என் மனைவிதான் .... இருந்தாலும்...
------------------------------------------------
பொழுது விடிந்துவிட்டதா.?
தெரியலியே...பொழுது விடிவதை சேவல் கூவக் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்பார்கள்.
நகரங்களில் சேவலாவது கூவுவதாவது. சில நாட்கள் முன்பு வரை அதிகாலையில் வீட்டின்
பின்புற மரத்திலிருந்து குயில் கூவும். ஆனால் குயில் கூவுவதைக் கேட்டு
விடிந்துவிட்டதா என்று தீர்மானிக்க முடிவதில்லை. அவை சில அகால நேரங்களிலும்
கூவுகின்றன. அவள் புரண்டு படுத்தாள்.
உடம்பு ஒரு கடிகாரம் மாதிரி. பழக்கப் பட்ட காரியங்களுக்குக் கட்டுப் படும்
பொதுவாக விழிப்பு வந்தாலேயே
பொழுது விடிந்து விட்டது என்று அர்த்தம். சாலையில் நடமாட்டங்கள் அதிகரிக்கத்
தொடங்கும். ஐடி கம்பனிகளில் வேலை பார்ப்போரைக் கூட்டிப் போக வரும் கார்களின்
சத்தம் கேட்கத் துவங்கும். அடுத்து இருக்கும் பால் வினியோகக் கடைக்குப் பால் வண்டி
வந்த சப்தம் கேட்கிறது. பக்கத்துவீட்டு நாய் தன் எஜமானைக் கூப்பிடக் குரைக்கும்
வித்தியாசமான சப்தம் கேட்கிறது. பாவம் அது. வாயில்லா ஜீவன். அதற்கும்
காலைக்கடன்கள் இருக்கிறதே. அதன் எஜமானர் அதட்டிய படியே அதன் சங்கிலியை
கட்டியிருந்த தூணிலிருந்து அவிழ்க்கும் சத்தம் கேட்கிறது. நிச்சயம் விடிந்து
விட்டது என்று நினைத்த அவள் மீண்டும்
ஒருக்களித்துப் படுத்துக் கொண்டாள் .மங்கிய வெளிச்சத்தில் அருகில் படுத்திருக்கும்
கணவனைப் பார்க்கிறாள். இந்த அதிகாலைச்
சப்தங்கள் அநேகமாக அவர் கேட்டே இருக்க மாட்டார்..பாவம் இந்த அதிகாலைத் தூக்கம்தான்
அவருக்குத் தெம்பு கொடுக்கும்.
அவள் கட்டிலை விட்டு இறங்கினாள்.
அவிழ்ந்திருந்த முடியைப்பின் தலையில் அழுத்திக்கட்டினாள். இன்றைக்குச் செய்ய
வேண்டிய அலுவல்களை ஒருதரம்மனதில் ஓட்டிப் பார்த்தாள். என்ன ஸ்பெஷல் அலுவல்
இருக்கப் போகிறது. காலைக்கடன்களை முடித்து பக்கத்தில் இருக்கும் பால் வினியோகக்
கடைக்குச் சென்று பால் வாங்க வேண்டும். அடுப்பை பற்ற வைத்து நீரைக் கொதிக்க வைத்து
காஃபி டிகாக்ஷன் இறக்க வேண்டும் அவள் கணவனுக்குக் காஃபி திக்காக சுவையாக ஃப்ரெஷாக இருக்கவேண்டும் கீசரை
ஆன் செய்து காலையில் குளித்து முடித்தவுடன் அணிய வேண்டிய உடுப்புகளை பாத் ரூமில்
வைத்தாள். குளிக்கப் போகுமுன் ஸ்தோத்திரப் பெட்டியை ஆன் செய்து அதிலிருந்து வரும்
பாட்டுக்களைக்கேட்டுக்கொண்டே குளிப்பதுடன் கூடவே வாய் தலைக்குத் தண்ணீர்
ஊற்றும்போது
“ அதிக்ரூர மஹாகாய
கல்பாந்த தஹனோபம்
பைரவாய நமஸ்துப்யம் அனுஜ்ஞாம்
தாதுமர்ஹஸி
கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலேஸ்மின் ஸன்னிதிம்குரு”
முணுமுணுக்கும்.. அவளது கணவன் ”பொருள்
தெரியாமல் வாய் ஏதேதோ முணுமுணுப்பதால் என்ன லாபம்?அர்த்தம் தெரியாத வேண்டுதலில்
அர்த்தம் கிடையாது”’ என்று சீண்டுவான்.அவளும் “ என்ன அர்தமாயிருந்தால்
என்ன.?தலைக்குத் தண்ணீர் ஊற்றும்போது இந்தப் புண்ணிய நதிகளின் நீர் என் தலையில்
விழுவதாக நான் கற்பிதம் செய்கிறேன்” என்பாள், அவர்கள் வீடு கட்ட
முனைந்தபோதுநீர்நிலை ப்லாட்டின் எந்த பகுதியில் இருக்கும் என்று தெரியாமல்
தவித்தனர். வாட்டர் டிவைனரைக் கூப்பிடலாம் என்று சிலர் கூறினர். அவள்தான் அந்த
யோசனையை நிராகரித்து விட்டாள். ப்லாட்டின் நடுவில் நீர்நிலை இருக்கிறது என்று
சொல்லிவிட்டால் அங்கு போர்(bore) போட முடியுமா.?”இடத்தின் ஒரு
ஒதுக்குப் புறத்தில் bore போடுவோம்.குளிக்கும்போது
நான் வேண்டும் அந்தப் புண்ணிய நதிகள் போரிலிருந்து நீராய்ப் பிரவகிக்கும்” என்று
தீர்மானமாய்க் கூறினாள், bore தோண்டி இனிப்பான தெள்ளிய நீர்
ஊற்றிலிருந்து வெளிவந்து கொட்டியபோது அவளது கணவனும் வாயடைத்து விட்டான். ஆனால்
பதினைந்து வருடங்களுக்குப் பிறகு போரிலிருந்து நீர் வராதபோது புண்ணிய நதிகள் வற்றிவிட்டனவா என்று மீண்டும்
கேலி பேசத் தொடங்கினான். அவளும் சும்மா இருக்கவில்லை. “போரிலிருந்து நீர்
வராவிட்டாலும் குழாய் மூலம் இப்போது காவேரி தானே வருகிறாள்”என்று
வாதாடுவாள்
இவள் ஒரு சராசரி நடுத்தர வர்க்கத்துப் பெண்/ அறிவு ஜீவி
என்று சொல்ல முடியாவிட்டாலும் புத்திசாலி வட்டத்துக்குள் வருபவள். இவளது வாழ்வே
கணவன் பெற்ற குழந்தைகள் உறவினர்கள் போன்றோரோடு பின்னிப் பிணைந்தது. இவளைப்
பொறுத்தவரை எல்லோருமே நல்லவர்கள். , அழகானவர்கள். பொதுவாக எல்லோரும் நல் வாழ்வு
வாழ வேண்டும் என்று எண்ணம் கொண்டவள்.
இள வயதில் குடும்பத்துக்கு உழைத்தே ஓடானவள். இப்படியெல்லாம்
இருப்பவளுக்கும் சில தனிப்பட்ட ஆசைகளோ கருத்துக்களோ இருக்க வேண்டும் அல்லவா. எந்த
வேலையாய் இருந்தாலும் காலையில் அருகில் இருக்கும் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.
அங்கு சென்று என்னதான் பிரார்த்திப்பாளோ அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.செல்லும் பல கோயில்களில் கருவறையில் எண்ணை விளக்கில் கடவுளின் திரு உருவம் தெரிவதில்லை என்றால் நீங்கள் ஊனக் கண்ணால் பார்க்கிறீர்கள். மனக் கண்ணில் உருவம் ஜகத் ஜ்யோதியாய்த் தெரிகிறது என்பாள்.
சிறுவயதிலிருந்தே கோயில்களுக்குச் சென்று வழிபடுவதில்
இவளுக்குத் தனி சுகம். எப்போதும் மனதில் ஏதாவது ஸ்லோகம் ஓடிக்கொண்டே இருக்கும்.
தவறிப் போயும் அந்த சுலோகங்களுக்கு அர்த்தம் கேட்கக் கூடாது, அவளாக ஒரு அர்த்தம்
புரிந்து கொண்டு சொல்லிக் கொண்டிருப்பாள். வாயில் நுழையாத வடமொழி சுலோகங்களை
அவளுக்குத் தெரிந்தபடி உச்சரிப்பாள். வடமொழி மட்டுமல்ல. தமிழிலும் சொல்வது
எல்லாவற்றுக்கும் பொருள் தெரியும் என்று சொல்ல முடியாது. வாழ்வில் இவளுக்கு
லட்சியம்தான் என்ன. ? எப்போதாவது கேட்டால் “எல்லோரும் இன்புற்றிருக்க
நினைப்பதல்லாமல் வேறொன்றும் இல்லை.” என்பாள். நம்ப முடியவில்லை. ஆனால் நம்பிக்கையே
ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறாள்.
நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒரு சக்தி நம்மை
இயக்குகிறது. வாழ்வில் நிகழும் அனைத்துச் செயல்களுக்கும் நம்மை இயக்கும் அந்த
சக்தியே காரணம்என்ற நம்பிக்கை மட்டும் இல்லாவிட்டால் பலரும் பைத்தியம் பிடித்து தலையைப்
பிய்த்துக் கொண்டிருப்பார்கள். எல்லாவற்றுக்கும் நீயே காரணம் நீயே தீர்த்து வைக்க
வேண்டும் என்று சரணடைந்து விட்டால் மனப் பாரம் குறையும் என்று சொல்லுமளவுக்குத்
தெளிவு பெற்றவள். நாளுக்கு நாள் கோயில்களில் கூட்டம் கூடுவதே கடவுள் நம்பிக்கை
உடையவர்கள் அதிகரித்து வருகிறார்கள் என்றுதானே அர்த்தம் காலங்காலமாக நம்
முன்னோர்கள் சொல்லிச் சென்றதெல்லாம் தவறா என்றும் கேட்பாள்..மாறுபட்ட
சிந்தனைகளையும் செவி மடுத்துக் கேட்பாள். அதிலிருக்கும் நிதர்சன உண்மைகளையும்
உணர்ந்து கொள்வாள். இருந்தாலும் இந்த நிலைதான் சௌகரியமாக இருக்கிறது என்று சொல்லாமல்
சொல்லிச் செல்வாள். . .
//நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒரு சக்தி நம்மை இயக்குகிறது.
ReplyDeleteவாழ்வில் நிகழும் அனைத்துச் செயல்களுக்கும் நம்மை இயக்கும் அந்த சக்தியே காரணம்என்ற நம்பிக்கை மட்டும் இல்லாவிட்டால் பலரும் பைத்தியம் பிடித்து தலையைப் பிய்த்துக் கொண்டிருப்பார்கள்.
எல்லாவற்றுக்கும் நீயே காரணம் நீயே தீர்த்து வைக்க வேண்டும் என்று சரணடைந்து விட்டால் மனப் பாரம் குறையும் என்று சொல்லுமளவுக்குத் தெளிவு பெற்றவள்.//
இந்த ஒரு தெளிவு மட்டும் இருந்தால் போதும். வாழ்க்கையில் எல்லாமே வெற்றிகரமாக அமையும்.
>>>>>
//நீங்கள் ஊனக் கண்ணால் பார்க்கிறீர்கள்.
ReplyDeleteமனக் கண்ணில் உருவம் ஜகத் ஜ்யோதியாய்த் தெரிகிறது//
சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.
நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஜகத் ஜ்யோதியாகத் தெரிவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை தான்.
இன்று போல் என்றூம் நீடுழி வாழக வளமுடன்....!
ReplyDelete//ப்லாட்டின் நடுவில் நீர்நிலை இருக்கிறது என்று சொல்லிவிட்டால் அங்கு போர்(bore) போட முடியுமா.?”இடத்தின் ஒரு ஒதுக்குப் புறத்தில் bore போடுவோம்.குளிக்கும்போது நான் வேண்டும் அந்தப் புண்ணிய நதிகள் போரிலிருந்து நீராய்ப் பிரவகிக்கும்” //
ReplyDeleteமனமே பிரபஞ்சம். அவளே ஆதியும் அந்தமுமாய் இருந்து, அனைத்து உயிரினைத்தையும் ஆதரிக்கக் கூடியவள். 'நீரின்றி அமையாது உலகு' போல், 'அவள் இன்றி இயங்காது உலகு'.
நல்லதொரு பகிர்வு சார்!
பாலு சார்,
ReplyDeleteமுந்தைய தலைமுறைகளில் கணவன்-மனைவி உறவு குறித்து எனக்கு எப்போதுமே குழப்பமான நிலை இருந்து வருகிறது. 30 ஆண்டுகள் வாழ்ந்தும் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ளாமல், தன் இறுதி காலத்தில் ஒருவர் மற்றொருவரை புகார் சொல்வது, இல்லையெனில் ஏதோ ஒரு சண்டையின் காரணத்தால் வருடக் கணக்காக பேசிக் கொள்ளாமல் இருப்பது என சில தம்பதிகளைக் கண்டு நான் வருந்துகிறேன்.
இவர்களுக்கு மத்தியில் நீங்கள் விதிவிலக்கு :)
// நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒரு சக்தி நம்மை இயக்குகிறது. வாழ்வில் நிகழும் அனைத்துச் செயல்களுக்கும் நம்மை இயக்கும் அந்த சக்தியே காரணம்என்ற நம்பிக்கை மட்டும் இல்லாவிட்டால் பலரும் பைத்தியம் பிடித்து தலையைப் பிய்த்துக் கொண்டிருப்பார்கள். எல்லாவற்றுக்கும் நீயே காரணம் நீயே தீர்த்து வைக்க வேண்டும் என்று சரணடைந்து விட்டால் மனப் பாரம் குறையும் //
ReplyDeleteஇந்த வரிகள். எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி ஏங்கும் இதயத்திற்கு ஒரு ஆறுதல்.
“எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதல்லாமல் வேறொன்றும் இல்லை.” என்பாள். நம்ப முடியவில்லை. ஆனால் நம்பிக்கையே ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறாள்.//
ReplyDeleteஉங்கள் மனைவியின் நம்பிக்கை, எண்ணம் எல்லாம் உயர்ந்தது.
உங்கள் இருவருக்கும் எங்கள் வணக்கங்கள், வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
மனைவியைவிட கொஞ்சம் கூடுதல்
ReplyDeleteதகவல்கள் தெரிந்து வைத்திருக்கிறோம்
வெளி வட்டாரப் பழக்கத்தினால சில நூல்களைப்
படித்ததனால் தர்க்க ரீதியாகப் பேசக் கற்றிருக்கிறோம்
அதனைத்தான் நாம் புத்திசாலித்தனம் என்றும்
மனைவிமார்களுக்கு அது கொஞ்சம் குறைவு எனவும்
நாமாக நமக்குள் ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்திக்
கொள்கிறோம்.
உண்மை நிச்சயம் அது இல்லை
அவர்களிடம் நீரில் மிதக்கும் பனிக்கட்டிப்போல
தங்களை வெளிப்படுத்துக் கொள்வதை விட
வெளிக்காட்டிக் கொள்ளாத பகுதி மிக அதிகம்
நம்மிடம் நாம் வெளிக்காட்டிக் கொண்டிருப்பதைவிட
ஒரு துளி கூட கூடுதலாக நம்மிடம் இல்லை
என்பதுதான் நிஜம்
படிப்பவர்கள் அனைவரின் சிந்தனையையும்
கிளறிப்போகும் அருமையான பகிர்வுக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்
உங்களுக்கோ, உங்கள் மனைவிக்கோ பிறந்த நாள் அல்லது திருமண நாளோ என்று தோன்றுகிறது.
ReplyDeleteஎதுவாக இருந்தாலும் வணக்கத்துடன் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் உங்கள் மனைவியின் அசைக்க முடியாத நம்பிக்கைகளுக்கு என்னுடைய ராயல் சல்யூட்!
நம்பிக்கையே ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்து வரும் அருமையான வாழ்க்கைத்துணைக்கு வாழ்த்துகள்..!
ReplyDeleteநம்பிக்கை உள்ளவர்களுக்கு எல்லாமே ஜோதியாக விளங்குகின்றது!..இப்படி உணர்வதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!..
ReplyDeleteஇவள் ஒரு சராசரி நடுத்தர வர்க்கத்துப் பெண்/ அறிவு ஜீவி என்று சொல்ல முடியாவிட்டாலும் புத்திசாலி வட்டத்துக்குள் வருபவள். ///
ReplyDeleteஇது போதாதா? குடும்பம் நடத்த ராக்கெட் சைன்ஸ் தெரிஞ்சிருக்கணுமா என்ன?
//எல்லாவற்றுக்கும் நீயே காரணம் நீயே தீர்த்து வைக்க வேண்டும் என்று சரணடைந்து விட்டால் மனப் பாரம் குறையும் என்று சொல்லுமளவுக்குத் தெளிவு பெற்றவள்.//
ReplyDeleteஉண்மையிலேயே உங்கள் மனைவி மிகவும் பாக்கியசாலிதான். அவரை கணவனாக அடைந்த நீங்கள் அதை விட பாக்கியசாலி. வாழ்த்துக்கள் ஐயா.
ReplyDelete@ கோபு சார்
/ இந்தத் தெளிவு மட்டும் இருந்துவிட்டால் வாழ்க்கையில் எல்லாமே வெற்றிகரமாக அமையும்./இங்குதான் நான் வேறுபடுகிறேன். நம் செயல்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் நம்மை இயக்கும் சக்தி என்று அதன்மேல் பாரத்தைப் போடுவது ஒரு escapist act என்று நான் நினைக்கிறேன். ஆனால் இந்த மாதிரி நம்பிக்கைகள் பாரத்தல் சுமக்கும் சக்தியை அதிகரிக்கலாம் என்பதும் தெரிகிறது
மனக் கண்ணில் தெரியும் உருவம் வெறும் கற்பனையே. நான் சொல்வது காணும் காட்சி., உருவகப் படுத்தும் கற்பனை அல்ல.
எனக்கு ஒன்று தெளிவாகிறது. நிஜத்தை சந்திக்கப் பலரும் தயாரில்லை. வரவுக்கும் கருத்துப் பகிர்வுக்க்ம் நன்றி.
ReplyDelete@ ஸாதிகா
பல நாட்களுக்குப்பின் வருகை தந்ததற்கும் வாழ்த்துக்கும் நன்றி.
ReplyDelete@ தோழன் மபா. தமிழன் வீதி
/ 'அவள் இன்றி இயங்காது உலகு'/ உண்மை. இவளின்றி இயங்காது என் உலகம். வருகைக்கு நன்றி.
ReplyDelete@ கோமதி அரசு
/ உங்கள் மனைவியின் நம்பிக்கை எண்ணம் எல்லாம் உயர்ந்தது/அவளுக்கென்று ஒரு நம்பிக்கையும் எண்ணமும் இருப்பது அவளது உரிமை. உயர்ந்ததா அல்லவா என்பது அவரவர் மன நிலையைப் பொறுத்தது. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
ReplyDelete@ ரமணி
/படிப்பவர்கள் அனைவரின் சிந்தனையையும்
கிளறிப்போகும் அருமையான பகிர்வுக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்/
உணர்ந்தெழுதிய வாழ்த்துக்கு நன்றி.
ReplyDelete@ இராஜராஜேஸ்வரி
/.....வாழ்க்கைத் துணைக்கு வாழ்த்துக்கள்/ எனக்கு அந்த வாழ்த்துக்கள் இல்லையா.? வருகைக்கும் வாழ்த்துக்கும் ந்ன்றி.
//G.M Balasubramaniam said...
ReplyDelete@ கோபு சார்
/ இந்தத் தெளிவு மட்டும் இருந்துவிட்டால் வாழ்க்கையில் எல்லாமே வெற்றிகரமாக அமையும்./
//இங்குதான் நான் வேறுபடுகிறேன்.//
நீங்கள் வேறுபடலாம். உங்களைப்போல பலரை நானும் பார்த்திருக்கிறேன். உணரும் நாள் வரும்வரை ஏதேதோ முடிந்தவரை பேசிக்கொண்டே இருப்பீர்கள்.
//நம் செயல்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் நம்மை இயக்கும் சக்தி என்று அதன்மேல் பாரத்தைப் போடுவது ஒரு escapist act என்று நான் நினைக்கிறேன்.//
பொதுவாக நம்மை இயக்கும் சக்தியே நம் மனைவி தான், ஐயா. மனைவியை [சக்தியை] ஊருக்கு அனுப்பிவிட்டு எந்தத்தொடர்புகளும் இல்லாமல் உங்களால் ஒரு மாதம் ஒரே ஒரு மாதம் இருக்க முடியுமா என யோசியுங்கள், ஐயா.
//ஆனால் இந்த மாதிரி நம்பிக்கைகள் பாரத்தல் சுமக்கும் சக்தியை அதிகரிக்கலாம் என்பதும் தெரிகிறது.//
அதுவாவது தெரிந்து கொண்டிருக்கிறீகளே, அதுவரை சந்தோஷமே.
//மனக் கண்ணில் தெரியும் உருவம் வெறும் கற்பனையே.//
மிகச் சாதாரண நிலையில் உள்ள உங்களுக்கு அது கற்பனையே என்று நினைக்கத் தோன்றுகிரது, என்பதே உண்மை, ஐயா.
//நான் சொல்வது காணும் காட்சி., உருவகப் படுத்தும் கற்பனை அல்ல.//
காணும் காட்சி என்கிறீர்களே, ஐயா.
தாங்கள் காற்றைக் கண்ணால் பார்த்திருக்கிறீர்களா ஐயா?
சுவாசிக்கக் காற்று இல்லாமல் ஒரு 2 நிமிடம் உங்களால் தாக்குப்பிடிக்க முடியுமா, ஐயா?
//எனக்கு ஒன்று தெளிவாகிறது. நிஜத்தை சந்திக்கப் பலரும் தயாரில்லை.//
எனக்கும் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. நமக்கு ஒரு கஷ்டம் வரும்வரை நாம் இறைவனைப்பற்றி நினைக்கவே போவது இல்லை.
தங்களின் துணைவியாரின் பக்தியாலும் பக்க பலத்தாலும் மட்டுமே உங்களால் செளகர்யமாக இருக்க முடிவதுடன், இவ்வாறெல்லாம் மாற்றி யோசித்து, தவறான முடிவுகளை எடுக்கவும் அதை எழுதவும் முடிகிறது.
ஏதோ புரட்சிகரமாக எழுதி சாதனை புரிந்துவிட்டதாகவும் நினைக்க முடிகிறது என்பதே உண்மை, ஐயா.
//வரவுக்கும் கருத்துப் பகிர்வுக்க்ம் நன்றி.//
இது சம்பந்தமாக என்னால் மேலும் மிகவும் அதிகமாகப்ச்பேச இயலும். இப்போது அவசரமாக வெளியே செல்ல வேண்டியுள்ளது.
அன்புடன் VGK
ReplyDelete@ ராஜலக்ஷ்மி பரமசிவம்
புகைப் படத்தைப் பார்த்து அனுமானித்தீர்களா.?அது போன வருடத்தது. என் பிறந்த நாளும் எங்கள் மண நாளும் ஒரே நாள்தான்.
( நவம்பர் பதினொன்றாம் நாள்) ராயல் சல்யூட்டில் எனக்கும் பங்கில்லையா.?வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
ReplyDelete@ துரை செல்வராஜ்
/ நம்பிக்கை உள்ளவர்களுக்கு எல்லாமே ஜகத் ஜ்யோதியாய் விளங்கு கிறது./ தெளிந்த நம்பிக்கைக்கும் தெரியாத நம்பிக்கைக்கும் வித்தியாசம் உண்டு என்று நினைக்கிறேன் நான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஒரு அதிகாலையின் ஒலிகளை அக்ஷர சுத்தமாக எழுதியிருக்கிறீர்கள். காலையின் நிசப்தத்தைச் சின்னச் சின்னதாக அகற்றும் ஒலிக் கூறுகளின் மீது எனக்கு அலாதிப் ப்ரியம். சபாஷ்.
ReplyDeleteஒரு பெண்ணிண் கோணத்திலிருந்து புலரும் காலை சீக்கிரமாக ஒரு ஆணின் கோணத்துக்கு நகர்கிறது.
//இவள் ஒரு சராசரி நடுத்தர வர்க்கத்துப் பெண்/ அறிவு ஜீவி என்று சொல்ல முடியாவிட்டாலும் புத்திசாலி வட்டத்துக்குள் வருபவள்.//
இதை எப்படி அளக்கிறீர்கள் பாலு சார்?
நான் எழுத் நினைத்ததைத் தன் மொழியில் அழகாய் திரு.ரமணி எழுதியிருப்பதால் நான் அதையே என் எண்ணமாக இந்த இடத்தில் பதிக்கிறேன்.
ReplyDelete@ குடும்பம் நடத்த ராக்கெட் சயின்ஸ் தெரிய வேண்டாம். புரிதலும் விட்டுக் கொடுக்கும் பண்பும் போதும் அது எங்களுக்குள் இருக்கிறது.( நிறையவே)வருகைக்கும் (வாழ்த்துக்கும்...? காணவில்லையே) நன்றி.
ReplyDelete@ நாகசுப்பிரமணியம்
எங்களையும் சராசரி மனிதர் போல் நினைத்தீரோ. ? நிச்சயமாக விதிவிலக்குத்தான். நேரில் ஒரு முறை வந்து பாருங்களேன்.நீங்களும் வருவதாகச் சொல்லியே நாள் கடத்துகிறீர். சரியான புரிதலுக்கு நன்றி நாகா.
ReplyDelete@ சுந்தர்ஜி
ரமணிக்கு எழுதிய பின்னூட்டமே உங்களுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் பதிவின் நோக்கம் நிறைவேறுகிறது.என் எழுத்தின் கோணம் யாரையும் சங்கடப் படுத்த அல்ல வாழ்க்கையில் சில அணுகு முறைகள் வேறாயிருந்தாலும் புரிதலும் விட்டுக்கொடுத்தலும் இன்றியமையாதது. இந்தப் புரிதலுடன் 49 ஆண்டுகள் மகிழ்வாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் பருத்துப் பகிர்வுக்கும் என் பக்கத்தை மீண்டும் கூறவும் வாய்ப்பளித்ததற்கு நன்றி சுந்தர்ஜி.
ReplyDelete@ கோபு சார்.
அட , என்னமாய்க் கோபம் வருகிறது உங்களுக்கு./
பொதுவாக நம்மை இயக்கும் சக்தியே நம் மனைவி தான், ஐயா. மனைவியை [சக்தியை] ஊருக்கு அனுப்பிவிட்டு எந்தத்தொடர்புகளும் இல்லாமல் உங்களால் ஒரு மாதம் ஒரே ஒரு மாதம் இருக்க முடியுமா என யோசியுங்கள், ஐயா./ கோபு சார் நான் என் மனைவியை ஆராதிக்கிறேன். தொடர்ந்து என் பதிவுகளைப் படித்துக் கொண்டு வருபவர்களுக்கு இது புரியும். என் மனைவிக்குபதிவில் ஒரு பாமாலையே சார்த்தி இருக்கிறேன். இருந்தாலும் எங்கள் சிந்தனைகளை மற்றவர் கட்டுப்படுத்துவதைத் தவிர்க்கிறோம். இது ஏதோ புரட்சிகரமான எழுத்து அல்ல. நன்றாகப் புரிந்து கொண்டுள்ளதை விளக்கும் பதிவே.வாழ்வில் பல கஷ்டங்களும் இன்னல்களும் சந்தித்து வந்தவன் நான்.அதற்கு இறைவன் மேல் பாரம் போடுவதில்லை.மீண்டும் வருகை தந்து எனக்கும்விளக்கம் தர வாய்ப்பளித்ததுக்கு நன்றி கோபு சார்.
ReplyDelete@ expatguru
/அவரைக் கணவனாக அடைந்த நீங்கள் அதைவிட பாக்கியசாலி/ ....? கணவன் யார்.?தவறாக எழுதியதா அல்லது மறைபொருள் ஏதாவது இருக்கிறதா.? வருகைக்கு நன்றி சார்.
என் கதையில் வரும் கணவன்மார்களை பற்றி படித்திருப்பீர்கள். சமையலறையில் கூட மாட மனைவிக்கு அனுசரணையாக இருப்பவர்களாகவே அவர்கள் இருப்பார்கள். தான் சாப்பிட்ட சாப்பாடு தட்டை தானே கழுவி வைப்பவர்களாக அவர்கள் இருப்பார்கள். இதெல்லாம் மனைவிக்கு கணவன் ஆற்றும் சிறு சிறு உதவிகள்.
ReplyDeleteமனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவசரத்திற்கு ஒரு சாதம், ரசம் வைக்கவாவது ஆண்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
மன்னிக்கவும். நீங்கள் எப்படி என்று தெரியவில்லை.
உறவினர்களையும் அணைத்ச் சென்ற அவர்கள் உயர்ந்த உள்ளத்திற்கு என் வணக்கங்கள்.
ReplyDelete
ReplyDelete@ ஜீவி
உண்மையைப் பகிர்ந்து கொள்கிறேன். என் மனைவிக்கு நான் எல்லா உதவிகளையும் என்றும் செய்யத் தயார். ஆனால் அவள் என்னை ஒரு சிறு துரும்பும் எடுத்த்ப் போட விடுவதில்லை. நான் நன்றாகவே சமைப்பேன். சமையல் குறித்து ஒரு வலைப்பூவே துவக்கி இருக்கிறேன். of course after getting vetted by her, the posts are published/ பார்க்க “ பூவையின் எண்ணக்கள். kamalabalu294.blogspot.in
ReplyDelete@ தருமி
நான் அவளுக்குச் சொல்கிறேன் ஐயா.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வணக்கங்கள். வணக்கங்கள்.
ReplyDeleteசுப்பு தாத்தா பாணியில் சொல்வதானால் 'அறிவு ஜீவி என்று சொல்ல முடியாவிட்டாலும் புத்திசாலி வட்டத்துக்குள் வருபவர்' என்று உங்களைப் பத்தி உங்க மனைவி சொல்லலாம் :)
இதுக்குத்தான் காரமான பலகாரங்கள் சாப்பிடாதீங்கன்னு சொல்றேன் வை.கோ சார்.
ReplyDelete
ReplyDelete@ அப்பாதுரை
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
This comment has been removed by the author.
ReplyDelete
ReplyDelete@ கோபு சார்
மனைவியரின் குணாதிசயங்களை வெகு துல்லியமாக எடுத்துக்காட்டி ரமணி எழுதியதை வழிமொழிந்து எழுதியதற்கு நன்றி.
//Ramani S said...
ReplyDelete//மனைவியைவிட கொஞ்சம் கூடுதல் தகவல்கள் தெரிந்து வைத்திருக்கிறோம்.//
அதே ! அதே !!
//வெளி வட்டாரப் பழக்கத்தினால சில நூல்களைப் படித்ததனால் தர்க்க ரீதியாகப் பேசக் கற்றிருக்கிறோம்.//
EMPTY VESSELS MAKE MUCH NOISE என்று கூட ஆங்கிலத்தில் இதனைச் சொல்வார்கள் என நினைக்கிறேன்.
//அதனைத்தான் நாம் புத்திசாலித்தனம் என்றும்
மனைவிமார்களுக்கு அது கொஞ்சம் குறைவு எனவும்
நாமாக நமக்குள் ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்திக்
கொள்கிறோம்.//
சபாஷ் மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். ;)
//உண்மை நிச்சயம் அது இல்லை.//
கரெக்ட். ;)
//அவர்களிடம் நீரில் மிதக்கும் பனிக்கட்டிப்போல தங்களை வெளிப்படுத்துக் கொள்வதை விட வெளிக்காட்டிக் கொள்ளாத பகுதி மிக அதிகம்.//
ஒப்புக்கொள்ள வேண்டிய அழகான கருத்து.
பெரும்பாலானவர்களில் விஷயத்தில் இது உண்மையும் கூட.
//நம்மிடம் நாம் வெளிக்காட்டிக் கொண்டிருப்பதைவிட
ஒரு துளி கூட கூடுதலாக நம்மிடம் இல்லை
என்பதுதான் நிஜம்.//
சபாஷ் !
WELL SAID Mr. RAMANI Sir.
தங்கம் நிறுக்கும் தராசின் முள் போன்று மிகச்சரியான கருத்தினை துல்லியமாக எடை போட்டுச் சொல்லியுள்ளதற்கு என் மனம் நினைந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன் கோபு.