விநாயகர் சதுர்த்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விநாயகர் சதுர்த்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 5 செப்டம்பர், 2016

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்


                                         விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்
                                         --------------------------------------------


சுக்லாம் பரதரம்  விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப  சாந்தயே

வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி சமப்ரபா
அவிக்னம் குருவே தேவ சர்வகார்யேஷு சர்வதா

கஜானனம் பூதகணாதி சேவிதம்
கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம்
உமாசுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்நேஸ்வர பாத பங்கஜம்

அகஜானன பத்மார்க்கம் கஜானன மஹர்நிசம்
அநேக தந்தம் பக்தானாம் ஏகதந்தம் உபாஸ்மஹே

மூஷிக வாகன    மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித  ஸூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.

ஔவையாரின் அகவல் 


சீதக்களப செந்தாமரைப்பூம் 

பாதச் சிலம்பு பல இசை பாட

பொன் அரைஞாணும் பூந்துகில் ஆடையும் 

வன்ன மருங்கில் வளர்ந்தழகெறிப்ப 

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் 

வேழமுகமும் விளங்கு சிந்தூரமும் 

அஞ்சு கரமும் அங்குச பாசமும் 

நெஞ்சில் குடிகொண்ட நீலமேனியும் 

நான்ற வாயும் நாலிறு புயமும் 

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 

இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும் 

திரண்ட முப்புரி நூல்  திகழொளி மார்பும் 

சொற்பதங் கடந்த துரிய மெய்ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே

முப்பழம் நுகரும் மூஷிக வாகன 

இப்பொழுது எனை ஆட்கொள வேண்டி

தாயாயெனக்கு தானெழுந்தருளி

மாயாப் பிறவி மயக்கம் அறுத்து


திருந்திய முதல் ஐந்தெழுத்துத் தெளிவாய்

பொருந்தவே எந்தன் உளன்ந்தற்புகுந்து

குருவடிவாகிக் குவலயம் தன்னில் 

திருவடி வைத்துத் திறமிது பொருளென

 வாடாவகைத்தான்  மகிழ்ந்தெனக்கருளி

கோடாயுதத்தால் கொடுவினைக் களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி,

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக்கருளி

கருவிகள் ஒடுக்கும் கருத்தறிவித்து

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து.


”......தலமொரு நான்குந் தந்தெனக் கருளி 

மலமொரு மூன்றின் மயக்கமறுத்தே.

” ஒன்பது வாசல் ஒரு மந்திரத்தால்

 ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி

 ஆறாதாரத்து அங்குச நிலையும்

 பேரா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே

. ”இடை பிங்கலையின் எழுத்தறிவித்து

கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி

மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவிலுணர்த்தி

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலாதாரத்து மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்த்றிவித்து

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையுங் கூறி 

இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடற்சக்கரத்தின் உறுப்பையுங் காட்டி

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

என் முகமாக இனிதெனக் கருளி

புரியட்ட காயம் புலப்படஎனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி

கருத்தினிற் கபால வாயில் காட்டி,

இருத்திமுத்தி இனிதெனக் கருளி

என்னை அறிவித்து எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கிய எந்தன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி இரண்டுக்கும் என்றிடமென்ன

அருள்தரும் ஆனந்தத் தழுத்தி என் செவியில்

எல்லையில்லா ஆனந்தம் அளித்து

அல்லல் களைந்து அருள்வழி காட்டி,

சத்ததினுள்ளே சதாசிவம் காட்டி,

சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி,

அணுவிற்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி,

வேடமும் நீறும் விளங்க நிறுத்தி,

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி,

அஞ்சக் கருத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்து

தத்துவ நிலையைத் தந்தெனையாண்ட

வித்தக விநாயக விரை கழல் சரணே.



தலமொரு நான்கு, , மலமொரு மூன்று, ஆறாதாரம் , இட பிங்கலை, கழுமுனை , மூன்று மண்டலம், நான்றெழு பாம்பு,,குண்டலிதனிற் கூடிய அசபை, உடற்சக்கரம், சண்முக தூலம் சதுர்முக சூக்கம் .....இன்னபிற வார்த்தைகளுக்கு பொருள் முழுவதும் தெரிந்து இதை நாம் ஓதுவதில்லை .ஆனால் இதைச் சொல்லும்  நமக்கு இதில் ஏதாவது கை கூடி வருகிறதாஎன்று சிந்திக்கவும் செய்வதில்லை கோவிலுக்குச் சென்று அனிச்சையாக வணங்குவதுபோல் தான் நம் வாய் முணு முணுக்க  நாம் அகவலை ஓதுகிறொம் ஆனால் முன்பொரு பதிவில் என் எண்ணங்களோடு  பதிவு எழுதின போது  பொருள் தெரிந்து ஓதவேண்டும்  என்னும்  அவசியமில்லை  என்னும் விதத்தில் கருத்துகள் வந்தன  ஒன்றுமட்டும் புரிகிறது. ஔவையாருக்கும் இவை கை கூடி வரவில்லை. அதனால்தானோ என்னவோ வேண்டுதல்கள் வைக்கிறார்எு நம்மிடம் இல்லையோ அை வேண்டுவு இயல்பான  இச்சையாகவோ அனிச்சையாகவோ . பலரும் பொருள் புரியாமல்தான்  கூறுகிறார்கள் என்பதில் எனக்கு  சந்தேகம் இல்லை/ சராசரியாகத் தமிழ் தெரிந்த எனக்கு  பொருள் விளங்கவில்லை பொருள் தெரிந்து  அது வேண்டி ஓதுபவருக்கு ஒரு ராயல் சல்யூட்
இந்தியாவின் பல பகுதிகளிலும் விமரிசையாகக் கொண்டாடப் படும் பண்டிகை விநாயகச் சதுர்த்தி/ இந்நாளில் வாசகர்களுக்கு வாழ்த்துக்கள் 











...