ மாறியிருப்பது போல.

    பளிச் புகைப்படங்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள்வரவே அருமை கம்பரசம் பதிவுக்கு பின் இப்போது தானிப்போட்து குதுப் மினார் மீதேற அனுமதி இல்லைநட்கள் கழிந்தபின் எல்லாமே புதுமைதான்போல

      Delete
  9. இனிய நினைவுகள் ஐயா
    படங்கள் அருமை

    ReplyDelete
    Replies
    1. பல முறை டெல்லி சென்றிருந்தாலும் முதல் முறை நினவுகளே தனி

      Delete
  10. நினைவுத் தடங்கள் அருமை. தில்லி சென்றிருந்தும் குதுப்மினாரைப் பார்த்ததில்லை.

    தில்லியிலேயே பிறந்து வளர்ந்த என் கஸின் என்னிடம் சொன்னான். அவன் தில்லியில் சமாதிகள் இருந்த இடத்துக்குச் சென்றிருந்தானாம் (பழைய தில்லி?). அங்கிருந்து ஒரு வாளை எடுத்துவந்தானாம். எடுக்கும்போது கனமில்லாத வாள் வீட்டுக்குக் கொண்டுவந்ததும் கனமாக இருந்ததாம். மறுநாள் இன்னும் கனமாக ஆரம்பித்ததும் பயந்து, எடுத்த இடத்திலேயே போட்டுவிட்டு வந்தேன் என்றான் (அப்படிச் செய்தபோது அவனுக்கு பதின்ம வயது).

    சமீபத்தில் வாட்சப்பில் வந்திருந்த செய்தி, வரலாற்றில் குதுப்மினார், 1850களில் ஆங்கில குறிப்புகளின்படி ஒரு கோவில் என்றே குறிக்கப்பட்டிருந்ததாம் (ஏதோ பெயர் போட்டிருந்தது, மறந்துவிட்டது)

    ReplyDelete
  11. வாள் எல்லாம்எடுத்துவர முடியுமா

    ReplyDelete
    Replies
    1. சமாதில வீரனோடு புதைத்திருப்பார்களாக இருக்கும். அப்போது விடலைப் பருவம்தானே... எல்லா வம்புகளும் செய்திருப்பார்கள்.

      Delete
    2. இப்போதுதான் கேள்விபடுகிறேன்

      Delete
  12. நல்ல் நினைவுகள் சார். நான் மூன்று வருடங்களுக்கு முன் தான் முதல் டில்லி பயணம் செய்தேன் குடும்பத்தோடு. தங்கியிருந்தது நொயிடாவில். ஆக்ரா வரை சென்று வந்தோம். குடும்பத்துடன் சென்றதால் வெங்கட்ஜியை சந்திக்க நினைத்து சந்திக்க முடியாமல் போனது. ஏனென்றால் என் பயணம் இறுதி வரை முடிவு செய்வதில் சில சிரமங்கள் இருந்தன.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. பலமுறை சென்றிருந்தும் முதல் பயணம் விசேஷமல்லவா

      Delete
  13. உங்கள் நினைவுகள் அதுவும் ஃபோட்டோக்களுடன் இருப்பதால் அதைப் பார்க்கும் போது உங்களுக்கும் ஒரு சந்தோஷம் கிடைக்கும் தான்.

    தில்லிக்குப் பல முறை சென்றிருக்கிறேன். தில்லிக்குச் செல்ல எனக்குப் பிடித்த சீசன் குளிர்காலம்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நானும் பலசீசன்களில் சென்றிருக்கிறேன்

      Delete
    2. தலைநகருக்கு முதல் விசிட் நினைவில் இருக்கும்தான். ஃபோட்டோக்கள் துணையிருக்க பயமேன்!
      கடைசியில் ’மலாய் மந்திர்’ போகவில்லையா? அது நீங்கள் தங்கியிருந்த ராமகிருஷ்ணாபுரத்தில்தானே இருக்கிறது. சிறு குன்றின் மேலே அழகான ‘ஸ்வாமிநாதன்’ கோவிலாயிற்றே.. விட்டுவிட்டீர்களே.

      Delete
    3. மலைக் கோவில் போகவில்லை நேரமிருக்கவில்லைஅங்கு இருந்த இரண்டு நாட்களில் ஒரு நாள் அவுவலகப் பணி இன்னொரு நாள் டெல்லி டூர்

      Delete
  14. குதுப்மினார் நாட்கள்முதல் இன்றுவரையில் உடலை ஒரே அளவில் வைத்திருக்கும் தங்கள் திருமதியாருக்கு வாழ்த்துக்கள்! கணவர் நல்லபடியாகச் சமையல்செய்தால் எந்தப் பெண் தான் ஆரோக்கியமாக இருக்கமாட்டார் (என்று சொன்னால் தவறா?)

    ReplyDelete
    Replies
    1. நான் சமைப்பதில்லை அவளதூடல் வாகு அப்படி

      Delete
    2. செல்லப்பா ... எங்கே இப்போது இருக்கிறீர்கள். ஒரு மாமாங்கத்திற்கு முன்னால் அமெரிக்காவில் இருந்தீர்களே ...

      Delete
    3. கொரோனா தொற்றால் பயணிக்க்ச முடிவதில்லை இல்லை யென்றல் இந்தியா அமேரிக்கா என்றுசுற்றுபவர்

      Delete
  15. நினைவுகளை சுருக்கமாக அழகாக பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். 

    ReplyDelete
  16. முதல் பயண நினைவுகள் மறக்க முடியாதவை.

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள்

      Delete
  17. டில்லி,ரயில் நிலையத்திலிருந்து பயந்து கொண்டே தனியாக வெளியே வந்தேன். முதன் முதல் கண்ணில் பட்டவர் முழு சூட் அணிந்திருந்தார். அவர் என்ன வேலை செய்து கொண்டிருந்தா தெரியுமா? மாட்டுக்கோ குதிரைக்கோ லாடம் அடித்துக் கொண்டிருந்தார். ஆஹா ... தலை நகராச்சே .. இப்படித்தான் இருக்கும் போல் என்று நினைத்துக் கொண்டேன். ஆண்டு 1973

    ReplyDelete
  18. ரயில் நிலையத்தில்லாடமடித்துக் கொண்டிருந்தாரா

    ReplyDelete