Friday, May 15, 2020

இலக்கிய இன்பம்


                                    இலக்கிய இன்பம்  கம்ப ராமாயணம்
                                   ===================================

ராமாயணைத்தை ஒரே வாக்கியத்தில்(சுட்டி) சாதாரணன்  ராமாயணமாக எழுதியஎனக்கு கம்பனில் இருந்து சில பாடல்க்சளைக் குறிப்பிடுவது அசாதாரணமாக இருந்தது  முயற்சி செய்ததில் குகனின்  குணத்தை பிரதிபலிக்கும் சிலபாடல்ளை குறிப்பிடலாம்  என்று  தோன்றியது குகன் சற்றுமுன் கோபியாக  முத்லில் தோன்றினாலும்   கோபமுள்ள இடத்தில்தான் குண்மும் இருக்கும்   என்பதைக் காட்டுகிறான்  

பரதனின்   சேனையை பார்த்ததும் குகன் கோபம்மேலிடுகிறன்

கட்டிய கரிகையன்  கடித்த வாயினன் 
வெட்டிய மொழியினன்   விழிக்கும்  தீயினன்
 கொட்டிய துடியினன் குறிக்கும் கொம்பினன் 
கிட்டியதுஅமர் எனக் கிள்ரும் தோளினான்

எலி எலாம் இப்படை அரவம் யான் என
ஒலி உலாம்  சேனையை  உவந்து கூவினான்
வலி உலாம் உலகினில்  வாழும் வள் உகிர்
புலி  எலாம் ஒரு வழிப் புகுந்த போலவே

அஞ்சன வண்ணன் என்  ஆருயிர் நாயகன் ஆளாமே
 வஞ்சனயால் அரசு எய்திய  மன்னரும்  வந்தாரே
செஞ்சரம்  என்பனதீ உமிழ்கின்ன செல்லாவோ
உஞ்சு இவர் போய் விடின் நாய் குகன்  என்று  எனை ஓதாரோ
 
ஆழ நெடுந்திரை  ஆறு  கடந்து  இவர் போவாரோ
வேழ நெடும்படை  கண்டு விலங்கிடும்   வில்லாளோ
 தோழமை என்று அவர் சொல்லிய  சொல்  ஒருசொல் அன்றோ
ஏழைமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ

ஆடு கொடிப்படை  சாடி அறத்தவரே  ஆள
வேடு கொடுத்தது  பார் எனும்  இப்புகழ்  மேவீரோ
நாடு கொடுத்த  என் நாயகனுக்கு இவர்  நாம் ஆளும்
காடு கொடுக்கிலர் ஆகி எடுத்தது  காணீரோ 
 இங்கு இவ்வாறு குகன்கோபம் மேலிடதன் வீரரிடம்  சொல்லிக் கொண்டிருக்கையில் பரதன்    குகனைக்காண வருகிறான்  சுமந்திரன்  குக்ன்   யாரென்று  பரதனுக்கு சொல்கிறான்
கங்கை இரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான்
உங்கள்குல தனி  நாதற்கு உயிர் துணைவன்  உயர் தோளான்
வெங்கரியின் எறு  அனையான்  விற்பிடித்த வேலையினான்
கொங்கு அலரும் நறுந் தண் தாற் குகனென்னும் குறி யுடையான்

பரதனின்  நிலை கண்டுகுகன்


வற் கலையின் உடையானை  மாசடைந்தமெய்யானை
நற் கலையில் மதி  என்ன நகை இழந்த முகத்தானை
கல்கனிய  கனிகின்ற் துயரானை கண்ணுற்றான் 
வில் கையினின்று இடை வீழ விம்முற்று நின்று ஒழிந்தான்

நம்பியும்  என்  நாயகனை ஒக்கின்றான்  அயன் நின்றான்
 தம்பியையும்  ஒக்கின்றான் தவ வேடம் தலை நின்றான்
துன்பம் ஒரு முடிவு இல்லை  திசை நோக்கித் தொழுகின்றான்
எம்  பெருமான்  பின் பிறந்தார்  இழைப்பரோ பிழைப்பு என்றான்

குகனின்  மன மாற்றம்   தெரிகிறது இல்லையா கம்ப ராமாயணத்தில் பல இடங்களில் தன்னை நாயுடன் ஒப்பிட்டு  தாழ்த்திக் கொள்கிறார்கள்

25 comments:

  1. நாயுடன் மனிதரை ஒப்பிடுவது தவறு... அவைகள் நன்றி உள்ளவை...

    ReplyDelete
  2. அது கம்பன் போன்ற பழைய இலக்கிய வாதிகளுக்கு தெரியவில்லை பல இடங்களில் நாயுடன் ஒப்பிடும்போல்டு இழிவாக்வே பொருள் வருகிறது //உஞ்சு இவர் போய் விடின் நாய் குகன் என்று எனை ஓதாரோ//

    ReplyDelete
    Replies
    1. // நாவாய் வேட்டுவன் நாய்அடியேன் என்றான்... //

      // உத்தம அடிநாயேன் ஓதுவது உளதுஎன்றான்... //

      ‘நாய்’ என்பது ஒருவரைக் கீழ்மைப்படுத்திப் பேசுதற்குப் பயன்படுத்தல் இந்தக்காலத்தில் சர்வ சாதாரணம்... ஆனால் அந்தக்காலத்தில் கம்பர், நன்றியுணர்வி்ல் சிறந்த நாயைக் கூறுவது என்னவென்று தெரியவில்லை... "அன்பினால் தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு பணியும் மரபு" என்பதாக இருக்குமோ...?

      இல்லை தாத்தாவின் :-

      பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
      அணியுமாம் தன்னை வியந்து
      (குறள் 978) - என்பதற்கு காரணமாக இருக்கலாம்...

      அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
      நண்பு என்னும் நாடாச் சிறப்பு
      (குறள் 74) - நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்க காரணமாக இருக்கலாம்...

      Delete
    2. தன்னைத்தாழ்த்திக்கொள்ள பல இடங்களில் நாயுடன் ஒப்பிடல் கம்பராமாயணத்தில் இருக்கிறது ஒரு பதிவே எழுதலாம் நம்விருப்பப்படி அர்த்தம் கொள்வது சரியா

      Delete
    3. "நம்விருப்பப்படி அர்த்தம் கொள்வது சரியா" ? .... மிக சரியாக சொன்னீர்கள் ....

      Delete
    4. புரிவதே எண்ணம்

      Delete
  3. அன்பினால் தன்னைத் தாழ்த்திக் கொள்வதாகத்தான் இருக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அன்பினல் தன்னைத் தாழ்த்திக் கொள்ள பல விதங்களிருக்க நாயுடன் ஒப்பிடல் ஏனோ

      Delete
  4. கல்லூரி நாட்களில் இந்தப் பகுதி எங்களுக்குப் பாடமாக இருந்தது. அதனால் நன்றாகத் தெரியும். குகனின் பாத்திரப்படைப்பு கம்பனின் முதிர்ந்த இலக்கியத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று அறிஞர்கள் கருதுவர். சரி, ஊர்மிளையைப் பற்றி எப்போது எழுதுவீர்கள்?

    ReplyDelete
  5. ஊர்மிளை பற்றி எழுத கேட்பதன் காரணம் யாதோ

    ReplyDelete
  6. எனக்கு புதிய விடயம் அறிந்தேன் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வலைகளில் இருந்து எத்தனயோ விஷயங்கள் கற்ஈறோம்

      Delete
  7. நல்ல பதிவை ரசித்தேன்.

    நாயினும் கடையேன் என்றும் பாடல்கள் உண்டு (கம்பராமாயணம் தவிர்த்து). இலக்கியங்களில் 'நாயை' கீழானதாகத்தான் சித்தரித்திருக்கிறார்கள். (புழுவினும் கடையேன் என்றும் சொல்வார்கள்)

    இதற்கு ஒரு காரணம் உண்டு என்று நான் நினைக்கிறேன்.
    விலங்குகளில், சிங்கம், புலி, சிறுத்தை போன்றவை மற்ற விலங்குகளைக் கொல்லும்போது, முதலில் அதன் மூச்சுக்குழாயை அழுத்தி உயிரைப் போக்கிவிட்டு பிறகு தின்னும். இதில் கொல்லப்படும் உயிருக்கு நேர்மையான மரணாவஸ்தை உண்டு. ஆனால் நாய்கள் கூட்டமாக வேட்டையாடிக் கொல்லும்போது, உயிரோடு அந்த விலங்கு இருக்கும்போதே சதையைப் பிய்த்துத் தின்னும். (இந்த வழக்கம் ஓநாய் போன்றவற்றிர்க்கும் உண்டு). இது அநியாயமான சாவினைத் தரும் குணம். இதனால் நாயைக் கீழான குணமுள்ளதாக எண்ணியிருக்கலாம். மற்றபடி நாயை வீட்டில் வளர்த்தார்கள் என்பதெல்லாம் இலக்கியத்தில் காணமுடியாது. நாம் இதனை பிரிட்டிஷாரைப் பார்த்துக் காப்பியடித்திருக்கலாம் (நாயை வீட்டில் வளர்ப்பது)

    புழு, இன்னொரு உயிரின் உடலில் இருந்து அதனைத் தின்பதால் அதனையும் கீழான உயிருக்கு ஒப்பாகச் சொல்லுவர்.

    ReplyDelete
    Replies
    1. 8ம் நூற்றாண்டு திருமாலையிலும், 'நாய்களோம் சிறுமை ஓரா' என்று இருக்கிறது. அர்த்தம், எங்கள் குற்றங்களை, சின்னத்தனங்களை அறியாது, நாய்களைப்போல் கீழ்த்தரமாக இருக்கிறோம் என்பது.

      தமிழகத்தில் 'நாய் வளர்ப்பு' எப்போ ஆரம்பித்தது என்று கண்டுபிடிக்க முடிந்தால், சுலபமாக இதனைப் புரிந்துகொள்ள முடியும். எல்லோரும் ஒரு நூற்றாண்டாக இருக்கும் 'நாய் வளர்ப்பை' பன்னெடுங்காலம் தொடரும் பழக்கமாக எண்ணிக்கொண்டு, 'நாய் நன்றி உடைய விலங்கு' என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கின்றனர் எனத் தோன்றுகிறது.

      Delete
    2. நல்ல பின்னூட்டம் ரசித்தேன்வித்தியாசமான சிந்தனை

      Delete
  8. நய் வளர்ப்பு பற்றிய சந்தேகமும் சுவை ஊட்டுகிறது

    ReplyDelete
  9. அன்பின் ஐயா...

    எனது தளத்துக்கு வந்து நலம் விசாரித்தமைக்கு நன்றி ஐயா...
    நாளைக்கு வெளியாகும் பதிவில் சில செய்திகளைக் காணலாம்...

    தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி

    ReplyDelete
    Replies
    1. உலகம் பூராவும் கொரோனா தாக்குதல் இருக்கும்போதுகுவைத்தில் இருக்கும் உங்கள் நினைப்பும் வந்தது ஐயா

      Delete
  10. பதிவின் வழி அறிந்து கொள்வதும் பின்னூட்டங்களின் வழி தெரிந்து கொள்வதுமாக - புதிய சிந்தனைகள் விளைகின்றன..

    ReplyDelete
  11. பதிவின் வழியே மாற்றுக்கருத்துகளும் இருப்பது தெரிய வரும்பலரும் தவறாக கருதுவது எழுதுவதின் காரண காரியத்தையே சந்தேகப்பட வைக்கிறது

    ReplyDelete
  12. நாயின் அன்பும் பணிவும் நிபந்தனை அற்றது.
    சில ச்மயங்களில் நாம் இழிந்தது என்று கருதுவதை உண்கின்றன. அதற்கு நல்லது கெட்டது தெரியாது .
    நாய்யைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது வாலை குழைத்துக்கொண்டு................... என்று பழமொழி உண்டு. இழிவான பண்பைக் கொண்டிருக்கும்போது இந்த நாயை ஒப்பிட்டுகிறார்களா என்னவோ?. ஆனாலும் நாயின் நன்றிக்கு ஈடு இணை இல்லை.

    ReplyDelete
    Replies
    1. ஒரு வேளை இதிகாச காலத்து நாய்கள் வேறு மாதிரியோ நெல்லைத் தமிழரின் பின்னூட்டங்களை பார்க்க வேண்டுகிறேன் இதிகாசங்களில் இருப்பதையே எழுதி இருக்கிறேன்

      Delete
  13. ஆகா ... சங்ககால நாய்களை பற்றியும் நிகழ்கால நாய்களை பற்றியும் ஒரு பெரிய ஆராய்ச்சியே பண்ண வேண்டும்போல இருக்கே ... ஆனால் ஒன்றுமட்டும் தெளிவாக தெரிகிறது ... நாய்கள் அந்தகாலத்தில் இருந்து இந்தகாலம் வரையில் பரிணாமத்தில் நிறைய மாற்றத்தை கண்டுவருகிறது போல....

    ReplyDelete
    Replies
    1. பரிணாமத்தில் மாற்றம் புரியவில்லை

      Delete
  14. வித்தியாசமான அலசல்கள்.

    ReplyDelete