பெங்களூரு நினைவுகள் அன்றும் இன்றும்
------------------------------------------------------------
Huttidare
Kannada Naadal Huttabeku..
Mettidare
Kannada Manna Mettabeku..
Badukidu
Jataka Bandi.. Idu Vidhiyodisuva Bandi..
Badukidu
Jataka Bandi.. Vidhi Aledaadisuva Bandi..
Huttidare
Kannada Naadal Huttabeku..
Mettidare
Kannada Manna Mettabeku.
ஹுட்டிதரே கன்னட நாடல்ல ஹுட்டபேகு
மெட்டிதரே கன்னட மண்ண மெட்டபேகு
படுகிடு ஜட்கா பண்டி இது விதியோடிசுவ பண்டி
ஹுட்டிதரே கன்னட நாடல்ல ஹுட்டபேகு
மெட்டிதரே கன்னட மண்ண மெட்டபேகு
படுகிடு ஜட்கா பண்டி இது விதியோடிசுவ பண்டி
இந்தப்பாட்டை
அவ்வப்போது கேட்பதுண்டு “பிறந்தால் கன்னட
நாட்டில் பிறக்க வேண்டும் “. மிதித்தால்
கன்னட மண்ணை மிதிக்கவேண்டும் வாழ்க்கை ஒரு
ஜட்கா வண்டி அதுவே விதியை நகர்த்தும் வண்டி” எனக்குத் தெரிந்த அளவு மொழியாக்கம்செய்திருக்கிறேன் டாக்டர்
ராஜ்குமார் ஆகாஸ்மிகா என்னும்
படத்துக்காகப் பாடியது கன்னடியர்கள் மிகவும் விரும்பும் பாடல்
நான்
பிறந்தது கன்னட நாடான பெங்களூரில்தான்
முதல் ஒழுங்கான பணி கிடைத்ததும் பெங்களூரில் தான்
வாழ்வின்
அந்திமகாலங்களைக் கழித்துக் கொண்டிருப்பதும் பெங்களூரில்தான் இப்படியான நினைவுகள்
இப்பாட்டைக் கேட்கும்போது வரும்
நான்
பிறந்தது 1938-ம் ஆண்டு நவம்பர் மாதம்
11-ம் தேதி பிறந்த இடம் அலசூர் என்று சொல்லிக் கேள்வி. நான் மூன்றாண்டுகள்
சுமாராய் இருக்கும் போது நிகழ்ந்த நினைவுகள் மசமசவென்று அவ்வப்போது தோன்றும் என்
மாமாவின் காரில் , என் தாத்தாவின் மடியில் அமர்ந்து செல்லும் போது கார்க்கதவை நோண்டிக்கொண்டிருந்த நான் ஒரு வளைவில் கார் கதவு திறக்க கிழே
விழுந்தேன் என்னைப் பிடிக்கப் போன என்
தாத்தாவும் விழுந்தார் இருவருக்கும்நல்ல
அடி. வீடு வந்தபோது எல்லோரும் அழுதது லேசாக நினைவில்
பள்ளிவிடுமுறையின்
போது பெங்களூர் வருவதுண்டு அப்போதைய
பெங்களூரும் இப்போதைய பெங்களூரும் நினைத்துப்
பார்க்க முடியாத மாற்றங்களில் தெரிகிறது
1955-ல் பெங்களூர் விதான சௌதா கட்டிக் கொண்டிருந்தகாலம் நான் முதன் முதலில் அங்கு கட்டுமான வேலைகள்
நடந்து கொண்டிருந்தபோது வேலை
செய்ததையும்(பார்க்க) பூர்வஜென்ம கடன் என்னும் பதிவில் பகிர்ந்திருக்கிறேன் அப்போது
இன்றிருக்கும் சிவாஜி நகர் பேரூந்து நிலையம் கிடையாது. ஒரு திறந்த வெட்ட வெளி
திடல் மட்டுமே இருந்தது. அங்கு கழைக்கூத்தாடிகள்
வித்தை காட்டுவதைக் கண்டிருக்கிறேன்
சுவாமி சின்மயாநந்தாவின் கீதை
உபன்யாசம் 18 நாட்கள் கேட்டிருக்கிறேன் நான் சைக்கிள் ஓட்டப்பழகியதும் அங்குதான்
பெங்களூரின் டோப்போக்ராஃபி பற்றியும் கூற வேண்டும்
இப்போதிருக்கும் மெஜஸ்டிக் பேரூந்து
நிலையம் கிடையாது சுபாஷ் நகர்த் திடல்தான்
அரசியல் கூட்டங்கள் நடக்கும் அங்கே
மாஸ்டர் ஹிரணையா “ லஞ்சாவதார” என்னும் நாடகத்தை
மேடையேற்றி இருக்கிறார். ஒரு முறை அவர் அவர்களின் வாழ்வாதாரம் டிக்கெட்
வாங்கி நாடகம் பார்க்கும் மக்களிடம்தான்
இருக்கிறது என்றும் முன் இருக்கைகளில் அழைப்பின் பேரில் வந்திருக்கும்
பெரியவர்களிடமில்லை என்றும் கூற பிரதம அழைப்பாளியாக
வந்திருந்த மல்லராத்யா என்பவர் கவுண்டருக்குப் போய் டிக்கட் வாங்கிவந்து
பின் நாடகம் பார்த்ததாகவும் சொல்லக்
கேள்வி
எனக்கு நன்றாக நினைவில் இருப்பது
அந்தக்காலத்தில் இருந்த ஜட்கா வண்டிகளும்
டாக்சிகளும் தான் பேரூந்துகள்கூட அதிகம்
இல்லை. எச் ஏ எல் ஐ டி ஐ,
எச் எம் டி பி இ
எல் போன்ற நிறுவனங்கள் தங்களது தொழிலாளிகளுக்காக இயக்கிக் கொண்டிருந்த பேரூந்துகளே அதிகம்
நான் முதன்
முதலில் எச் ஏ எல் லில் பணிக்குச் சேர வந்தபோது கண்டோன்மெண்ட்
ரயில் நிலையத்தில் இருந்து ஒரு ஜட்கா வண்டியில் ஏறி என்னை ஒரு
தங்குமிடமுள்ள ஓட்டலுக்கு அழைத்துப்போகக் கேட்டேன் எனக்கு இந்த இடம் ஓரளவு விடுமுறைக்கு
வந்து போய் இருந்ததால் ஓரளவு பரிச்சயம் கையில் பதினைந்து ரூபாயுடன் பெங்களூர் வந்த
எனக்கு அவர் கூட்டிச் சென்ற இடம் ஒத்து
வரவில்லை. மாதவாடகைக்கு அறை இல்லை என்றும்
ஒரு நாளைக்கு வாடகை அறைக்கு ரூ 40/ -என்று கூறியது தலை சுற்றாத குறை. பிறகு
அவர் எனக்குத் தோதான இடத்துக்கு
அழைத்துப்போய் நான் என் பெங்களூர் வாழ்க்கையைத் துவங்கியதும்
சரித்திரம் ஆங்காங்கே பகிர்ந்திருக்கிறேன்
ஆட்டோ
ரிக்ஷாக்கள் என்றால் என்ன என்று கேள்வி கேட்கும்காலம் அது
பென்ஷனர்களின்
சொர்க்கம் என்று அழைக்கப்பட்ட பெங்களூரில் தான் என் வாழ்க்கையின் துவக்கம் இருந்தது
வெயில்35டிகிரியைத் தொட்டால் மழை பெய்யும்
பெங்களூர் பற்றிஎழுத வந்த நான் ஆங்காங்கே
என்னைப் பற்றியும் கூறுவதைத் தவிர்க்க
இயலவில்லை.
அந்தக்
காலத்தில் பெங்களூர் இரு பகுதிகளாக
அறியப்பட்டது சிடி ஏரியா என்றும் கண்டோன்மெண்ட்
என்றும் இரு பிரிவுகள். அப்போதெல்லாம்
இந்திராநகர் கோரமங்கலா போன்ற
இடங்கள் இல்லை மஹாத்மாகாந்தி ரோட் சௌத் பரேட்
என்று அழைக்கப் பட்டது சிடியில்
இருப்பவர்களுக்கு கண்டோன்மெண்ட் ஏரியா
என்பது ஏதோ வேறு உலகம் போலத்
தெரிந்தது. அப்போதெல்லாம் பசவங்குடி
மல்லேஸ்வரம் போன்ற் இடங்களே முக்கிய வசிப்பிடங்களாக இருந்தது ஜெயநகர் போன்ற
இடங்கள் அப்போது இருந்ததாக நினைவில்லை சிடி ஏரியாவில் கன்னடம் பேசுபவர்கள் அதிகமும் கண்டோன்மெண்ட் பகுதிகளில் தமிழ்
தெலுங்கு, உருதுபேசுபவர்கள் அதிகமாயும் இருந்தனர் இந்திராநகரில் வீடுகள்
கட்டி கன்னடியர்கள் குடி புகுந்ததில்
மொழிவாரியாக சமன் பெற்றனர்
சிடி
ஏரியா என்பது பல பேட்டைகளாக இருந்ததுசிக்பெட் பலேபெட், தரகுபெட்,அக்கிபெட் காட்டன் பெட் போன்ற இடங்கள்
கொண்டது.பெரும்பாலும் பிசினஸ் செய்பவர்களே அதிகம்
இருந்தனர்
BANGALORE
TRANSPORT SERVICE சுருக்கமாக BTS
என்றழைக்கப்பட்ட பஸ் செர்வீஸ் இருந்தது.
அன்று இருந்த வழித்தடங்களில்
பேரூந்து ஏறிப் பயணம் செய்வதே ஒரு அனுபவம் BTS ஐ பிட்ர திருக சிக்கோதில்லா ( விட்டால்
மறுபடியும் கிடைக்காது) என்று செல்லமாகக் கூறுவார்கள்
அரசு
அலுவலகங்கள் அட்டாரா கச்சேரி என்று அழைக்கப்படும்
இப்போதிருக்கும் விதானசௌதாவுக்கு எதிர்ப்புறம் இருந்தது
என் மாமா ஒரு மருத்துவராக இருந்தார் ஞாயிறு
மதியம் நிச்சயமாக ஒரு ஆங்கிலப் படம் சௌத் பரேடில் பார்ப்பார் இன்னின்ன தியேட்டரில்
இன்னின்ன மொழிப் படங்களே வரும் இந்தியாவிலேயே ஒரே வரிசையில் அல்லது இடத்தில் இவ்வளவு தியேட்டர்கள்
இருந்திருக்காது மெஜெஸ்டிக் ஏரியாவில் ப்ரபாத், சாகர், ஸ்டேட்ஸ் ,கெம்பகௌடா
மெஜெஸ்டிக் , ஜெய்ஹிண்ட், அலங்கார் , கீதா கல்பனா எனக்கு நினைவில் இருப்பவை
இவை. இது தவிர கண்டோன்மெண்ட் ஏரியாவில் .
ஸ்ரீ, லக்ஷ்மி. ரூப்மஹால் , எல்ஜின் . ரெக்ஸ்
ஆப்பெரா போன்ற தியேட்டர்கள் உண்டு.
கன்னடப் படங்கள் சொற்பமாகவே தயாராகும்
ஹிந்தி படங்களும் தமிழ் படங்களும்
சக்கை போடு போடும் அப்போதெல்லாம் சௌத் பரேடில் கோட் சூட் அணிந்த பலரும்
பாக்கெட்டில் கடலைக்காய் வைத்து உரித்து தின்று
கொண்டே வருவது சகஜமான காட்சியாகும்
எச்
ஏ எல் லில் பயிற்சிக்காகச் சேர்ந்தபோது
முதல் ஆறுமாதம் ஜெயச் சாமராஜேந்திரா
பாலிடெக்னிக்கில் மதியம் பனிரெண்டு மணியில் இருந்து இரவு எட்டுமணிவரை
இருக்கும் நான் தங்கி இருந்த இடத்திலிருந்து மதிய உணவு முடித்துஓல்ட் புவர் ஹௌஸ்
வழியே கப்பன் ரோடுக்கு வந்து அங்கிருந்து
ஜெனரல் போஸ்ட் ஆஃபீஸ் வழியே வந்து இப்போது இருக்கும் விதான சவுதா அருகே ருக்கும் பாலிடெக்னிக்குக்கு நடந்தே வருவோம் ஔமார் மூன்று கிலோ
மீட்டருக்கும் மேல் இருக்கும் நான் மதியம்
அறையில் இருக்க வாய்ப்பில்லாததால் எனக்கு வர வேண்டிய ரெஜிஸ்தர் கடிதங்களையோ தபால்களையோ பெற முடியாது ஆகவே அங்கிருந்த
ஜெனரல் தபால் நிலையத்தில் போஸ்ட்
மாஸ்டரிடம் சென்று எனக்கு வரும் தபால்களை கேர் ஆஃப் போஸ்ட் மாஸ்டர் என்னும்
முகவரிக்கு வந்தால் அதை நான் வந்து பெற்றுக் கொள்ள முடியும் என்று கூறினேன் மனிதாபிமானம் மிக்கவர் அவர் ஒப்புதல் தந்தார் அப்போது குரியர்
செர்வீஸ் இல்லை காலம் மாறி விட்டதுஞாயிற்றுக் கிழமைகளில் கப்பன் பார்க்கில் இசை நிகழ்ச்சிகள் இருக்கும் அது அந்தக் காலம்
எப்படி
இருந்தாலும் சில கட்டிடங்கள் மாறாமல் அப்படியே இருக்கிறது உதாரணத்துக்கு சௌத்
பரேடில் இருக்கும் எல் ஐ சி கட்டிடம் மேயோ
ஹால். ப்ரிகேட் ரோடில் இருக்கும் ஆப்பெரா
ஹவுஸ்( அப்போது திரைபடங்கள் திரையிடப்படும். இப்போது இல்லை)டௌன் ஹால்
கலாக்ஷேத்திர
கட்டிடம் அப்போது இல்லை இந்த டௌன் ஹாலில்
1961ம் ஆண்டு நான் வாழ்ந்தே தீருவேன் என்னும் நாடகத்தை எழுதி
இயக்கி நடித்தும் இருக்கிறேன்
காந்திநகரில் இருந்த குப்பி தியேட்டரிலும்
நாடகம் மேடை யேற்றிருக்கிறேன்
அலசூரில்
சோமேஸ்வரன் கோவில் எதிரே இருந்த
சாலையில் சில வீடுகளுக்கடியில் கோவிலின்
குளமிருப்பதாக அறியப்பட்டு அங்கிருந்த வீடுகளை அகற்றி குளத்தை
மீட்டிருக்கிறார்கள்
பெங்களூரை விட்டுப் போய் சென்னையிலும்
திருச்சியிலும் பணிக்குப் போய்
வந்தபின் நாங்கள் வசித்த இடங்களைக் காணச் சென்றிருந்தேன் அடையாளமே தெரியாமல் மாறிப் போய் இருந்தது
![]() | |||
சோமேஸ்வரன் கோவில் முன்னால் மீட்டெடுக்கப்பட்ட குளம் |
![]() |
ஒரு அறிவிப்பு |
பெங்களூரு அன்றும் இன்றும் ஒரு காணொளி
( இணையத்தில் இருந்து)
“