மனிதம் ஒரு கண்ணோட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனிதம் ஒரு கண்ணோட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 செப்டம்பர், 2016

ரிஷபன் சாரின் மனிதம்


                                                             ரிஷபன் சாரின் மனிதம்
                                                            ----------------------------


நாங்கள் சென்ற ஆண்டு புதுக்கோட்டை போகும் வழியில் திருச்சியில் அக்டோபர் மாதம் பத்தாம்  தேதி தங்கினோம்  விவரமாக, என் பழைய பதிவுகளில் புதுக் கோட்டை வையா மலைக் கோட்டை என்று எழுதி இருக்கிறேன்  பத்தாம் தேதி மாலை திரு வைகோ  திரு தி தமிழ் இளங்கோ  திரு ஆரண்ய நிவாஸ்  ராமமூர்த்தி திரு ரிஷபன் ஆகியூரை ஹோட்டல் ப்ரீசில் சந்தித்தது மறக்க முடியாதது அப்போது திரு ரிஷபன் அவர்கள் எனக்கு அவர் எழுதி வெளியிட்டிருந்த  மனிதம் என்னும் நூலைப் பரிசளித்திருந்தார் இதுவே முன்பு போல் இருந்தால் புத்தகத்தைப் படித்து முடிக்காமல் உறங்க மாட்டேன்  ஆனால் சொல்லிக் கொள்ளத் தயக்கமாக  இருக்கிறது  இப்போதெல்லாம் புத்தகம்  படிப்பதில் ஒரு சங்கடம்  இருக்கிறது படிக்கும்போது வலது கண்ணின் முன்பாக அவ்வப்போது ஏதோ நிழலாடுவது போல் இருக்கிறது. அதுவே படிப்பதில் இருக்கும்  ஆர்வத்தைக் குறைக்கிறது இருந்தாலும் அன்பாகக் கொடுத்திருந்த  நூலைப் படிக்காமல் இருந்தால் ஏதோ குற்றம் செய்வதுபோல் இருக்கிறது கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வழியாகப் படித்துவிட்டேன்   படித்தால் மட்டும் போதுமா. நான் எழுதிய சிறுகதைத்தொகுப்பைப் படித்தவர் கருத்திட விரும்பும் என்னைப் போல்தானே பிறரும்  இருப்பார்கள் என்ற எண்ணம் வந்தது  மனிதம் பற்றி எழுதுவது என்று தீர்மானித்து விட்டேன் 34 சிறு கதைகள். ஒவ்வொன்றையும் பற்றி எழுதுவதென்றால்  மீண்டும் ஒரு முறை நான் வாசித்து உடனுக்குடன் எழுத  வேண்டும்   அது என்னுடைய இப்போதைய நிலையில் சாத்தியமில்லை. இருந்தாலும் எழுதாமல் இருக்க முடியவில்லை. ஆகவே படித்த கதைகளில்  எது முன் வந்து நிற்கிறதோ அது பற்றி மட்டும் எழுதுவேன் அம்மாதிரி முன்  வந்து நிற்கும்  கதைகளில் ஏதோ என்னை ஈர்த்திருக்க வேண்டும்
திரு ரிஷபன் சாரின் கதைகள் ஊடே  ஏதோ இனம் தெரியாத ஒரு ஏமாற்றம் சோகம் என்பவை இழையோடுகிறது. சில சம்பவங்களை அருமையாகக் கதை பின்னுகிறார்  முதல் கதையில் அதுவே நூலின் தலைப்பு  ஒரு மனம்  பிறழ்ந்தவனை மனிதாபிமானத்தோடு ஒருவர் அணுகுவதைப் பதித்திருக்கிறார் பைத்தியம் என்று ஒதுக்கப்படுபவர்கள் பைத்தியம்  அல்ல. அவர்களைப் புரிந்து கொள்ள முடியாத நாமே பைத்தியங்கள் என்று சொல்லாமல் சொல்லி[ப் போகிறார் /பரிசு என்னும்கதையில் என்றோ விரும்பி இருந்த முன்னாள் காதலியை சந்திக்க நேரும்சமயம் பழைய  நினைவுகளை அசை போடும்  நேரத்தில் அவளே தன் காதலை நிரூபிக்க வேண்டி தன்னையே தந்ததை நினைத்து  வருந்துகிறாரா  இல்லை அவளை சந்தித்தபோது வரும் நினைவுகளை விரும்புகிறாரா என்னும் சந்தேகம் வருகிறது காதல் என்பது ஆண்களுக்கு வாழ்வு , அதுவே பெண்களுக்கு  ஒரு அத்தியாயம்  என்பது பற்றி ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. தன்னை நேசித்த காதலனுக்காக தன்னையே தரும் ஒரு பெண்ணின் வாழ்க்கை நேராகாமல் இருப்பது ஒரு குறியீடாகத் தெரிகிறது
நண்பனின் கிராமத்துக்கு வரும் ஒருவரின் கதை கோலம் ஏற்கனவேமுடிவு எடுத்து விட்டு வந்தவர்போல் இருக்கிறது. நண்பரின் விதவைத் தங்கைக்கு வாழ்வளிக்க விரும்பும் அவருக்கு அந்த தங்கை தன் சம்மதத்தை பூடகமாக கோலத்தில் வெல்கம் என்று எழுதிக்காட்டுவதாக முடிகிறது சில வம்பு பேசும் பெண்களின் குணத்தைச் சாடுகிறது.எதையும் மனம் விட்டுப் பேசினால்  மனத்தாபங்களைக் குறைக்கலாம்  என்று கூறுவது  மனம் விட்டு என்னும் கதை.
ஒவ்வொரு கதையையும் எடுத்து ஆராய்ந்தால் வர இருக்கும் எண்ணங்களை விரிவாகச் சொல்வதென்றால்  அதுவே ஒரு நூலாகி விடும் 
திருமணம் என்பதே  ஒரு புது பந்தத்தைஉருவாக்குவதுதான்  குடும்பத்துக்கு இன்னொரு நபர் . அவர் மூலம் குடும்ப மரம் பல்கிப் பெருக  வேண்டி நடத்துவதே  திருமணம்  இருந்தாலும் எதிர்பார்ப்புகள் நிறைவேறாதது மனதுக்கு சங்கடம் விளைவிக்கிறதுஎதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறுவதில்லை  கலகல வெனத் துவங்கும்  ஒரு பிரயாணம்  எப்படி எதிர்பாராத வகையில் முடிகிறது என்று சொல்வது உதிரிப்பூ எதிர்பாராத நேரங்களைக் கடந்து வரும்  ஒரு பெரியவரின்  நிதானத்தையும் கூறுகிறது
 பல சிறு கதைகள் பத்திரிகைகளில்  வெளியானவை  பத்திரிகையில் வெளியாவதால் மட்டுமே  ஒரு கதை சிறந்ததும் அல்ல.  பத்திரிகையில் வெளியாகாத கதைகள் சிறப்பாக இருப்பதும் பல கதைகளில் தெரிகிறது  34 கதைகளில் மனதில் வந்து உட்கார்ந்து கொள்ளும் கதைகளும் இருக்கின்றன. ஒன்றுக்கு இருமுறை படித்துமட்டுமே நினைவுக்கு வரும்கதைகளும் இருக்கின்றன. முதியோர் இல்லத்தில் இருக்கும் ஒரு முதிய தம்பதியினர் பற்றியது  தர்மதேசம்  மனைவி பேச்சைக் கேட்டு தாய் தந்தையரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் மகன்  அவன் மனநிலை தந்தையின் மனநிலை  அவர் தன் மனைவி மகனுடன்  இருப்பதை விரும்புவாள் என்று தப்புக் கணக்கு போடுகிறார்  ஆனால் மனைவியோ அவர் இருக்கும் இடமே அயோத்தி என்று எண்ணுவதைக் கூறுகிறது இக்கதை. சந்தர்ப்பங்கள்  அதனால் உந்தப்படும் மனிதர்கள் நிலை என்பதுபற்றி சிந்திக்க வைக்கிறது இக்கதை சலனம் என்னும்கதை என்னால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை எதையோ அப்ஸ்ட்ராக்டாகச் சொல்லும்  முயற்சி என்றே தோன்றுகிறது சந்தர்ப்பங்கள் வாய்த்தால் எல்லா ஆண்களும் தவறு செய்யும்  வாய்ப்பு இருக்கிறதுஅது நிறைவேறாதபோது பிறரிடம் குறை காணும் சுபாவமும்  ஆண்களுக்கு இருக்கிறதுஇது நர்மதாவுக்காக என்னும் கதை.
அழகு என்பது அதைப் பார்ப்பவரின் கண்களில்தான் என்னும் சொலவடை ஆங்கிலத்தில் இருக்கிறது மனதுக்குப் பிடித்து விட்டால் திக்கு வாயும் அழகாய்த் தெரியும்போல இருகிறது. ஒரு முதிர் கன்னி பற்றிய கதை இன்னொன்று
 ஒவ்வொரு கதையும் எதையோ பட்டும் படாமலும்  சொல்லிப் போகிறது எல்லாக் கதைகளுமே எங்கோ ஏதோ நிறைவேறாத வெறுமையை சொல்கிறது எல்லாக்கதைகளையும் விவரித்துக் கருத்து சொல்ல இயலவில்லை பைகள் பிக்கப்பட்டிரந்தும்  அவை பற்றி எழில்லை.  ஆனால் தொகுப்பில் செங்கிப்பட்டிக்கு ரெண்டு டிக்கட்  என்னை மிகவும்கவர்ந்ததுஇதில் வரும் மூதாட்டி போன்ற பாத்திரங்கள் நம்மில் உலவுகிறார்கள்  அவர்களைக் கூர்ந்து கவனித்து கதையாக்கும் ரிஷபனின்  திறமை இந்தக் கதையில் நன்கு தெரிகிறதுபேரூந்தில் ஏறிவிட்டு அது நிற்காத இடத்துக்கு டிக்கட் கேட்டு  அதன் விளைவாய் நிகழும்  சம்பவக் கோர்வைகளே கதை.  யார் என்ன சொன்னாலும்  எது எப்படிப் போனாலும்  தன்  காரியத்தை சாதித்துக் கொள்ளும் அநேகர் அந்த மூதாட்டிபோல் நம்மிடையே இருக்கிறார்கள் தொகுப்பிலேயே என்னைக் கவர்ந்த கதை இது. சும்மாவா அமரர் கல்கி நினைவுப் போட்டியில் பரிசு பெற்றது
என்னதான் எழுதினாலும்  எல்லாக் கதைகளையும் தொட்டுச் செல்லாத குறை நெருடுகிறதுவலை உலகில் வை. கோபால கிருஷ்ணன் அவர்கள் செய்தது போல் விமரிசனப் போட்டி வைத்தால்தான்  எல்லாக்கதைகளையும்  விமரிசிக்க ஜஸ்டிஃபிகேஷன்   கிடைக்கும் அவரது தொகுப்புக்கு நான் எழுதியது  ஜஸ்டிஃபை ஆகவில்லை என்றே  தோன்றுகிறது
புத்தக வெளியீடு  
 தமிழ்ச்சோலை பதிப்பகம்
3/20அலங்கார் நகர்  2-வது தெரு,
ஷேக்மானியம்  போரூர்
 சென்னை -600116
 நூலின் விலை ரூ. 100
.