வெள்ளி, 14 ஏப்ரல், 2017

சித்திரை விஷு


                                 சித்திரை விஷு
                                -----------------------


தெச்சி மந்தாரம் துளசி பிச்சக மாலைகள் சார்த்தி குருவாயூரப்பா நின்னெ கணிகாணேணம் என் மாமியார் பாடும் பாட்டு இன்று ஏனோ நினைவுக்கு வருகிறது ஏனோ என்ன இன்று விஷு நாள் அல்லவா  கேரள வேரைக் கொண்டுள்ள எங்கள் குடும்பத்தில் இந்த விஷு அன்று கணியும்  வைக்கப்படும்   நான்  என் மனைவியிடம் தினமும் உன்னை கணிகாணும்  எனக்கு இந்தக் கணி ஒரு பொருட்டே அல்ல என்பேன்  இருந்தும் பழக்கமாக இருக்கும்  இந்தக் கணி காணலுக்கு நான்  மறுப்பு சொல்வதில்லை. சின்ன பிள்ளைகளாக  இருந்தபோது இந்த நாளில் பெரியவர்களிடம்  இருந்து கிடைக்கும் கை நீட்டத்துக்கு ( நேட்டட்டதுக்கா) காத்திருந்ததும் உண்டு அதே பழக்கம்  இன்றும்  தொடர்கிறது என்ன எனக்கு மூத்தவர்களிடம் என்னால் வாங்கமுடிவதில்லை  ஆனால் என்னிடமிருந்து என்  மக்களும்  பேரக் குழந்தைகளும் வாங்குவார்கள் இந்த ஆண்டு என்  மூத்தமகன் வந்திருக்கிறான் என்  பெரிய பேரனும்  கூட இருக்கிறான் அவர்களுக்கு கைநீட்டம் கொடுத்து மகிழ்ந்தேன்
புஸ்தகா பத்மநாபன் வந்திருந்தார் மின்னூல் வெளியிட சில எக்ரிமெண்ட் பேப்பர்களில் கையெழுத்து வாங்கிச் சென்றிருக்கிறார் இன்னும்  பத்து பதினைந்து நாட்களில் என் படைப்புகள் மின்னூலாகவெளிவரலாம்
 மனச் சிறையில் ஆயிரம்  எண்ணங்கள் ஓடுகின்றன அப்போது தங்கள் மனச் சிறையில் அடைத்து வைத்திருக்கும்  என் மக்கள் எங்களைக்  கண்ணாடிக் கூண்டுக்குள் சிறை வைத்திருப்பதைப் பகிர்கிறேன் எதிர்வரும்  20ம் தேதி எதிர்பார்க்கும் எல்லாப் பதிவர்களையும் சென்னையில் சந்திக்க ஆவலாய் இருக்கிறேன்  சிலருக்கு இதுவே ஒரு தொந்தரவாக இருக்கலாம் பொருட்படுத்தமாட்டார்கள் என்று நினைக்கிறேன்
எங்கள் வீட்டுக் கணி
கண்ணாடிக் க்யூபுக்குள் நாங்கள் சிறை
 அனைத்து வாசக நண்பர்களுக்கு எங்கள் மனங்கனிந்த இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்                                   




33 கருத்துகள்:

  1. புஸ்தகாவில் இணைந்தமைக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  2. புஸ்தகா மூலம் உங்கள் புத்தகங்கள். மிக்க மகிழ்ச்சி....

    விஷுக்கனி கண்டோ... சந்தோஷம்.

    புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஷுக்கணி + தினம் தினம் காணும் கணியும் கண்டேன் நன்றி

      நீக்கு
  3. புஸ்தகாவில் இடம் பெறுபவமைக்கு வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
  4. புத்தாண்டு வாழ்த்துக்கள் சார். உங்கள் மின்னூல்கள் வெற்றிபெறட்டும்

    பதிலளிநீக்கு
  5. கை நீட்டத்துக்கு இதான் அர்த்தமா ?நான்தான் தப்பாக நினைத்து விட்டேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 பகவான் ஜீ:).

      நீக்கு
    2. பகவான் ஜி இப்போதாவது சரியாகப் புரிந்ததா அதிரா சிரிக்கிறாரா கடிக்கிறாரா

      நீக்கு
    3. அதிரா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்றால் கோபிக்கிறீர்கள் அர்த்தமா அதுவும் ஜோக்காளியிடம்.....

      நீக்கு
  6. பதில்கள்
    1. ரெகுலராக வாசிக்கிறீர்களா உங்களுக்கு வாழ்த்துகள்

      நீக்கு
  7. உங்களின் முதல் புத்தகத்தையும் புஸ்தகா-வில் வெளியிடலாமே!
    மே மாதம் உங்களைச் சந்திக்கிறேன். இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    -இராய செல்லப்பா (மீண்டும்) நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் வரும்போது பகிர்கிறேனே வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  8. எனது உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... எனக்கு கைவிஷேடம் இல்லையா?:).

    கண்ணாடி கியூப் இல் சிறையிருக்கும் தம்பதிகள் அழகு.. நீடூழி வாழ்க!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அவ்வளவு கை நீளம் இல்லையே அதிலும் உங்கள்முகமே தெரியாமல் .....க்யூபில் எங்களைப் பார்த்தீர்களா

      நீக்கு
  10. புஸ்தகா மின்நூல் வெளியீட்டுக்கு வாழ்த்துகள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்.

    தங்களின் படைப்புகள் மின்னூலாக்கம் பெறுகின்றமை நினைத்து மகிழ்ச்சி.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் ஒரு படைப்பாளி என்று தெரிவிக்கவே வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  12. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

    மின் நூல் வெளியீட்டுக்கும் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூல் வெளியானதும் செய்தியைப் பகிர்வேன் உங்களுக்கும் வாழ்த்துகள்

      நீக்கு
  13. சித்திரைத் திரு நாள் வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவிலேயே எல்லோருக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறேன் உங்களுக்கு இன்னும் ஒரு முறை நன்றியுடன்

      நீக்கு
  14. எனது வாழ்த்துகளும் நன்றியுடன்

    பதிலளிநீக்கு
  15. புஸ்தகாவில் இணைய முயற்சிகள் நடக்கிறது மின்னூல்கள் வந்தால்தான் தெரியும் நன்றி டிடி

    பதிலளிநீக்கு
  16. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினரும் தமிழ்ப்புத்தாண்டு சித்திரை விஷு வாழ்த்துகள். என் பிறந்த வீட்டில் யுகாதி, விஷு, தமிழ்ப்புத்தாண்டு மூன்றும் கொண்டாடும் வழக்கம் உண்டு! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவருக்கும் மகிழ்ச்சி தரும் எதையும் கொண்டாடலாம் வருகைக்கு நன்றி மேம்

      நீக்கு
  17. தாமதமாக சொல்வதற்கு மன்னிக்க. தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தாண்டின் புதுக்கருகு இன்னும் குறையவில்லையே நன்றி ஐயா

      நீக்கு