திருடன்--போலீஸ் (சிறு கதை)
---------------------------------------------
ஒரு
கணவனும் மனைவியும் வீதியில் நடந்து செல்கிறார்கள் ஒரு செயின் ஸ்நாட்செர் மனைவியின்
கழுத்தில் இருந்த செயினை மோட்டார் சைக்கிளில் வந்து உருவிக் கொண்டு போனான் இருவரும் காவல் நிலையத்துக்குப் போனார்கள் .
மனைவியிடம் காவல் அதிகாரி அந்த செயினை வாங்கிக் கொடுத்தது யார் என்று கேட்கிறார்
கணவன் என்று பதில் சொன்னார் மனைவி. உங்கள் மேல் கணவனுக்கு அதிகப் பிரியமா என்று
கேட்டார் காவல் அதிகாரி. ஆம் என்றாள் மனைவி. காவல் அதிகாரியையே பார்த்துக்
கொண்டிருந்த கணவன் புகாரைப் பதிவு
செய்யும் நேரத்தில் புகார் வேண்டாம் என்றான். ஏன் என்றார் காவல் அதிகாரி. அது
தங்கமல்ல கவரிங். போனால் போகட்டும் என்றான் கணவன். மனைவி கணவனிடம் சண்டை போடத்
துவங்கி விட்டாள் மனைவி.கவரிங் நகை போய் விட்டதற்கா புகார் என்று கோபித்துக்
கொண்டார் காவல் அதிகாரி.
சற்று
நேரத்தில் இருவரும் வந்த வழியே திரும்பிக் கொண்டிருந்தனர். திடீரென்று மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவன் கணவன்
கன்னத்தில் அறைந்து கவரிங் நகை ஒரு கேடா என்று திட்டிவிட்டு அந்தக் கவரிங் நகையை
வீசி விட்டுச் சென்றான் . கணவன் ஓடிப்போய் அதை எடுத்து வந்து மனைவியிடம்
கொடுத்தான். கவரிங் நகை தேவை இல்லை என்று மனைவி கோபித்துக் கொண்டாள். இது கவரிங்
அல்ல அசல் தங்கம் என்றான் கணவன். பிறகு ஏன் புகாரை வாபஸ்வாங்கி அது கவரிங் என்று
சொன்னாய் என்று கேட்டாள் மனைவி. அப்படிச் செய்ததால்தான் நகை மீண்டும் கிடைத்தது
என்றகணவன் , நான் புகாரை வாபஸ் பெறுகிறேன் என்று சொல்லி அதன் காரணத்தையும்
சொன்னபோது காவல் அதிகாரியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கவரிங் என்று
சொன்னதால் நகை மீண்டது என்றான் கணவன். திருடனுக்கும் காவல் அதிகாரிக்கும் இருந்த nexus கணவனுக்குப்
புரிந்திருந்தது.