கதம்பப் பகிர்வுகள்
-------------------------
சில முரண்பாடுகள்
அரசியல் வாதிகள் நம்மை பிரிக்கிறார்கள். தீவிரவாதிகள் சேர்க்கிறார்கள்
முன்பின் தெரியாதவருடன் பழகுவது தவறு என்று எச்சரிக்கப் படுகிறோம். ஆனால்
முன்பின் தெரியாதவரோடு வாழ தூண்டப் படுகிறோம்
.
.
போலிஸைக் கண்டால் நட்பு பாராட்டுவதற்குப் பதில் பயமே வருகிறது
.
.
ப்ரியங்கா சோப்ரா மேரி கோமாக நடித்து அதிகபணம் சம்பாதித்து விட்டார்.அசல்
மேரி கோமைவிட.
கீதை பெரிசா குரான் ப்ரிசா என்று சண்டையிடுபவர்கள் அவற்றைப் படித்திருக்காமல்
இருக்கும்வாய்ப்பு அதிகம்
பெண்களின் படிப்புக்கு செலவு செய்வதை விட அவர்கள் திருமணத்துக்கு அதிகம்
செலவு செய்கிறோம்
கால்களில் அணியும் காலணிகள் குளிர்சாதனம் செய்யப்பட்ட கடைகளில் விற்பனை
ஆகிறது. ஆனால் நாம் உண்ணும் காய்கறிகள் தெருவோரங்களில் விற்கப் படுகின்றன.
நம் சமூகத்தில் கற்பழிக்காதே என்பவரைவிட கற்பழிக்கப் படாதே என்று
கூறுபவர்களே அதிகம்
வரதட்சிணை வாங்குவது தவறு என்று பல நூறு வார்த்தைகளில் எழுதி பரீட்சை பாஸ் செய்து ஐஏஎஸ் பணியில் அமர்பவர்கள்
அந்த ஐஏஎஸ்-ஐக் காட்டியே வரதட்சிணை அதிகம் கேட்கிறார்கள்
.
.
மொபைல் ஃபோனுக்கு ஸ்க்ரீன் கார்ட் வைத்துக் கொள்ள விரும்புவார்கள். ஆனால்
தலைக்கு ஹெல்மெட் அணிய மாட்டார்கள்
.
.
படுமோசமான படங்கள் வசூலில் குவிக்கின்றன.
இளமையில் வேண்டாம்
என்று ஒதுக்க படும் ஆண்கள் பிற்காலத்தில் நல்ல கணவன்களாகத் தெரிகிறார்கள்
சிறிது நகைக்க
”சற்று விளக்கமாகக் கூறேன்”.
”என் மனைவி எப்போதும் என்னுடன்
இருக்கிறாள். மைத்துனி அவ்வப்போது வருகிறாள். போகிறாள்”
.
.
ஒருவனின் டி ஷர்டில் கண்ட வாசகம்
”என்னைத் தொந்தரவு
செய்யாதீர்கள். எனக்குத் திருமணம் ஆகி நான் ஏற்கனவே கஷ்டத்தில் இருக்கிறேன்”
ஒரு உணவகத்தில் உணவு பறிமாறப் பட்டது.
கணவன்:- உணவு டெலிஷியஸாகத் தெரிகிறது. சாப்பிட்லாம்
மனைவி:- உணவு உண்ணும் முன்பாக இறைவனை வேண்டுவாயே
கணவன்:- அது
வீட்டில்.அன்பே.... இங்கு சமைத்தவருக்கு நன்கு சமைக்கத் தெரியும்
.
.
ஒருவன் அவன் மனைவிக்கு ஒரு நெக்லேஸ் பரிசளித்தான். அவள்
அவனுடன் ஆறு மாதத்துக்குப் பேசவில்லை இதைப் பார்த்த நண்பன் ஒருவன் கேட்டான்
”ஏன் நெக்லேஸ் போலியா”
”இல்லை அது எங்களுக்குள்ளான
ஒப்பந்தம்”
சிந்திக்க சோதிக்க..:-( கீழே காணும் செய்திகளை நான் சோதித்துப்
பார்க்கவில்லை. எனக்கு வந்ததைப் பகிர்கிறேன் தவறுகள் இருந்தால் நான் பொறுப்பல்ல.உ-ம்
வெள்ளிக்கிழமைகள் என்பது சனிக்கிழமை என்றிருந்திருக்க வேண்டும் என்னிடம் 1997-ம்
வருடக் காலண்டர் இல்லை)
”ஐயா அலுவலகத்தில் நீங்கள் சிங்கம்....
வீட்டில் எப்படி.?”
”வீட்டிலும் நான் சிங்கம்தான்.
ஆனால் அங்கு என் மனைவி துர்காவாக சிங்கத்தின் மீது அமர்ந்திருப்பாள்”.
2015-ல் வெள்ளிக் கிழமைகள்
04-04-2015
வெள்ளிக்கிழமை
06-06-2015
வெள்ளிக்கிழமை
08-08-2015 வெள்ளிக்கிழமை
10-10-2015 வெள்ளிக்கிழமை
12-12-2015 வெள்ளிக்கிழமை
1997-ம் வருட காலண்டரும் 2015-ம் வருட காலண்டரும் ஒரே மாதிரியே.
விழாக்களும் நாட்களும் ஒரே நாளில்.. யார் சொன்னது கடந்த காலத்துக்குப் போக
முடியாது
2015-ல் 1997-ம் வருடத்தை அனுபவியுங்கள்
( எத்தனை முறை வேண்டியும் என் பதிவுகள் எனக்குத் தெரியாமலேயே தமிழ் மணத்தில் இணைக்கப் படுகின்றன. மீண்டும் வேண்டுகிறேன் என் மீது இந்தக் கரிசனம் வேண்டாமே)