படித்ததில் பிடித்தது .
வீசு தென்றல் காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவரோ
பேசும் பொற்சித்திரம்
அருகிருக்க அருகினிலே
ஓடும் ஓடையின் தண்ணீரும்
சுவை தருமோ
தென்றல் காற்று , தண்புனல் சித்திரம்போல் பாவை
போதுமா இப்புவியில்
வேறெதுவும் வேண்டாமா
பசிக்கும் வேளை புசிக்க
உணவு அது ஒன்றே
போதும் என்று சொல்ல வைக்கும். பாரீரே அறிவீரே.
கொடுப்பதன் இன்பம் அதை
எடுக்கவிட்டுக்
கொடுப்பதில் கூடும்
இன்பம் உணர்வோமே.
கொடுத்துத்தான்
பார்ப்போமே
ஈசன் அருளைப் பெற ஈதல்
ஒன்றே நல்வழி-அதைவிட்டு
அவன் சொன்னான் இவன்
சொன்னான் எனக் கூறி
பாலையும் பழத்தையும்
தேனையும் தீஞ்சுவை இளநீரையும்
பூசனை என்ற பேரிலும்
அபிஷேகம் எனும் பேரிலும்
கல் மீதும் மண் மீதும்
பொழிந்தே வீணடித்தல் ஏனோ? முறையோ.?
ஈசன் அருளைப் பெறவே
இத்தனையும் தேவை என்றால்
அறிவீரே அன்பர்காள், அத்தனையும் அறியாமையின் வழிமுறை
பக்தி செய்யவே பாசாங்கு
வேண்டியதில்லை. எங்கும்
நிறைந்த ஈசன் என்னிலும்
உள்ளான் எவரிலும் உளான்
இதுவன்றோ உண்மை நிலை.?அன்பே சிவம் எனச்
சொல்வதோடு நில்லாமல் நேசி ; உன்னை நேசி; இவனை நேசி
அவனை நேசி; உவனை நேசி. அனைவரையும் நேசி
பாரினில் பிறக்கும் போது
என்ன கொண்டு வந்தோம்.
போகும்போது என்ன கொண்டு
போவோம்.
இருப்பதனைத்தும்
எனக்கென்றால் அது
என்னுள் உறையும்
இறைவனுக்கும்தானே
என்னுள் இருப்பவன்
அவனிலும் உளான் ஆக
எனதெல்லாம் அவனுக்கும்
உரிமைதானே
கிடைத்ததெல்லாம் அவன்
கொடுத்தது- அது
அனைவருக்கும் உரியது.
.இருப்பவன் என்று
என்னையோ உன்னையோ
தேர்ந்தெடுத்தான் என்றால்
உன் மூலம் என் மூலம்
இல்லாதோர் பெற
வேண்டும் என்பதே அவன்
சித்தமாயிருக்கலா
ரசித்தேன்.
ReplyDeleteநன்றீ
Deleteஅருமை ஐயா...
ReplyDeleteநன்றி
Deleteஅருமை ஐயா
ReplyDeleteநன்றி
ReplyDelete