பசி சுவை இன்னபிற லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பசி சுவை இன்னபிற லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

பசி உணவு சுவை


                                 பசி உணவு  சுவை
                                 ---------------------------
முதலில் பசி என்றல் என்ன என்பதை எனக்குத் தெரிந்த வரையில் சொல்கிறேன் நாம் உண்ணும்போது  அதை செரிக்கச்செய்ய வாயில் உமிழ் நீர் முதல் குடலில் செல்லும்போது சுரக்கும்   திரவங்கள் வரைஉடல் உற்பத்தி செய்கிறது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கத்தினால்  அவற்றைச் செரிக்கச் செய்ய இந்த திரவங்களும்  தயாராய் இருக்கும் உணவு உள்ளே சென்றால்  அவற்றைச் செரிக்க செய்ய  உதவும்திரவங்கள் வயிற்றில் உணவு இல்லாதபோதும் சுரக்கும் இப்படி சுரக்கும்போது உணவு இல்லாவிட்டால் ஒரு வித அரிப்பு வயிற்றில் ஏற்படுகிறது இதையேநாம்பசி என்கிறோமா பசித்தவன் எதிரில் ஆண்டவன் கூட  உணவு ரூபத்தில்தான் வரமுடியும்தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இ ஜகத்தினை அழித்திடுவோம்  என்று பாரதி பாடி இருக்கிறான் கூடவே வய்ச் சொல்லில் வீரரடி  என்றும் பாடியிருக்கிறான்   புத்திசாலிதான் 

ஒரு காலத்தில் ஒருபுலவன்வறுமையால்வாடியபோது 

கல்லைத்தான்மண்ணைத்தான்காய்ச்சித்தான்
குடிக்கத்தான்கற்பித்தானா
இல்லைத்தான்பொன்னைத்தான்எனக்குத்தான்
கொடுத்துத்தான்ரட்சித்தானா
அல்லைத்தான்சொல்லித்தான்யாரைத்தான்
நோவத்தான்ஐயோவெங்கும்
பல்லைத்தான்காட்டத்தான்பதுமற்றான்
புவியிற்தான் பண்ணினானே. 

என்றும்  பாடி இருக்கிறான்
ஔவையும் பசி பற்றிப் பாடும்போது “ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏலென்றால் ஏலாய்
இடும்பை கூர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது”” என்றுஅங்கலாய்த்து இருக்கிறாள்
ஔவையார் பசி வந்தால் பறந்துபோகும் பத்தினைஇவ்வாறு கூறி இருக்கிறார்
"மானம்குலம்கல்விவண்மைஅறிவுடைமை
தானம்தவருயர்ச்சிதாளாண்மை--தேனின்
கசிவந்தசொல்லியர்மேல்காமுறுதல்பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்"
இம்மாதிரி இருக்கும் பசியினைப்போக்கமட்டுமல்லாமல் வித விதமாக சமைத்துதிருப்திப்படுத்தும் பலரையும் பார்த்திருக்கிறோம்  உணவு வகைகளை  சமைத்துப்பார்க்கவே வலைத்தளங்களும் ஆலோசனை கூறுகின்றன./ அதுவுமொரு கிழமையையே திங்கற கிழமையாகவும் பாவிக்கிறார்கள்
பசித்துப் புசிப்பவர்  ஒரு வகை என்றால்  உடல் ஆரோக்கியத்துக்காக  உபவாசமிருப்பவரும் உண்டு இப்படிஉபவாசமிருப்பவர்களில்  உணவை உபேட்சிப்பவரை விட  பல ஆகாரங்களை பலகாரங்களாக உள்ளே தள்ளுவோருமுண்டு எனக்கு ஒரு விஷயம் தோன்றுவதுண்டு இவ்வாறு உபவாசமிருப்பவர்கள்  அந்தநாளில்  இல்லாத ஒருவருக்கு இட்டு உண்டால் நலமாய் இருக்காதோ
உணவை பலசுவைகளில் உண்பவர் உண்டு  அறுசுவையிலும் சில சுவைகளை விரும்புவோரும் உண்டு சுவையைக்கூட்ட உபயோகமாகும்  உவர்ப்பினை அதிகம்  ஏற்க முடியாது  இருந்தாலும்  அதைஇட்டவரைஉள்ளளவும் நினக்கச் சொல்லும்  சமுதாயம் நமது சிலருக்குப் பிடித்தமான சுவைகள் சில சிலருக்குப் பிடிக்காது இருந்தாலும் இனிப்பை விரும்பாதவர் மிகக்குறைவு விருந்துகளில்  இனிப்பாக பாயசம் வழங்கப்படுவது நம் பழக்கங்களில் ஒன்று பாயசம் அதிகமாக உட்கொள்ள அதில் பப்படத்தைப்பொடித்து உண்பவர்களும் உண்டு
போட்டி போட்டு உண்பவர்களும் இருக்கிறார்கள் ஒருவர் வயிறு முட்ட உண்டு மிகவும்கஷ்டப்படுவதுகண்டுஒருநண்பர் தொண்டைக்குள் விரல் விட்டுஅதிகமானதை வெளியில் தள்ள ஆலோசனை கூறினாராம்  தொண்டக்குள் விரலை விட இடமிருந்தால் இன்னும்  சிறிது உண்டிருப்பேனே என்று கூறினாராம் இவர் எனது உறவினர் ஒருவர் உண்டு முடித்தபின் கண்களில் நீர் வந்தால் திருப்தியாக உண்டேன் என்பதன் அடையாளம்  என்பாப் அவர் உண்ணும்போது அவரது கண்களில்நீர் வருகிறதா என்று  பார்ப்போம்  கடைசியாக உண்ணும்  போது செய்ய வேண்டிய பயிற்சி  என்று நான்  கூறுவது, பரிமாற வரும்போது தலையைமேலும் கீழும் ஆட்டுவதற்கு பதில் பக்க வாட்டாக ஆட்டுதல் நலம்பயக்கும்  
  நேற்று  பெங்களூரில் கல்யாண்நகரில் இருக்கும் MTR ஹோட்டலுக்கு  மதிய உணவுக்க்காக நான் என்மகன்குடும்பத்துடன்  சென்றிருந்தொம் ஒரு மாற்றத்துக்காக ஹோட்டல் உணவு என்பதில் எனக்கு ஆட்சேபணை இருக்கவில்லை  இந்தப்பதிவு அதைச் சொல்ல அல்ல  நாங்கள் ஐந்துபேர் இருந்தோம் மொத்தபில் 1300 ரூபாய் வந்தது அன்லிமிடெட் உணவு  வகைகள் முதலில் மசால் தோசை பின் பூரி கிழங்கு  பின்பிசி பேளா ஹுளி அன்னா  தக்காளி சாதம் சாதம்ரசம் சாம்பார் தயிர்சாதம்  மசால் வடை கிரேப் ஜூஸ்  ஜிலேபி  சேமியா பாயசம் கூட்டு கோசம்பரி  பொறியல்  சட்னி  ஊறு காய் பீடா. நான் வெகு எளிமையான் உணவு உட்கொள்ளுபவன் நன்கு உண்ணக் கூடியவரே  கருத்து சொல்லமுடியும்   ஒரு வேளை உணவுக்கு ஒரு வருக்கு ரூ260  என்பது  என்னதான் அன்லிமிடெட் என்றாலும்  டூ  மச் என்றே தோன்று கிறது இருந்தும் அந்த ஹோட்டலில் காத்திருப்போர் அதிகம்