ஒருவன் தன் மனைவி மக்கள் தன் மீது அத்யந்த அன்பு
கொண்டிருப்பதாகவும்,, அது காரணம் தன்னால் துறவு மேற்கொள்ள முடியவில்லை என்றும் ஒரு
பெரியவரிடம் கூறினான். அவர் “ நீ இன்னும் விஷயத்தை உள்ளவாறு புரிந்து கொள்ள
வில்லை. நான் தரும் இந்த குளிகையை சாப்பிடு.. உனக்கு எல்லாம் புரியும்” என்று கூறி ஒரு மாத்திரஒயை அவன்
உட்கொள்ளக் கொடுத்தார். அவன் தன் வீட்டுக்குப் போய் அதனை உட்கொண்ட சிறிது
நேரத்தில் கை கால்கள் எல்லாம் நீட்டி விரைத்து சவம் போல் ஆகிவிட்டான். திடீரென
அவன் மடிந்து விட்டது கண்டு அவன் மனைவி மக்கள் குய்யோ முறையோ என்று சிறிது நேரம்
கதறினர். பிணத்தை சவ அடக்கத்துக்கு வெளியே கொண்டு வர முயற்சித்தனர். கை கால்கள்
விரைத்துக்கொண்டு நீட்டி இருந்ததால் வாயிலில் அதைக் கொண்டு வர இயலவில்லை. உடனே
ஒருவர் கோடரியைக் கொண்டு கதவைப் பிளக்க முயன்றார். அதைப் பார்த்த மனைவி “ ஐயோ
அப்படி செய்யாதீர்கள். என் தலைவிதி நான் கைம்பெண் ஆகிவிட்டேன். குழந்தைகளை
காப்பாற்றும் பொறுப்பு எனக்குண்டு. இந்த நிலையில் கதவை உடைத்து விட்டீர்களானால்
அதை புதுப்பிக்க என்னிடம் வசதி இல்லை. விதி வசத்தால் அவர் மாண்டு போனார். அவர்
சவத்தை துண்டுகளாக வெட்டிக் கொண்டு போகலாம்” என்றாள். அந்த
நேரத்தில் குளிகையின் வீரியம் குறைந்து இறந்தவன் எழுந்து நின்றான். “ என்னைத்
துண்டு துண்டாய் வெட்ட வேண்டுமென்றா சொன்னாய்” என்று சொல்லிக் கொண்டே துறவியாக வெளியேறி விட்டான்.
குளிகை மனைவி சாப்பிட்டு இருந்தால்...?
ReplyDeleteஅடுத்த வாரமே இரண்டாவது திருமணம் என்று தெரிவதால்...
துண்டு துண்டாய் வெட்டப்படுவது உறுதி...!?
வித்தியாசமான பின்னூட்ட்டம்
Deleteஇந்தக் கதை முன்பே நீங்கள் இங்கு பகிர்ந்து வாசித்த நினைவு இருக்கிறது...மனிதர்கள் பல விதம்...சுயநலம்..
ReplyDeleteகீதா
உங்கள் நினைவு சரியானா ல் iஇப்போது நான் பதிவதெல்லாம் மிள் பதிவு என்று நான் எழுதி இருப்பபதும்ம் நினைவுக்கு வ்ர வெண்டுமே
Deleteஇதே கதையினை சற்று வேறுவடிவில் படித்த நினைவு வருகிறது
ReplyDeleteசுயநல விலங்கு அல்லவா மனிதன்
உங்கள் நினைவில் இருந்ததா
ReplyDelete