திரும்பிப் பார்க்கிறேன்
பதிவுலகில் காலடி வைத்து
மூன்றாண்டுகளுக்கும் மேலாகி விட்டது. ஆரம்பத்தில் பதிவுகளில் நான் என்றோ எழுதி
வைத்திருந்த சில விஷயங்களைப் பதிவாக வெளியிட்டிருந்தேன். வலை உலகுக்கு வந்த பிறகு
ஒரு கவிதை (? ) ‘ விபத்தின் விளைவு ‘என்று எழுதினேன். அதற்குப் பின்னூட்டமாக
சக்திபிரபா /அற்றைத் திங்கள் அன்றொரு நாள் . எந்தையும் தாயும் மகிழ்ந்து குலவ,
சிந்தையில் தோன்றாமலே சிந்திய வித்து நான் / என்று நான் எழுதி இருந்ததை , என்
தமிழ் ஆழமாகவும் அழகாகவும் வெளிப்படுவ்தாகக் கூறி பாராட்டியிருந்தார்.அதுவே வலை
உலகில் எனக்குக் கிடைத்த முதல் பாராட்டு. அப்போதுதான் தோன்றியது நம்மாலும் பிறர்
பாராட்டும்படி எழுத முடியும் என்று.
எழுதுவது வெறுமே பொழுதுபோக்குக்கு
என்றல்லாமல் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இணையத்தில் வழி இருக்கிறது. என்ன...
நம் எழுத்தை பலர் படிக்கவேண்டும். .நான் எழுதுவதை எல்லோரும் அங்கீகரிக்க வேண்டும்
என்று எப்போதும் எண்ணியதில்லை. ஆனால் என் எழுத்துக்க்ள் சற்றே நிமிர்ந்து வைக்கத்
தூண்டுபவையாய் இருக்கவேண்டும் என்று நான் எண்ணியது உண்மை. சாதாரணமான BEATEN
TRACK-ல் இல்லாமல் வித்தியாசமாக சிந்திக்கும் நான், என் எழுத்துக்கள் ஒரு
ஆரோக்கியமான கலந்தெழுத்தாடல்களுக்கு வழி வகுக்கும் என்று நம்பினேன். .ஆனால்
இணையத்தில் எழுதுபவர்களும் வாசிப்பவர்களும் பெரும்பாலோனோர் கருத்தாடல்களில்
பங்கேற்பதில்லை. எதை எழுதினாலும் பலரும் பாராட்டல்கள் தவிர வேறெதுவும்
எழுதுவதில்லை. அதற்காகப் பாராட்டல்கள் கூடாது என்று சொல்லவில்லை. அதனால் என்னைப்
பொறுத்தவரை படித்ததும் என் மனசில் தோன்றுவதை கருத்தூட்டமாக இட்டுவரப் பழக்கிக்
கொண்டேன். அதுவும் சிலரால் கூறப் பட்டிருக்கிறது. ஒரு முறை என் பதிவுக்கு வந்த ஒரு
பின்னூட்டத்தில் ஒருவர் (பெயர் வேண்டாமே) என் பதிவுகளுக்குக் கருத்துப்
பதிக்கும்போது மிகவும் இயல்பாய் எழுதலாம்
(ரெம்பொ உறுத்தானவர் வீடுகளில் வெறும் சாரத்துடன் இருப்பதுபோல-- மிகவும்
வேண்டப் பட்டவர் வீட்டில் நுழைகையில் உடுத்திக் கொண்டிருக்கும் கைலியிலேயே
வரவேற்பது போல) என்று கூறி இருந்தார். ஒருவராவது என்னைப் புரிந்துகொண்டிருக்கிறாரே
என்று மகிழ்ச்சி அடைந்தேன்.
/ வாழ்க்கையில் கண்ட, கேட்ட, அனுபவித்த
அனுபவங்கள் எதையும் எளிதில் ஏற்றுக்கொள்ளும் மனநிலையைத் தரவில்லை. மாறாகக் கேள்விகளே அதிகம் எழுகின்றது. சில சமயம் நாம் ஏன் இப்படி மற்றவரிடமிருந்து மாறுபட்டு நிற்கிறோம் என்றும் தோன்றும். எல்லோரையும்போல் ( எல்லோரையும் என்றால் எல்லோரையும் அல்ல ) ஏன் எதையும் கண்மூடித்தனமாக நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.?/
இந்தக் கருத்து என் தொடரும்
தேடல்கள் என்னும் பதிவில் எழுதியது. எதைத்தான் எழுதினாலும் அதன் பாதிப்பு என்ன
என்று தெரிந்து கொள்ள விரும்பினேன். கொள்வார் யாருமுண்டோ என்று கூக்குரலிடாத
குறைதான். சரி. நான் ஆண்டுகள் பல செலவு செய்த தர உறுதி மற்றும் கட்டுப்பாட்டுத்
துறை சம்பந்தமாக எழுதலாம் என்று ”தரமெனப்படுவது யாதெனில் “என்று
ஒரு கட்டுரை அடிப்படை விஷயங்களை விளக்கி எழுதினேன். இப்போது பார்க்கும்போது
ஏறத்தாழ ஆயிரம் ஹிட்ஸ் வாங்கிய அந்தப் பதிவுக்கு ஒரு பின்னூட்டமும் வரவில்லை. தரம்
என்பது இலவசமாகப் பெறப்படுவது என்று விளக்கியும்
எழுதிவிட்டு அந்த திசைக்கே ஒரு கும்பிடு போட்டுவிட்டேன் எனலாம்நாம் என்ன
எழுதினாலும் அது வாசிப்பவரையும் பாதிக்கும் சமாச்சாரமாக இல்லாவிட்டால் இணையத்தில்
எழுதுவதில் பலன் இல்லை. ஆனால் வாசிப்பவரைக் கவர வேண்டி என் எழுத்துக்களை நான் compromise
செய்ய விரும்பவில்லை. என் போன்றோர் படும் சில அவஸ்தைகளைப் பகிரலாம் என்று
எழுதியது “செய்யாத குற்றம்” இந்தப் பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள்
என்னை நிமிர்ந்து வைக்கச் செய்தது. பதிவுலகில் பரவலாக அறியப்படும் பலரது
பின்னூட்டங்கள் என்னை பரவசத்தில் ஆழ்த்தியது அதில் எதையும் கற்பனை செய்து நான்
எழுதவில்லை உள்ளத்தில் தோன்றிய உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிரூட்ட முயன்றேன் அன்றிலிருந்து
பெரும்பாலும் உள்ளத்து உணர்ச்சிகளே பதிவாக வெளியாகிக் கொண்டிருக்கிறது என்
எண்ணங்கள் பலரது எண்ணப்போக்கிலிருந்து வேறு பட்டிருக்கலாம்..அதற்காக வாசிப்பாளர்
பட்டியலை அதிகரிக்கச் செய்ய நான் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்வதில்லை.
/வயோதிகம் குற்றமும் இல்லை. தண்டனையும்
இல்லை. என் போன்ற சிறியவர்களுக்கு முன் ஏர் பிடித்துச் செல்லும் உங்களின் அனுபவம் கொடைம் வேண்டாத
போது கிடைத்த வரமும்./
/அற்புதமான
எழுத்து. அனுபவம் மெருகேற்றிய கருத்துக் கோர்வை.ரசித்தேன் ஐயா/
/உங்களைவிட மூன்று வயது சிறியவன் எனக்குக்
கவிதையினூடே நீங்கள் சொன்ன கருத்துபொருள் பொதிந்ததாய் இருந்தது ஐயா/
/ரசித்துப்படித்தேன். கடைசி
வரிகள் கேள்வியா சவாலா?/
” பாரதி சொன்ன அக்னிக் குஞ்சாகவே நான்
உங்களைப் பார்க்கிறேன்” என்று தொடங்கி ஒரு நீண்ட பின்னூட்டமே எழுதி இருந்தார் அந்தத் தமிழ்
பேராசிரியர்..பாராட்டுக்களை ஏற்றுக் கொண்டு நான் பதிலாக, “இவற்றை இந்தக்
கிளிக்குக் கிடைத்த ஒரு நெல் “என்று எழுதினேன். அதையும் சிலாகித்து ஒரு கருத்து.!
இதையெல்லாம் நான் அடிக்கடி நினைவு
கூறாவிட்டால் என்றோ பதிவுலகை விட்டுப் போயிருப்பேன். ஒரு முறை ஒரு நண்பர்,
பதிவுகளை ஒருவர் படிக்கிறார் என்றாலும் அவருக்காகவாவது தொடர்ந்து எழுதுங்கள்
என்றார்.
அவதாரக் கதைகள் என்று பத்து
அவதாரக் கதைகளையும் எழுதி வந்தேன். ஒரு சிறு பெண் பின்னூட்டத்தில் அவள் பாட்டும்
நடனமும் படித்து வருவதாகவும் அவளுக்காகவேண்டியாவது அவதாரக் கதைகளைத் தொடர்ந்து
எழுதுமாறு வேண்டி இருந்தாள். நரசிம்மாவதாரத்தை குழந்தைகளுக்குச் சொல்வது எப்படி
என்னும்படி எழுதி இருந்தேன். ராமனின் கதையை ஏதோ ஒரு உந்துதலில் ஒரே வாக்கியத்தில்
ஆறு காண்டங்களையும் உள்ளடக்கி எழுதினேன். இதுவரை கிடைக்காத பாராட்டு கிடைத்தது.
பிற்காலத்தில் இதை நான் வாசித்துப் பார்க்கும்போது எனக்கே வியப்பாகி இதை நானா
எழுதினேன் என்று தோன்றும்,
பதிவுகள் எழுதுவதும் பின்னூட்டங்களைப்
பார்பதும் பலரது பதிவுகளைப் படிப்பதும் உற்சாகமாக இருந்தது. பதிவுகள் மூலம் நான்
அறிந்திருந்த பலரது குணாதிசயங்களை அனுமானத்தின் பேரில் ஒரு பதிவு எழுதினேன்.(பார்க்க.)
கவிச்சோலைக் கவிதைப் போட்டி ஒன்று
வைத்தார். திரு.எல்.கே. சங்க காலப் பாடல் ஒன்று கொடுத்து அதற்கு அர்த்தமும்
கொடுத்து அதை தற்காலக் கவிதையாக எழுதக் கேட்டிருந்தார். நானும் எழுதினேன் . இரண்டு
கவிதைகள். அதில் ஒன்று சென்னைத் தமிழில் “சும்மா டமாஷுக்காக “ எழுதினேன்.பாராட்டுக்கள்
கிடைத்தது ஆங்கிலத்தில் வெளியான I AM OK, YOU ARE OK என்ற புத்தகத்தின் சாராம்சத்தை “வாழ்வியல்
பரிமாற்றங்கள் “என்று எழுதி இருந்தேன்,TRANSACTIONAL ANALYSIS என்ற
துறையில் சிறந்தவர் ஒருவரிடமிருந்து அங்கீகாரம் வாங்கிக் கொடுத்த பதிவு அது. (
வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி என்ற
மாதிரி.)
வார்ததைகளை மடக்கிப் போட்டு
எழுதும் வகைதான் என் கவிதைகள் எல்லாம். இருந்தாலும் மரபுக் கவிதை பற்றி ஓரளவாவது
தெரிய வேண்டும் என்று முயன்று வெண்பா இலக்கணங்களைக் கற்றேன் ஒரு வெண்பாவும்
இயற்றினேன். பின் தொடர்ந்து முயற்சி செய்யவில்லை. இலக்கணம் தேடும்போது வார்த்தைகள்
சிதையுருதல் போல உணர்ந்தேன். ஒரு முறை ஆலய தரிசனத்தின் போது கும்பகோணக் கோவில்
ஒன்றில் திருவெழுக்கூற்றிருக்கை என்று எழுதி இருந்தது கண்டேன். என்ன என்று
புரியாமல் பதிவில் விளக்கம் கேட்டேன். இரண்டு மூன்று பேர் விளக்க முயன்றனர். பிறகு
வலையில் மேய்ந்து பாடலுக்கு விளக்கம் கொடுத்திருந்த ஒருவரை நாடி அது என்ன என்று
தெரிந்து கொண்டேன். நானும் என் பாணியில் ஒரு திருவெழுக்கூற்றிருக்கை எழுதினேன்.
ஆனால் என் பாட்டு கடவுளிடம் கேட்பது போலல்லாமல் சக மனிதனைக் கேட்பது போல்
எழுதினேன்.”இங்கேபார்க்கவும் “.
ஒரு சமயம் நான் இறந்துவிட்டேன்
என்னும் நிலையை கடந்து பிழைத்தேன். எனக்கு உறுதுணையாய் இருந்த என் மனைவிக்கு ”பாவைக்கு ஒரு
பாமாலை எழுதினேன். அது ஒரு அந்தாதிக் கவிதையாய் எழுதினேன்.
மூன்று வருடக்களுக்கும் மேலாக வலை
உலகில் இருந்து வருவதைத் திரும்பிப் பார்க்கும் போது ஒரு நிறைவு தெரிகிறது.எழுதும்
முறையிலும் கருத்துக்களை வெளிப்படுத்தும் உத்தியிலும் பேறுபாடுகள் காட்டிக் கொண்டே
வருகிறேன். சிறு கதைகள், என் பாணி கவிதைகள், கட்டுரைகள், நெடுங்கதை , நாடகங்கள்
என்று பல்வேறு சுவைகளிலும் எழுதி இருக்கிறேன். சுய அனுபவங்கள், பயண அனுபவங்கள்
என்று வெரைட்டியாக எழுதி வருகிறேன்.
இப்படியெல்லாம் எழுதியதை நான்
திரும்பிப் பார்க்கிறேன். ஏன் என்று தெரிகிறதா.?
-------------------------------------------------------
.
.
.
தங்களின் வெற்றிகரமான 400 ஆவது பதிவுக்கு என் அன்பான நல்வாழ்த்துகள், ஐயா.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா... மன நிறைவோடு மேலும் தொடருங்கள்....
ReplyDeleteமூன்று வருடக்களுக்கும் மேலாக வலை உலகில் இருந்து வருவதைத் திரும்பிப் பார்க்கும் போது ஒரு நிறைவு தெரிகிறது.//
ReplyDeleteநிறைவான வாழ்த்துகள் ஐயா...!
“ஏற்றதொரு கருத்தை எனதுள்ளமென்றால்// எடுத்துரைப்பேன், எவர் வரினும் அஞ்சேன், நில்லேன்” என்றார் எனது வழிகாட்டியாம் கவிஞர் கண்ணதாசன். சொல்ல விரும்பியதைச் சொல்லுங்கள். படிப்பவர்கள் படிக்கட்டும். திருக்குறளும் கம்ப ராமாயணமும் எழுதப்பட்ட காலத்தில் அவற்றை எவ்வளவு பேர் கொண்டாடியிருப்பார்கள்? ஆனால், நாளாக நாளாக இன்று அவற்றின் புகழ் உயர்ந்துகொண்டே போகவில்லையா? – கவிஞர் இராய.செல்லப்பா (இமயத்தலைவன்)
ReplyDeleteஆரம்ப காலத்தில் பதிவுகளுக்கான தலைப்புகளையும் வாசகர்களுக்கான மறுமொழிகளையும் தமிழின் ஆங்கில வரி வடிவத்தில் தந்து இருக்கிறீர்கள். தொடக்க கால முயற்சி! உங்கள் VIBATHTHIN VILAIVU - ORU KAVITHAI. , செய்யாத குற்றம், அநுமானங்கள்........ , - ஆகிய பதிவுகள் சென்று வந்தேன்.
ReplyDeleteஅநுமானங்கள் பதிவில் நீங்கள் சொன்னது.
// CHEEROS PALMISTRY -யை மாய்ந்து மாய்ந்து படிக்கலானேன். நானே என் கை பார்த்துக் கற்றுக் கொண்டது என்னவென்றால், இம்மாதிரி சாஸ்திரங்களில் பொதுவான சில விஷயங்கள் பலருக்கும் பொருந்தும். சொல்லும் விதத்தில் சொன்னால் கேட்பவர்கள் நம்புவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று நான் அறிந்து கொண்டேன். நான் கை ரேகை பார்த்துப பலன் கேட்டவர்கள் நான் சொல்வது சரியென்று சான்றிதழ் கொடுக்காத குறையாகப் புகழ்ந்தார்கள்.//
தங்கள் கைரேகை அனுபவங்களைப் பற்றியும் எழுதுங்களேன்.
// இப்படியெல்லாம் எழுதியதை நான் திரும்பிப் பார்க்கிறேன். ஏன் என்று தெரிகிறதா.? //
GMB அவர்களுக்கு, உங்களைப் போன்ற மூத்த பதிவர்களின் வாழ்வியல் அனுபவங்களைப் படிப்பதில் ஒரு வழி காட்டுதல் கிடைக்கிறது. மனம் சஞ்சலமான நேரங்களில் எனக்கு ஒரு ஆறுதல் கிடைக்கிறது. திரும்பிப் பாருங்கள் இன்னும் எழுதுங்கள். நன்றி!
மூன்று ஆண்டுகள் முடிந்து நான்காவது ஆண்டுக்கு வாழ்த்துக்கள். 400 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவலை உலகம் நிறைவை தருவது மகிழ்ச்சி.
மூன்றாண்டு முடிந்து நான்காம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைப்பதற்கும், 400 பதிவுகளுக்கும் வாழ்த்துகள் ஐயா.
ReplyDelete
ReplyDelete@ கோபு சார்
நான் வேண்டுமென்றேதான் இதை 400-வது பதிவு என்று சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் பதிவினைப் படிப்பவர்கள் படிக்காமலேயே வாழ்த்து மட்டும் சொல்ல வாய்ப்புண்டு.பரவாயில்லை. வாழ்த்துக்களுக்கு நன்றி.
@ திண்டுக்கல் தனபாலன்
@ இராஜராஜேஸ்வரி
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
@ செல்லப்பா யகஞஸ்வாமி
புகழ் பெற வேண்டும் என்று எழுதுவதில்லை. வேறுபட்டக் கருத்துக்களும் விமரிசிக்கப் பட வேண்டும் என்றே எழுதுகிறேன். உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கு நன்றி.
@ தி. தமிழ் இளங்கோ
என் பழைய பதிவுகள் சிலவற்றைப் படித்துக் கருத்து இட்டதற்கு நன்றி. ஆரம்ப காலத்தில் பதிவு தலைப்பை தமிழில் தட்டச்சு செய்யும்விதமாக மென்பொருளை தரவரக்கியதில்லை. அதுதான் ஆங்கிலத் தலைப்புகளின் காரணம். மேலும் என் பழைய பதிவுகள் சிலவற்றை எடுத்துகாட்டியதே, பதிவுகளின் variety விஷயங்களைச் சொல்லத்தான்.ஆழ்ந்த வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி.
@ கோமதி அரசு
@ கோவை2தில்லி
பதிவுலகில் மூன்றாவது ஆண்டு முடிந்த காரணம் அல்ல. கோபு சார் கண்டுப்டித்துவிட்டார். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
தங்களின் பதிவுகள் குறித்தும் அதற்கு வரும் கருத்துரைகள் குறித்தும் சிறப்பாக அலசி பதிவும் கருத்தும் எப்படி இருக்க வேண்டும் என்ற நல்ல அறிவுரையும் வழங்கிய 400 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களின் பதிவுகள் குறித்தும் அதற்கு வரும் கருத்துரைகள் குறித்தும் சிறப்பாக அலசி பதிவும் கருத்தும் எப்படி இருக்க வேண்டும் என்ற நல்ல அறிவுரையும் வழங்கிய 400 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்!
ReplyDelete400 ஆவது பதிவுக்கும், நாலாவது ஆண்டு ஆரம்பத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பதிவுகளில் சில படித்துள்ளேன். பல படிக்கவில்லை.
ReplyDeleteநம்பிக்கை என்பது ஒருவர் மேல் ஒருவர் வைப்பதும்கூடத் தான். கண்ணை மூடிக் கொண்டு நம்புவது என எதைச் சொல்கிறீர்கள் எனக் கொஞ்சம் புரிந்தாலும் புரியாதது போல் உள்ளது. இறை நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம். ஒருத்தர் இன்னொருத்தர் நம்பிக்கையில் தலையிட முடியாது.
இறை நம்பிக்கை உங்களுக்கு இருக்கா இல்லையா என்பது என் ஆராய்ச்சி இல்லை. ஆனால் உங்களுக்கும் கவிதை எழுத ராமனும், கிருஷ்ணனும் தான் உதவி இருக்காங்க. இந்த நாட்டில் பிறந்தவங்களுக்கு இவங்க இரண்டு பேரையும் ஒரு நாளைக்காவது நினைக்காமல் இருக்க முடியாது என்பதே இந்தப் பாத்திரங்களின் வெற்றி எனலாம்.:)))))))
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் பதிவுகள் நன்றாகவே உள்ளன..
வயது பற்றி யோசிக்க வேண்டாம் .
பல்லாண்டு வாழ்ந்து நிறைய பதிவுகள் எழுதவும்
ReplyDelete@ s.suresh
@ கீதா சாம்பசிவம்
நான் எழுத நினைப்பதை எத்தனை இலகுவாகச் சொல்ல முடியுமோ அவ்வாறே சொல்கிறேன்.புரிந்தும் புரியாததுபோல் இருக்கும்படி நான் எழுதுவதில்லை. எந்த context-ல் எழுதி இருக்கிறேன் என்பதைப் பார்க்க வேண்டும். மாறு பட்ட கருத்துக்களும் அந்த context-ஐ ஒட்டி இருக்க வேண்டும் நான் எழுதுவது என் போன்றோர்க்கு இருக்கும் கருத்தின் வெளிப்பாடே.இப்போது எதை நான் எழுதினாலும் எழுதியதை defend செய்ய எழுதியது போல் இருக்கும். ராமனும் கிருஷ்ணனும் கற்பனைக் கதாபாத்திரங்கள் என்பது என் எண்ணம். அவர்களை யாராவது குத்தகைக்கு எடுத்திருக்கிறார்களா என்ன.?எனக்கு ஒரு வருத்தம். ஒருவர் கருத்துக்கு ஒருவர் மாறுபடக் கூடாதா தெரியவில்லை.அப்படி மாறுபடுவதைச் சொல்லக் கூடாதா , அதுவும் தெரியவில்லை. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.
ReplyDelete@ அபயா அருணா
என் பதிவுக்கு முதல் வருகைக்கு நன்றி. உங்கள் வலைப்பூவையும் பார்த்தேன். வாழ்த்துக்கள்.
நான்காம் ஆண்டிற்கும் நானூறாவது பதிவிற்கும் வாழ்த்துக்கள் ஐயா.
ReplyDeleteதாங்கள் சொல்வது சரிதான் ஐயா, வாசிப்பவர்களின் விருப்பத்திற்காக எழுதுவது என்பது சரியல்லதான் ஐயா, நமது கருத்துக்களை எண்ணங்களை பகிர்தலே, உண்மையான பகிர்வாக இருக்க இயலும்.நன்றி ஐயா
//ராமனும் கிருஷ்ணனும் கற்பனைக் கதாபாத்திரங்கள் என்பது என் எண்ணம்.//
ReplyDeleteஇது உங்க கருத்து ஐயா. நான் இதில் எல்லாம் தலையிடவில்லை. :)))))
//அவர்களை யாராவது குத்தகைக்கு எடுத்திருக்கிறார்களா என்ன.?//
வெளிநாட்டவர் உட்பட யார் வேண்டுமானாலும் இவங்களைப் பத்தி சுதந்திரமாக எழுத முடியும் என்பதே இவர்களின் சிறப்பு. :))))))
//எனக்கு ஒரு வருத்தம். ஒருவர் கருத்துக்கு ஒருவர் மாறுபடக் கூடாதா தெரியவில்லை.அப்படி மாறுபடுவதைச் சொல்லக் கூடாதா , அதுவும் தெரியவில்லை.//
அதே, அதே, உங்கள் பதிவில் யாரும் மாறுபட்ட கருத்தைப் பகிர்வதில்லை. பாராட்டி மட்டும் எழுதறாங்கனு நீங்க குறிப்பிட்டிருந்ததாலேயே நான் என் கருத்தைப் பதிந்திருக்கிறேன். அவ்வளவே! மற்றபடி அவரவர் கருத்து அவரவருக்குச் சரியானதே. என்னைப் பொறுத்துக் கொள்வதற்கு மிக்க நன்றி உடையவளாக இருக்கிறேன். :)))))))
400ஆ!
ReplyDeleteவாழ்த்துக்கள்.