Wednesday, June 2, 2021

சில நல்ல வார்த்தைகள்


 

நல்ல  வார்த்தைகள் சில

பதிவுக்கு என்ன தலைப்பு வைக்கலாம்? தலைப்பின் மூலம் வாசகர்களைக் கவர முடியுமா? வாசகர்களைக் கவர்வதா நோக்கம்? உனக்குத் தெரிந்ததை உன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள். அனுபவங்களைப் படிக்கும் போது சிறு கதை படிப்பது போல் இருந்தால் நல்லது. இல்லாவிட்டாலும் பாதகமில்லை. பத்து கட்டளைகள் என்று தலைப்பிட்டால் இவன் யார் நமக்குக் கட்டளையிட என்று பதிவைச் சீந்தாமலே போகலாம் பத்து அறிவுரைகள் என்று தலைப்பிட்டாலும் எழுதுபவன் உயர்ந்த நிலையில் இருக்கும் தோற்றமளிக்கும்  இருந்தாலும் ஒரு தலைப்பு வேண்டுமே. நான் கற்றவற்றையும் என் மக்களுக்குக் கற்பிக்க முயன்றதையும் கூறும் இப்பதிவு சுபாஷிதம் அல்லது நன்மொழிகள் என்று இருந்தால் தவறாய் இருக்காது என்று நம்புகிறேன்

 

நம்மைச் சுற்றிலும் எண்ணற்ற நிகழ்வுகள் நடக்கின்றன, சிலவற்றை அடியோடு மாற்ற வேண்டும் போல் இருக்கும் . மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும் ஆனால் மாற்றக் கூடியவற்றை மாற்றும் உறுதி வேண்டும். மாற்ற முடியாதது எது மாற்றக் கூடியது எது என்று பிரித்து அறிந்து கொள்ளும் திறன் வேண்டும்                                                                 

நாம் பேசும் வார்த்தைகளில் நமக்குக் கட்டுப்பாடு வேண்டும்.பேசாத வார்த்தைகளுக்கு நாம் எஜமான் . பேசிய வார்த்தைகளுக்கு நாம் அடிமை. பேசப்பட்ட வார்த்தைகளை மீட்டு எடுக்க முடியாது ஆனால் நடப்பது என்னவென்றால் அதிகமாகத் தவறுதலாகத் திறக்கப் படுவது வாயே..

             

இன்றென்பது நேற்றைய திட்டமிடப்படாத நாளை .நாளை என்ற ஒன்றே நிச்சயமில்லை என்றும் இன்றையப் பொழுதை நலமாகச் செலவிட வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டாலும் திட்டமிடப்படாத வாழ்க்கை சுவைக்காது. நல்லதே நடக்கும் என்ற எண்ணமே திட்டமிடுதலின் ஆதாரம் என் தந்தை எனக்குக் கூறிய அறிவுரை நல்லது நடக்கும் என்று நம்பு. அல்லது நடந்தாலும் ஏற்கத் தயாராய் இரு Hope for the best and be prepared for the worst ஆகவே எதையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டும் .திட்டமிட்டதைச் செய்ய வேண்டும்

 

வாழ்வில் குறிக்கோள் என்று ஒன்று இருக்கவேண்டும் அந்தக் குறிக்கோளும் உயர்ந்ததாக இருத்தல் வேண்டும் என் மக்களிடம் நான் கூறுவது உன் குறிக்கோள் நட்சத்திரத்தை எட்டுவதாக இருக்கட்டும் முயற்சி செய்யும்போது குறைந்த பட்சம் மர உச்சியையாவது அடையலாம் உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி ருந்தாகுமா என்றுஒரு சொல் வழக்கில் உண்டு, அது நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளத்தான் வழிவகுக்கும்  பருந்துகள் மிக உயரத்தில் பறக்கின்றன ஏன் என்றால் அவை தம்மால் முடியும் என்று நம்புகின்றன.

 

என்னதான் திட்டமிட்டாலும் தன் திறமையில் நம்பிக்கை வைத்தாலும் கடின உழைப்பின்றி அவை சாத்தியமாகாது கடின உழைப்புக்கு மாற்று இல்லை மனிதன் ஒரு தனித்தீவாக இயங்க முடியாது அடுத்தவன் என்று ஒருவன் எப்போதும் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளரை தன் முதலாளி போன்று நினைக்க வேண்டும் என்பார்கள். நம்மை அடுத்தவன் எவ்வாறு நடத்தவேண்டும் என்று விரும்புகிறோமோ, அதேபோல் அடுதவரையும் நாம் நடத்த் வேண்டும் தன்னை தனக்கு மேலிருப்பவன் எவ்வாறு நடத்த வேண்டும் என்று விரும்புகிறோமோ அதேபோல் நமக்குக் கீழ் இருப்பவரையும் நாம் பாவிக்க வேண்டும்

எதுவும் செய்யாது இருப்பவர்கள் செய்யும் பணியில் அவர்களை அர்ப்பணித்துக் கொண்டால் சும்மா இருப்பது என்ற ஒன்றே இருக்காது. செய்யும்பணியின் மேல் காதல் கொள்ள வேண்டும் செய்யும் பணி எதுவாயிருந்தாலும் அதில் முதன்மையாக இருக்க விரும்பவேண்டும் தோட்டி வேலை செய்தாலும் தோட்டிகளில் சிறந்தவனாய் இருக்க வேண்டும்

இருந்த நாட்களை விட வர இருக்கும் நாட்களை சிறப்பாக்கிக் கொள்ளலாம் என்னுடைய மேற்கூறிய நன்மொழிகளின்படி நடந்தால் என்று கூறிக் கொள்கிறேன்

என்னை இப்பதிவை எழுதத் தூண்டிய வாசகங்களை உங்களுடன் பகிர்கிறேன்

 


1)
 Give us the serenity, to accept what can not be changed, courage to change that which should be changed, and wisdom to know one from the other

.

2.) Nothing is opened more often by mistake than the mouth

3.) Today is the tomorrow you didn’t plan for yesterday.

 

4.) Plan your work and work your plan

 

5.) Aim at the stars then atleast you can reach the tree top

 

6.) They fly high because they think they can

 

7.) There is no substitute for hard work

 

8.) What a man dislikes in his superiors, let him not display in his treatment to his inferiors  

      

9.)   Work is the refuge of people who have nothing better to do

 

10.)  In those days , he was wiser than he is now;;he used to frequently take my advice

 

 

 

  

 

 

16 comments:

  1. சிறப்பான வார்த்தைகள்.  மகன்களுக்குச் சொல்ல தந்தைகளுக்கு இது மாதிரி நிறையத் தோன்றுகின்றன.  ஆனால் மகன்கள்தான் கேட்பதில்லை!  மனதில் வைத்து தன் மகன்களுக்குச் சொல்வார்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அனுபவமா

      Delete
    2. பொது அனுபவமும்தான்! :-))

      Delete
    3. என் மக்கள் எனக்கே சொல்வார்கள்

      Delete
  2. அனுபவ நன்மொழிகள் மிகவும் அருமை ஐயா...

    ReplyDelete
    Replies
    1. ரசித்த்தற்கு நன்றி

      Delete
  3. நல்ல அறிவுரைகள் என்பதைவிட, அனுபவ மொழிகள் என்பது சிறப்பாக இருக்கும். ஆனா பாருங்க..சொல்றதைக் கேட்கறதுக்குத்தான் ஆட்கள் கிடைப்பது சிரமம்.

    ReplyDelete
    Replies
    1. ஊதுகிற சங்கை ஊதுவோம்

      Delete
  4. நல்ல வார்த்தைகள் அனைத்தும் மிகவும் சிறப்பு சார். உங்கள் தந்தை உங்களுக்குச் சொன்னது நீங்கள் உங்கள் மக்களுக்குச்சொல்வது வழி வழியாய்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மக்களுக்குச்சொல்வது வழி வழியாய்தொடரும் என்பது ச்ரியோ .

      Delete
  5. அற்புதமான வார்த்தைகள் ஐயா.

    கேட்போர் கேட்கட்டும் அவ்வழியே நாம் செல்வோம்.

    ReplyDelete
  6. அனைத்தும் நல்ல வார்த்தைகள் ஐயா.

    ReplyDelete
  7. அருமையான வழிகாட்டும் வார்த்தைகள்..என்னைப் போல் பலரும் சோர்ந்துவிடாது பதிவுலகில் எழுதிக் கொண்டிருப்பதற்கு நீங்களும் ஒரு காரணம் என்றால் அது மிகை இல்லை..

    ReplyDelete