எதிரும் புதிரும் கணவன் மனைவி
----------------------------------------------------------
கணவன் – இந்த தீபாவளிக்கு உனக்குப் பட்டுப்புடவை
மனைவி- எதை வெச்சு சொல்றீங்க
கணவ - உன் வளையலை வெச்சுத்தான் சொல்றேன்
=========
மனைவி- ஏங்க நம்ம பெண்ணுக்கு வயசாகிகிட்டே போகுதே.அவளுக்கு சீக்கிரமா ஒரு
மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா
கணவன் அழகா லட்சணமா மாப்பிள்ளை
கிடைக்கும் வரை காத்திருக்கட்டும்டி
மனைவி- எங்கப்பா அப்படியா காத்திருந்தார்
==========
கணவன் –என்ன இது மிக்சி க்ரைண்டர் புடவைன்னு ஏகப்பட்ட சாமான்களோட
வேன்ல வந்து இறங்கறெ
மனைவி- நீங்கதானே சொன்னீங்க பேங்ல
இருக்கற நம்ம ஜாயிண்ட் அக்கௌண்டை க்லோஸ்
செய்யணும்னு அதைத்தான் செய்திட்டு வரேன்
=========
கணவன் -ஏன் நான் உள்ளார
வந்தவுடன் கண்ணாடியை எடுத்துப்
போட்டுக்கறெ
மனைவி- டாக்டர்தானே சொல்லி இருக்கார். தலைவலி வந்தவுடன் கண்ணாடி போட்டுக்கணும்னு
===========
கணவன் = உங்கப்பா பெரிய ஒலிம்பிக் ரசிகரா இருக்கலாம் அதுக்காக தங்க
நகைகளுக்குப் பதில் வெண்கல நகைகளை செய்து போட்டால் என்ன அர்த்தம்
மனைவி – நீங்க எனக்கு மூன்றாவதா வந்த புருஷன்னு அர்த்தம்
==========
மனைவி- நேத்து ராத்திரி கனவுலஎனக்கு நீங்க நிறைய நகை வாங்கித்தந்தீங்க
தெரியுமா
கணவன் – ஓ தெரியுமே உங்கப்பா கூட அதுக்குப் பணம் கட்டினாரே
==========
கணவன் –ஏண்டி எப்பப் பார்த்தாலும்
எரிஞ்சு விழரே
மனைவி நீங்கதானே சொன்னீங்க
கோபப்படும்போது நான் அழகா இருக்கேன்னு
=========
மனைவி – நமக்குக் கல்யாணமாகி 10 வருஷங்கள் ஆச்சு
கணவன் -எனக்கு மறந்து போச்சு
மனைவி- இது கூடவா
கணவன் நல்லவிஷயங்கள் மட்டும்தான்
எனக்கு நினைவில் இருக்கு
==========
கணவன் -ஏன் இந்த மாசம் போன் பில்
அதிகமா வந்திருக்கு
மனைவி – உங்கம்மா வெளியூர் போயிட்டா நான் சும்மா இருக்க முடியுமா தினமும் எஸ்டி டி போட்டு சண்டை போட வேண்டியதா இருக்கு
================
கணவன் – உனக்குத்தான் ரெண்டு
கண்ணும் ஒழுங்கா இருக்கெ ஒழுங்கா அரிசில
கல்லப் பொறுக்க மாட்டியா
மனைவி =உங்களுடைய 32 பல்லும் ஒழுங்காத்தானே இருக்கு ரெண்டு மூணு கல்லைக் கடிச்சு சாப்ப்ட முடியாதா
==============
மனைவி- என்ன பார்த்துகிட்டு இருக்கீங்க
கணவன் –ஒண்ணுமில்ல
மனைவி –ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மாரேஜ் சர்ட்டிஃபிகேட்ட பார்த்துட்டு
இருக்கீங்க
கணவன் – எங்கேயாவது எக்ஸ்பைரி டேட்
போட்டிருக்கான்னு பார்க்கிறேன்
=============================
(எதுவும் என் கற்பனையல்ல)
இந்தக் காணொளி பார்த்து ரசிக்கவும் பொறாமை படவும்
(எதுவும் என் கற்பனையல்ல)
இந்தக் காணொளி பார்த்து ரசிக்கவும் பொறாமை படவும்