சனி, 23 மே, 2020

மா புராணம்


                                             மாபுராணம்
                                              ------------------


உஸ்ஸ்ஸ் அப்பாடா   ஒரு வழியாய் மரத்திலிருந்த மாங்காய்கள்  பழங்கள் கீழே வந்தன இலை மறைவாய் காய் மறைவாய்  என்பதன் அர்த்தம்புரிந்தது இவ்வருடம் நிறையவே காய்கள் பறித்து போட்ட மகானுபாவன் +  சுமார் நான்கு மூட்டைக்ள் காய்களை எடுத்துச்சென்றான் நாங்களூம் கண்டு  கொள்ள வில்லை   எனக்கு ஏனோநெல்லைத் தமிழரின் நினைவு வந்தது எங்கள்வீட்டு மாமரம் பற்றி நிறையவே  விசாரித்து இருந்தார்  அடுத்து இருப்போர் எல்லோருக்கும் கொடுத்தோம்எங்கள் வீட்டு மாம்பழத்தின்  சுவையே தனி  எந்த ஜாதி என்று தெரியாதுமஞ்சள்நிறமே வராது காய்பொல் இருக்கும் ஆனால் தின்னத் தின்ன சுவை நாங்கள்மாம்பழம் வாங்கி சாப்பிட்டது  கிடையாது  வாங்கிய ப்ழங்களின்   சுவை காரண்டி கிடையாது  சில  நேரஙகளில்மலையாளத்தில்  சளுக்கும்  என்பார்கள் அதுபோல் இருக்கும்   ஆனாலெங்கள் வீட்டுப் பழங்க்சள் இனிக்கும் போதும்   எங்கள் வீட்டு மாம் பழங்களின் புராணம்                                                                       


https://www.youtube.com/watch?v=tNnLAyM_azc
பழங்கள்  மஞ்சள் நிறம் வருவதில்லை



சூப்பர் சிங்கர்     பாட்டு ஒன்று 




33 கருத்துகள்:

  1. என்ன சார் பழம் போட்டு ஏங்க வைக்கிறீங்க

    பதிலளிநீக்கு
  2. உருண்டை வகைப் பழம் என்று சொல்லலாம்.  நீலமோ?
      
    நாங்கள் கடையில் வாங்கிய மாம்பழங்கள் இரண்டு முறையும் நன்றாக இல்லை.  ஒரு சுவையும் இல்லாமல் இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது என்ன வகையோ மொத்தத்தில் இனிப்பாக இருக்கிறது நார்களும் இருக்கும்

      நீக்கு
  3. அலுவலகத்தில் கணினியில் உங்கள் தளம் திறக்கும்போதும், கீதா அக்கா தளம் திறக்கும்போதும் பேஸ்புக்கில் நோட்டிபிகேஷன் வருவது போல நிறைய வருகிறது.  என்ன என்று தெரியவில்லை.  வீட்டுக் கணினியில் திறக்கும்போது அப்படி வந்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன நோட்டிஃபிகேஷன் என்று சொல்லலாமா எனக்கு எங்கள்ப்லாக் சரியாகவே திறக்கிறது எந்தபிரச்சனையும் இல்லை

      நீக்கு
    2. மொபைலில் பார்க்கும்போது அப்படி வராது.  முன்னர் வீட்டுக் கணினியில் பார்த்தபோதும் வந்ததில்லை.  ஏதோ விளம்பரம் போல வரும்.  மேலே 'டேபி'ல் ஒன்று ரிலாண்டு என்று நம்பர்கள் கூடும்.  ஒவ்வொன்றையும் க்ளோஸ் செய்தால் அந்தப் பக்கம் திறக்க ஆயத்தமாகும்.  அதனையும் மூடுவேன்!  ஒருவேளை இது என் அலுவலகக் கணினி சம்பந்தப்பட்ட பிரச்னையாகக் கூட இருக்கும்!

      நீக்கு
    3. பிரச்சனை புரியவில்லை

      நீக்கு
  4. பழங்கள் இன்னும் பெரு(க்)கட்டும் ஐயா.

    பதிலளிநீக்கு
  5. எடுக்கப்படாதபழங்கள் இன்னும் இருக்கிறது மரத்தின் உச்சியில்

    பதிலளிநீக்கு
  6. மார்கெட்டிலிருந்து அல்லாது இதுபோல் மரத்திலிருந்து கிடைக்கும் பழங்களில் கூடுதலாய் ஒரு பச்சையம் ருசி இருக்கும்...அதற்காகவே ஒவ்வொரு வருடமும் ஒரு பழமாயினும் என் நண்பனின் தோட்டத்திற்குச் சென்று இரசித்து தின்று வருவேன்...உங்களுக்கு அந்த கொடுப்பினை இருக்கிறது...வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்ஹ ஆண்டு பலருக்கும் கொடுத்து பகிர்ந்தோம்

      நீக்கு
  7. பதில்கள்
    1. மாம்பழங்கள் விஒட்டு மரம் தோட்டமர்ம் என்னும் பெத மிருக்கிறதா

      நீக்கு
  8. அந்த சுப்பிரமணியனுக்கு மாம்பழம் கிடைக்கவில்லை, பழனியில் இப்போதும் ஆண்டியாய் இருக்கிறார். அதற்கு பதில் இந்த சுப்ரமணியனுக்கு கூடை நிறைய கொடுக்கிறார்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த சுப்பிரமணியன் பறக்கு சக்தி இல்லா மயில்மேலெறி ஞாலம் வலம் வர முயன்றான் ஏதும் அறியாத பாலகன் இவன் அப்படி அல்ல தானும் தின்று பலருக்கு கொடுத்தான்

      நீக்கு
  9. ஆவக்காய் ஊறுகாய் போடுபவர்களிடம் குத்தகைக்கு விட்டிருக்கலாம். 

    பதிலளிநீக்கு
  10. தித்திக்கும் மாம்பழம்.
    எங்கள் கிராமத்து வீட்டில் மூன்று இனங்கள் (செம்பாட்டான்,அம்பலவி,விலாட் ) இப்பொழுது தலைநகரில் கொரோனாவால் அகப்பட்டு உள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசை இருந்தல் காசு கொடுத்து வாங்க வேண்டிய்துதான்

      நீக்கு
  11. மாம்பழங்கள் அழகா இருக்கு. நான் சாப்பிட்டுப் பார்க்காமல் எப்படிச் சொல்ல இயலும்?

    நான் இருக்கும் இடத்தில் பதாமி 50 ரூ, பங்கனப்லி, இன்னும் இரண்டு வெரைட்டிகளும் அதே விலைக்குக் கிடைக்கின்றன. சுவையா இருக்கு.

    இன்று அருமையான மல்லிகா வெரைட்டி கிலோ 100 க்கு இருந்தது.

    பதிலளிநீக்கு
  12. வீட்டுச்சாப்பாட்டினைப் போலத்தான் ஐயா வீட்டுப்பழமும்...பகிர்ந்த விதம் அருமை

    பதிலளிநீக்கு
  13. மா இந்த வருடம் நல்ல காய்ப்பு என்பதில் மகிழ்ச்சி.

    படத்தில் பார்த்தால் ஏதோ மாங்கா ஊறுகாய் போடப் பறிக்கப்பட்ட காய்கள் போலல்லவா இருக்கிறது. இதுவா பழம்.. இனிக்கும் என்றும் சொல்கிறீர்கள்!

    உங்கள் பழைய டெனண்ட் நல்ல அபூர்வ வகை மாஞ்செடியைத்தான் நட்டுவைத்துவிட்டுப் போயிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காய்போல் இருக்கும் ஆனால் கனி எங்கள் பழைய டெனண்ட் என் வீட்டை தன் சொந்த வீட்டைப் போல் பராமரித்திருக்கிறார்

      நீக்கு
  14. எங்கள் வீட்டிலும் 3 வகை மாங்காய்கள் காய்த்துக் கொண்டிருந்தன. ஒன்றை நாங்களே வெட்டினோம் தோட்டம் நிழலாகிவிட்டது என்பதால். இன்னொன்று பாதிரி வகைப்பழம். வாசனை ஊரைத் தூக்கும். இன்னொன்று ஊறுகாய் மாங்காய் வகையைச் சேர்ந்தது. அதன் பழமும் நன்றாகவே இருந்தது. இப்போ எதுவும் இல்லை. வாங்கியும் சாப்பிடுவது இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வளர்ந்து காய்க்கும் மரங்களி வெட்டுவதுமனக்கஷ்டம் மம்பழசிசனில் நாங்கள் வெளியிலிருந்து பழம் வாங்கி சாப்பிவது இல்லை இந்தமுறைபலருக்கு கொடுத்தோம்

      நீக்கு
  15. உங்களுடையது சேலத்து மாம்பழ வகையாக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  16. வகை என்ன வென்று தெரிந்தால் சொல்லி இருப்பேனே

    பதிலளிநீக்கு
  17. இங்கு ஒரு மூடை மாங்காய்தான் இருக்கிறது ... மீதி நான்கு மூடை மாங்காய்களை காணோம்... பறித்தவரே கொண்டு போயிட்டாரா ... ஹஹ ...ஹாஹா .... காமெடி ...

    பதிலளிநீக்கு