மாற்றங்கள்
----------------------
மாற்றம்
ஒன்றே மாறாதது என்பது அடிக்கடி கூறப்படும்வாசகம் ஆனால் மாற்றங்கள் நிகழும் போது
அவை எளிதில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை
நான்
திருச்சியில் பி எச் ஈ எல் லில்
இருந்தபோது என்னை இடம்மாற்றி உத்தரவு வந்தது எந்த இடமென்று குறிப்பிட்டு
இருக்கவில்லை சென்னைக்குப்
போய் இருக்க வேண்டும் என்றும் அங்கு சென்றபின் சிலநாட்களில் மாற்றல் எந்த இடத்துக்கு என்று தெரிவிக்கப்படுமென்றும்கூறினர்
என் பிள்ளைகள் அபோதுதான் படிப்பில் வேரூன்றி இருக்கும் நேரம் எங்காவது மாற்றல் ஆனால் அவர்கள் படிப்பு கெடும் என்றும் என்னை மாற்றியது என்னை எனக்குத் தெரியாத
வேலையில் ஈடுபடச்சொல்வார்கள் என்றும் பயம்
இருந்தது நான் என்வேலையை ராஜினாமா செய்து ஏதாவது பெட்டிக்கடை
வைத்துப்பிழைக்கலாமா என்னும்யோசனையில் இருந்தேன் இருந்தாலும் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
என்று சென்னைக்குச் சென்றென் அங்குஓரிரு மாதஙள் திரிசங்கு சொர்க்கம்போல் இருந்தது
அதே சமயம் பி எச் ஈ எல் லிலிருந்துஒரு டெபுடி ஜெனரல் மானேஜர் சென்னைக்கு வந்தார் அவருக்கும் மாற்றல் உத்தரவு
வந்து விஜய வாடா தெர்மல் பவர் ஸ்டேஷனை நிறுவ உத்தரவு இருந்தது
அவர் என்னை சென்னை ஆஃபீசில் பார்த்தபோது
விஜயவாடாவுக்கு வர விருப்பமா என்று கேட்டார் அவருக்கு என்மேல்
நம்பிக்கைஇருந்தது நல்ல அதிகாரி சரிஎன்றேன்
உடனே என்னை விஜயவாடா சென்றுஅங்கு வருவோரின் பிள்ளைகளுக்கு
பள்ளிமற்றும் வீட்டு வசதி எல்லாம் எப்படி என்று பார்த்து வரப்பணித்தார் மாற்றல் இடம்தெரிந்ததுஇதைப் பற்றி நான் முன்பே விஜயவாடா நினைவுகள் என்றுஒருபதிவு எழுதி இருந்தேன்
l
சில மாற்றங்களின் பாதிப்பு அவரவருக்கு வந்தால்தான்
தெரியும் மாற்றம் கண்டு பயந்த நான் அந்தமாற்றம்மூலம் என்னை நிரூபிக்கும் வாய்ப்பாகமாற்றிக்
காட்டினேன் அதுவரை நான் செய்திராத வேலை சொல்லப்போனால் முற்றிலும் புதிதாய் கற்க வேண்டிய வேலை. அங்கு பணிக்குச்சென்ற முன்னோடிகளில் முக்கியமானவன் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள்.
வாழ்க்கையில் போராட்டங்களிலேயே உழன்றவன் என்பதால்
அவற்றையும்சமாளித்து பெயர் பெற்றேன் நான்
விஜயவாடா பணியிலிருந்து மறுபடியும் திருச்சிக்கு கிளம்பும்போது VTPS –ன் SUPERINTENDING ENGINEER சொன்ன வார்த்தைகள் இன்னும்
என் காதுகளில் ரீங்கரிக்கிறது. அவர் சொன்னார்,” BALU WHENEVER I COME NEAR THESE MACHINES I WILL HEAR
THEM CALL –BALU, -BALU” ஒரு தொழிலை புதிதாய்
கற்று நல்லபெயர் வாங்கின திருப்தி இடமாற்றத்தின் விளைவே இன்றுசிந்திக்கும் போது
நான்முன்பு யோசித்தபடி வேலையை
ராஜினாமா செய்திருந்தால் என்னென்ன
மாற்றங்கள் நிகழ்ந்திருக்குமோ
தெரியவில்லை
ஆரம்பகாலத்தில் அரசுபணிகளில்
வங்கிகளில் இன்னும் பல இடங்களில்
கணினிக்கு ஒருபெரிய எதிர்ப்பே இருந்தது ஆனால் இப்போதுஎல்லாமே கணினி மயம் கணினி
உதவியால் உலகத்தையே கைகளின்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிகிறது கணினி புழக்கத்துக்கு வந்தால்
வேலையில் இருப்போரின் வேலைக்கு பாதிப்பு வந்து பணி இழப்பு ஏற்படும் என்னும்
பயமிருந்தது ஆனாலந்தபயங்கள் ஆதாரமற்றவை என்று ஆயிற்று அதேபோல் கூடங்குளம் மின்
நிலையம் வந்தால் எதிர்பார்க்காத இழப்புகள் ஏற்படலாம் பயம் இருக்கலாம் ஆனால் பயம்மட்டுமே கூடாது ஒரு
திரைப்படசம்பவம் நினைவுக்கு வருகிறது
நாகேஷ் நடித்ததுஎன்று
நினைவு அவருக்கு எங்காவது நெருப்பு
கண்டால் கற்பனையில் எல்லாமே எரிந்து போகும் என்றபயம் விளக்கில் தீயைக் கண்டால்
அந்ததீ பற்றி எரிவது போலவும் எல்லாமே
சாம்பலாவதுபோலவும் இருக்கும் கூடங்குள
நிலையத்துக்கு எதிர்ப்பாக எழுதிய ஒரு
பதிவுக்கு பின்னூட்டமாக நான் இக்கதையை சுட்டிக்காட்டி எழுதி இருந்தேன் இதேபோல்டான்
முல்லைப் பெரியாறினுயரத்தைக்கூட்டினால்
அது அழிவுக்கு வித்திடும் என்னும் பயமிருந்ததும் நினைவுக்கு வருகிறது ஒரு கதை நினைவுக்கு வருகிறது ஒரு பெரியவர்
ஊரில் நடக்குமநேகைழவுகளில் ஆறுதல் கூறுவார்
மக்களும் பெரியவரின்பேச்சால்
ஆறுதல் அடைவார்கள் ஒரு நாளந்தப் பெரியவரின் வீட்டில் ஒரு இழவு நடந்து மிக்க
வருத்தமுடன் அவர் அழுது கொண்டிருந்தார் ஊர் மக்கள் எங்களுக்கு தைரியம்சொல்லும்நீங்கள்
மனம் உடையலாமா என்று கேட்டனர் அதற்கு அவர்
உங்கள் இழப்புக்கு நான் ஆறுதல் கூறலாம் ஆனால் இப்போது இழப்பு எனக்கல்லவா என்று கூறி அழுதாராம்
எந்தஒரு நஷ்டமும் அவரவருக்கு வந்தால்தான்
தெரியும் அதுவும் உண்மைதான்
தொழில் நிறுவனங்களில் இந்த ஐ எஸ் ஓ நிலைப்பாடுகளை அமல் படுத்த நிலவும்
எதிர்ப்புகளை கண்கூடாகக் கண்டவன் நான். ஐ எஸ் ஓ பிரகாரம் செய்வதைச் சொல் சொல்வதைச் செய் என்பதே
தாரக மந்திரம் அதை நிரூபிக்க
டாக்குமெண்ட்ஸ் வேண்டும் என்றும் வற்புறுத்தப்படும் நாங்கள்செய்வது பொருட்களின்
தரத்தில் பிரதிபலிக்கும் அதை விட்டு டாகுமெண்ட்ஸ் என்பதெல்லாம் வேஸ்ட் என்னும் நிலைப்பாடே ஊழியரிடம் காண்பது
மாற்றங்கள் காலத்தின் கட்டாயம் என்றாலும்
அதை எதிர்ப்பதும் ஒரு வழக்கமாகி
விட்டது இதை நாம் எந்த ஒரு நிகழ்விலும் காணக்கூடும்
சமூக வழக்கங்களில் மாறுதல் வேண்டும்
என்பதை பலரும் அறிந்தாலும்
அவற்றைக்கண்டு ஏதோ ஒரு இனம்தெரியாத
பயமும் அதை எதிர்க்கச் செய்யும்
என்னென்ன மாற்றங்கள் தேவை
என்பதைநான் விவரிக்கப்போவதில்லை பல பதிவுகளில் கூறி இருக்கிறேன் ஆனால் மாற்றங்கள் நிச்சயம் நிகழும் முக்கியமாக மக்களிடம் மன மாற்றம் தேவை அதுவும்நிகழும்