ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

நினைத்துப்பார்க்கிறேன்


                                      நினைத்துப் பார்க்கிறேன்
                                     ---------------------------------------
இன்று காலை என் மகன் தொலைபேசியில் அழைத்தான்  எப்போதும் காலில் சக்கரம்  கட்டியது போல் வேலை நிமித்தம் ஓடுபவன்  , தொலை பேசியில் அழைத்ததும்   இன்று என்னைக் காண வருவதாகக் கூறியது கேட்டு மகிழ்ந்தேன்  ஒரே ஊரில் இருந்தும் அடிக்கடி சந்திக்க முடிவதில்லை. ஒரு முறை ஜீவி  அவர்கள் ஏன் தனியே தங்குகிறீர்கள் மகனுடன் இருக்கலாமே என்று குறிப்பிட்ட நினைவு, ஆனால் என்  குணத்துக்கு தனியே இருப்பதே சரி  என்றும் பதில் எழுதியதாகவும்  நினைவு. இன்னொரு சந்தோஷம்  என்னவென்றால்  இம்முறை வரும்போது என்  இரண்டாம் பேரன் எங்களுடன் சில நாட்கள் இருப்பான் என்றும்  கூறியதுதான் பேரக்குழந்தைகள்தாத்தா பாட்டிக்கு எப்பவுமே செல்லம் தான் ஆனால் அது ஒருசில வயதுவரை மட்டுமே. அவர்களும் வளர்கிறார்கள்  தங்களுக்கு என்று ஒரு தனி ஐடெண்டிடியையும்  வளர்த்துக் கொள்கிறார்கள் அதுவும்  இந்தக் காலத்தில் …..சொல்லவே வேண்டாம் மூன்று வயதுக்குள் இருந்தபோது என்  பேத்திக்கு நான்  இருந்தால் போதும் அவ்வளவு பொசெசிவ்நெஸ் . ஆனால் இப்போதுகல்லூரி முடிக்கும் தருவாயில் அதே போல் அவள் இருப்பாள்  என்று நினைப்பதும் கொஞ்சம் ஓவரில்லையா  இருந்தாலும்நான் அவளிடம்  அவப்போது long long ago , so long ago . nobody knows how long ago  there was a little girl who used to love her thaaththa so much that the thaththaa  longs for those days  என்று கலாய்ப்பேன்  குழந்தைகள் குழந்தைகளாக இருக்கும்  வரை தாத்தா பாட்டிகள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்  இந்த என்   அங்கலாய்ப்பை  நான் ஒரு பதிவாக எழுதி இருந்தேன்

 மூன்றாண்டு   முற்றுப்   பெறாத   இளவயது, 
  எண்ணமும்   சொல்லும்   இணையப்   பெறாத   மழலை, 

  சொல்வதை,   கேட்பதைகிரகிக்க  விழையும்   தன்மை,
                             அது  அந்தக்  காலம் !

       கதை    கேட்கும்    ஆர்வம்,

       கதா   பாத்திரமாகும்   உற்சாகம்,

       ராமனாக , அனுமனாகஅரக்கி  சூர்ப்பனையாக,

       மாறுவான்  நம்மையும்   மாற்றுவான்,

                              , அது   அந்தக்   காலம்!

       நான்கு   மாடுகள்   கதையில்   அவனே  சிங்கம் ,

       முதலையும்   குரங்கும்   கதையில்   அவனே  குரங்கு, 

      பீமன்    வால   நகர்த்த   திணறும்  கதையில்  அவனே
   அனுமன்  
                               , அது    அந்தக்   காலம்!

      ஆறு    காண்ட   ராமாயணம்   அழகாக   சொல்லுவான்,

      ,
       கலைஞரின்   வீரத்தாய்   வசனமும்  விட்டு வைத்தானில்லை,

                                , அது   அந்தக்  காலம், !

       விநாயகர்  துதி   பாடுவான், வள்ளிக்  கணவன்  பெயர்  பாடுவான், 

       கண்ணனின்   கீதை  சொல்லுவான், காண்பவர்  கேட்பவர்

       மனம்  மகிழ  திரை  இசையும்   பாடுவான்,

                               , அது    அந்தக்   காலம்,  !

       கதை   சொல்லி  மகிழ்ந்தேன் , அவனோடு  நானும் நடித்தேன் ,

       அவனைப்  போல்  என்னை   நான் மாற்ற ,  என் வயதொத்தவன்   போல் 

       அவன்  மிளிர , எனக்கு  அவன், அவனுக்கு  நான் என,

      , அது   அந்தக்    காலம்,   !

       காலங்கள்    மாறும்  காட்சிகள்    மாறும், 

       காலத்தின்   முன்னே   எல்லாம்   மாறும்,

       மாற்றங்கள்   என்றால்   ஏமாற்றங்களா, ?

      நேற்று   இன்றாகவில்லைஇன்று   நாளையாகுமா?

       ஓராறு   வயதில்  இல்லாத  எண்ணம்,

      மூவாறு   வயதில்  வருவது    ஏனோ?

      இதுதான்    தலைமுறை   இடைவெளியோ?

      கடந்த   நிகழ்வுகள்   நினைவுகளாய்த்   திகழ,

      நடக்கும்   நிகழ்வுகள்   மகிழ்வாக   மாற ,

      இன்றும்    ஒரு நாள் , அது   அந்தக்   காலமாகும், !

இது எழுதியது என் மூத்தபேரன் பற்றி ஆனால் இன்று வரப் போவது என் இளைய பேரன்  இவனைக் குறித்தும் நிறைய  எழுதி இருக்கிறேன்
கடந்த கால நினைவுகள் மனதுக்கு உற்சாகம் தரும் கூடவே இந்தக் காலம் ஏன்  அப்படி இல்லை என்றும் மனம் ஏங்கும்

, 
      
               
                                          



53 கருத்துகள்:

  1. அன்பின் உறவுகளுடன் அகமகிழ்ந்திருப்பதே இனிது..

    நலம் என்றும் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் உறவுகள் காலம் மாறும்போதுவெளிப்படுத்தும் விதம் வேறாக இருக்கிறது வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  2. பேரன்களுடன் தாங்கள் பொழுதைக் கழிப்பதைவிட பேறு வேறென்ன உங்களுக்கு ?
    என்ஜாய் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேறு என்று நாம் நினைக்கிறோம் அவர்கள் அப்படி நினைகிறார்களா தெரியவில்லை.

      நீக்கு
  3. பேரன் வரும் உற்சாகம் தெரிகிறது. வாழ்த்துகள். கொண்டாடுங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் உற்சாகம்தான் இருந்தாலும் இப்பொதைய குழந்தைகள் நம்முடன் நேரம் கழிப்பதை விட கை பேசியிலும் தொலைக்காட்சிகளிலும் தங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் நன்றி ஸ்ரீ

      நீக்கு
    2. பெரியவர்களோ பேப்பர் படிப்பதிலும் பதிவுகள் போடுவதிலும் அரசியல் பேசுதலிலும்...

      பெண்களின் பெரும் நேரத்தை சமையலறை சாப்பிட்டு விட்டாலும், அவர்களால் தான் குழந்தைகளுடன் நெருக்கமாக இருக்கவும் முடிகிறது என்பது இன்னொரு பார்வை.

      ஆண்கள் என்றைக்குமே விட்டேத்தியானவர்கள். வளர்ந்த குழந்தைகள் என்றால் ஓரிரண்டு விசாரிப்புகளுடன் முடித்துக் கொள்வார்கள். குழந்தைகளுடன் இழைந்து போவது தனிக் கலை. பெரும்பாலும் ஆண்களுக்கு அந்த சாமர்த்தியம் குறைச்சல் தான். என்ன நடக்கிறது என்று வேண்டுமானால் நோட்டம் விட்டுக் கொண்டிருப்பார்கள்.

      நீக்கு
    3. நீங்கள்சொல்வது ஒரு வேளை பலர் இருக்கும் குடும்பங்களில் நிகழலாம் ஆனால் எங்கள் வீட்டில் நாங்கள் இருவரே குழந்தைகளுடன் நேரம் கழிப்பது ஒரு பாக்கியம் ஆனால் அவர்களுட ஓடியாடுவதுஇயலாதது. இந்தக் காலத்தில் கைபேசியும் அதம் கேம்ஸும் தொலைக்காட்சி ஆங்கில கார்டூன்களும்தான் பிள்ளைகளின் பொழுது போக்கு ஏனோ அவர்கள் செய்வதைப் பெரியவர்கள் விரும்புவதில்லை என்னும் எண்ணமாயும் இருக்கலாம் பெரியவர்கள்தான் அட்ஜஸ்ட் செய்து போக வேண்டும் அதுவும் ஒரு சில நாட்களே வந்து தங்கும் குழந்தைகளிடம் கேட்கவே வேண்டாம் வர்ய்கைக்கு நன்றி சார்

      நீக்கு
  4. ஓ!அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ? கவிதை அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதையில் ஒரு ஆதங்கம் தெரியவில்லையா நன்றி ஐயா

      நீக்கு
  5. காலமாற்றத்தால் நடக்கும் நிகழ்வுகளைச் சொல்லியிருக்கிறீங்க... நான் நினைப்பது, இப்போ இருக்கும் பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள், ஒதுங்கி நடப்பது அதிகமாகுதே என எண்ணும்போது, உடனே நான் எப்படி இருந்தேன் என நினைப்பேன், நானும் அப்படியேதான் இருந்தேன்.. குழந்தையில் இருப்பதுபோலத்தான் எப்பவும் இருப்பார்கள் என எதிர்பார்ப்பது தப்பு.

    ஆனா நட்புக்கள், படிப்பு என கொஞ்சம் டிஸ்ரன்ஸ் ஏற்பட்டாலும் குழந்தையில் ஏற்படுத்தி விட்ட அன்பு பாசம் என்றைக்கும் குறையாது, வெளிக்காட்டுவது குறைந்தாலும், உள்ளே அது அப்படியே இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு பாசம் குறைகிறதென்று நானும் எண்ணவில்லை இருந்தாலும் அவர்கள்வளரும் போது ஒட்டுதல் கொஞ்சம் குறைகிறது போல் தெரிகிறதுஎனக்கு தாத்தா பாட்டிகளுடன் உறவு அதிகம் இருந்ததில்லை.

      நீக்கு
    2. பெண் குழந்தைகளுக்கு எப்பவும் பொறுமை அதிகம் இருக்கும், அவர்கள் எந்நேரமும் அருகில் வந்து இருந்து கதைகள் கேட்பார்கள். ஆனா ஆண் பிள்ளைகள் பாசம் உள்ளே இருக்கும், ஆனா பொறுமை இருக்காது, அவர்களுக்கு தம் நட்போடு ஓடி ஆடி விளையாடுவதில்தான் ஆர்வம் அதிகமாகும்.. இதை ஒட்டுதல் குறைந்து விட்டது என எண்ணிடக்கூடாது.

      குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வயதுவரைதான், கையைப் பிடிச்சு நடப்பது, அருகில் இருப்பது, கதை கேட்பது பிடிக்கும் பின்னர் அது குறைந்திடும்.. தாம்வளர்ந்துவிட்டதாக ஃபீல் பண்ணுவினம், கூச்சப்படுவினம்.

      நீக்கு
    3. எங்கள் அண்ணா, அதிகம் வளர்ந்தது அம்மப்பா அம்மம்மா வோடுதான், அவர்களுக்கும் பேரன் மேல் உயிர், அண்ணன் ரியூசனுக்குப் போகிறபோது மழை வந்தால், அம்மப்பா குடை எடுத்துக்கொண்டு ஓடுவாராம், ரியூசன் செண்டருக்கு... அங்கு அம்மப்பாவைப் பார்த்ததும், பின் டோரால் ஃபிரெண்ட்ஸ் உடன் ஒளிச்சு ஓடி வீட்டுக்கு வந்து பேசுவாராம் அங்கு எதுக்கு வந்தீங்க என:).. ஹா ஹா ஹ இதெல்லாம் வயதுக் கோளாறு:), கவலைப்படாமல் பெரியவங்க புரிஞ்சு நடக்கோணும்.

      நீக்கு
    4. சில குடும்பங்களில், பெற்றோரின் கண்டிப்பாலும் பிள்ளைகள் தாத்தா பாட்டியுடன் ஒட்டுவது குறையலாம். ஆனா அதெல்லாம் ஒரு 22,23 வயது வரைதான், அதுவரை பெற்றோரின் வாக்கு பெரிதாக இருக்கும்.. பின்பு தாம் உழைக்க தொடங்கியதும் சின்ன வயது நினைவுகள் அதிகமாகிடும்... பின்னர் சுகந்திரமாக வந்து ஒட்டுவார்கள். நிறைய சொல்ல வருது, எழுத பயமாக இருக்கு.

      பெற்றோராக இருப்போரும் யோசிக்க வேணும்.. நாம் வருங்கால தாத்தா பாட்டி என்பதை..

      நீக்கு
    5. பெண்குழந்தைகளும் இதுபோல்தான் அதையே நான் பதிவில் என் பேத்தியைப் பற்றி எழுதி இருக்கிறேன் ஒரு வேளை “நான் வளர்கிறேனே “ என்று எண்ணுகிறார்களோ என்னவோ இன்றைய குழந்தைகள் அவர்களின் வயதுக்கு மீறி வளர்கிறார்கள் சிந்திக்கிறார்கள்இந்த சுட்டியைப் படித்துப் பாருங்கள் சில ஆண்டுகளுக்கு முன் எழுதியது http://gmbat1649.blogspot.com/2013/06/blog-post.html

      நீக்கு
  6. பேரப்பிள்ளைகள் வந்து தங்குவது மிகச் சந்தோசமான தருணம் தான். எங்கள் அப்பா சொல்லுவார், கோயிலில் போய் கண்ணை மூடிக் கும்பிடும்போது பேரனின் முகமே(எங்கள் மகன்) தன் கண்ணுக்குள் வரும் என... பிறந்த உடனேயே தூக்கத்தொடங்கி.. வளர்த்த பாசம் என்றைக்கும் விட்டுப்போகாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலம் மாறுகிறது அதிரா நாம் நினைக்கும் விதம் அவர்களிருப்பது குறைகிறது

      நீக்கு
  7. சந்தோஷமாக பேரன், மகன் வரவை அனுபவியுங்கள்.

    அதிரா எழுதியதும் நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றுடன் ஒரு நாள் ஆகிறது நம்முடனான வேவ் லெங்த் குறைகிறதோ என்னும் சந்தேகம் உள்ளது

      நீக்கு
  8. பெயரனுடன் இனிமையாய் பொழுதினைக் கழித்திட மனதளவில்,தாங்கள் இப்பொழுதே தயாராகிக் காத்திருப்பது புரிகிறது ஐயா
    மகிழ்ந்தேன் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிகமாக எதிர்பார் த்து நான் ஏமாறக் கூடாது அல்லவா

      நீக்கு
  9. பேரன் வரவில் மகிழ்ச்சி பொங்கட்டும்! குழந்தைகளுடன் பொழுதைக் கழிப்பதே இனிமை தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி மேம் உங்கள் பொழுது பேரக்குழந்தைகளுடன் தானே இப்போது

      நீக்கு
  10. உற்சாகம் குறையாத உத்தமர் அல்லவா நீங்கள்! உங்களிடம் இருந்து நாங்கள் உத்வேகம் பெறுகிறோம். பேரக் குழந்தைகளுக்கு நீங்கள் என்னென்ன செய்கிறீர்கள் என்றுநாங்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உற்சாகம் தரும்பின்னூட்டத்துக்கு நன்றி சார்

      நீக்கு
  11. உங்களுடைய மகிழ்ச்சியில் நாங்களும் கலந்துகொள்கிறோம் ஐயா. தாத்தா பேரனின் இனிய கொண்டாட்டப் பகிர்வுக்குக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவன் சென்றபிறகு மனசில் தோன்றுவதுபதிவாகும் நன்றி சார்

      நீக்கு
  12. பேரக் குழநதைகள் பெரிய்வர்கள் ஆனாலும் தாத்தா பாட்டியின் மீது உள்ள அன்பு மாறாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதானே எதிர்பார்ப்பு வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  13. ஸார் பேரக் குழந்தைகள் வருவது அவர்களுடன் நேரம் செலவிடுவது என்பது எஞ்சாய் செய்யுங்கள் அவர்களுடைய வேவ் லெங்க்த் மாறியிருக்கலாம்...அதனால் ஏன் நம் குழந்தைகளே கூட வயது ஏற ஏற மாற்றங்கள் வரத்தானே செய்கிறது அது போலத்தான்..உங்கள் ஆதங்கம் புரிகிறது சார்...அவர்களின் அன்பு குறையாது...ஆனால், நீங்கள் சொல்லும் அந்த இடைவெளி வரத்தான் செய்கிறது...ஒரு வேளை அவர்களது ஆர்வத்தில் சிந்தனைகளில், நாமும் ஆர்வம் காட்டினால் இந்த கேப் ஃபில் ஆகுமோ சார்...சில வீடுகளில் பார்த்திருக்கிறேன் சார்...எனிவே ஹேவ் எ நைஸ் டைம் சார்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அதிராவுக்கு ஒரு சுட்டி கொடுத்திருக்கிறேன் முடிந்தால் படித்துப்பார்க்கவும் என் பேரனைப் பற்றி முன்பு எழுதியது அது ஏனோ தெரியவில்லை அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே வருகைக்கு நன்றிம்மா

      நீக்கு
  14. ஒ , அது அந்தக் காலம் !
    கதை கேட்கும் ஆர்வம்,
    கதா பாத்திரமாகும் உற்சாகம்,
    ராமனாக , அனுமனாக, அரக்கி சூர்ப்பனையாக,
    மாறுவான் நம்மையும் மாற்றுவான்,
    ஒ , அது அந்தக் காலம். !
    நான்கு மாடுகள் கதையில் அவனே சிங்கம் ,
    முதலையும் குரங்கும் கதையில் அவனே குரங்கு,
    பீமன் வால நகர்த்த திணறும் கதையில் அவனே
    அனுமன்
    ஒ , அது அந்தக் காலம், !//
    அருமை.


    இளம்பிராய்த்தில் கதை சொல்லும் போது கண்களை விரித்து கதை சொல்வதற்கு ஏற்றார் போல் அவர்கள் முகபாவம் மாறும் போது அதைப் பார்ப்பது ஆனந்தம்.
    தாத்தாவிற்கு பேரனின் வருகை மகிழ்ச்சியை தரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் பிள்ளைகள் வெகு சீக்கிரத்தில் வளர்கிறார்களே நாம் நினைவு படுத்தினாலும் அப்படியா என்றே கேட்கிறார்கள் வருகைக்கு நன்றி மேம்

      நீக்கு
  15. தாத்தாக்களும் பாட்டிகளும் அப்படியே இருக்கிறாரகள் ஆனால் பேரப்பிள்ளைகள் விரைவில் வளர்கிரார்களே :) அந்த துரித வளர்ச்சிதான் நம் எல்லாருக்கும் அன் ஈஸியாகா இருக்கு 3 வயதில் ஒளிந்து விளையாடினப்பிழை 15 இல் அப்படி விளையாட முடியாதே :) எங்களுக்கு மகள் வேகமா வளர்த்து விட்டாள்னு கவலையாக இருக்கும் :) பேரனோட சந்தோஷமா விடுமுறையை கழியுங்கள் அவனுக்கு அந்த நினைவுகள் எக்காலமும் இருக்கும் ..பல நினைவுகளை எனக்கு மீட்டெடுத்தது போன்ற உணர்வு உங்கள் பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஏஞ்செல் அவர்கள் சீக்கிரமாகவே மாறுகிறார்கள் நாம்தான் நினைவுகளில் வாழ்கிறோம் அந்தப்பிராயத்தில் அவர்களது செயல்களும் பேச்சுகளும் மறந்து விடுகிறார்கள்

      நீக்கு
  16. இன்றைய கால குழந்தைகள் உறவுகளை தவிர்க்கவே நினைக்கிறார்கள் ,இடைவெளி கூடிக் கொண்டேதான் போகும் போலிருக்கிறது :)

    பதிலளிநீக்கு
  17. அங்கங்கே ups and down இருந்தாலும் தங்களுக்கும் சுற்றியிருப்பவர்களுக்கும் திருப்தியாக இருந்திருக்கிறீர்கள் என்று மட்டும் புரிகிறது. 87 வயது பாட்டி கால் சரியில்லாமல் இருந்தாலும், எங்களுக்காக பலகாரம் செய்து கொடுத்ததை அன்று appreciate செய்யுமளவுக்கு மனமுதிர்ச்சியில்லை. குழந்தைகள், நீண்டநாட்கள் குழந்தைகளாகவே இருக்கட்டுமே!

    பதிலளிநீக்கு
  18. நீண்டஇடைவெளிக்குப்பின் உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது குழந்தைகள் குழந்தைகளாக இருக்காவிட்டாலும் குழந்தை மனதோடு இருப்பது நலம் தரும் ஆனால் குழந்தைகள் இப்போதைய சூழ்நிலையில் இள வயதிலேயே மன முதிர்ச்சியுடன் வளர்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  19. சொல்லப் போனால் நம்மைவிட இக்காலக் குழந்தைகளுக்கு அனைத்தும் தொலைக்காட்சி மூலம் தெரிந்துவிடுகிறது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி மேம்

      நீக்கு
  20. பேரக்குழந்தைகளுக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரியவர்களின் வாழ்த்துகள் சிறார்களுக்கு அவசியம் நன்றி ஐயா

      நீக்கு
  21. காலங்கள் மாறினாலும்
    அந்த நாள் நினைவுகள்
    மீட்டுப் பார்க்க நேரிடுமே!
    எந்தக் காலத்திலும்
    அன்பைப் பேணுவதால்
    உறவுகளின் அணைப்புத் தொடருமே!
    தங்கள் பேரப்பிள்ளைகளுடன்
    தாங்கள் காட்டும் அன்பு தானே
    தங்கள் மடியில் - அவர்கள்
    துள்ளி விளையாடப் போதுமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலங்கள் மாறுகின்றனதான் ஆனால் நம்மால் மட்டும் காலத்தின் மாற்றங்களை உள் வாங்குவது சிரமமாய் இருக்கிறதே நன்றி சார்

      நீக்கு
  22. Rigid circumference of expectations. When they are not met, we feel unhappy. Try to expand or alter it. When they visit home, don't wait with the net of circumference to trap them. Just do you own things and let them watch your actions directly or indirectly. No one is useless. Everyone has something or more to do. For e.g. religiosity. If yours is practised meaningfully (I don't mean blind bhakti), they will carry the memories with them and, if they are sufficiently adults with powers of independent thinking and judgment, they will analyse the memories and take them if found fit, more or less, and feel grateful all along their lives, and even pass them to generation next. To live in the hearts of those whom we love is not to die. You continue to live, meaningfully, like the organ donators live in another's lighting their lives. Life is ours, not theirs. At your age, no question of give and take. It is always GIVE and GIVE only.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. The blog is an area where I feel free to let my emotions to run . I am able to recognise the changing times / Thanks for visiting

      நீக்கு
  23. இரண்டாவது பேரன் இன்னும் பல பதிவை எழுத உற்சாகம் ஊட்டி உங்களை இன்னும் செளிப்படைய வைப்பான் என நம்புகிறேன் .கால மாற்றம் சிறியவர்கள் முதல் பெரியோர் வரை இடைவெளி ஒன்றைக்கொடுப்பது இயல்பு தானே?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவன் என்னை எழுதத் தூண்டிய சந்தர்ப்பங்களை முற்றிலும் மறந்து விட்டிருக்கிறான் நான் தான் அவைகளை எல்லாம் நினைவில் போட்டு வைத்திருக்கிறேன் வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  24. எனக்குப் பதிவுலகுப் பிடித்திருப்பதும்
    விடாது எதையாவது எழுதி தொடர்பில்
    இருப்பதும்,

    இதுபோன்ற நம் சந்தோஷங்களைப்
    பகிர்ந்து மகிழ்வு கொள்ள

    நம் எழுத்தின் மூலம் நம்மை மிகச் சரியாகப் புரிந்து
    கொண்ட ஒரு சிறு குழாம் இருக்கிறது என்கிற
    நம்பிக்கையில்தான்

    மீண்டும் புத்துணர்வு கொள்ள
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு