அலைபாயு தே மனம் மிக அலை பாயுதே
-------------------------------------------------------
நீண்ட
நேர சிந்தனைக்குப் பின் இந்தப் பதிவை
எழுதுகிறேன் மனம் அலை பாய்கிறது என்றால்
பொதுவாகவே சங்கடமான விஷயங்களாகவே
இருக்கிறது ஏறத்தாழ ஏழு ஆண்டுகளாக வலையுலகில் இருக்கிறேன் இன்னும் சரியாகப் பிடிபடவில்லை. வலை நட்புகள்
அநேகமாக வெறும் அறிமுகங்களாகவே
இருக்கிறார்கள் நான் அதையே நட்பாக்கிக் கொள்ள விழைகிறேன் என்னை பொறுத்தவரை இந்த அறிமுகங்கள் நட்புகளாக
மலர ஒரு உள்ளார்ந்த எண்ணம் வேண்டும் அதை டெவெலப் செய்ய ஒருவரை ஒருவர் கண்டு
சந்திக்க வேண்டும் அதுவே நல்ல நட்புக்கு
வழிவகுக்கும் இயன்ற அளவு அதைச் செயல்
படுத்த முயற்சிக்கிறேன் நான் செல்லும்
இடங்களில் வலையுலக நண்பர்களைச் சந்திக்க முயன்று வருகிறேன் பெங்களூருக்கு யார் வருவதாக இருந்தாலும் என் வீட்டுக் கதவுகள் திறந்தே இருக்கும் அதைச் சிலர் அறிவார்கள் எல்லோருக்கும் எல்லா நேரமும் வலையுலக நட்புகளைச் சந்திக்க
இயலுவதில்லை. சூழ்நிலை அமையும் போது அதைப்
பயன்படுத்த விரும்புகிறேன் யார் என்னைத் தொடர்பு கொண்டாலும் உடனே என்னில்
எதிர்பார்க்கப்படுவதை உடனே செய்கிறேன் எனக்கு தொலைபேசியில் பேசுவது திருப்தி தருவதாயில்லை
அதனிலும் அஞ்சல மூலம் கருத்துப் பரிமாற்றம்
நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்
என்
எழுத்துகளைப் படிப்போருக்கு நான் ஒரு
திறந்த புத்தகம் என்று தெரியும் நான் சென்னை வரும்போதெல்லாம் பதிவுலக நண்பர்களை
சந்திக்க விழைகிறேன் நான் ஒவ்வொருவர் வீட்டுக்குச் சென்று
சந்திப்பது நேரம் எடுப்பது பல லாஜிஸ்டுகள் என சரியாகவருவதில்லை ஆகவே
குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் சிலரை
சந்திப்பது எளிதாக இருக்கும் என்னும்
எண்ணத்திலும் சந்தித்திராத பதிவர்கள் சந்திக்கமுடிவதையும் கருத்தில் கொண்டு முயன்று வருகிறேன் இதேபோல் நடந்த சந்திப்புகளில்தான் சென்னை
வாழ்பதிவர்கள் சிலரை சந்தித்து இருக்கிறேன்
சந்திப்புக்கு வர இயலாதவர்களும் இருக்கலாம் ஆனால் அதை தெளிவு செய்தால் மனம்
அலைபாய்வதைத் தடுக்கலாம் அல்லவா நேரமும் காலமும் சரியாக இருக்க வேண்டும் ஒவ்வொரு
சென்னை விஜயத்தின் போதும் பலரைத் தொடர்புகொண்டு அவர்களது சௌகரியங்களைக் கேட்கிறேன்
கம்யூனிகேஷன் என்பது மிக முக்கியம் ஆகவே
எழுதும் கடிதத்தில் எல்லா விவரங்களையும் கூறி அதற்கு பதில் எழுதும் போது அது
அனைவருக்கும் செல்லும் விதம் எழுத வேண்டிக் கொள்கிறேன் சந்திக்க விருப்பம் சொல்பவர்கள் எல்லாம் எல்லோரையும் சந்திக்க வேண்டுமென்பதே என் அவா. அதற்கென்றே
நேரமும் காலமும் சௌகரியப்படுமா என்றுகேட்கிறேன்
இல்லையென்றால் ஒருவரை ஒருவர் சந்திக்க இயலாமல் போகலாம் அனைவருக்கும் ஒரு
விண்ணப்பம் தயவு செய்து மனதில் நோ என்றுநினைத்து யெஸ் என்று சொல்லாதீர்கள் குறைந்த பட்சம்
பதிலாவது போடுங்கள் இதையே மனம் அலை
பாய்கிறது என்றுகூறுகிறேன் என் அஞ்சல்களுக்குப் பதில் எழுதாமல் இருப்பது
அலட்சியம் செய்வது போல் இருக்கிறது எனக்கு
அது மிகவும் வருத்தம் தரும் விஷயம் இதுவரை நான் யாருடைய கடிதத்துக்கும்
பதில் எழுதாமல் இருந்ததில்லை. வலை நட்புகளை நேசிப்பதாலேயே சந்திக்கவும் விரும்புகிறேன்
சரி விஷயத்துக்கு வருகிறேன் நாங்கள் என் தம்பியின் பேத்தியின்
திருமணத்துக்கு சென்னை வருகிறோம்
இந்த மாதம் 18ம் தேதி இரவு சென்னை வந்து
திருமணம் 21ம் தேதி என்பதால்
20ம் தேதி சில வலைப்பதிவர்களை சந்திக்கவிருப்பம்
சிலருக்கு அஞ்சல் மூலம் தெரிவித்து
இருக்கிறேன் சந்திக்க வருவதாகக்
கூறியவர்கள் எல்லோரும் சந்திக்க வேண்டி 20ம்
தேதி மதியம் சென்னையில் என் மகன்
வீட்டில் கூட வேண்டுகிறேன் என் மகன்
வீடு வேளச்சேரி விஜய நகர்ப் பேரூந்து நிலையத்தில் இருந்து சுமார் 200
மீட்டர் தூரத்தில் 100 அடி புற வழிச்சாலையில் இருக்கும் சாய் சரோவர் என்னும் பத்துமாடிக் குடியிருப்பில் ஏழாவது தளத்தில் இருக்கிறது சிலர் ஆண்டுகளுக்கு
முன் வந்திருக்கலாம் சிலர் இன்னும் வராதிருக்கலாம் ஆகவே வர இருப்பவர்கள் தயை கூர்ந்து இதற்கு பதில் தெரிவிக்க
வேண்டுகிறேன் நான் அழைப்புவிடுத்தவர்களில் ஸ்ரீராம் நடன சபாபதி ஜீவி தில்லையகத்து கீதா தம்பட்டம் பானுமதி ஆதிராமுல்லை முனைவர் பானுமதி
மின்மினிப் பூச்சிகள் சக்தி பிரபா எரிதழல்
வாசன் ஆகியோர் உள்ளனர் இவர்கள் தவிர
சௌகரியப்பட்டவர்களும் வருவதை
விரும்புகிறேன் இன்னும் சில நாட்களே
இருகும் தருவாயில் அனைவரையும்
மீண்டும் தொடர்பு கொண்டு அவர்களது
நிலையைக் கேட்டறியத் தாமதமாகலாம் என்பதாலேயே இந்த அலைபாயும் மனதின் எண்ணங்களைப் பதிவாக்குகிறேன் என்
தளத்துக்கு வரும் பதிவர்கள் எல்லோரையும்
சந்திக்கவிருப்பம் இதையே ஒரு மினி
பதிவர் சந்திப்பாக்கி வெற்றியடையச்செய்ய வேண்டுகிறேன் என் தொலைப் பேசி தொல்லை பேசியாக இருக்கிறது
இருந்தாலும் தகவல் தெரிவிக்க 18ம்
தேதிக்கு முன் கீழ்கண்ட
தொலைபேசிகளிலும் கூறலாம்
எனது
கைபேசி எண் 09686595097
என்
மனைவியின் கைபேசி எண் 09739453311
இன்னொரு
எண் 07760593289
முடிந்தவரை
அஞ்சலில் தொடர்புகொள்ள வேண்டுகிறேன்
சில
நாட்களாக ஃபயர் ஃபாக்சில் திறக்காமல் இருந்த என்
தளம் இப்போது திறக்கிறது என்னமாயமோ தெரியவில்லை.
ஒரு மினி பதிவர் சந்திப்புக்கான அழைப்பு வருகை வேண்டி நன்றிஒயுடன்
பதிலளிநீக்குவணக்கம் ஐயா கடந்த பத்து தினங்களாக நான் ஊரில் இல்லை ஆகவே கணினி திறக்கவில்லை எனக்குயமின்னஞ்சல் அனுப்பி இருந்தால் பதில் இடாததற்கு மன்னிக்கவும்
பதிலளிநீக்குதற்போது குடுபத்தில் பிரச்சனைகளால் தங்களை மட்டுமல்ல யாரையும் காணும் மனச்சூழல் அமையவில்லை
கண்டிப்பாக தங்களை பெங்களூரு வந்தாவது சந்திப்பேன் என் மன ஆறுதலுக்காகவாவது... கில்லர்ஜி
முடியும் போது வாருங்கள்ஜி பெங்களூர் வந்திருக்கிறீர்களா நன்றி
நீக்குஅன்பின் ஐயா..
பதிலளிநீக்குதங்களது எண்ணப்படி வலைப் பதிவர் சந்திப்பு சிறப்புடன் நிகழ்வதற்கு வேண்டுகிறேன்..
துரை செல்வராஜூ..
குவைத்..
எல்லா விதத்திலும்தொடர்பு கொண்டு செயல் படுகிறேன்நலமாக சந்திக்க முடிந்தால் நலமாக இருக்கும் நன்றி சார்
நீக்குபாலு ஐயா மிக நீண்ட நாட்களுக்குப் பின் (உங்கள் மின் அஞ்சல் பார்த்தபின்பு) வலை தளத்திற்கு வருகிறேன். விலாசத்தையும் உங்கள் மொபைல் எண்ணையும் குறித்துக் கொண்டேன். 20 ஆம் தேதி மதியத்துக்கு பின் சந்திக்கலாம் (நேரத்தை குறிப்பிடுங்கள்) நன்றி
பதிலளிநீக்குமிக்க சந்தோஷம் வாசன் பலரையும் சந்திக்க இது ஒரு வாய்ப்பு வருகைக்கு நன்றி சார்
நீக்குசந்தியுங்கள். அதனைப் பதிவாக எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநல்லவிதமாக சந்திப்பு நிகழ்ந்தால் நிச்சயம் எழுதுவேன் வாழ்துகளுக்கு நன்றி சார்
நீக்குஆவ்வ்வ்வ் மிக நல்ல ஐடியா,,, விரைவில் ஒரு கெட்டுகெதர் நடக்க வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஅதுக்கு முக்கியமா எங்கட ஸ்ரீராமையும் கீதா ரெங்கனையும் கூப்பிடோணும்... அவர்களை ஒரு 15 படங்களாவது எடுத்து இங்கின போட்டிடுங்கோ ஐயா பிளீஸ்ஸ்ஸ்:).
ஒன்று தெரியுமா அதிரா அவர்களது புகைப்படங்களைப் பதிவிடுவதை அவர்கள் விரும்புவார்களோ தெரியாது வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்கு//எங்கட ஸ்ரீராமையும் கீதா ரெங்கனையும் கூப்பிடோணும்... அவர்களை ஒரு 15 படங்களாவது எடுத்து இங்கின போட்டிடுங்கோ ஐயா பிளீஸ்ஸ்ஸ்:).//
நீக்குஃபோட்டோவா? அப்போ நான் வரலை ஜி எம் பி ஸார்!!!!!!!!
உங்களுக்கு புகைப்படம் வெளியிடுவது பிடிக்காது என்று தெரியும் அதைக் காரணங்காடி வராமல் இருக்காதீர்கள்
நீக்குவலைப்பதிவர் சந்திப்பு இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் நடைபெற முன் கூட்டிய வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு நன்றி மேம்
நீக்குசந்திப்புகள் வெற்றி பெற வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு நன்றி சார்
நீக்குநீங்கள் குறிப்பிட்ட நாட்களில் (அந்த வாரத்தில்) சென்னையில் தான் இருப்பேன் - வியாபார பயணத்தில்... தங்களை சந்திக்க ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது தான் தெரியவில்லை ஐயா...
பதிலளிநீக்குநீங்களும் கலந்து கொண்டால் அதைவிட மகிழ்ச்சி இல்லை. முயன்று பாருங்கள்/ பதிவில் இடம் குறித்து எழுதி இருக்கிறேன் நினைவில் இருக்கட்டும் 20ம் தேதி
நீக்குவாவ் !!நல்ல விஷயம் நட்புகளை சந்திப்பது மனதுக்கும் மகிழ்வு இனிதே நடைபெறட்டும் தங்கள் கெட் டு கெதர்
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு நன்றி ஏஞ்செல்
நீக்குவலைப் பதிவர் சந்திப்பு வெற்றி பெறட்டும் ஐயா
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றி சார்
நீக்குஅமெரிக்கப்பயணம் முடிந்தவுடன் தங்களிச் சந்திக்கிறேன். சரியா? புச்தகாவில் புத்தகம் வந்துவிட்டதா?
பதிலளிநீக்கு- இராய செல்லப்பா (சுற்றுப் பயணத்தில்) நியூ ஆர்லியன்ஸ்
புத்த்சகம் இன்னும் வரவில்லை வந்தவுடன் தெரிவிப்பேன் நன்றி சார்
நீக்குதங்களின் விருப்பம் நிறைவேற வாழ்த்துகள் :)
பதிலளிநீக்குபலரும் சேர்ந்தால்தனே சந்திப்பு இனிமையாகைருக்கும் வாழ்த்துக்கு நன்றி ஜி
நீக்குசந்திப்போம், ஐயா... வருகிறேன்...
பதிலளிநீக்குஇது ஒரு இனிப்பான செய்தி சரவணன் மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி
நீக்குசிந்தித்தவர்களைப்பற்றி வேற ஒரு பதிவை உங்களிடம் எதிர்பார்க்கின்றேன் .சந்திப்பு இனிதே அமைய வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குசிந்தித்தவர் பற்றிநான் என்ன கூறமுடியும் சந்திப்பு முடிந்தபின் எழுதுவேன்
நீக்குதாங்கள் பதிவர்கள் சந்திப்புக்குத் தரும்
பதிலளிநீக்குமுக்கியத்துவம் முன்னரே உங்களைச்
சந்தித்து இருப்பவர்களுக்குத் தெரியும்..
சந்திப்பு சிறப்பாக அமைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
( நான் தற்சமயம் யு.எஸ்ஸில்
அறிவீர்கள் தானே )
வாழ்த்துகளுக்கு நன்றி ரமணிசார்
நீக்குநட்புக்கு நீங்கள் காட்டும் முக்கியத்துவம் மகிழ்ச்சி தருகிறது. உங்களது ’மினி பதிவர் சந்திப்பு’ சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குI am keeping my fingers crossed Thanks
நீக்குஇருபதாம் தேதி மட்டும்தான் சந்திக்க இயலுமா என்று அறிய விழைகிறேன். நானும் கூடுமான மட்டில் வரவே விரும்புகிறேன் என்பதைத் தாங்களும் அறிவீர்கள்தானே? சில சமயங்களில் கைமீறி விடுகிறது நிலைமை!
பதிலளிநீக்குஎப்படியும் வருவீர்கள் என்று தோன்றுகிறது வென் தேர் இஸ் எ வில் தேர் இஸ் எ வே
நீக்குஇம்மாத 20 ஆம் நாளன்று திட்டமிட்டபடி சந்திக்கிறேன் ஐயா!
பதிலளிநீக்குசில எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் இருக்கும் என்றே நினைக்கிறேன் வருகையை எதிர் நோக்குவேன் நன்றி ஐயா
பதிலளிநீக்கு