வியாழன், 13 ஜனவரி, 2011

வளரும் நாடு

வளரும்  நாடு. ( ஒரு  சிறுகதை. )
------------------------------------------------
             பாடுபட்டுக்  கோடையில்,  பாந்தமாக  உழைத்து,
             வீடு  கட்டி,  சேர்க்கும்  உணவினை,
             களிப்போடு   உண்டு  மகிழும்  எளியோன்
             சிறியோன்   எறும்பினைக்   கண்டு

உள்ளம்  வெதும்பி  வேகும்  வெட்டுக்கிளியும்,
தான்  உழைக்காதது  மறைத்து  பொறாமையால்
கூட்டியது   ஒரு  பத்திரிகைப்  பேட்டியினை.

            அடுக்கியது   குற்றச்சாட்டுகளை
            சாடியது  ஏற்றத்தாழ்வு  விளைவுகளை.
          " குடியிருக்க   ஏற்ற  புற்று
            தேவைக்கும்  மீறிய   உணவு,
            காண்பீர்  இந்த  அநியாயம்
            கேட்பீர்  சிறுபான்மையோர்   அவதிகளை"
            என்றே  ஒப்பாரி  ஓலமிட்டு
            கண்ணீர்  விட்டே  கதறியது.

தொலைக்காட்சி   சானல்கள்
கூடிவந்து   கேட்டன,
நாளெல்லாம்   பேசின
வெட்டுக்கிளி  படும்  பாட்டை.
ஒருபக்கம்  வெட்டுக்கிளி  அழுகை,
மறுபக்கம்  எறும்பின்  ஏறுமுகம்,
புட்டுப்புட்டுக்  காட்டின,
ஏராளமான  படங்களுடன்.

            பிறகென்ன  ஒரே சேதிதான்  எங்கும்  எதிலும்.
            வெட்டுக்கிளி  வேதனை  போக்க
           அருந்ததிராய்    ஆர்பாட்டம்,
            எறும்பின்   ஏற்றம்   குறைக்க
            மேதா   பட்கர்   போராட்டம்,
            துவங்கியதங்கே  ஓர்  அரசியல்  ஆரவாரம்.
            வேதனையில்  வாடும்   வெட்டுக்கிளிக்கு
           வேண்டும்  உணவும்  இருப்பிடமும்
            சமூக  அநீதி  அது இது என மாயாவதி  கூற,
            மேற்கு  வங்கம்  அறிவித்தது  ஒரு நாள்  பந்த்,
            கேரளமும்  கேட்டதொரு  நீதிக்  கமிஷன்.
            நிலைமை    கை  மீறிப்போக
            வாளாவிருக்குமா   மத்திய    அரசு.?
            கொண்டு  வந்தது   ஒரு சட்டம்
            போடா   போலொரு   போடாக்  
            (PREVENTION  OF TERRORIST ACT  AGAINST GRASS HOPPERS.)

 
வெற்றி  என்றே  கூவியே
ஆர்பாட்டம்  போராட்டம்
எல்லாம்  கைவிட்டனர்
ராயும்  பட்கரும்.

           விட்டு  வைக்குமா  தொலைக்காட்சிகள்
           படம்    பிடித்தே   காட்டின 
           பாவம்    எறும்பின்   பறிகொடுப்பை 
          பார்த்தே   மகிழ்ந்தனர்   பாவி   மக்கள்

வெற்றி   பெற்ற   வெட்டுக்கிளி
செத்தே   மடிய    அன்றே  போல்
விரட்டப்பட்ட    எறும்புகளும்
தஞ்சம்   புகுந்தன   அயல்நாட்டில்
மீண்டும்   உழைத்தே   முன்னேறி
தேடிப்பெற்றன   பெயரும்   புகழும்
கணக்கில்   அடங்கா   கம்பனிகளை
வாங்கிக்  குவிக்க, கோடிகளை
உழைத்தே  பெற்றன  சீராக.

             ஊருக்கிளைத்தவன்   என்றாலும்
             உழைத்தால்   பிழைக்கலாம் -  இது   நீதி.
             நீதிகள்   அறியா  இந்தியாவோ
             என்றும்  வளரும்  நாடேதான்
           
(பொங்கும்  மங்களம்  எங்கும்  தங்க ,
 என் இனிய  பொங்கல்  நல  வாழ்த்துக்கள் )
----------------------------------------------------------------  .



 

 
   







 
        
 

 






















 

 
 

12 கருத்துகள்:

  1. அருமையான பதிவு. வேதனையும் எள்ளலும் இழைந்து நல்ல எள்ளல் இலக்கியச்சுவையாக இருக்கிறது. ஆனாலும் இதன் பின்னே உள்ள செய்தி எண்ணிப் பார்த்து செயல்படவேண்டிய கடப்பாட்டையும் அறிவுறுத்துகின்றன.

    பதிலளிநீக்கு
  2. குறிஞ்சிக்கு வருகைக்கும், ஆதரவுக்கும் என்மனமார்ந்த நன்றி.திரு. ஹரணிக்கு, உங்கள் பின்னூட்டம் எப்போதும் எனக்கு ஒரு டானிக் போல. என்னென்னவோ செய்து அந்த வெரிஃபிகெஷன் வார்த்தையை நீக்கி விட்டேன்.எல்லாம் கணினியில் என் அறியாமையின் விளைவு. ALL IS WELL THAT ENDS WELL.

    பதிலளிநீக்கு
  3. ஐயா...
    நன்றி வேர்ட் வெரிபிகேஷன் எடுத்தமைக்கு. நானும் உங்களைப் போலத்தான். கணிப்பொறியில் அதிகம் தெரியாது. என்னுடைய மகன்தான் எல்லா உதவியும் செய்கிறார். என்னுடைய வலையில் உள்ள வடிவமைப்பு உள்ளிட்ட மாற்றங்களுக்கு அவர்தான் உதவுகிறார்.

    பதிலளிநீக்கு
  4. happy happy pongal ungalukkum... :-)

    chance-e-illa sir... ant and the grahopper story-ku oru thani definition koduththuteenga!

    coincident thaan ithu... innikku kaalela veettula oru pechchu... :) third front jeyichchiruntu, mayawathi PM aakirunthaa enna pannuvom-nu... naan "all indians are my brothers and sisters" nu sania mirza pola sollittu oru japan kaarana thaan kalyaanam pannindiruppen-nnu pesindu irunthom... :)

    very nice sir! :)

    பதிலளிநீக்கு
  5. மாறுபட்ட சிந்தனையை ஊட்டும் கதை.

    பதிலளிநீக்கு
  6. வெட்டுக்கிளி எறும்பு மிக நல்ல உதாரணம். எறும்பு போல் உழைப்பால் உயர்ந்தவர்களையும் இன்று எதிர்க்கும் கயவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  7. முதலில் நான் போட்ட பின்னூட்டம் காணாமல் போயிடுச்சு பாலு சார். மறுபடியும் இது.

    பழைய கதையில் புது வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறீர்கள் பாலு சார்.அருமை.

    பதிலளிநீக்கு
  8. மாதங்கி, உதிரிலை, சிவகுமாரன், சுந்தர்ஜி வருகைக்கும் கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி,நான் என்ன புதுசாக சொல்லப்போகிறேன்.வேறோரு கோணத்தில் காண்பதன் விளைவுதான் இது போன்றவை.

    பதிலளிநீக்கு
  9. உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்

    http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_20.html

    பதிலளிநீக்கு
  10. இன்று வலைச்சரத்தால் அறிமுகம் செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்கள். வலையுலகில் மேலும் சாதிக்க நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. நல்லதொரு புனைவு...எறும்பு உரிமைக் கமிஷனோ, வெட்டுக்கிளி உரிமைக் கமிஷனோ இல்லையா...அது தலை காட்டவில்லையே புனைவில்...!

    பதிலளிநீக்கு