Friday, June 24, 2022

அன்பு என்பது என்ன


       அன்பெனப்படுவது யாதெனில் என்று

             எழுதத் துவங்கும் முன்பே ,முன்னே வந்து 
             நிற்கின்றன அனேக கேள்விகள் சந்தேகங்கள்.
            அன்பே சிவம்,அன்பே  கடவுள் அன்பே  எல்லாம்
             என்றெல்லாம்  கூறக் கேட்டாலும்அடிப்படையில்
             அன்பு  என்பதுதான்  என்ன.

அன்பு மனைவியிடம் அவளது எண்ணம் கேட்டேன்.
உடலில்,உணர்வில் ஏற்படும்  ரசாயன  மாற்றமே
உணர்ச்சிகளின்  வெளிப்பாடுஅதில்  அன்பெனப்படுவது 
உதிரம்  சம்பந்தப்படுகையில்  உயர்வாகிறது
அதுவே என் நிலைப்பாடும்  என்றாள். 
             உள்ளம்  சார்ந்த  பதில்  ஒன்றைக்  கூறிவிட்டாள். 
             அறிவு  சார்ந்த  பதிலை  நாடுதல்  தவறோ.?
தொப்புள்  கொடி  உறவு  உதிரம்  சார்ந்தது. 
ஆதலால்  ஒப்புக்  கொள்ளத்  தோன்றுகிறது. 
அந்த  உறவின்  உணர்வும்  அன்பும்  அறியப்படாமல் 
போய்  விட்டதால்  எழுகிறதோ  என் கேள்விகள்.?

   உணர்வுகள் புரிதலை  (EMPATHY)  அன்பெனக்கொள்ளலாமா?
  சார்ந்திருப்பதன்  சாராம்சமே அன்பின் விளைவா.?

           சேய்  தாயை சார்ந்திருப்பதால் அவளிடம் அன்பா.?
           பெற்ற சேயிடம்  தாய்க்கு என்ன எதிர்பார்ப்பு.
          ஆரம்பத்தில்  இல்லாதது நாள்படத் தோன்றுமோ. ?
          தாய் தந்தை மகன் மகள் கணவன் மனைவி 
          என்று எல்லோரிடமும் உணர்வுகளில் உறங்கிக்கிடக்கும் 
          எதிர்பார்ப்புகளின் மறு பெயர்தான் அன்போ.?
          எதிர்பார்ப்பில்லாத அன்பென ஒன்று உண்டா என்ன.?

கட்டிய மனைவியும்,பெற்ற  பிள்ளைகளும் 
கதறி அழும்போது வந்து விழும் வார்த்தைகள் 
எதிர்பார்ப்புகள் ஏமாற்ற மாவதைக்  காட்டுகிறதா.?
அன்பின் பிரிவால் ஏற்படும் அழுகையா, ?
அவலங்களை எதிர் நோக்கும் எண்ணங்கள் அழவைக்கிறதா?


           பாடுபட்டுக் கோடி பல விட்டுச் சென்றால் 
           பெருமையுடன் நினைப்பார்களோ.உலகில் 
           பாடுபட விட்டுச் சென்றால் பழியேற்றுச் செல்ல வேண்டுமோ.?
           அன்புக்கும் ஒரு விலை உண்டு என்பதுதான்  உண்மையோ.?

அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ் ......
எண்ணிப்பார்த்தால் உண்டென்றே  தோன்றுகிறது. 

          எதிர்மறைக் கருத்துகள் இருக்கலாம் என்று 
          எண்ணும் இடமெல்லாம் கேள்விகளாக்கி  விட்டேன். 
          ஆன்றோரே சான்றோரேஉங்கள் கருத்துகள் 
          அறியக் காத்திருக்கிறேன்.. எது எப்படியாயினும் 
          முத்தாய்ப்பாக  நான் எண்ணுவது 


உழைத்துக் களைத்து உடலம் கிடத்தி உறங்கி எழுந்தால்
மறு நாளும்  உண்டு வாழ்வுதொடரலாம் பணிகள். 
உறக்கத்தில் மூச்சு விட மறந்து எழாமல் போனால் 
என்னாகும்.?ஒன்றுமாகாது. பேரினை நீக்கி பிணமென்று கூறி
பாடையில் கிடத்தி கொண்டு போவார்கள் புதைக்கவோ எரிக்கவோ.

          இருந்தபோது  செய்ததன் விளைவு 
          பெற்றுத்தரும் விழி நீரோஉமிழ் நீரோ. 


இல்லாமையின் வெறுமை உணரப்படலாம் சில நாட்கள். 
விட்ட குறை தொட்டகுறை எனப் பணிகள் 
விடுபட்டுப் போயிருந்தால். பல நாட்களாக அது மாறலாம். 
காலம் கடந்தபின் மிஞ்சுவதெல்லாம் சில நினைவுகள் மட்டுமே.

(அன்பு நேசம் பாசம் காதல் என்றெல்லாம் அறியப் படும் உணர்வு உண்மையில் என்ன?என்றோ எழுந்த கேள்வி பதிவாகி இருந்தது. இப்போது அதுவே மீள்பதிவாக)
 

         
 

9 comments:

  1. அன்பு என்ற உணர்வு எதிர்பார்ப்புகள் இல்லா இடத்தில் ஏற்றம் தரும். தாயன்பு பக்கத்தில் வேறு எதுவும் நெருங்கமுடியாது. அது கண்மூடித்தனமான அன்பு

    ReplyDelete
    Replies
    1. ஆண்பு என்றால் என்ன ந்பதே கேள்வி

      Delete
  2. எமக்கு நல்ல சந்தேகங்கள் :) சந்தேகங்களும் கேள்விகளும் பதில்களும் தானே எமது வாழ்க்கை. திண்டுக்கல் குறள் அதிகாரத்தையே காட்டிவிடுவார் அதிலும் எமக்கு
    சந்தேகம் வரும் :) தாயன்புக்கு நிகர் இல்லை என்பதை ஒத்துக் கொள்வோம் அதுஜந்தறிவு ஆறறிவுக்கும் பொருந்துகிறதை கண்டிருப்பதால் எங்கள் அறிவு ஏற்றுக்கொள்கிறது போலும்.
    கேள்விகள் பதில்கள் தொடரட்டும். நல்ல அலசல்.

    ReplyDelete
  3. அன்பு என்றால் எதி பார்ப்பு இல்லாம்ல் தரும் ஒரு செய்கை எனலாமா

    ReplyDelete
  4. அன்பு என்பது எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாதது. ஆனால் யதார்த்தத்தில் மிகவும் கஷ்டம். Unconditional Love

    ரத்த பந்தத்திலும் எதிர்பார்ப்புகள் இருக்கிறதே. இதைப் பற்றி நிறைய சொல்லலாம்.

    கீதா

    ReplyDelete
  5. கஷ்டம் என்றாலும் உண்மை என்று தோன்று கிறது

    ReplyDelete
  6. அன்பு எதிர்பார்ப்பில்லாதது

    ReplyDelete