மனசை என்னவோ பண்ணுதுபுரியலெ
-----------------------------------------------------------
ஏனென்று சொல்லு நீ தென்றலே மனசை என்னவோபண்ணுது புரியலே புலம்பி என்ன பயன் எதையெல்லாமோ படிக்கிறாயே இது நினைவுக்கு வரவில்லையா தவறெது சரியெது என்று புரிந்து கொள் தவறைத் திருத்த முடியுமானால் அதைச் செய் முடியாவிட்டால் அது அப்படித்தான் என்று விலகி விடு
இந்த தேர்தல் முறையை
எடுத்துக் கொள் நம்மை ஆள்பவர்கள் பெரும்பான்மையினரால்
தேர்ந்தெடுக்கப்பட்டுஇருக்க வேண்டும் ஆனால் நடை முறையில் அப்படி இருக்கிறதா/? நூறு
வாக்காளர்களில் அதிகபட்சமாக எண்பது பேர் வாக்களிக்கிறார்கள் வாக்களித்தவர்களில் அவர்கள்
வாக்குகள் பிரிக்கப்படுகின்றன வாக்களித்த எண்பது பேரில் அதிக பட்சமாக வாக்கு பெரும்( பொதுவாக 35 பேர் வாக்களித்தவர்) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார் அதாவது இருக்கும் வாக்காளர்களில் 35 சதம் வாங்கியவர்
வெற்றி பெறுகிறார் இது பெரும்பான்மையாகுமா
தேர்ந்தெடுக்கும் முறை மாற்றப்பட வேண்டும்
இப்படி 35 சதவீதத்தினரால் கொண்டு வரப்படும் சட்டங்கள் பெரும்பான்மையா? எனக்குத் தோன்றுகிறது இவர்கள் ஒரு கழுதையைக் காட்டி
அதைக் குதிரை என்றால் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்
இப்போது அதுதான் நடக்கிறது
தேர்ந்தெடுக்கபடுகிறவர்கள்
இல்லை இல்லை தேர்தலுக்குப் போட்டி இடுபவர்கள்
மேல் ஏராளமான வழக்குகள் இருக்கின்றனபண மோசடி கொலை கொள்ளை என்று சொல்லிக் கொண்டே போகலாம்
இது பொது மக்களுக்கும் நன்றாகத்தெரியும் ஆனால்
எல்லா வழக்குகளும் தேர்ந்தெடுக்கப்பட்டால் காணாமல் போய்விடும்
இந்தியாவில் பெரும்பான்மையானவர்
ஹிந்துக்கள் (a tolerent society) இவர்கள் சிறுபான்மையினர் மீது துவேஷம் காட்டுவது சரியா இவர்களது எண்ணங்களையும் கோட்பாடுகளையும் சிறுபான்மையினர்மீது திணிக்கலாமா
ஆனால் ஹிந்துத்வாவே கொள்கை என்று பகிரங்கமாகக் கூறுபவர்கள் இந்திய சரித்திரத்தையே மாற்ற
முயல்கிறார்கள் மும்பையில் ஒரு பிஷப் இது பற்றி கூறியபோது அவரிடம் வழக்கு தொடர முயற்சி
நடக்கிறது
ராமன் பிறந்த இடம் இதுதான் என்று கூறி அன்றைய முகலாய அரசனால்
கட்டப்பட்ட பாபர் மசூதியை ஆயிரக் கணக்கானவர்கள்
சேர்ந்து இடித்துவிட்டனர் அன்று முதல்
தொடங்கியது ஹிந்து முஸ்லிம் விரோதம் ஆயிரக்கணக்கானோரைத்தூண்டி ரத யாத்திரை என்னும் பெயரில் துவேஷத்தை வளர்த்தவர்கள்
இன்று ஏதும் செய்யாதவர் போல் திரிகின்றனர்
இந்நிலையில்மதத்துவேஷம் பாராட்டும் கட்சியே ஆட்சிக்கு வந்து விட்டது என்றால் கேட்கவே வேண்டாம் அப்போதே முகநூலில் பகிர்ந்தேன்
இனி ராமர் கோவில்தான் என்று
ராமாயணமும் பாரதமும்
நம் ரத்தத்தில் ஊறியவை தவறில்லை ராமருக்குக் கோவில் கட்ட வேண்டும் என்றால் யார்வேண்டாம்
என்றுசொல்வார்கள் கோடிக்கணக்கில் செலவு செய்யட்டும் கோவில் கட்டட்டும் ஆனால் வழக்கிலிருக்கும் ஒருஇடத்தில்தான் கட்ட வேண்டுமென்பது என்ன நியாயம் ஐநூறு வருடங்களாக இருந்து வந்த ஒரு இடத்தை தரை மட்டமாக்கி அங்குதான் கோவில் என்பது தாங்கள் ஒருபெரும்பான்மை
இனம் என்பதால்தானே நினைக்க வைக்கிறது நம் நாட்டில் நீதித்துறை மிகவும் தாமதமாகச் செயல் படுகிறது 25 ஆண்டுகள் முடிந்து
விட்டது இன்னும்வழக்கு முடிந்தபாடில்லை
இப்படியே போனால் காசியில் விஸ்வநாதர் கோவிலே ஒருமசூதிக்கு அரு கில்தானிருக்கிறது மதுராவில் கண்ணன்பிறந்த இடம் என்று சொல்லப்படும் இடத்தருகேயும்
ஒரு மசூதி இருக்கிறது தாஜ்மகாலும் ஒரு சிவன் கோவில் இருந்த இடம் என்கிறார்கள் போகிற போக்கைப் பார்த்தால் இதையெல்லாம்கூட இடித்துவிடுவார்களோ
என்று எண்ணத் தோன்றுகிறது மனிதனின் இனம் மொழி மதம் இருப்பிடம் போன்றவை எளிதில் உணர்ச்சி வசப்படுத்தும் இடித்த மசூதியில்
ராம லல்லா சிலையை வைத்து பூசித்து திரும்பியவர்களை கோத்ரா ரயில் நிலையத்தில் எரித்தார்கள் எரிக்கப்பட்ட உடல்களைத் தாங்கி ஊர்வலம் போனார்கள்
இது கண்டுகொதித்து எழுந்தவர்கள் முஸ்லீம்களை வேட்டையாடிக் கொன்றனர் ஒன்றின் பின் ஒன்றாக வெறுப்பினால்செயல்கள் தொடர்ந்து வருகின்றன நூற்றுக் கணக்கில் உயிர்கள் பலியாயின மத உணர்ச்சிகளைத் தூண்டும் வித்ததில் தேர்தல் பிரசாரங்கள் இந்நாட்டின்முதல்வர் இதில் முன்னிலையில் இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவரை இவர் விமர்சிப்பதில் இது நன்றகப்புலப்படுகிறது அவர்களை முகலாய் என்றும் ஔரங்கசீப் மனநிலையில் உள்ளவர் என்றும் கூறி இனவாதத்துக்கு தூபம் போடுகிறார்கள் ஹிந்துக்கள் பெரும்பான்மையக இடத்தில் இது நன்கு விலை போகும் மீண்டும் முதல் வரியை வாசியுங்கள்