mrs gmb யின் தொடரும்நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
mrs gmb யின் தொடரும்நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 மார்ச், 2019

தொடரும் நினைவுகள்




                                தொடரும் நினைவுகள்
                               ---------------------------------------

ஏதேதோ எண்ணங்கள் தொடருகிறது திருச்சியில் நாங்கள் இருந்தபோது எங்கள் வட்டத்தில் இவரை என்பெயர் சொல்லிச் சொன்னால்தான் தெரியும்அங்கிருந்த போது எனக்கு வீட்டு வேலைகள் தவிர நிறையவே பொழுது போக்குகள் இருந்தன மகளிர் சங்க வேலைகள் அதில் அடக்கம்காலையில் இவரை அலுவலகத்துக்கு அனுப்பிய கையோடு அருகே இருந்த கோவில் அது முடிந்து லேடிஸ் க்ளப் நண்பிகளுடனான சந்திப்பு நான் அங்கே லயன்ஸ் கிளப் மகளிர் பிரிவில் காரியதரிசியாக இருந்தேன்   அவ்வப்போது முதியோர் இல்லங்களுக்கு போய் அவர்களுக்கு உணவளிப்போம் ஆனால் இப்போது நாங்கள் இருப்பதே முதியோர் இல்லம்போல் தானிருக்கிறது இருவயதான முதியவர்கள் அவ்வளவுதான் வித்தியாசம்
 மகளிர் சக்திஅங்கு ஒங்கி இருந்தது திருச்சி வானொலியில்  சில நிகழ்ச்சிகள் கொடுத்திருக்கிறோம்  மதியம் பூவையர் பூங்கா என்று ஒலிபரப்பாகும்   ஒருமுறை பீட் ரூட் ஹல்வாவில் ஒரு அழுத்தம் கொடுத்து சொன்னதை கேலி செய்ததும் நினைவில் நாடகங்கள் என்றும்  நாட்டியம் என்றும் ஏக பிசிதான்  முறைப்படி நாட்டியம் கற்கவில்லையானாலும்   பள்ளியில் படிக்கும்போது நானும் என் அக்காவு ம் திரை இசைப்பாடல்களுக்கு ஆடுவோம் பள்ளியில்  படிக்கும்போது  வஞ்சில் லோட்டை வாலிபன்படத்தில்வரும்  கண்ணும்  கண்ணும் கலந்து என்னும் பாடலுக்கு பத்மினி வைஜயன்ந்தி மாலா ஆடுவது போல நானும்  என் அக்காவும்  ஆடியது நினைவில் அப்போதெல்லாம்  ஃபோட்டொ எடுத்து வைத்துக் கொள்ள வீட்டில் யாருக்கும் இந்டெரெஸ்ட்இருக்க வில்லை    அதுவே திருச்சியில் இருந்தபோது நடன நிகழ்ச்சிகள் சேர்ந்த நாடகங்களில் நடிக்க உதவியது மகளிர் சார்பில் திருச்சியிலிருந்து டெல்லி சென்று கலா மிலன் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டிருக்கிறேன்  அது என்னவோ என் கணவருடன் பல இடங்களுக்குச்  சென்றி ருந்தாலும்   லேடிஸ் க்ளப் நண்பிகளுடன்  சென்று வந்ததே அதிகம் நினைவுக்கு வருகிறது டெல்லியில் இந்திரா காந்தியை அவரதுஇல்லத்தில் சந்தித்தது  மறக்க முடியாது திருச்சியில் மகளிர் பிரிவில் பல நாடகங்களில் நடித்ததும்நினைவுக்கு வருகிறது திருச்சியில்  என்கணவர் பல நடகங்களைப்போட்டிருக்கிறார்  என்னையும் ஒரு நாடகத்தில் நடிக்கக் கூப்பிட்டார்  நானும் மேடையில் பேசாமலேயே  ஒரு மருத்துவராக மேடைக்கு  பின்னால் நடித்திருக்கிறேன்  திருச்சியில்  துவாக்குடியில் இருக்கும் ஃபூட்க்ராட் கல்லூரியில்  சேர்ந்து சர்டிஃப்கேட்டும்  வாங்கி இருக்கிறேன் என்னென்னவோ நினைவுகள்  திருச்சியை விட்டு பெங்களூர்  வந்தது அவ்வளவாக  திருப்தி தரவில்லை  விஜயவாடா  நினைவுகளும்   வருகின்றன அவை இன்னொரு பதிவில் 
ஒரு நாடகத்தில்

மாறு வேடத்தில் 
       

கிராமிய நடனம்

பாரத மாதாவுக்கு வந்தனம் 

பெண்களுக்கு நாட்டியப் பயிற்சிn

பின்னல் கோலாட்டம்


டெல்லி கலாமிலான் இந்திரா காந்தியுடன்