மாமரம் தொடர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாமரம் தொடர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

ஆவக்காய் ஊறுகாய்


                         ஆவக்காய் ஊறுகாய்
                         ---------------------------------
கடந்த பதிவில் ஆவக்காய் ஊறுகாய் பற்றி கூறி இருந்தேன்  ஆவக்காய் ஊறுகாய் செய்முறையைப் பற்றிப் பார்ப்போம் . என்னடா இது பூவையின்  எண்ணங்கள் தளத்தில் வர வேண்டியது அல்லவா . இங்கே எப்படி  பூவையின்  எண்ணங்கள் தளம் சமையற் குறிப்புகளுக்காகத் துவங்கப் பட்டது  அதற்கு வாசகர்கள் வேண்டி தமிழ் மணத்தில் இணைத்தேன் ஆனால் நான்பதிவு எழுதி தமிழ் மணத்தில் சேர்க்க முற்பட்டால் வேறு யாருடைய பதிவோ இணைகிறது இது குறித்து தமிழ்மணமா புதிர் மணமாஎன்று ஒரு பதிவும்  எழுதி வாசக நண்பர்களிடம் உதவி கேட்டு எழுதி இருந்தேன் யாரும்  எந்தத் தீர்வும்  கொடுக்க முன் வரவில்லை. Let bygones be bygones… ! சமையற்குறிப்பு என்  மெயின் தளத்தில் இதோ. பூவையின் எண்ணங்களிலும் பதிவிட்டு இருக்கிறேன்   பார்ப்போம்  சரி இப்போது ஆவக்காய் ஊறுகாய் செய்முறைக்கு வருவோம்  முதலில் ஆவக்காய் என்னும் பெயர் எப்படி வந்தது தெரியவில்லை.  மாங்காயில் செய்யும் ஊறுகாய்க்குப் பெயர் ஆவக்காய் ஊறுகாய். இந்த செய்முறை ஆந்திர செய்முறையை ஒட்டியது

 நல்ல முற்றிய மாங்காய்களை எடுத்துக் கொள்ள வேண்டும் பழுத்திருக்கக் கூடாது அவரவர் தேவையைப் பொறுத்தும் கிடைக்கும் மாங்காய்களைப் பொறுத்தும் வேண்டிய அளவு செய்யலாம் தகுந்த பாதுகாப்பு முறைகளைக் கையாண்டால்  ஊறுகாய் கெடாமல் பல மாதங்கள் வரும்
முதலில் மாங்காய்களை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும் அவற்றை நல்லதுணியால் ஈரம் போகத் துடைக்க வேண்டும் மாங்காய்கள் ஈரமாக இருக்கக் கூடாது. அவற்றை எட்டு ஆகவோ மாங்காய் பெரிதாயிருந்தால் எந்த சைஸ் வேண்டுமோ அதன்  படியும் நறுக்கிக் கொள்ள வேண்டும் கொட்டைகளை எடுத்து விட வேண்டும்  நறுக்கிய காய்களை ஏதாவது பாத்திரத்தில் போட்டு நிரப்பி அளந்து கொள்ள வேண்டும் இதை  ஏன்  செய்ய வேண்டும்  என்றால் உப்பின்  அளவை நிர்ணயிக்கத்தான் . ஐந்து பாத்திர காய்களுக்கு ஒரு பாத்திர உப்பு என்பது அளவு. கல் உப்பே உபயோகிக்கவேண்டும்உப்பு சேர்த்த மாங்காயுடன்  மிளகாய்த்தூளையும் கலக்க வேண்டும் உப்பின் அளவில் முக்கால் அளவு மிளகாய்த்தூள் என்றும்  அரை அளவு கடுகுப் பொடியும் கால் அளவு வெந்தையப் பொடியும் சேர்க்கலாம் இதில் நல்ல எள் எண்ணையையும்  சேர்த்துக் கிளறவேண்டும் மாங்காய் உப்பு மிளகாய்த்தூள் கலவையில் எண்ணையை ஊற்றினால் எண்ணையில் கலவை மூழ்கி இருக்க வேண்டும் இந்தக் கலவையை ஒரு பெரிய பரணியில் போட்டு பரணியின் வாயை நல்ல துணியால் கட்டி மூட வேண்டும்  சிலர் இந்தக் கலவையில் பூண்டும் பச்சைக் கொத்துக்கடலையும் போடுவார்கள்அது அவர்களின் சுவையைப் பொறுத்தது இரண்டு நாட்களுக்கு  ஒரு முறை பரணியைத் திறந்து மீண்டும் நன்கு கிளறி  ஊற விட வேண்டும் ஊறு காய் போடட பத்து நாட்களுக்குப் பின் உபயோகிக்கலாம் ஊறுகாய்களை எடுத்துப் போட உபயோகிக்கும் கரண்டி ஸ்பூன்  போன்றவற்றில் ஈரம் இருக்கக் கூடாது. அப்படி உபயோகப் படுத்தினால் பூசணம் பிடிக்க வாய்ப்புண்டு. 
மாமரக் கதையில் ஆரம்பித்து ஊறுகாயில் முடிக்க நினைத்தேன் ஆனால் மாமரப் பதிவே என்னை இன்னும்  கொஞ்சம் தொடர் என்கிறது
மாமரத்தில் இருந்து காய்களைப் பறிப்பதில் இருக்கும் சில சங்கடங்களைக் கூறி இருந்தேன் நான் அதிகம் சங்கடப்படலாமா ? வயதான நல்லவன் இல்லையா?24-ம் தேதி எனக்கு உதவ ஆட்கள் வந்தனர் அதில் ஒருவர் மரத்தில் கல் அடிக்கும் சிறுவன் ஒருவனும் அடக்கம். மரத்திலிருந்து தொரடு கொண்டு காய்கள்  பறிக்கும் போது அவை கீழே விழுந்து அடிபடுகிறது என்றேன் உதவ வந்தவர் ஒருவர் மரத்தில் ஏறிக் காய்களைப் பறித்துப் போட்டார் அத்தனை சிவப்பு எறும்புக் கடிகளையும் எப்படிப் பொறுத்துக் கொண்டாரோ எறும்புகள் பற்றி மரம் ஏறும் முன்பே எச்சரித்து இருந்தேன்   அவர் பறிப்பதை கீழே இருவர் ஒரு பெட்ஷீட்டில்  கீழே விழாமல் பிடித்துக் கொண்டனர்  அப்படிப் பிடிக்க உதவியவருள் கல் எறியும்  சிறுவனும்ஒருவன்  பறித்த காய்கள் சிலவற்றைப் பெற்றுக் கொண்டான் சிறுவன்   ஓரளவு பெரிதாகி இருந்த காய்கள் பறிக்கப்பட்டன.  நாங்கள் இருப்பதோ இருவர் பறித்த காய்களை அக்கம் பக்கம் இருக்கும் வீடுகளுக்குத் தாராளமாகவேக் கொடுத்தோம் இதில் தமாஷ் என்னவென்றால் பலரும் பழமாகக் கிடைக்க எண்ணுகின்றனர். முற்றிய காய்கள் சிலவற்றை பழுக்க விட்டுப் பழமாய்  உண்ணுங்கள் என்றுதான் சொல்ல முடிகிறது சுமார் இருபது காய்களை ஊறுகாய்க்கு எடுத்துக் கொண்டோம் சிலவற்றைப் பழுக்க விடுகிறோம் பழுக்கத் தொடங்கினால் நல்ல இனிப்பான மாம்பழங்கள் சில நாட்களுக்குத் தொடர்ந்து கிடைக்கும் ஒன்று சொல்ல வேண்டும் எங்களுக்கு உதவ என்றே சிலர் கிடைக்கின்றனர் அவர்களுக்கு எல்லா நலமும் நடக்க வேண்டுகிறோம்