வியாழன், 24 அக்டோபர், 2013

அடையாளங்கள்......


                                               அடையாளங்கள்
                                                -----------------------


உனக்கு கிருஷ்ணமூர்த்தியைத் தெரியுமா.?
“ யார்... அந்த சொட்டைத்தலை இரட்டை மண்டை கிருஷ்ண மூர்த்தியா.?
“ இல்லை ....கல்பாத்தி பாகவதர் சுந்தாவின் பிள்ளை.
எத்தனையோ கிருஷ்ணமூர்த்திகள் தெரியும் இருந்தாலும் குறிப்பிட்டவரைத் தெரிந்து கொள்ள அடையாளங்கள் தேவைப் படுகிறது. சொட்டைத்தலைஇரட்டை மண்டைபாகவதர் பிள்ளை என்றால்மட்டும் போதாது கல்பாத்தி பாகவதர். பிள்ளைஎன்பன போன்றவற்றால் அடையாளம் காட்டப் படுகிறது



ஒருவரை ஒருவர் நினைவில் வைத்துக்கொள்ள உதவுவதே இந்த அடையாளங்கள்தான் எனக்கு அவ்வப்போது ஒரு சந்தேகம் வரும்.பறவைகலள் மற்றும் சில விலங்குகள் என் கண்ணுக்கு ஒரே மாதிரி தெரிகிறது. அவை ஒன்றை ஒன்று எவ்வாறு இனங்கண்டுகொள்கின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் கருப்பினத்தோர் சட்டெனப் பார்த்தால் ஒரே மாதிரி தெரிகிறார்கள். சுருட்டை முடி, கறுப்பு நிறம் பெரிய உதடுகள் இன்னபிற features அவர்களை ஒரே மாதிரி காட்டுகிறதோ என்னவோ.அதேபோல் நம் இந்தியாவிலும் சில பிராந்தியக் காரர்களுக்கு சில தனித்தன்மைகள் உண்டு. நடை உடை பாவனைகளை வைத்து அடையாளம் காணலாம்சிலர் ஆங்கிலம் பேசும்போது அவர்களை இன்னார் என்று தெரிந்து கொள்ளமுடியும்.
சிறு குழந்தைகள் என்னை எங்கள் குடும்பத்தில் மீசை தாத்தா என்று அடையாளம் காட்டுவார்கள் என் மாமியாரை என் பேரன் அந்த ஏழு பேரின் தாயா என்று கேட்டுப் புரிந்து கொள்வான்
இந்த இயற்கை அடையாளங்கள் தவிர தங்களை வித்தியாசமாகக் காட்டி தங்கள் அடையாளத்தை பறை சாற்றுவார்கள். வீணை வித்வான் ராஜேஷ் வைத்யா, வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவி ஷங்கர். பாப் பாடகி உஷா உதுப், போன்றோர் இதற்கு எடுத்துக்காட்டு. நெற்றியில் விபூதி அல்லது நாமம் உடலெங்கும் சந்தணத் தீட்டுகள் தலையில் வைக்கும் குல்லா, அல்லது தலைக்கட்டு போன்றவை அவர்கள் சார்ந்திருக்கும் மதம் அல்லது ஜாதி அல்லது பிரிவு போன்ற வற்றை அடையாளம் காட்டும் பிராம்மண குடும்பங்கள் சிலவற்றில் பெரியோரிடம் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளும்போது  ”அபிவாதயே சொல்லி ஆசிவாங்குவார்கள். தான் இன்ன குலத்தில் இன்ன கோத்திரத்தில் இன்ன ரிஷியின் பரம்பரையில் வந்த இன்னாரின் பேரன் , இன்னாரின் புத்திரன் என்று சொல்வதுபோல் அமைந்திருக்கும். ஊரின் பெயர் , தந்தையின் பெயர் போன்றவற்றின் முதல் எழுத்தை இனிஷியலாக வைப்பார்கள். கேரளத்தில் இன்ன வீட்டைச் சார்ந்தவர் என்று அறிமுகப் படுத்துவர். பெரும்பாலும் மருமக்கத்தாய முறையைப் பின் பற்றுபவர்கள்.ஆனால் பல குடும்பங்களில் இது மாறி தந்தையின் பெயரிலுள்ள முதல் எழுத்து இனிஷியல் ஆக மாறிவருகிறது
திருச்சியில் நான் பணி செய்து கொண்டிருந்த போது, என் உறவினர் தீ அணைப்புப் படையின் தலைவராக திருச்சியில் பொறுப் பேற்று வந்தவருக்கு என் விலாசம் தெரிய வில்லை. BHEL தீ அணைப்பு படையில் இருந்த ஒருவரிடம் என் பெயரைச் சொல்லி  (இனிஷியல் சொல்ல வில்லை அல்லது தெரிய வில்லை?)நான் ஒரு பொறுப்பான பதவியில் இருப்பதாக மட்டும் தெரியும் என்றிருக்கிறார். பாவம் அந்த மனுஷன், பாலசுப்பிரமணியம் என்ற பெயரில் உள்ளவர்களை எல்லாம் டெலிபோன் டைரக்டரி  பார்த்துக் கூப்பிட்டு ஒரு வழியாய் என்னையும் கூப்பிட்டு தீ அணைப்பு அதிகாரியைத் தெரியுமா என்று கேட்டார். நான் தெரியும் என்று சொன்னவுடன் என்னைத்தேடி ஓடி வந்து அப்பாடா என்று பெருமூச்சு விட்டது நினைவுக்கு வருகிறது. என்னைப் பற்றிய சரியான அடையாளங்கள் தெரியாததால் மிகவும் சிரமப் பட்டு விட்டார்.
ஊர் பேர் அங்க அடையாளங்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல கடவுளர்களுக்கும் உண்டு. குழல் வைத்துக் கொண்டிருப்பவன் கண்ணன், முருகனுக்கு வேல், லக்ஷ்மிக்கு தாமரை, சரஸ்வதிக்கு வீணை, பெருவிழிகளுடன் நாக்கைத் துருத்திக் கொண்டிருந்தால் காளி சிவனுக்கு பாம்பு சூலம், கொண்டையில் அரை நிலா இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் படுத்துக் கொண்டிருந்தால் அரங்கன் , நின்று கொண்டிருந்தால் பெருமாள், தவழ்ந்து கொண்டிருந்தால் கண்ணன், கோவணத்துடன் இருந்தால் குமரன். நமக்கு இருக்கும் அங்க லட்சணங்களை கடவுளுக்கும் வைத்து நம்மைப் போல் அவருக்கும் உருவம் கொடுத்து நம்மில் அவரைக் காணும்( அல்லது அவரில் நம்மைக் காணும்) பாங்கு வியக்க வைக்கிறது. உருவமே இல்லாதவன் என்று சொல்லும்போதும் படைப்பின் உருவகமாக லிங்கம் ஆவுடையார் என்று உருவகப் படுத்தி இருப்பார்களோ என்னும் ஐயம் எழுவதுண்டு. இப்படி நினைப்பதே தவறு என்று கூறி அடிக்க வந்தாலும் வருவர்.
என்னதான் சொன்னாலும் எல்லோருக்கும் அடையாளங்கள் தேவை என்பது மறுக்க முடியாது. சில அடையாளங்கள் சரித்திர நிகழ்வுகளை கண்முன் நிறுத்தும். வீர பாண்டியக் கட்ட பொம்மனின் மீசை. சர்ச்சிலின் வெற்றியைக் குறிக்கும் V விரல் அடையாளம், ஹிட்லரின் அடையாள மீசை, காந்திஜியின் பொக்கைவாய்,கண்ணாடி கைத்தடி அரை ஆடை,, நேருவின் ஷெர்வானியும் ரோஜாவும் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஒருவன் இருந்து மறைந்ததற்கு என்னதான் அடையாளமாக விட்டுச் செல்ல வேண்டும்? சிந்திக்க வைக்கிறது. .                

    
 
 

18 கருத்துகள்:

  1. மறந்து போகும் போது இந்த அடையாளங்கள் தேவை தான் என்பது மறுப்பதற்கில்லை ஐயா...

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான். வீட்டுக்கு விலாசம் மட்டும் போதாது பக்கத்துல என்ன இருக்கு, முன்னால என்ன இருக்கு.... இதை landmark என்பார்கள்.

    அதுபோல மனிதர்களை இணம் கண்டுக்கொள்ளவும் ஏதாவது அடையாளம் தேவைப்படுகிறது. என் மனைவி வீட்டில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண் குழந்தைக்காவது என் மனைவியின் பெயரையே வைத்திருப்பார்கள். அது அவர்களுடைய பாட்டியின் பெயர் என்பதால் அந்த பழக்கம். ஆகவே ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டப் பெயர். நான் வங்கியில் பணியாற்றியதால் என் மனைவியை பேங்க்ல இருக்காரே என்று சொல்லி அடையாளம் சொல்வார்கள். இன்னொருவர் சற்று குட்டை என்பதால் அவர் குட்டை... இன்னொருவர் சற்று மெலிந்தவர் என்பதால் அவர் ஒல்லிப்பிச்சான்... கேட்க வேடிக்கையாக இருக்கும்.... இது ஒரு சாதாரண விஷயம் என்றாலும் அதை சுவைபட எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. #ஒருவன் இருந்து மறைந்ததற்கு என்னதான் அடையாளமாக விட்டுச் செல்ல வேண்டும்? சிந்திக்க வைக்கிறது#
    சிந்திக்க வைக்கும் வரிகள் அய்யா !

    பதிலளிநீக்கு
  4. இருப்பதற்குத்தான் இருப்பதனால்
    அடையாளம் வேண்டும்
    இல்லாததற்கு இல்லை பெயர் என்கிற மாதிரி
    இல்லாததற்கு தன்னை வாழ்நாளில்
    எதுவாகவேனும் நிலை நிறுத்திக் கொள்ளாததற்கு
    எதற்கு அடையாளம் என்றுதான் படுகிறது எனக்கு

    கண்ணதாசனின் தத்துவப்பாடல்களில் எல்லாம்
    அது எங்கு துவங்கினாலும் எப்படித் தொடர்ந்தாலும்
    முடிவில் கடைசியாக ஓரிடத்தில்தான் போய்முடியும்

    உங்கள் நூல் பிடித்தாற்போல மிக நேர்த்தியாகச்
    செல்லுகிற சிந்தனைகள் எல்லாம் முடிவாக
    எப்படியோ ஆண்டவனைத் தொட்டுத்தான்
    முடிகிறது என நினைக்கிறேன்

    இந்தப் பதிவும் விதிவிலக்கில்லை

    மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. யோசிக்காதபோது, சாதாரணமாக தோன்றும், ஒரு செய்தி, ஆயினும் சிந்திக்க சிந்திக்க என்னவெல்லாம் தோன்றுகிற்து, வெளிப்படுகிறது பாருங்கள்.
    நீங்கள் இறுதியில் கேட்டுள்ளிர்களே ஐயா,///ஒருவன் இருந்து மறைந்ததற்கு என்னதான் அடையாளமாக விட்டுச் செல்ல வேண்டும்? ////
    மனிதனாய் பிறந்தான், மனிதனாகவே வாழ்ந்தான் என்று விட்டுச் செல்லும் அடையாளமே, பெரிய அடையாளமாக இருக்கும் என்று நினைக்கின்றேன் ஐயா

    பதிலளிநீக்கு
  6. மறக்க முடியாத மறுக்கவும் முடியாத அடையாளங்களைச் சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள்.

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  7. ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம். நன்றாக அடையாளம் காட்டினீர்கள்.

    // ஒருவன் இருந்து மறைந்ததற்கு என்னதான் அடையாளமாக விட்டுச் செல்ல வேண்டும்? சிந்திக்க வைக்கிறது. //

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் (கவிஞர் வாலி)

    பதிலளிநீக்கு
  8. நாம் நம் நினைவாக எதையும் விட்டு செல்வது கூடாது என்றே படித்ததாக நினைவு.
    காய்ந்த மணலில் ஒரு காய்ந்த சருகு எப்படி எதையும் ஒட்டிக் கொள்ளாமல் தானும் எந்த அடையாளத்தையும் விட்டு வைக்காமல் காற்றில் நகர்ந்து போகுமோ அப்படித்தான் மனிதன் வாழ்க்கையும் இருக்க வேண்டும் என்று படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. பார்ப்பதற்கு ஒரே மாதிரி தோற்றத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தையாக இருந்தாலும் அவற்றுக்கு நெருக்கமானோர் சின்னச் சின்ன அசைவுகளில் மேனரிசங்களில் அடையாளம் கண்டுகொள்வர். அதுபோல ஜப்பானியர்களையும், நீக்ரோக்களையும் மற்றவர்கள் அடையாளங் கண்டு கொள்வார்களோ என்னவோ... இறைவனுக்கு அடையாளம் எனத் தொட்டு, மனிதன் விட்டுச் செல்லும் அடையாளம் என்னாவக இருக்க முடியும் என்ற கேள்வியுடன் முடித்தது ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. எனக்குத் தோன்றுவது... இறந்து பின்னும் பல காலம் மற்றவர்களின் எண்ணங்களில் ‘நல்லவன்’ என வாழ்ந்திருந்தால் அதுவே நாம் விட்டுச் செல்லும் அடையாளம்! &என்பதுதான்.

    பதிலளிநீக்கு

  10. @ திண்டுக்கல் தனபாலன்
    மறக்காமல் இருக்க அடையாளங்கள் உதவும் என்றும் எண்ணுகிறேன்

    @ டி.பி.ஆர் ஜோசப்
    சாதாரண விஷயத்தை சுவைபட எழுதி இருப்பதாகப் பாராட்டுக்கு நன்றி

    @ இராஜராஜேஸ்வரி
    சிந்தனைகள் பலம் வாய்ந்ததோ இல்லையோ அவை என்னை எழுத் வைக்கின்றன. வருகைக்கு நன்றி.

    @ Bagwanjee.K.A.
    சிந்தனையில் தெளிவு பிறக்க வேண்டும். வருகைக்கு நன்றி.

    @ ரமணி
    இருக்கிறதா இல்லையா என்பது அல்ல கேள்வி. இருப்பதானால் அடையாளம் இருக்கும் இல்லையோ இருக்கிறதோ என்ற சந்தேகம் இருப்பவற்றுக்கே ஏகப்பட்ட அடையாளங்கள்.பார்த்தீர்களா உங்கள் பின்னூட்டமே என்னை எதையோ குறித்து எழுத வைக்கிறது. என் எழுத்து ஆண்டவனைத் தொட்டு முடிகிறதா துவங்குகிறதா ..? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரமணி சார்.

    @ கரந்தை ஜெயக்குமார்
    நல்ல எண்ணம்தான். வருகைக்கு நன்றி

    @ கோபு சார்
    பாராட்டுக்கு நன்றி

    @ தி.தமிழ் இளங்கோ
    /இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் (கவிஞர் வாலி)அழகான கருத்துக்கு நன்றி

    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    மாறுபட்ட சிந்தனை. வருகைக்கு நன்றி

    @ டாக்டர் கந்தசாமி
    ரசித்ததற்கு நன்றி

    @ அப்பாதுரை
    /உடல் தானம்/
    அழிந்து விடும் . சில நாட்கள் உபயோகமாக இருக்கலாம்.ஒரு கற்பனை ...! அனைவரும் உடல்தானம் செய்ய முன் வந்தால் அவற்றை எங்கே பாதுகாப்பாய் வைத்து உபயோகிப்பது.?

    @ பாலகணேஷ்
    ரசித்துப் படித்ததற்கு நன்றி. அடிக்கடி வந்தால் இன்னும் மகிழ்வாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  11. அய்யாவிற்கு வணக்கம்..
    அடையாளங்களை வைத்து அசத்தலான பதிவைக் கொடுத்திருக்கிறீர்கள். நம்மை அடையாளப்படுத்த ஒரு அடையாளம் தேவை என்பதை உணர்ந்து கொள்ள வைத்த பதிவைத் தந்தமைக்கு நன்றிங்க அய்யா.

    பதிலளிநீக்கு
  12. அன்புடையீர்!.. நமக்கென என்ன அடையாளம்/.. நமக்கு விவரம் தெரிந்த பிறகு - நாம் வாழ்ந்த வாழ்க்கை!.. நம்முடைய தனித்துவமான பழக்க வழக்கங்கள்!.. மற்றபடி ஒருவருடைய உருவத்தை அடையாளப்படுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டும்!..

    பதிலளிநீக்கு

  13. @ அ. பாண்டியன்
    நாம் இருக்கும்போது நம்மை எப்படியாவது அடையாளம் கண்டு கொள்ள முடியும். நாம் இல்லாதபோதும் அடையாளமாக நாம் என்ன விட்டுச் செல்கிறோம் என்பதைச் சிந்திக்க வைக்கவே இந்தப் பதிவு. வருகைக்கு நன்றி.
    @ துரை செல்வராஜு
    மிகவும் எளிமையாகச் சொல்கிறீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. mஅன்புள்ள ஐயா.


    வணக்கம். பின்னி எடுத்திருக்கிறீர்கள். அருமை. ஒன்றுதான் எல்லா அடையாளங்களையும் விட உடலை எரித்துவிட்டு நல்ல உள்ளத்தைப் பகிர்ந்துவிட்டுபோவதுதான் என்றைக்கும் அழியாத அடையாளம் வாழ்ந்ததற்கும் வாழ்ந்து முடித்ததற்கும்.

    பதிலளிநீக்கு

  15. @ ஹரணி
    அதென்னவோ தெரியவில்லை ஐயா. உங்கள் பாராட்டு கூடுதல் உற்சாகம் அளிக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு