திங்கள், 4 ஜூலை, 2022

பொழுது போக்க

 ஒரு பதிவின் தாக்கம் நான் எழுதியதுதான் ஒரு பதிவும்சில பின்னூட்டங்களும் 


              என்னை நானே உணர வை.
                                     -------------------------------------

ஆண்டொன்று கூட அகவை ஒன்று கூடுகிறது.
அதோடு சில வேண்டாத குணங்களும் கூடுகிறது..
ஆண்டவனே, நான்வேண்டுவதெல்லாம்-என் பேச்சைஅடக்கு
 எங்கும் எதிலும் என்னை வெளிப்படுத்த விரும்பும்
என் எண்ணங்களுக்குக் கடிவாளம் இடு.

மற்றோரின் குறைகளுக்கு தீர்வு கண்டு அதை
நீக்க முயலும் என் முனைப்புகளை உடை.

எல்லாவற்றையும் அடிமுதல் நுனி வரை ஆராய
நினைக்கும் என் மேதாவித்தனத்தை மாற்றிவிடு.

வட்டமாய் சிறகடித்து மேலிருந்து கீழே நேராய்
இரையை நாடும் பறவையைப் போல் சொல்ல
நினைக்கும் புள்ளியை நானடையக் கற்றுக்கொடு.

நான் படும் வேதனைகளை, வலிகளை
அடுத்தவன் முன் கொட்டித் தீர்க்க நான் வாய்
திறந்தால் அதனை அக்கணமே மூடிவிடு.

அடுத்தவனுக்கு உதவிட என்றும் நினைக்க வை கூடவே
 நானும் தவறிழைக்கலாம் என என்னையும் எண்ண வை.

நான் பட்ட அனுபவங்கள் ஏராளம் இருக்கலாம்.
படிப்பினைகள் ஆங்காங்கே கிடைத்தாலும் கிடைக்கலாம்.
அவரவர் வாழ்க்கை அவரவரே வாழ வேண்டும்.

இவ்வையகம் விட்டு நான் அகலும்போது என்னை
நண்பனாய், நல்லவனாய் நினைக்க நால்வர் வேண்டும்.


பின்னூட்டஙள்


  1. //எங்கும் எதிலும் என்னை வெளிப்படுத்த விரும்பும்
    என் எண்ணங்களுக்குக் கடிவாளம் இடு//

    சூப்பர் வரிகள் சார். vgk

    ReplyDelete
  2. முத்தாய்ப்பான நிதர்சன பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

  3. நான் பட்ட அனுபவங்கள் ஏராளம் இருக்கலாம்.
    படிப்பினைகள் ஆங்காங்கே கிடைத்தாலும் கிடைக்கலாம்.//

    அனுபவங்கள் என்பன நிகழ்வுகள் என்றால், அவற்றின் பயன் படிப்பினைகள் அல்லவா?.. செயல்களின் விளைவு அவற்றின் விளைச்சலான படிப்பினைகளே. ஓர்ந்து பார்த்தால் ஒவ்வொரு புதிய அனுபவமும் இதுவரைத் தெரிந்திராத
    ஒரு புதிய பாடத்தைச் சுமந்து கொண்டிருப்பது தெரியும்.
    தனிநபர்களுக்கு அவை கிடைப்பதும் கிடைக்காததும் அவற்றை அவரவர் உணரும் பாங்கு பொருத்து இருக்கிறது.

    //அவரவர் வாழ்க்கை அவரவரே வாழவேண்டும்.//

    இத்தனைக்கும் நடுவே முத்தான இரத்தின வரி.


  4. //மற்றோரின் குறைகளுக்கு தீர்வு கண்டு அதை
    நீக்க முயலும் என் முனைப்புகளை உடை.

    எல்லாவற்றையும் அடிமுதல் நுனி வரை ஆராய
    நினைக்கும் என் மேதாவித்தனத்தை மாற்றிவிடு//

    மேலே கேட்டது நடந்தால்;
    கீழே கேட்டது நடக்காது!!!

    //அடுத்தவனுக்கு உதவிட என்றும் நினைக்க வை கூடவே

    இவ்வையகம் விட்டு நான் அகலும்போது என்னை
    நண்பனாய், நல்லவனாய் நினைக்க நால்வர் வேண்டும்.//



  5. ஐயா...

    படிக்கும்போதே மன வேதனையாக உணர்கிறேன். வயது தளரும்போது நம்மின் சிந்தனைகளும் மாறுபட்ட திசையில் பயணிக்கத்தொடங்கிவிடுகின்றன. நம்முடைய பேச்சைக் கேட்பவர்கள் கேட்காத சூழலில்..அறிவுரைகள் அலுக்கும் சூழலில்.. வலிய உதவப் போய் அவமானப்படுகையில்..ஏதேனும் நன்மை கருதிய சொற்களைப் பேசினால் அதைக் கண்டும் காணாமல் அலட்சியப்படுத்துவது இவையெல்லாம் வயதின் தளர்வில் ஒவ்வொருவருக்கும் நிகழ்கிறது. ஆனால் இளையபருவம் இவற்றைத் தாங்களம் அனுபவிக்க நேரும் என்று உணர்வதில்லை.

    நான் சிலசமயம் பலருக்கு நானே வலியப் போய் உதவிசெய்து அதனால் பெருத்த அவமானத்திற்கு உள்ளாகியிருக்கிறேன்(உறவுகளிடம்).

    காரியத்திற்காக நம்மைப் பயன்படுத்தி பின் காரியம் முடிந்ததும் கறிவேப்பிலை உதறிய கூட்டத்தையும் நான் அனுபவித்திருக்கிறேன்.

    ஒரு மனிதன் சாதாரண பணியில் இருக்கும்போது அலட்சியப்படுத்தும் சூழலும் அவனே உயர்பதவிக்கு வந்து பணம் நிறைந்திருக்கையில் அவனிடம் நடிக்கும் கூட்டத்தையும் நான் கண்டு அனுபவித்திருக்கிறேன்.

    வயது ஏறஏற மௌனத்தை அதிகம் கடைப்பிடிப்பது வாழ்வின் இறுதிவரை நம்முடைய மரியாதையை மீட்டெடுக்கும் என்பது என்னுடைய பணிவான கருத்துரை.

    நீண்ட மனப்பகிர்விற்கு உள்ளாக்கிய உங்கள் பதிவிற்கு நன்றிகள்

    e

                                                                                                                                                                                                                                                                                                                                    
    1.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          

      வயது ஏறஏற மௌனத்தை அதிகம் கடைப்பிடிப்பது வாழ்வின் இறுதிவரை நம்முடைய மரியாதையை மீட்டெடுக்கும் என்பது என்னுடைய பணிவான கருத்துரை.

      இது தான் நம் மதிப்பை காப்பாற்ற உதவும். சரியான வார்த்தைகள்.






  6.  

             

7 கருத்துகள்: