சென்னையில் நான் ----- சில நிகழ்வுகளும்நினைவோட்டங்களும்
----------------------------------------------------------------------------------------
இந்தமாதம் அதாவது ஏப்ரல் 18 முதல் 22 ம் தேதி முடிய நான் சென்னையில் இருந்தேன் ஏதோ ஒரு காரணத்துக்காக நான் சென்னை செல்வதானாலும் அந்த பயணத்தை
நான் வலைப் பதிவர்களை சந்திக்கும் ஒரு வாய்ப்பாகக் கருதுவேன் இந்தமுறையும் பலரையும் சந்திக்க நான் விரும்பினாலும் சிலரையே சந்திக்க முடிந்தது/ சென்னையில்
கொளுத்தும் வெயிலில் நான் பலரை சந்திக்க
அழைத்தாலும் வர இயல வில்லை என்று
சொல்லிவிட்டால் வருத்தப் படுவது குறைவாயிருக்கும்
ஆனால் எந்த பதிலும் சொல்லாமல் உதாசீனப் படுத்துவது வருத்தம் தருகிறது இதுவே எனக்கு வலை நட்புகளைப்
பற்றிய மதிப்பீட்டிலொரு மாற்று குறைய
வைக்கிறது. இருந்தாலும் நான் பயணத்தில்
இருந்தபோதே வருகிறேன் என்று சொல்லி
இருந்தாலும் தவிர்க்கமுடியாக் காரணங்களால் வர இயலவில்லை என்று தொலை பேசியில் தெரிவித்த திண்டுக்கல் தனபாலன் போன்றோர்
மதிப்பில் உயர்கிறார்கள் என்னை ஒரு தொந்தரவு
என்று எண்ணும் வகையில் நான் விடாது
தொடர்பு கொண்டும் வராதவர்கள் குறைந்த பட்சம் தங்கள் இயலாமையைத் தெரியப்படுத்தி
இருக்கலாம் இதில் வருகிறேன் என்று சொல்லி வராதசிலரும் உண்டு . Let bygones be bygones. I learn
from my experiances . இந்த முறை வெகு நாட்களாக சந்திக்க விரும்பிய பூவனம் ஜீவியை
சந்தித்தேன் அவரை நானும் என்னை அவரும் நேரிடையாய் அறியக் கிடைத்த ஒரு
வாய்ப்பு ஸ்ரீராம் காலையிலேயே வந்து
சென்றார், மதியம் தில்லையகத்து கீதா, தம்பட்டம் பானுமதி
வே நடன சபாபதி ஜீவி ஆகியோர் வருகை
தந்தனர் இவர்களுள் ஸ்ரீராமும்
கீதாவும் தங்கள் புகைப்படங்கள்
வருவதை விரும்புவதில்லை
ஒரு சிறிய காணொளி
திரு வெங்கட்ராமன் கணேசன் (ஜீவி) |
வே. நடன சபாபதி |
திருமதி பானுமதி, நான் .ஜீவி, நடனசபாபதி |
எங்கள்
ப்ளாக் கேட்டிருந்த சீதை ராமனை மன்னித்தாள்
என்னும் தலைப்புக்காக நான் எழுதி
இருந்த பதிவுக்கான பின்னூட்டங்கள்
நான் பெங்களூர் வந்தபின்பே வாசித்தேன்
அது குறித்து எல்லோருக்கும் மறுமொழி
தருவது நீண்டு விடும் என்பதாலும் நான் எழுதியது
கதை வடிவில் இல்லை என்றும் கட்டுரை போல்
இருக்கிறதுஎன்றும் படித்தேன் எனக்கே அந்த சந்தேகம் இருந்ததால் ஸ்ரீராமுக்கு
எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியைஇங்கே வெளியிடுகிறேன்
அன்பின் ஸ்ரீராமுக்கு வணக்கம் நிபந்தனையுடன் கதை கேட்டீர்கள்
ஆனால் நான் எழுதிக் கொடுத்திருப்பது கதையின் இலக்கணத்துக்கு (அப்படி ஒன்றிருந்தால்
) உட்படாதது நான் சற்றே
வித்தியாசமாய்ச் சிந்தித்து எழுதி இருக்கிறேன் உங்கள் தயவால் கம்பராமாயணம் சில
பகுதிகளுக்கு மீண்டும் சென்றேன் பிரசுரிக்க
முடியாதென்றால் தெரியப் படுத்தவும் இப்படிக்கு அன்பும் நன்றியுடனும் ஜீஎம்பி ”
அதற்குப்
பதிலாக ஸ்ரீராம் இதைத்தான் எதிர்பார்த்தேன். கட்டாயம்
வெளியிடுகிறேன். அனேகமாக
ஏப்ரல் 18. கணினிக்கு
வந்ததும் கன்பர்ம் செய்கிறேன். நன்றி.
மேலும் கதைக்கு இலக்கணமாக அவர் எழுதி இருந்தவரிகளும் இதோ சாதாரணமாக ஒரு சம்பவத்தை வைத்து கதை புனைவார்கள். நீங்கள் மொத்த சம்பவத்தையும் கோர்த்து, ஒரே வரியில் முடித்து விட்டீர்கள். அதுதான் நீங்கள் சொல்லும் கதையின் இலக்கணமோ! ஒரு சம்பவம்... தொடர்ந்து
ஒரு உரையாடல்... முடிவு! எப்படியோ..
இதை ஏப்ரல் 18 காலை 6 மணிக்கு வெளியிடுகிறேன்.
நன்றி ஸார்.
( நான் சிறுகதையின் இலக்கணம்
என்று ஏதும் எழுதி இருக்கவில்லை )
கதைக்கு இலக்கணம் என்று ஏதும்
இருப்பதாக எனக்குத் தெரியவில்லை ஒரு வரிக் கதைகளும் படித்திருக்கிறேன் முடிவில் சொல்ல வந்ததைச்
சொல்கிறோமா என்பதே முக்கியம் நான்
எழுதி இருந்தது என் புனைவு அல்ல, ராமாயணக் காப்பியத்தில்
இருந்ததை நான் புரிந்து கொண்டதைச்
சான்றுகளுடன் விளக்கி இருந்தேன்
ஸ்ரீராம் என்னைச் சந்தித்த போது
அவர் சொல்லும்இலக்கணப்படி ஒரு கதை எழுதினால் அதையும் பதிவிடுவதாகக் கூறி
இருந்தார் எனக்கு அந்த மாதிரியும் எழுத முடியும் அதையே கதையில் ராமன் சீதை என்னும் பாத்திரங்களைக்
கற்பனை செய்து ஏதோ கதை ஒப்பேற்றி விடலாம்தான் ஆனால் எனக்கு அது சரியாகத்
தோன்றவில்லை ராமன் சீதை என்றாலேயே நம்
மனதில் வருவது இராமாயணக் காப்பிய பாத்திரங்களே ராமாயணத்துக்கு யாரும் காப்பி ரைட்
வாங்கி இருப்பதாகத் தெரியவில்லை. ராமனை ஒரு உதாரண புருஷனாகவே நம் மக்கள்
நினைக்கின்றனர் என்னால் அப்படி நினைக்க முடியவில்லை எல்லா குணங்களும் குறைகளும் நிறைந்த
பாத்திரங்களாகவே அணுகுகிறேன் என் மனதில் தோன்றிய சில கருத்துகளுடன் கதை புனையத்
தயார்படுத்திக் கொண்டேன்இருந்தாலும் அசல் கதையை சிதைக்கக் கூடாது என்னும் முனைப்பும்
இருந்ததுஅதுவே இந்த வடிவம் பெற்றுவிட்டது ராமாயணக் கதையை அநேகமாக எல்லோரும் அறிந்துஇருப்பர் ஆகவே
கதையை விளக்காமல் பாத்திரங்களை மட்டும் அணுகுகிறேன்
ராமாயணத்தை
நான் ஒரு கதையாகவே எண்ணுகிறேன் அதன்
பாத்திரங்களுக்கு இல்லாத குணா விசேஷங்களை
கற்பனை செய்யவும்
விரும்பவில்லை இந்தப் பதிவே
பலரத்து பின்னூட்டங்களுக்கு மறுமொழியாக இருக்கிறது என்று தோன்று கிறது
சீதை ராமனை மன்னித்து விட்டாள் என்னும் தலைப்பில் கூடிய சீக்கிரமே எழுதுவேன்
என் வலைத்தளத்தில் பதிவிடுவேன்
அதுவாவது சிலர் நினக்கும் சிறுகதை
இலக்கணத்துக்குள் வருகிறதா பொறுத்திருந்துதான்
பார்க்க வேண்டும்
