நினைக்க நினைக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைக்க நினைக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 செப்டம்பர், 2017

நம்பிக்கைகள் பலவிதம்


                             நம்பிக்கைகள் பலவிதம்
                           -----------------------------------------
யானைக்குத் துதிக்கையில் பலம் மனிதனுக்கு நம்பிக்கையில் பலம் என்று கூறுவது வழக்கம் ஆனால் இந்த நம்பிக்கைகள் பகுத்தறிவுக்கு ஒவ்வாமல் போகும்போது எனக்கு கொஞ்சம் கோபம் வருவது உண்மை  நிறைய எழுதி இருக்கிறேன்  சில நம்பிக்ககைகளையும்  பலன் களையும் கூறுகிறேன் அது என்னைச் சார்ந்து இருக்கும் போது அதிக வீச்சுபெறுகிறது
என்  மனைவிக்கு  கையில் ஒரு மரு வளர ஆரம்பித்தது வலி ஏதும்  இருக்கவில்லை என்றாலும் பார்ப்பதற்குஅதுவும்  என் மனைவிக்கு ஒரு மாதிரி இருந்தது விஜய வாடாவில் இருந்தபோது அங்கே இருந்த மருத்துவர் ஒருவரிடம் காட்டினோம்   அவர் ஜஸ்ட் இக்நோர் இட் என்றார்  முடியவில்லை என்றால் ஒரு சிறிய அறுவைச் சிகிச்சை செய்து அகற்றிவிடலாம்  என்றார் என் மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்யவிருப்பமிருக்கவில்லை  சிறிது காலத்துக்கு  பொறுத்திருந்து பார்ப்பது என்று முடிவாயிற்று  எனக்கும் மீண்டும் திருச்சிக்கே மாற்றல் ஆயிற்று அங்கு ஒரு சரும மருத்துவரிடம் காண்பித்தோம்  அவர் அதைப் பார்த்து ஒன்றும்  செய்ய வேண்டாம்  நம்பிக்கை இருந்தால் வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று குளத்தில் வெல்லம்கரைத்து உப்பும் கொடுத்து வாருங்கள்   என் மனைவிக்கு அறுவைசெய்யாமல் இருப்பதுதானே  முக்கியம் மேலும்  அவளுக்கு நம்பிக்கையும்  இருந்தது நாங்கள் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வேண்டிக்கொண்டு சொன்னபடி செய்து வந்தோம் ஒரு சில நாட்களில் கையில் இருந்தது மருவா எங்கே போயிற்று தெரியவில்லை  அதுவாக மறைந்ததா கடவுள் அதை நீக்கினாரா என்பதெல்லாம் அவரவர் நம்பிக்கை
இன்னொரு செய்தி. எனக்கு ஒரு சித்தப்பா இருந்தார் வயது ஏற ஏற பார்வையை முற்றிலும்  இழந்திருந்தார் ஒரு ஃபார்மசி ஏஜென்சி  நடத்திக் கொண்டிருந்தார்  அவரது வேலையைஅவரே செய்து கொள்வார்  திருச்சூரில் ஒரு முறை அவரைப் பார்க்கப் போனோம்  பேசிக்கொண்டிருக்கும் போதே அவர் சொன்னது  வாழ்க்கையே நம்பிக்கையில் ஓடுகிறது எனக்கோ கண்பார்வை கிடையாது பார்வை போனபின் லக்ஷ்மி கடாட்சம் கிடைத்திருக்கிறது எனக்கோ பார்வை தெரியாது நான் சாப்பிடும் உணவில் என் மனைவி விஷம் கலந்தால் எனக்குத் தெரியவா போகிறது  வாழ்க்கையே நம்பிக்கையில்தான் ஓடுகிறது என்றார்
 இந்த மாதிரி நம்பிக்கைகள் ஒருவருக்கு இருந்தால் நல்லது அதே சமயம் பாம்புப் புற்றுக்கு பால் ஊற்றுவதும்  பிறர் உண்ட எச்சில் இலையில் புரண்டு எழுவதும்  தலையில் தேங்காய் உடைக்கவைத்து பிரார்த்தனை என்னும் பெயரில் செயல்கள் புரிவதும் அலகு குத்தி தன்னை வருத்தி பரிகாரம் செய்ய முற்படுவதும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல்கள் என்றே தோன்று கிறது சில மரங்களை வெட்டினால் உயிருக்கு ஆபத்து என்று நினைத்தவர்களையும் பார்த்திருக்கிறேன்  
 நம்பிக்கைகள் பலவிதம்  நான் நம்பிக்கை பற்றி ஒருபதிவு எழுதி இருந்தேன் அது இங்கே கீழே

 
  நிலந்திருத்தி  விதைக்கும் விதை கிளர்ந்தெழு  மரமாகி  கனி கொடுக்கும்  என்பது  நம்பிக்கை.

மெய்   சோர்ந்து  உழைத்து  உறங்கி  எழும் புலரியில்  உயிர்த்து  எழுவோம்  என்பது  நம்பிக்கை

 பயண  சீட்டெடுத்து  பஸ்ஸோ ரயிலோ  ஏறி சேருமிடம்  சேதமின்றி  சேருவோம்  என்பது நம்பிக்கை

 பாலூட்டி சீராட்டிப  பெற்றெடுத்த  பிள்ளை  பிற்காலத்தில்  நம்மைப்  பேணுவான்  என்பது நம்பிக்கை

 நோயுற்ற  உடல்  நலம் பேண நாடும்  மருத்துவர் பிணி  தீர்ப்பார்  என்பது நம்பிக்கை

 நல்ல படிப்பும்  கடின உழைப்பும்  வாழ்க்கையில்  வெற்றி  பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை
வாழ்வின்  ஆதாரமே நம்பிக்கைநம்பிக்கைகள் பல விதம் 

. இருப்பினும் ,

 தாய் சொல்லி  தந்தை  என்றறியப்படுவதே  தலையாய  நம்பிக்கை.   

நம்பிக்கையில் இன்னொரு வகை  காணொளீயாக கீழே