ஆசி கொடு, இறைவா....
----------------------------------
எண்ணில் அடங்கா எண்ணங்கள் ,
கண்ணில் அடங்கா காட்சிகள்.
சொல்லில் அடங்கா சொற்கோர்வைகள்
இவை எதிலும் அடங்கா நினைவுகள்,
என்று எங்கும் எதிலும் நீக்கமற ,
நிறைந்திருக்கும், பரம்பொருளைப
பேச அல்ல இந்தக் கவிதை.
நினைப்பினும் நினைக்காதிருப்பினும்.,
என்னுள் நிகழும் ரசாயன மாற்றம்,
அன்றைக்கின்று குறைந்திலை அளவில்
உணர்ந்த ஒன்றை அளவில் ஒடுக்க
முற்பட முயல்தல் பேதமையன்றோ ...
இரட்டைக் குழலுடன்,
பூரித்தெழும் அழகுடன்,
பதினாறின் பொலிவுடன்,
பரிமளித்த பாவை முகம்,
அன்று கண்டதேபோல்
இன்றும் நினைவிலாட,
காட்சிகள் விரிய விழித்தே
காண்கிறேன் கனாவல்ல.
மாறுபட்ட சாதி, வேறுபட்ட மொழி,
என்றே இருப்பினும், ஒன்றுபட்ட உள்ளம்
கொண்டிணைந்த அவள் எழில்
நிலவைப் பழிக்கும் முகம்,
அதில் நினைவைப் பதிக்கும் கண்கள்,
கைத்தலம் பற்றும் முன்னே
என்னைத தன்பால் ஈர்த்த அவள்
நடை,குரல் அதரங் கண்டும்
செருக்கொழியாது உலவும்,
மயில், குயில், பவழங் கண்டும்
மிடுக்கொழியாதிருந்த நான்,
அவளருகே இல்லாதிருக்கையில்,
படும் பாட்டைப் பாட்டாக்கியதும்
உயிர்த்துடிப்பும் , உள்ளத்திமிரும்
தினாவட்டும் நிறைந்த என்
நெளிவும் சுளிவும் கண்டவள்
என் குறைபாடு கண்டு, ஆற்றாமையால்
ஊடல் கொண்டு சுழித்த முகம் சகியா நான்
விபத்தில் விளைந்த வித்தின் விளைவே,
என் குறைக்கிலை காரணம் நான்
காண்பார் விழிக் கோணந்தான்
என்றே தேற்றும் காலங்கள்,
வாழ்வில் நிலைக்கும் தருணங்கள்.
என் குறையிலும் நிறை காணும்.
அன்பின் பாங்கில் திளைப்பதும்,
சொல்ல நினைத்ததை சொல்லும் முன்பே,
இதுதானே அது என்றே இயம்பிடும்,
இயல்பு கண்டு நான் வியப்பதும்...
எண்ணத் தறியில் பின்னிப் பிணைந்து
இழையோடும் நினைவுகளூடே
அவளுள் என்னையும் என்
உடல் ,பொருள், ஆவி அனைத்திலும்
அவளை எண்ணுகையில் தோன்றுவது,
ஆயிரமுண்டு பதிவிலடங்க்காது ,
பகிர்தலும் இங்கியலாது, இருப்பினும் ....
எங்கள் வாழ்வும் வளமும் நீ தந்த வரமே,
அன்றுபோல் இன்றும் என்றும்
தொடர உன் ஆசி வேண்டும் இறைவா,
என இறைஞ்சவே இக்கவிதை சமர்ப்பணம்.
----------------------------------------------------------------
----------------------------------
எண்ணில் அடங்கா எண்ணங்கள் ,
கண்ணில் அடங்கா காட்சிகள்.
சொல்லில் அடங்கா சொற்கோர்வைகள்
இவை எதிலும் அடங்கா நினைவுகள்,
என்று எங்கும் எதிலும் நீக்கமற ,
நிறைந்திருக்கும், பரம்பொருளைப
பேச அல்ல இந்தக் கவிதை.
நினைப்பினும் நினைக்காதிருப்பினும்.,
என்னுள் நிகழும் ரசாயன மாற்றம்,
அன்றைக்கின்று குறைந்திலை அளவில்
உணர்ந்த ஒன்றை அளவில் ஒடுக்க
முற்பட முயல்தல் பேதமையன்றோ ...
இரட்டைக் குழலுடன்,
பூரித்தெழும் அழகுடன்,
பதினாறின் பொலிவுடன்,
பரிமளித்த பாவை முகம்,
அன்று கண்டதேபோல்
இன்றும் நினைவிலாட,
காட்சிகள் விரிய விழித்தே
காண்கிறேன் கனாவல்ல.
மாறுபட்ட சாதி, வேறுபட்ட மொழி,
என்றே இருப்பினும், ஒன்றுபட்ட உள்ளம்
கொண்டிணைந்த அவள் எழில்
நிலவைப் பழிக்கும் முகம்,
அதில் நினைவைப் பதிக்கும் கண்கள்,
கைத்தலம் பற்றும் முன்னே
என்னைத தன்பால் ஈர்த்த அவள்
நடை,குரல் அதரங் கண்டும்
செருக்கொழியாது உலவும்,
மயில், குயில், பவழங் கண்டும்
மிடுக்கொழியாதிருந்த நான்,
அவளருகே இல்லாதிருக்கையில்,
படும் பாட்டைப் பாட்டாக்கியதும்
உயிர்த்துடிப்பும் , உள்ளத்திமிரும்
தினாவட்டும் நிறைந்த என்
நெளிவும் சுளிவும் கண்டவள்
என் குறைபாடு கண்டு, ஆற்றாமையால்
ஊடல் கொண்டு சுழித்த முகம் சகியா நான்
விபத்தில் விளைந்த வித்தின் விளைவே,
என் குறைக்கிலை காரணம் நான்
காண்பார் விழிக் கோணந்தான்
என்றே தேற்றும் காலங்கள்,
வாழ்வில் நிலைக்கும் தருணங்கள்.
என் குறையிலும் நிறை காணும்.
அன்பின் பாங்கில் திளைப்பதும்,
சொல்ல நினைத்ததை சொல்லும் முன்பே,
இதுதானே அது என்றே இயம்பிடும்,
இயல்பு கண்டு நான் வியப்பதும்...
எண்ணத் தறியில் பின்னிப் பிணைந்து
இழையோடும் நினைவுகளூடே
அவளுள் என்னையும் என்
உடல் ,பொருள், ஆவி அனைத்திலும்
அவளை எண்ணுகையில் தோன்றுவது,
ஆயிரமுண்டு பதிவிலடங்க்காது ,
பகிர்தலும் இங்கியலாது, இருப்பினும் ....
எங்கள் வாழ்வும் வளமும் நீ தந்த வரமே,
அன்றுபோல் இன்றும் என்றும்
தொடர உன் ஆசி வேண்டும் இறைவா,
என இறைஞ்சவே இக்கவிதை சமர்ப்பணம்.
----------------------------------------------------------------
மாறாத அன்பின் வலிமையும் ஆழமும் அழகுறப் படிந்த கவிதை.
பதிலளிநீக்குBrilliant, sir!!
பதிலளிநீக்குSimply Superb!
பதிலளிநீக்கு.நல்ல கவிதையைப் படித்த நிறைவு..
பதிலளிநீக்குதொடருங்கள் தொடர்ந்து வருகிறோம் வாழ்த்துக்கள்
நல்லா இருக்கு சார்
பதிலளிநீக்குநல்லதொரு கவிதையைப் படித்த மனநிறைவு
பதிலளிநீக்கு72 years young ல்லவா அதுதான்.
அருமை வாழ்த்துக்கள்.
http://niroodai.blogspot.com
\\என் குறையிலும் நிறை காணும்.
பதிலளிநீக்குஅன்பின் பாங்கில் திளைப்பதும்//,
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
\\சொல்ல நினைத்ததை சொல்லும் முன்பே,
இதுதானே அது என்றே இயம்பிடும்///
,
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.
கண்ணதாசனை நினைவுபடுத்தியது உங்கள் கவிதை.
...
நினைவுகளின் நீரோட்டம்.நெஞ்சில் கசிகின்ற காதல்.ரொம்ப ரசித்தேன்.நீடூழி வாழ்க ..
பதிலளிநீக்குபொங்கித் ததும்பும் காதலைப் பருக நான் தாமதித்து விட்டேனே என்று ரெண்டு குட்டு குட்டிக் கொண்டேன் பாலு சார்.
பதிலளிநீக்குநிறை வாழ்வுக்குப் பொருள் உங்கள் கவிதையெனில் அது தகும்.
நிறைவாய் இருக்கிறது பெரியவர் உங்களின் குறை காணாத வாழ்க்கை.
வணங்குகிறேன் உங்கள் பாதங்களை.
I am simply moved by the comments made by m/s Harani,Maathangki, Chithra, Ramani, Gopi Ramamurthi, ANPUTAN Maalikka, Sivakumaran, Kalidos, and Sundarji.I love you all.
பதிலளிநீக்குவருகை தாருங்கள்...!
பதிலளிநீக்குவாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!
என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"
நிறைவான கவிதை. உங்கள் இருவரில் யார் கொடுத்து வைத்தவர் என்பதைச் சொல்ல முடியாது. இருவருமே கொடுத்து வைத்தவர்கள் தாம்.
பதிலளிநீக்குமனதில் இருப்பதை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்கு