எண்ணப்பகிர்வு-கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எண்ணப்பகிர்வு-கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 ஏப்ரல், 2016

இனி ஒரு விதி செய்வோம்


                                         இனி ஒரு விதி செய்வோம்
                                         -------------------------------------------
 கல்வி
கல்வி பற்றி எழுதிக் கொண்டே போகலாம் முதலில் நம்  இலக்கு என்ன என்னும் புரிதல் வேண்டும் அதன் பின்  அதில் இருக்கும்  சிக்கல்களை ஆராய்ந்து தீர்ப்பு கூற வேண்டும்
இந்தப் பதிவில் கூறப்படும் விஷயங்களில் சில கருத்துக்கள் பற்றி நான் ஏற்கனவே எழுதி இருப்பேன்  நல்ல விஷயங்கள் என்று தோன்றுவதை ரிபீட் செய்வதில் தவறில்லையே நம் கண் முன்னே விரியும், நடக்கும், நமக்கும், ஏன்  சமுதாயத்துக்கும் ஒவ்வாத ஒவ்வொரு நிகழ்வும் மிகப்பெரிய தாக்கத்தை  ஏற்படுத்துகிறது. முடிந்தால்  இந்த  உலகத்தையே  புரட்டிப் போட்டு  மாற்ற வேண்டும்  என்ற வேகமும்  எழுகிறதுநியாயமானதுதானேநியாயத்துக்கும்  தர்மத்துக்கும்  கட்டுப் பட்டு நடக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும்  ஏற்படும்    எண்ணக்குவியலே    அவைஇருந்தாலும் நடப்பவைகள்  எல்லாமே  தவறானவை  அல்ல. வேண்டத்தகாதவைகள்  அல்ல.  இன்னும்  சிறப்பாக இருக்கலாமே, நன்றாக  இருக்குமே என்ற ஆதங்கமும், விருப்பமும்தான் மனதில் தோன்றுகிறது 

முதலில் நூறு சதவீதக் கல்விதான் இலக்கு. இதில் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லைகல்வி என்பது எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் சமூகத்தில் நிலவும் ஏற்ற தாழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

நம்மை  நாமே  ஆளும்போது ,நாம் எல்லோரும்  சமம்  எனும்போது , வாய்ப்புகளும்  சமமாக  இருக்க வேண்டும். வாய்ப்பு  வேண்டிப்  போராட  கல்வி அறிவு  அவசியம்அதுவும் பரவலான  நூறு   சதவீதக்   கல்வி அவசியம்

நாம்படித்தறிந்ததை பகுத்தறிந்து   உணர்ந்தால் அறிவுள்ளவர்களாக  ஆவோம்(படித்தவர்கள்  எல்லோரும்றிவுள்ளவர்கள்அல்ல .படிக்காதவர்கள்  னைவரும்  அறிவில்லாதவர்களும்  அல்ல.)
ஆனால் ஒருவனை  அறிவாளியாக்க படிப்பறிவு மிகவும் உதவும்
               எழுத்தறிவும் கல்வியறிவும்   பரவலாக்கப்பட்டால் சுயமாக சிந்திக்கும்   திறனை அவர்கள் வளர்த்துக்கொள்வார்கள்முனிசிபல், கார்ப்பரேஷன்  பள்ளிகளில்  படித்துப்  பெயர் வாங்கும்  சிறார்  சிறுமிகளும்  இருக்கிறார்கள்.,என்பது நமக்குத்  தெரிந்ததேநாம் எந்த   ஒரு விஷயத்தையும்  விவாதிக்கும்போது  மிடில்  கிளாஸ்  மேன்டாலிடியைத்தான் அளவு கோலாகப்  பயன்படுத்துகிறோம்ஏழை பாழைகளின்  கருத்தைக்  கேட்கவோ  எடுத்துச் சொல்லவோ  நம்மில் பலரும்  முன்  வருவதில்லை   இந்நிலையில் நூறு சதவீத எழுத்தறிவும்  படிப்பறிவும்  இருந்தால்  அவர்களை  அவர்களே  மேம்படுத்திக்  கொள்வார்கள்
நூற்றாண்டுகாலமாக இன்னாருக்குத்தான் கல்வி  இன்னாருக்கு அது கூடாது என்னும் ஆதிக்க மனப்பான்மையில் பெரும்பாலோருக்குக் கல்வி செல்லவே முடியாத நிலை இருந்தது இந்த ஆதிக்க மனப் பான்மையே நிலவும் ஏற்ற தாழ்வுகளுக்கான முக்கிய காரணம் கல்வி அறிவு வந்து விட்டால் மக்கள் சிந்திக்கத் துவங்குவார்கள் ஆனால் தற்போதைய கல்விமுறை சிந்திக்க வைக்கும் தன்மையுடையதா?கல்வி கற்றவர்கள் சிந்திக்கத் துவங்கியதும் நாடு அடிமைத் தளையிலிருந்து விடுதலைப் பெற்றதும் உயர்வு தாழ்வுகளே முன்னேற்றத்துக்குத் தடை என்று அறிந்து பிற்படுத்தப் பட்டவர்களும் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துக்கு விதை தூவப்பட்டதும் பலரும் அறிந்ததே

 நாடு சுதந்திரம் அடைந்ததும் பிற்பட்டோருக்கும் தாழ்த்தப் பட்டோருக்கும் இட ஒதுக்கீடு கல்வியிலும் உத்தியோகத்திலும் தேவை என்று உணரப்பட்டு 25% இட ஒதுக்கீடு 25 ஆண்டுகளுக்கு என்று நிர்ணயித்தார்கள் ஆனால் 25 ஆண்டுகளில் பெரிதான முன்னேற்றம் ஏதும் இருக்கவில்ல என்று அறிந்து அதிக ஒதுக்கீட்டுடன் இன்னும் தொடரப் படுகிறது இந்த இட ஒதுக்கீடு சரியான முறையில் பயன்  படுத்தப்பட்டிருக்கிறதா என்பதும் ஒரு கேள்வி. இட ஒதுக்கீடு பெற்றதனால் உயர் நிலைக்கு வந்தவர்கள் தங்களது வாரிசுகளுக்கும் அதைக் கோர பிற்படுத்தப்பட்டோரில் மீதி உள்ளோரின் நிலைமையும்  சீர்படவில்லை. ஒரு காலத்தில் ஆதிக்க சாதியாக பிராமணர்களே கருதப் பட்டனர். ஆனால் இன்றோ பிராமணர்கள் பிற்படுத்தோர் ஆகி மற்றையோர் உயர் சாதியாகக் கருதப்படும்  சாதி இந்துக்களாகவும் தாழ்த்தப்பட்டவர்களாகவும்  தொடர்கின்றனர் பிற்படுத்தப் பட்டோரில் நல்ல நிலைக்கு வந்தவர்கள் (creamy layers) தங்கள் வாரிசுகளுக்கும்  ஒதுக்கீடு கோருவது சரியானதா. ? முன்னேறிய சாதியினர் என்று  கூறப்படுபவர்களில் வாழ்க்கைப் படியில் மிகவும் பின் இறங்கிய நிலையில் இருப்பவர்களும் உண்டு.  பிறந்த சாதியின் காரணமாகவே அவர்கள் முன்னேறியவர்களாகக் கருதப் படுகின்றனர். இதுவும் அல்லாமல் இப்போது ஒரு புதியசாதி உருவெடுத்துள்ளதுஏழை பணக்காரன்  எனக்கு என்னவோ இந்த உயர்வு தாழ்வுகள் ஒழிக்கப் பட வேண்டுமானால் மக்கள் மனதில் மாற்றம் வர வேண்டும்  தானாக வரவில்லையானால் வருவிக்கப் படவேண்டும்  மனிதருள் அனைவரும் சமமே என்று ஏற்று கொள்ளப் படும் பக்குவம் இன்னும் பலருக்கும் இல்லை. இல்லாததை வருவிக்க மனிதருள் ஏற்ற தாழ்வு இல்லை எனக் காட்ட அதைத் துவங்கும் இடமே கல்விக்கூடமாகத்தான் இருக்கவேண்டும்அதற்கு ஒரே வழி எல்லோரும் சமம் என்று உணர்த்தப்படும் கல்வி வேண்டும்  அது எப்படி உணர்த்தமுடியும் என்னும் கேள்வி எழலாம் பள்ளிக்குச் செல்லும் சிறார்களைப் பள்ளியில் ஒரே மாதிரியாகப் பாவிக்க வேண்டும் அந்த இள வயதில் இந்த பாவனை வந்தால் அடுத்த தலைமுறையிலாவது பேதங்கள் இல்லாமல் போகும்  அதற்கு பள்ளிப் படிப்பு எல்லோருக்கும் கட்டாயப் படுத்தப்பட வேண்டும்  அனைவருக்கும்  சமமான கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டும் அனைவருக்கும்  இலவச உணவு அளிக்கப்படவேண்டும் அனைவருக்கும் ஒரே சீருடை வழங்கப்பட வேண்டும் இவை அத்தனையும் அரசாங்கச் செலவில் இலவசமாக வழங்கப்பட வேண்டும் படிக்கும்  சிறார் மனதில் உயர்வு தாழ்வு எண்ணம்  மடிந்து போகும் 

ஆனால்............
 இப்படியெல்லாம் நடப்பது சாத்தியமா என்னும்  கேள்வியும்  எழுகிறது கல்வி என்பது மத்திய அரசின் பொறுப்பில் இருக்க வேண்டும் நிதி ஒதுக்கீட்டில் கல்விக்கான நிதியே முதலிடம் வகிக்க வேண்டும்  இது நடக்க இப்போது இருக்கும்  கல்வி வியாபாரிகள்  எதிர்ப்பு தெரிவிப்பார்கள் இருக்கும் நிலை தொடர்ந்தால்தானே இவர்கள் இன்னும்  செழிக்க முடியும்

கல்வியை  வியாபாரமாக்கும் கும்பலுக்கு  நாம்தான்   துணை போகிறோம். அரசு  பள்ளிகளை  ஆதரித்து ,அதன்  தரம்  உயர  நாம் ஏன்  பாடுபடக்கூடாது. ?
எனக்குத் தெரிந்த ஒருவர் பழைய சாமன்களை வாங்கி விற்றுப் பிழைப்பு நடத்துபவர் எதிர் வரும் ஆண்டில் அவரது பிள்ளைகளுக்கான பள்ளிக் கட்டணத்துக்கு என்ன செய்வது என்னும் கவலை அவருக்கு அவரது குழந்தைகளை ஆங்கில வழிப் போதனை செய்யும் பள்ளிகளுக்கு அனுப்புகிறார் ஆங்கிலவழிக்கல்வி பெற்றால் பெருமை சிறந்தது என்னும்  எண்ணம் அவருக்கு. என்னதான்  அரசாங்க இலவசக் கல்வி அளித்தாலும் இவர் ஆங்கிலவழிப் பள்ளிக்குத்தான் தன்  பிள்ளைகளை அனுப்புவார் இந்த வித்தியாசம் எதுவும் இல்லாமல் இருந்துவிட்டால் உன்கல்வி நல்லது என்  கல்வி மோசம் என்னும்  எண்ணமே இருக்காதல்லவா
 இரண்டரை வயதுக்கும் கீழான குழந்தைகளை ப்ளே ஸ்கூலுக்கு  அனுப்புகிறார்கள்  குழந்தைகளை வள்ர்க்கும் பொறுப்பில் இருந்து விலகுகிறோமோ பெற்றோர் இருவரும் வேலைக்குப் போகும் போது நிலைமை இன்னும்  மோசம் மழலை மாறாத குழந்தைகளுக்கு  அபத்தமான ரெயின்  ரெயின் கோஅவே என்னும் ரைம்ஸ் கற்பிக்கப் படுகிறது சிறார்களுக்கு ஐந்து ஆறு வயதில்தான் விரல்களை வசப்படுத்தும்  சக்தி இருக்கும்  ஆனால் இம்மாதிரி பள்ளிக்கூடங்களில் குழந்தைகளை எழுத வைக்கிறார்கள் இதுதான்  சரி என்று பெற்றோரும்  எண்ணுகின்றனர்இவை எல்லாம் சீரான சிந்தனை இல்லாததை உணர்த்துகிறது
குறிப்பிட்ட பள்ளிகளில் மழலைமாறாத குழந்தைகளைச் சேர்க்க முன்னிரவு முதலே வரிசையில் நிற்கும் பெற்றோர்களை என்ன சொல்வது?முண்டி அடித்து ரூபாய் 50000 வரை கல்விக் கட்டணமாகச் செலுத்தி அதை பெருமையுடன் பறை சாற்றும் பலரே இன்றையக் கல்வியைச் சாடுகின்றனர் இதைஎல்லாம் மாற்ற ஒரே வழி அனைத்துக் கல்விநிலையங்களும் அரசுடைமை ஆக்க வேண்டும்  வங்கிகளை அரசுடமை ஆக்கிய போதும்தான் குய்யோ முறையோ என்று கூக்குரலிட்டனர். இன்று நிலை சீராயிருக்கவில்லையா. மாற்றம் ஒன்றே மாறாதது என்று முழங்குகிறோம் .  ஆனால் நல்ல மாற்றங்களை எதிர்க்கிறோம்
பொறியியல் மருத்துவம் போன்ற மேல் படிப்புக்குப் பெரும்பாலும் பெற்றோரின்  உந்துதலே காரணம் இப்போது பெற்றோரின் தூண்டுதல் ஐடி படிப்பின் பால்  நிற்கிறதுஇதற்கு பெற்றோரை மட்டும் குறை சொல்ல மாட்டேன் இதெல்லாமே ஒரு மனமயக்கம்தான் பொறி இயலும் மருத்துவமும் ஐடி படிப்பும்தான் படிப்பு என்னும் மாயத் தோற்றம் இருக்கிறது நான் பொறீயல் பட்டதாரி அல்ல . இருந்தாலும்  பயிற்சியால்  பொறி இயலில் ஏற்றம் கண்டேன்  என் கீழே பல பட்டதாரிகளும்  பணி புரிந்தனர்  இருந்தாலும் என்னிடம் அவர்கள் மதிப்புக் குறையவில்லை.  நான் என்னைப் பற்றிக் கூற வேண்டிய அவசியம் இல்லை.  இருந்தாலும் எல்லாமே பட்டப்படிப்பால்தான்  முடியும் என்பது நேரான கருத்து அல்ல என்பதைக் காட்டவே கூறினேன்

அடிப்படையில் இப்போது இருக்கும்  கல்வி நிலை மாற வேண்டும் . மாற்ற வேண்டும் இனி ஒரு விதி செய்வோம்  உயர்வு தாழ்வு எண்ணங்களைப் போக்க சீரான சமகல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப் படவேண்டும்  பலருக்கும்  இது நடைபெற முடியாத ஒன்று என்றும்,  பள்ளிகளில் இருந்து வெளியே வருவோரின்  தரம் குறைந்து விடும்  என்றும் எண்ணலாம்ஒரு உதாரணம் கூறி முடிக்கிறேன் இரண்டாம் உலகப் போர் முடிந்த போது ஜப்பான் அநேகமாக தரை மட்டமாக்கப் பட்டது. இருந்தாலும் இன்று அவர்கள் உற்பத்தியிலும் தரத்திலும்  உலகின் முன்னோடிகள். அப்போதெல்லாம் ஜப்பானியப் பென்(pen) கள் விலை மிகவும் சலிசாக இருக்கும் / ஆனால் அவற்றின் தரம் சொல்லும்படியாக இருக்காது. முதலில் அவர்கள் நோக்கம்  அதிக எண்ணிக்கை  மலிவாகக் கொடுப்பது. பின் போகப்போக அவற்றிலேயே தரத்தைப் புகுத்துவது 
அது போல் நாம் முதலில் அனைவருக்கும்  கல்வி வழங்குவோம்  போகப்போக தரமும் உயரும் / ஏற்றதாழ்வும்  மறையும்