எங்கள் வீட்டு மாமரம்
----------------------------------
என் வீட்டில் இரண்டு மாமரங்கள் அடுத்தடுத்து
இருக்கின்றன/ இதில் ஒரு மரம் வீட்டுக்கு வெளியே தான் காய்க்கும் அதிகம் காய்களைப்
பார்க்க முடியாதுஎனக்கு மாமரத்திலும்
மலட்டு மரம் உண்டோ என்னும்
சந்தேகம் எழும் இன்னொரு மரம் நன்கு
காய்க்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நானே மரத்தில் ஏறி காய்களைப்
பறிப்பேன் என் மனைவிக்கு இது பிடிக்காது. மரம்
ஏறி விழுந்து கிழுந்து விட்டால் என்ன செய்வது என்று பயம் எங்கள் மருத்துவரிடம்
புகார் செய்வாள் எனக்கும் முன்பு போல் தைரியமும்
மரம் ஏறும் வாகும் வருவதில்லை மேலும் இப்போதெல்லாம் என் சொற்படி உடல்
கேட்பது இல்லை. ஆக வீட்டு மொட்டை மாடியில் இருந்து கைக்கெட்டும் காய்களே எங்களுக்கு மரம் ஏற சிலரைக் கூப்பிட்டால் பெரிய சிவப்பு
எறும்புகளின் தொல்லையால் யாரும் ஏற
முன் வருவதில்லை. தொரடு வைத்து காய்களை
எடுக்கும் போது அவை கீழே விழுந்து உடைந்து விடுகின்றன
எதையோ
எழுத வந்தவன் எதையோ எழுதிக் கொண்டு
போகிறேன் வீட்டுக்கு வெளியே இருக்கும் காய்கள் பள்ளிப்பிள்ளைகளுக்கு என்று நேர்ந்து விடப்பட்டது பள்ளி முடிந்து
வீட்டுக்குப் போகும் பிள்ளைகள் சிறுமியர் அடக்கம் மரத்தில் கல்லெறிந்து காய்களை
எடுக்க முயல்வார்கள் என் மனைவிக்கு பிள்ளைகள் கல் எறிவதில் உடன் பாடு இல்லை. கல்
எங்காவது யார் தலையிலாவது விழுமோ என்னும் பயம் நான் என் மனைவியிடம் அவர்களைத் தடுக்காதே என்பேன் இந்த
வயதில் அல்லாமல் என் மாதிரி வயதானபின் இப்படிச் செய்ய முடியுமா
நானும்
கிராமத்தில் என் பாட்டி வீட்டில்
இருந்தபோது எல்லா சேட்டைகளும் செய்தவன்
ஒரு விளையாட்டு. நண்பர்கள் குழு சேர்ந்து யாரிடமாவது ஒரு பூவையோ காயையோ செடியின் இலையையோ பறித்துக்
கொண்டு வரச் சொல்வார்கள் அந்தச் செடியோ பூவோ காயோ எந்த வீட்டில் இருக்கிறது என்று
தெரிந்துகொண்டு சொன்னதைப் பறித்துக்
கொண்டு வர வேண்டும் சில வீடுகளின் கொல்லைப் புறத்துக்குப் போய் எடுத்து வருவதில்
இருக்கும் த்ரில் இப்போது நினைத்தாலும் மகிழ்ச்சி தருகிறது
காயுள்ள
மரம் கல்லடி படும் என்றும் சொல்லி இருக்கிறார்களேஆகவே என் வீட்டு மரத்தில் கல்
எறியும் சிறார்களை நான் வைவது இல்லை.
காயம் பட்டுக் கொள்ளாதபடி இருக்க
எச்சரிக்கை செய்வதுண்டு. சில பிள்ளைகளுக்கு பயம் என்பதே இல்லை. ஒரு முறை மரத்தில்
கல்லெறிவது கண்டு என் மனைவி யாரடா அது
என்று கேட்டுக் கொண்டு போனபோது நெஞ்சை நிமிர்த்தி நாந்தான் ஆண்ட்டி என்று ஒரு சிறுவன் வந்ததைச்
சொல்லிச் சொல்லி என் மனைவி அங்கலாய்ப்பாள் ஒரு முறை பையன்கள் கிரிக்கட் மட்டையை
மரத்தில் வீசி காய்களைப் பறிக்க
முயன்றார்கள் மட்டை மரத்தில் சிக்கிக் கொண்டது என் மனைவி போய் பார்த்தபோது
மட்டையை எடுக்க ஒருவன் மீது ஒருவன் ஏறி நின்று எடுக்க முயன்று
கொண்டிருந்தார்கள் என் மனைவி அவர்களை
எச்சரித்துவிட்டு தொரடைக் கொடுத்தாள் தொரட்டால் மட்டையை எடுத்துக் கொண்டதுடன் சில
மாங்காய்களையும் அனுமதியுடன் பறித்துக் கொண்டார்கள்
எனக்கு
என்ன குறை என்றால் நிறைய பழங்கள் யாருக்கும் உதவாமல் கீழே விழுந்து கெட்டுப்
போகிறதுஎனக்கு யாரையும் மரம் ஏறச் சொல்ல பயமாய் இருக்கிறது யாருக்காவது ஏதாவது
நடந்தால் நான் பொறுப்பேற்க வேண்டும் அல்லவாஅணில்கள் பாடு கொண்டாட்டம்தான் வீட்டின்
அண்டை அயலாருக்கு ஆவக்காய் ஊறுகாய் போட
காய்களைக் கொடுப்பதுண்டு ஊறுகாய்க்கு காய்கள் விழுந்து அடிபட்டாலும் பரவாயில்லையே