Thursday, June 2, 2022

IN LIGHTER VEIN

 ச்சும்மா    தமாஷுக்கு....

-------------------------------
தமாஷ் 1/
                        தன் தாயிடம்  அடி வாங்கிய சிறுவன் ஒருவன் சோகமாக 
ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான். அதைக்  கண்ட அவன்  தந்தை 
அவனருகில் பரிவுடன் வந்து,  நடந்தது  என்ன என்று  விசாரித்தார். 
கோபமும் , அழுகையும் ஒருங்கே  சேர  அந்த   சிறுவன்  “ அப்பா வரவர 
உன் மனைவியின்  தொல்லை அதிகமாகிறது. உன்னைப்  போல்  உன் 
மனைவியுடன் என்னால் ஒத்துப்போக  முடியவில்லை.  நான் ஒத்துப்
போக  எனக்கு ஒரு மனைவி  வேண்டும்  “ என்றான். 

தமாஷ் 2/- 


                       சிறுவன் ஒருவனுக்கு சின்ன சின்ன செலவுகளுக்கு  பணம் 
தேவைப் பட்டது. அப்பா, அம்மா  யாரிடம் கேட்டாலும் கிடைக்க வில்லை. 
பலவாறு சிந்தித்து  கடைசியில் ஒரு உபாயம் கண்டான். கடவுளிடமே 
பணம் கேட்க முடிவு செய்து  தன் கஷ்டங்களைக் கூறி  தனக்கு ரூபாய் 50/-
அனுப்புமாறு வேண்டி கடிதம் எழுதி --கடவுள்   இந்தியா--- என்று விலாசம் 
எழுதி தபாலில் போட்டான்..கடிதம் கண்ட தபால் துறையினர் அந்தக் 
கடிதத்தை  இந்திய ஜனாதிபதிக்கு  அனுப்பினார்கள்.
                      கடிதம் கண்ட ஜனாதிபதி பையனின் சாதுர்யத்தை  மெச்சி
அவனுக்கு  பணம் அனுப்ப  முடிவு செய்தார்.சிறுவனுக்குப் பணத்தின் 
அருமை தெரிய வேண்டுமென்று  கருதி கேட்ட பணம் ஐம்பதுக்குப் 
பதில்  ரூபாய் 20/- அனுப்பச் சொன்னார்.  பணம் கிடைத்த சிறுவன் 
மகிழ்ச்சி அடைந்து  கடவுளுக்கு  நன்றி  கூறி ஒரு கடிதம் எழுதினான். 
கடவுளே, என் வேண்டுதலுக்கு இணங்கி நீங்கள் பணம்  அனுப்பியதற்கு 
மிக்க நன்றி. இருந்தாலும் நான் உங்களுக்கு  ஒரு விஷயம் தெரிவிக்க 
வேண்டும். ஜனாதிபதி  அலுவலகம் மூலமாக  நீங்கள்  அனுப்பச் சொன்ன 
பணத்தில்  ரூபாய் 30/- லஞ்சமாக எடுத்துக் கொண்டு  ரூபாய் 20/- மட்டுமே 
அனுப்பினார்கள் ’
------------------------------------------------------------------------------------  

16 comments:

  1. Replies
    1. சிரிக்க்முடிந்ததா

      Delete
  2. இரண்டுமே ஆங்கிலத்தில் படித்ததாக நினைவு. அவ்வப்போது பதிவு கட்டாயம் எழுத வேண்டுகிறேன். உங்களுக்கும் எங்களுக்கும் ஒரு திருப்தி.
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. நானும்எழுத முயற்சிக்கிறேன்

      Delete
  3. ஹா.. ஹா.. இந்திய நிலைப்பாடு உண்மை வெளிவந்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. அதென்ன இந்திய நிலைப்பாடு

      Delete
    2. இந்தியாவில் லஞ்சம் தாண்டவம் ஆடுவது கடவுள் வரை சென்று விட்டதே...

      Delete
    3. சென்ற்ன்ன பலன்

      Delete
  4. ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன் இரண்டாவது ஏற்கனவே வாசித்திருந்தாலும் மீண்டும் சிரிப்பை வரவழைத்த ஒன்று.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மிண்டும் சிரித்ததால் நல்லது தானே

      Delete
  5. ஒருவன் ஜில்லாடி... இன்னொருவன் கில்லாடி...

    ReplyDelete
    Replies
    1. ஜில்லாடி தெரியவில்லை

      Delete
  6. நல்ல நகைச்சுவை.

    துளசிதரன்

    ReplyDelete
  7. ஹா...ஹா.... இரண்டுமே.

    ReplyDelete
  8. இரண்டுக்கும் நன்றி

    ReplyDelete