முட்டம் முருகன்
-----------------------------
ஊரடங்குநேரத்தில் எந்த சானலிலும் சினிமாதான். ஜயா சானலில் கடலோரக்
கவிதைகள் என்னும் சினிமா இருந்தது பாரதி
ராஜாவின் படமாயிற்றே என்றுசிறிது நேரம் பார்த்தேன் முட்டம் என்னும் இடத்தில் படம் எடுக்கப்
பட்டதாம்முட்டமென்னும் பேரைப்படித்தபோதுநான்
அந்த இடத்துக்கு சென்றதுநினைவில் ஆடியது முன்பெல்லாம் ஜூலை முதல் வாரத்தில்
ஏதாவது பிரசித்தி பெற்ற கோவிலில் இருப்பது வழக்கம் 2004ம் ஆண்டு என்நண்பரின் விருந்தினராக நாகர்
கோவிலுக்கு செனாறோம்அங்கிக்ருந்து கன்னியாகுமரி திருச்செந்தூர் நெல்லை
போன்ற இடங்களுக்கு போய் வந்தொம் அப்போது
நண்பர் நாகர் கோவிலைச் சுற்றி இருந்த இடங்களுக்கு
கூட்டிப்போயிருந்தார் அப்படி போன இடங்களுள்
ஒன்றுதான் மண்டக்காடு
அங்கிருக்கும் பகவதி கோவில்பிரசித்தம்அப்படிப் போகும் வ்ழியில் ஒரு முருகன்
கோவிலும் இருந்தது மிகவும் அழகான முருகன் சிலை இடம்பெயர் நினைவுக்கு வரவில்லை
புகைப்படமும் எடுக்கவில்லை எடுத்திருந்தால் நான் இப்படி தடு மாற நேர்ந்திருக்காது
போகும் இடமெல்லாம் கடலோரப்பகுதிகளே அப்போதுமுட்டம் கடற்கரையில்
சிறிதுநேரம் இருந்தோம் நாங்கள்படமெடுப்பதைப் பார்த்துஒருவர் மோர் விற்பவர்
அவரையும் ஒருபடம் எடுக்க வேண்டினார்
வெள்ளந்திமனிதர் படம் எடுத்தாலும் அவருக்கு கொடுக்க இயலாது என்றோம் பரவாயில்லை என்றார் அவர்
பெயரைக் கேட்டு தெரிந்து கொண்டோம்
முருகன் என்று கூறினார் முருகன்
சிலையை ப்டமெடுக்காவிட்டாலும் முருகன்
என்னும்மனிதனைப் ப;டமெடுத்தோம்
நாகராஜா கோவில் நாகர் கோவில் |
முட்டம் முருகன் |
பழமுதிர் சோலை முருகன் கோவில் |
மண்டைக் காடு பகவதி கோவில் |
திரு அருட்பா வரிகள்
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
காணொளி நாம் இருவர் படத்திலிருந்து இதை விட நல்ல காணொளி கிடைக்க வில்லை
“
இந்த காலங்களில் கோயில் குளங்களில் இப்படி எல்லாம் தண்ணீர் நிறைய இருப்பதில்லைதானே
பதிலளிநீக்குஇந்தப்படம் 2004 ல் எடுத்தது
நீக்குஇனிய நினைவுகள் ஐயா... எப்படியோ முருகன் படம் எடுத்து விட்டீர்கள்...
பதிலளிநீக்குகாணொளி பாடல் அருமை...
ஆண்டவன் முருகனே மோர்க்காரர் உருவில் வந்தாரோ
நீக்குநினைவுகளை மீட்டெடுப்பதே ஓர் சுகம்தான் ஐயா.
பதிலளிநீக்குஒரு நினைவு இன்னொன்றுக்கு இட்டுச் செல்கிறது
நீக்குஅந்தக்காலத்து பிலிம் காமெராவில் கோடாக் பிலிம் போட்டு எடுத்த படங்கள் என்று தோன்றுகிறது. அப்படியே முட்டம் கடற்கரை படம் ஒன்று நீங்கள் எடுத்தது வெளியிட்டிருக்கலாம். நாகர்கோயில் சென்ற நீங்கள் பத்மனாபபுரம், திருவட்டார் ஆகிய இடங்கள் செல்லவில்லையா?
பதிலளிநீக்குஅந்தமுறை நாங்கள் நண்பரி விருந்தினர்கள் ப்ரோக்ராம் அவருடையது நாங்கச்ள் 2016ல் நாகர் கோவில் சென்றபோது பத்மநாபபுரம் அரண்மனை சென்றிருந்தோம் திற்பரப்பு இன்னும் சில் இடங்கள் சென்றோம்
நீக்குநினைவுகள் இனிமையானவை
பதிலளிநீக்குஇப்போதெல்லாம் வாழ்க்கையெ நினைவுகளால் ஆனது
நீக்குநினைவலைகள் அருமை. நாகராஜா கோயிலுக்கு நாங்க போனப்போ இவ்வளவு தண்ணீர் குளத்தில் இல்லை. படங்களை அருமையாகப் பாதுகாத்து வருகிறீர்கள். எல்லாப் படங்களும் நன்றாக இருக்கின்றன.
பதிலளிநீக்குஇரண்டு மூன்று முராஇ நாகர் கோவில்சென்றதுண்டு
நீக்குசுவையான நினைவலைகளை சுவாரஸ்யம் கூட்டுகின்றன புகைப்படங்கள்.
பதிலளிநீக்குநினைவுகள் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு
பதிலளிநீக்குமலரும் நினைவுகள் என்றைக்குமே இனியவைதான்...
பதிலளிநீக்குஆமை ஐயா
பதிலளிநீக்குஅன்பின் ஐயா ..
பதிலளிநீக்குதாங்கள் எனது தளம் தேடிவந்து நலம் விசாரித்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
இன்றைய பதிவில் உள்ள நிலையை ஓரளவுக்கு சொல்லியிருக்கின்றேன்..
தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..
ஆம் ஐயா என்று இருக்க வேண்டும்
பதிலளிநீக்குநமக்குத் தெரிர்ந்தவர்களின் நலம் பற்றி எப்போதும் சிந்திப்பேன்
பதிலளிநீக்குநல்ல நினைவுகள். புகைப்படங்கள் நமக்கு பழைய நினைவுகளை மிட்டெடுக்க உதவும். நாக்ர்கோவிலில் இருந்த போதும் கூட முட்டம் சென்றதில்லை.
பதிலளிநீக்குதுளசிதரன்
முட்டம் ஒரு கடலோரம் அவ்வளவுதான் எதையும் மிஸ் செய்யவில்லை
நீக்குநீருள்ள கோவில் குளங்களைப் பார்ப்பதே புண்ணியம் தானே! நீங்கள் அந்தக் காலத்து 'உலகம் சுற்றும் வாலிபன்' என்பதை அடிக்கடி வெளிப்படுத்துகிறீர்கள்! வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஅப்போது பயணப்பட்டதை நினைவுக்கு கொண்டு வருவதே மகிழ்ச்சி பல இடங்களுக்கு பயணப்பட்டிருக்கிறேன் உங்கள்பதிவுகளை படிக்க வேண்டும்
பதிலளிநீக்குசார் மலரும் நினைவுகள் உங்களுக்கும். முட்டம் என்றதும் எனக்கு நான் கல்லூரி படிக்கும் சமயம் ஒரு பராஜெக்ட் சர்வேக்காக அந்தக் கடற்க்கை கிராமங்களுக்குச் சென்ற நினைவுகள். முட்டம் மிக மிக அழகான கடற்ககை. நீங்கள் சொல்லும் முருகன் கோயில் கணபதிபுரம் அருகே இருக்கும் கோயிலா அல்லது வெள்ளிமலை முருகன் கோயிலா? இது க்டற்ககை அருகே.
பதிலளிநீக்குகீதா
ஆகா !! ... எங்கள் ஊரைப்பற்றி எழுதியுள்ளீர்கள் !!! .... நாகர்கோவில் ... நாகர்கோவிலுக்கு "நாகர்கோவில்" என்று பெயர் வந்ததே இந்த கோவிலை (நாகராஜா கோவில்) வைத்துதான் ... நாகர்களை வணங்கும் கோவில் என்பதால் நாகர்+கோவில் - நாகர்கோவில் ... நன்றி அய்யா....
பதிலளிநீக்குஉங்கள் ஊர் நாகர் கோவில் என்று அறியதந்தமைக்கு நன்றி
நீக்குஇனிய நினைவுகள் மீட்பதில் சுகமே.
பதிலளிநீக்குகன்னியாகுமரி ,இராமநாதபுரம் ,திருச்செந்தூர் சென்றிருக்கிறேன். நாகர் கோவில் செல்ல இருந்தது வாய்ப்பை இழந்துவிட்டேன்.
இந்தியா வரும் பொழுது முட்டம் போய்ப் பார்க்க நினைக்கிறேன்.
பதிலளிநீக்குகோடையிலே இளைப்பாறி.. இளைப்பாறின களைப்புல பாடுறாரா!