Thursday, June 2, 2011

கவிச்சோலைக் கவிதைப் போட்டி.

கவிச்சோலைக் கவிதைப் போட்டி
-----------------------------------------------
          வலைப் பூ கவிச்சோலையில், நண்பர் எல். கே.
அவர்கள்  ஒரு கவிதைப் போட்டி அறிவித்திருக்கிறார்.
முத்தொள்ளாயிரத்து  பாடல்  ஒன்றை புதுக்கவிதை
வடிவில் எழுத வேண்டும். என் ஆத்ம திருப்திக்காக
எழுதுகிறேன்.
       
                          
                             பாடல்

                            -----------
வீறுசால்  மன்னர் விருதாம் வெண்குடையை
பாற்  எறிந்த பரிச்சயத்தால் -தேறாது
செங்கண்மாக  கோதை  சின வெங்களி  யானை
திங்கள் மேல் நீட்டுந்தன்  கை.

                 என் கவிதை.
                  ----------------

சேர மன்னன் வீர மறியாது,
வெற்றி கொள்ளும்  ஆவலில்,
செருக்கோடு  செருக்களம்  புகுந்த
வீரர்தம் தேர்க் குடைகளை
சென்றங்கு  செருமுனையில்  இழுத்து,
மிதித்துப் பழகிய  வெங்கரியின்  ஏறோன்று
 நீல வானில்  ஒளி வீசும்
முழு வெண்ணிலவை மாற்றானின் தேர்க்
குடை என்றெண்ணித தன துதிக்கை
கொண்டிழுக்க முயன்றது (  தாம். )  ,
========================================

            இது  சும்மா டமாசுக்கு.  எப்பூடி கீது.?
                                 ----------------------

      சேர  ராசாவ  சண்டைல  சுளுவா
      கெலிக்க  லாம்னு  தேரோட வர
      சிப்பாய்ங்க  தேர்மேல கீற கொடைங்கள
      சும்மா இசுத்து மெதிச்சு காலி பண்ணிப் பளகின
      சேரனோட  யானே ,வட்ட நெலாவப் பாத்து,
      தேர்க் கொடேன்னு நெனச்சு இசுக்க
      அதோட தும்பிக்கைய  நீட்டிச்சாம்.
 
 

 


                    



    
 


17 comments:

  1. நல்லா வந்திருக்கு; ரெண்டும் தாம்!

    ReplyDelete
  2. நல்லாவே எழுதியிருக்கிறீர்கள்.
    இரண்டாவது தமாஷுக்கேயானாலும் பாமரத்தமிழில் இருப்பதால் டக்குனு புரியும்படி உள்ளது.

    பரிசுபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. யானையும் அதன் துதிக்கையும் போல இரு கவிதைகளும் அருமை பாலு சார்.

    ReplyDelete
  4. முதல் கவிதை சிறப்பாக உள்ளது
    ரெண்டாம் இதுவும் நல்லாவே கீது
    நல்ல முயற்சி

    ReplyDelete
  5. ஐயா...அசத்துகிறீர்கள்.

    ReplyDelete
  6. மதி கவர்ந்தது முதல் கவிதை
    மனம் கவர்ந்தது இரண்டாம் கவிதை

    ReplyDelete
  7. நல்லாவே எழுதியிருக்கிறீர்கள்.
    இரண்டாவது தமாஷுக்கேயானாலும் பாமரத்தமிழில் இருப்பதால் டக்குனு புரியும்படி உள்ளது.ரெண்டாம் இதுவும் நல்லாவே கீதுபரிசுபெற வாழ்த்துக்கள்.நல்ல முயற்சி

    ReplyDelete
  8. ஐயகோ இதில் சொற்குற்றம் இருக்கிறது :-)
    மெதிச்சு - மெரிச்சி
    தேரோட வர - தேரோடோ வரசொல்லோ
    அதோட - அத்தோட

    சும்மா முயற்சி செஞ்சிபாத்தேன்.
    மெய்யாலுமே டாப்புடக்கரா இருக்கு வாத்தியாரே:-)
    மிக்க நன்றி

    ReplyDelete
  9. neenga ezhudina rendu kavithaigalum A1.Pamara Tamizh romba nalla iruuku.keep it up.Expect more from u like these.

    h n s mani

    ReplyDelete
  10. முதல் கவிதையின் சங்ககால அனுபவத்தை உணரும்போதா, இரண்டாம் கவிதை டைம் மெஷினில் ஏற்றி சட்டென நிகழ்காலத்திற்கு கொண்டுவந்துவிட்டது. வித்தியாசமான அனுபவம் - எனக்கு!
    Thank you sir.

    ReplyDelete
  11. சோக்காக் கீது சார் உங்க கவித....
    இந்த தபா நீங்கதான் கெலிப்பீங்க வாத்யாரே...

    ReplyDelete
  12. ரொம்ப நல்லா இருக்கு ஐயா. பலரும் சொன்ன மாதிரி அனைவருக்கும் புரியும் வகையில் உள்ளது இரண்டாவது கவிதை.

    ReplyDelete
  13. இரண்டாம் கவிதைநல்ல முயற்சி

    ReplyDelete
  14. ரொம்ப நல்லா கீது .

    ReplyDelete
  15. கவிச்சோலைக் கவிதைப் போட்டி." கவிதைக்குப் பாராட்டுக்கள்,

    ReplyDelete
  16. அன்பின் ஜிஎம்பி - இரண்டுமே அருமை - அழகாக - பல்துறை வித்தகராக - எழுதி உள்ளீர்கள் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    ReplyDelete